புதன், 26 மே, 2021

மருந்துகளும் பக்கவிளைவுகளும்

மருந்துகளும் பக்கவிளைவுகளும்


  

அனைத்து மருந்துகளுமே  தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மருந்துகளில் டாக்டர் சீட்டு மருந்துகள் , கவுண்டர்களில் நேரடியாக கிடைக்கும் மருந்துகள்  மற்றும் மேலதிக  மருந்துகள் (மூலிகை தயாரிப்புகள் மற்றும் வைட்டமின்கள்) ஆகியவை அடங்கும்.
மருந்துகளின் லேபிளில்  உள்ள பார்முலா  பொருட்கள் ஒன்றோடு ஒன்று ‘மோதலாம்’. எனவே, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை உட்கொள்வது பக்கவிளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
பக்க விளைவுகள் உள்ளிட்ட மருந்துகளின் பிரச்சினைகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 230,000 ஆஸ்திரேலியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான பக்க விளைவுகளை நிர்வகிக்க முடியும், சில மிகவும் தீவிரமானவை மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடும்.
உங்கள் மருந்துகளை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது உங்கள் நலன்களுக்கு உகந்ததாகும். 

டாக்டர் சீட்டு மருந்துகள் 

பொதுவாகவே எந்த ஒரு மருந்தும் டாக்டரின் பரிந்துரையின் பேரிலேயே வாங்க வேண்டும். சுய மருத்துவம் என்பது மிகவும் ஆபத்தானது. அதிலும் ஆல்கஹால் பயன்படுத்துபவர்கள் எந்த ஒரு மருந்தும் சுயமாக சாப்பிடக்கூடாது. ஏனென்றால் சில ஆண்டிபையாட்டிக்குகள் ஆல்கஹாலுடன் தேவையற்ற பக்க விளைவுகளை உண்டாக்கும் 
விட்டமின்கள் மூலிகை மருந்துகள் உட்பட உணவுகள் மூலமன்றி கடை மருந்துகளாக கிடைக்கக்கூடிய அத்தனையுமே நச்சுக்கள் ஆகும். இரசாயணிகள் ஆகும். 
கீழ்கண்ட மருந்துகளை கண்டிப்பாக டாக்டர் சீட்டு இல்லாமல்  சாப்பிடக்கூடாது.
1.ஆன்டிபயாட்டிக்குகள் (நுண்ணுயிர் எதிர்ப்பிகள்)
உதாரணமாக, சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) மக்கள் தொகையில் ஐந்து சதவீதம் பேருக்கு  ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. தோல் தடிப்புகள் ஒரு பொதுவான எதிர்வினை. ஆனால், எதிர்வினை, மருந்து அல்லது நோயால் ஏற்படுகிறதா என்று சொல்வது எப்போதும் எளிதல்ல.
மேலும் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அவைகளுக்கு இடையிலும் மற்ற மருந்துகளுடனும் இடை எதிர்வினைகளை (Drug Interactions) ஏற்படுத்தும். 
உதாரணமாக தொண்டை கரகரப்பு, கபம் இருமல் என்று வந்துவிட்டாலே 
அஜித்ரோமைசின் (Azithromycin) என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி டாக்டர் பரிந்துரையில்லாமலே சாப்பிடுவது இப்போது சர்வசாதாரணம் ஆகிவிட்டது. இந்த அஜித்ரோமைசின் இதய நோய்க்கு சாப்பிடக்கூடிய டிகாக்சின் (Digoxin) என்ற மருந்துடன் வேண்டாத இடைவினைகளை ஏற்படுத்தும். அதாவது இதய செயலிழப்பு ஏற்படலாம்.
பொட்டாசியம், மெக்னீசியம் குறைபாடு உடையவர்களும் C.Difficile என்ற  தொற்றினால் உண்டாகும் கடும் வயிற்றுப்போக்கு உடையவர்களும்  கண்டிப்பாக டாக்டரின் பரிந்துரை இல்லாமல் அஜித்ரோமைசினை எடுக்கக்கூடாது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அதிலும் குறிப்பாக எரித்ரோமைசின் அல்லது கிளாரித்ரோமைசின்   எடுப்பவர்கள் பொதுவாகவே கீழ்கண்ட அலர்ஜி மருந்துகளை தவிர்த்துக்கொள்வது நல்லது.
1.டெர்பினாடின் (Terfenadine) 
2.அஸ்டமிஜோல் (Astemizole) 
3.கீட்டக்கோணஜோல் (Ketazole) 
காரணம் இந்த கூட்டு இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இன்னும் பொதுவாக சிப்ரோபிளெக்சாசின் (Ciprofloxacin) ஒபிளெக்சாசின் (Ofloxacin) போன்ற அத்தனை பிளேக்சாசின் (Fluoroquinolones) மருந்துகளை டாக்டரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடவேண்டாம். உங்கள் சிறுநீரகங்களை அவை பாதிக்கும். ஸ்படிகசிறுநீர் (Crystalluria) வெளியாகும்.  கீழ்கண்ட மருந்துகளையும்  அவற்றுடன் சாப்பிடாதீர்கள்.
1.ஆஸ்த்மா மருந்தான தியோபில்லின் (Theophylline)
2.மிகுயூரிகமிலம் மற்றும் கவ்ட் என்னும் மூட்டு வலிக்கு பயன்படுத்தப்படும் புரோபைனாசிட் (Probenecid) என்னும் மருந்து.
3.நீரிழிவு மருந்தான கிளிப்பின்க்ளாமைடு (Glibenclamide)
4.ஆஸ்பிரின் (Aspirin),டைக்லோபினாக்  (Diclofenac),அஸெக்ளோபெனாக் (Aceclofenac), புரூபென் (Brufen),மற்றும் நெப்ரோக்ஸன் (Naproxen) போன்ற NSAID வலிமருந்துகள் 

தூக்க மாத்திரைகள்-இடை எதிர்வினைகள் (Drug Interactions with Sleeping Aids):

தூக்க மாத்திரைகளை சர்வசாதாரணமாக விட்டமின் மாத்திரை மாதிரி மக்கள் இப்போது வாங்கி சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். எத்தனை ஆண்டுகள் பழைய டாக்டர் சீட்டாக இருந்தாலும் பரவாயில்லை. அதை காட்டினால் போதும். அது இல்லை என்றாலும் பரவயில்லை.பார்மசி கெளண்டர்களில் கிடைக்கிறது.
ஆல்ப்ரஜோலாம் (Alprazolam) தூக்க மாத்திரை சாப்பிடுபவர்களின் கவனத்திற்கு. அவர்கள் கீழ்கண்ட மருந்துகளை உடன் எடுப்பவர்களாக இருந்தால் பயங்கர மருந்துகள் இடைஎதிர்வினைகளுக்கு (Drugs Interactions) ஆளாக நேரிடும்.
1.வலிப்பு நோய்க்கு சாப்பிடக்கூடிய கார்ப்பமஜாபின் (Carbamazepin)
2.அல்சர் நோய்க்கு சாப்பிடக்கூடிய சிமெட்டிடின் (Cimetidine)
3.நுண்ணுயிர் எதிர்ப்பான் -கிளாரித்ரோமைசின் (Clarithromycin)
4.எரித்ரோமைசின் 
5.பப்ளிமாஸ் (Grapefruit) மற்றும் அதன் சாறு.
6.ஆல்கஹால் மற்றும் ஹெராயின் 
7.எல்லா மனநோய் மருந்துகளும் 
பொதுவாகவே ஆல்ப்ரஜோலாம் (Alprazolam) குளோனஜப்பம் (Clonazepam) மற்றும் டையாசப்பம் (Diazepam) போன்ற எந்த ஒரு ....அஜப்பம்  (Benzodiazepines) மருந்துகள் சாப்பிடும் பொழுதும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் இவர்களுக்கு 
1.கோண அடைப்பு கிளாக்கோமா (Closed-Angle Glaucoma) என்ற கண் அழுத்த நோய் வரும்.
2.மூச்சு திணறல் ஏற்படும்.
3.வலிப்பு நோய் 
4.கல்லீரல்/சிறுநீரக பாதிப்பு 
5.மனச்சோர்வு,தற்கொலை எண்ணங்கள் உண்டாகும்.
6.தூக்க மருந்துகளுடன் டைப்பன்ஹைட்ராமின் (Diphenhydramine) கோடீன் பாஸ்பேட் (Codeine Phosphate) கலந்த இருமல் டானிக்குகளை அருந்தக்கூடாது. இந்த கூட்டு மூச்சு திணறல் (Respiratory Depression), ஆக்சிஜன் குறைவு (hypoxia) என்று தொடர்ந்து இறுதியில் மரணத்தை உண்டாக்கும்.
பப்ளிமாஸ் (Grapefruit):-
இந்த பழம் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய சத்துள்ள பழம். இதில் வைட்டமின்-C  நிறைய இருக்கிறது.மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதில் சர்க்கரை மிகவும் குறைவு. இன்சுலின் திசு உபயோகத்தை ஊக்கப்படுத்தும். கலோரிகள் மிகவும் குறைவு.
ஆனாலும் இந்த பழம் பெரும்பாலான மருந்துகளுடன் சாப்பிடும் பொழுது எதிர்வினைகளை உண்டாகும்.
இந்த பழத்தை சாப்பிடும் பொழுது எதிர்வினை உண்டாக்கும் மருந்துகள்:-
1.கொலஸ்ட்ரால் மருந்துகளான சிம்வாஸ்டேட்டின் (Simvastatin) மற்றும் அடார்வோஸ்டேட்டின் (Atarvostatin). 
2.இதய நோய் மருந்தான நிபிடிப்பின் (Nifidipin)
3.உடல் உறுப்புகளை மாற்றும்  போது அந்த உறுப்பை உடல் நிராகரிக்காமல் இருக்க தரப்படும் சைக்ளோஸ்போரின் (Cyclosporin)
4.தூக்க மருந்துகள் குறிப்பாக பஸ்பிரோன் (Buspiron)
5.சில ஸ்ட்டீராய்டுகள் குறிப்பாக குடல் புண் , ஆஸ்துமா,நோயாளிகள் பயன்படுத்தும் புடானோசைடு (Budanoside)
6.இதய நோய்க்கு (ஒழுங்கற்ற இதய துடிப்புக்கு) தரக்கூடிய அமியொடரோன் (Amiodarone) என்ற மருந்து. மேலே கண்ட மருந்துகளை பப்ளிமாஸ் சரியாக வளர்சிதை மாற்றம் அடையவிடாமல் செய்துவிடும். எனவே அந்த மருந்துகள் உடலில் அதிக அளவு தேங்கி பெரும் தீங்கு செய்ய நேரிடும்.
7.பெக்ஸோபினாடின் (Fexofenadine) என்ற அலர்ஜி மருந்து. இந்த மருந்தை சரியான அளவு சாப்பிட்டாலும் பப்ளிமாஸ் பழம் இதை குடல் சரியாக உறிய விடாமல் செய்துவிடும்.
எனவே மேலே கண்ட மருந்துகளை பப்ளிமாஸ் அல்லது அதன் சாற்றுடன் சாப்பிட்டால் பிரச்சினைகள் வரும்.
 



வெள்ளி, 21 மே, 2021

வைரஸ்களில் மரபணு மாற்றம் -தடுப்பூசி பற்றி விளக்கம்

 கோவிட்-19-இல் இயல்பு மாறாமலே மரபணு மாற்றம்

(பொறுப்பு துறப்பு :-இந்த தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள் கல்வி  நோக்கங்களுக்காக மட்டுமே அன்றி மருத்துவ சிகிச்சைக்கு  உரியதல்ல. தனித்துவமான தனிப்பட்ட தேவைகள் காரணமாக, வாசகரின் நிலைமைக்கான தகவலின் தகுதியை தீர்மானிக்க வாசகர் தங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.) 

படம்-1

மேலே கண்ட தலைப்பு சுருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே விளக்கமில்லாமல் தரப்பட்டிருக்கிறது உண்மைதான். அதாவது இயல்பு என்பது என்ன  என்பதை புரியும்படி விளக்கவேண்டும்.
பொதுவாக எந்த ஒரு உயிரினமும் சூழ்நிலை தனக்கு எதிராக மாறும்போது ஒன்று அதை தவிர்த்து கொள்ளும் அல்லது அதற்கு ஏற்றாற்போல் தன்னில் ஒரு மாற்றம் ஏற்படுத்திக்கொண்டு அதை எதிர் கொள்ளும்.
அதுவே நுண்ணுயிர்களிலும் வைரஸ்களிலும் நிகழும் போது அதற்கு மரபணு மாற்றங்கள் (GENETIC MUTATIONS) என்று பெயர்.
இந்த மாற்றங்கள் சூழ்நிலை கடுமையாகும் போது வீரியமுள்ளதாகவும் சூழ்நிலை எளிதாகும் போது எளிதானதாகவும் அமையும்.
வைரஸ்களில் இன்ப்ளூயன்ஸா
படம்-2

வைரஸ் மிகவேகமாக மரபணு மாற்றத்துடன் தன் இயல்புகளையும் மாற்றிக்கொள்ளும் தன்மையுடையது. அதனால்தான் அதற்கு நிலையான ஒரே தடுப்பூசியை உண்டாக்க முடியவில்லை. சீசனுக்கு தகுந்த மாதிரியும் அதன் இயல்பு மாற்றங்களுக்கு ஏற்ற மாதிரியும்  இன்ப்ளூயன்சா தடுப்பூசியை புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
வைரஸின் இயல்பு மாற்றங்கள் இருவகைப்படும்.
1.காப்பு மூலம் (ANTIGENIC DRIFT) சறுக்கல் 
2.காப்பு மூலம் (ANTIGENIC SHIFT) மாற்றம் 
இந்த இரண்டு இயல்பு மாற்றங்களுமே ஒன்று அதை கடும் வீரியமுள்ளதாக்கும் அல்லது பலஹீனமானதாகவும் மாற்றும்.
இதில் Drift எனப்படும் சறுக்கல் மிக முக்கியமானது. Shift எனப்படும் மாற்றம் மிக அரிதாகத்தான் நடைபெறுகிறது. அதிலும் இந்த புதிய கொரோனா வைரஸில் அப்படிப்பட்ட மாற்றம் நிகழ வாய்ப்பில்லை.(விளக்கம் பெற தொடர்ந்து படிக்கவும்)
Drift எனப்படும் சறுக்கல் புதிய கொரோனாவிலும் (Novel Corona) நிகழ்கிறது. ஆனால் கால தாமதமாக நிகழ்கிறது. கரணம் வேறு எந்த வைரசுக்குமே இல்லாத ஒரு விசேஷ குணம் இதற்கு இருக்கிறது. அதாவது அது மனித செல்களுக்குள் பல்கி பெருகும் போது நிறுத்தி நிதானமாக பிழை திருத்தம் (Proof Reading) செய்துதான் தன்னுடைய மரபு அணுக்களை பிரதி எடுக்கிறது. எனவே அதற்கு காலதாமதம் எடுத்துக்கொள்கிறது. இது தடுப்பூசி துறைக்கு ஒரு நன்மையாகும். காரணம் ஒரே  தடுப்பூசியையே திரும்ப திரும்ப எத்தனை அலைகள் வந்தாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். தடுப்பூசி சூத்திரத்தை புதுப்பிக்கத்தேவை இல்லை.
(விளக்கம் கீழே)

1.காப்பு மூலம் சறுக்கல்அல்லது பிறழ்வு (ANTIGENIC DRIFT):-
படம் -3

ஒரு வைரஸ் தன்னை  நகலெடுக்கும்போது, ​​அதன் மரபணுக்கள் சீரற்ற “நகலெடுக்கும் பிழைகளுக்கு ” (அதாவது மரபணு மாற்றஙளுக்கு) உட்படுகின்றன. காலப்போக்கில், இந்த மரபணு நகலெடுக்கும் பிழைகள், வைரஸின் பிற மாற்றங்களுக்கிடையில், வைரஸின் மேற்பரப்பு புரதங்கள் அல்லது ஆன்டிஜென்களில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
ஆனால் நமது நோயெதிர்ப்பு அமைப்போ (ANTIBODIES)  இந்த ஆன்டிஜென்களை வைத்து  வைரஸை அடையாளம் கண்டு போராட பயன்படுத்துகிறது. எனவே, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தைத் ஏய்ப்பதற்கு ஒரு வைரஸ் தனது ஆன்டிஜென்களை மாற்றினால் என்ன ஆகும்? (படம்-2 மேலே)
இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களில், மரபணு மாற்றங்கள் குவிந்து அதன் ஆன்டிஜென்களை “சறுக்கல்” ஆக்குகின்றன - அதாவது பிறழ்ந்த (Drifted) ஆன்டிஜனைக் கொண்ட வைரஸின் மேற்பரப்பு அசல் வைரஸை விட வித்தியாசமாக தெரிகிறது.
இன்ப்ளூயன்ஸா வைரஸ் மரபணு சறுக்கலில் (Antigenic Drift) நகரும் போது வைரஸின் பழைய நிலைகளுக்கு (STRAINS) எதிரான தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி புதிய திசையில் மரபணு மாறிய இன்ப்ளூயன்சா வைரஸிற்கு எதிராக வேலை செய்யாது. ஏற்கனவே பழைய இன்ப்ளூயன்சா தடுப்பூசி போட்ட எவரும் இந்த புதிய வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.
எனவே இன்ப்ளூயன்சா தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படவேண்டும்.
இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று காப்பு மூல சறுக்கல் (ANTIGENIC DRIFT) ஆகும் .
இந்த மரபணு பிறழ்வுகள் பெரும்பாலும் வைரஸை பலவீனமாக்குவதாகவே இருப்பதால் உண்மையில் சில பிறழ்வுகள் வைரஸை குறைவான தொற்று நோயாகவும் மாற்றக்கூடும். 
இயற்கையான அல்லது தடுப்பூசி மூலம் வெளியேறும் நோயெதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்க வைரஸ்கள் எவ்வாறு மாறுகின்றன என்பது பற்றிய நமது அறிவின் பெரும்பகுதி இன்ஃப்ளூயன்ஸா வைரஸைக் கவனிப்பதிலிருந்தும், தொடர்ந்து இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளைப் புதுப்பிப்பதிலிருந்தும் தெரிய வருகிறது. இந்த உதாரணத்தின் மூலம் 
கொரோனா வைரஸ்கள் மற்றும் இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் (INFLUENZA) வைரஸ்களுக்கு இடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளின் ஒப்பீடு, கோவிட்-19 தடுப்பூசிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

இது SARS-CoV-2 உடன் கூட நடக்குமா?
படம்-4

SARS-CoV-2 இன் மரபணு பரிணாமம் குறித்து இதுவரை ஆய்வு செய்ததில் , மற்ற ஆர்.என்.ஏ வைரஸ்களுடன் ஒப்பிடும்போது இந்த கோவிட்-19 வைரஸ் ஒப்பீட்டளவில் மெதுவாகவே  உருமாறும் என்று தெரிகிறது.
இதற்கு காரணம் மரபணு பிறழ்தலின் போது உருவாகும் நகல்களை பிழை திருத்தும் (Proof Reading) திறன்  இந்த வைரஸிற்கு இருப்பதால்தான் இந்த தாமதமான உருமாற்றம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்களாம் (படம்-4). இது போன்ற திறன் இதுவரை வேறு எந்த RNA வைரசுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்று அவர்களே ஒப்புதல் வாக்குமூலமும் கொடுக்கிறார்கள். அப்படியானால் இந்த புதிய வைரஸ் ஆய்வு கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதா? அதில் சந்தேகமே இல்லை. எனவேதான் எத்தனை உருமாற்றங்களுடன் வந்தாலும் பரவாயில்லை, எத்தனை அலைகள் வீசினாலும் பரவாயில்லை தயாரிக்கப்பட்ட பழைய தடுப்பூசியே எல்லா அலைவரிசைகளுக்கும் பொருந்தும் என்று இவர்கள் கூசாமல் கூறி தடுப்பூசி வியாபாரம் செய்கிறார்கள். SARS-CoV-2 க்கான பிறழ்வு ஒப்பீட்டளவில் மெதுவாக இருப்பதால் சோதனையில் மற்றும் விற்பனையில்  இருக்கும் ,அனைத்து  SARS-CoV-2 தடுப்பூசிகளும்  நீண்ட காலத்திற்கு பாதுகாப்பை வழங்கும் என்று நம்புகிறோம். என்கிறார்கள்.
இவர்களே திட்டமிட்டு உருவாக்கிய வைரஸாக இருப்பதால்தான் அது எப்படி உருமாறும் எப்போது உருமாறும் என்பதை எல்லாம் துல்லியமாக கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். அது எந்த வேகத்தில் உருமாற வேண்டும் என்பதையும் அதன் மரபணுவில்  பதிந்து இருக்கிறார்கள். அப்போதுதான் இவர்கள் தயாரித்து வைத்திருக்கும் தடுப்பூசியை நிதானமாக விற்று தீர்க்க முடியும். அதனால்தான் வைரஸின் மரபணு மாற்றத்திலும் நிதானத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் போலும். இதற்கு மேலும் கூடுதலாக அவர்கள் தரும் ஒப்புதல் வாக்குமூலத்தை பாருங்கள்.
"SARS-CoV-2 பிறழ்வாக இருந்தாலும், இதுவரை, இது காப்பு மூல நகர்வு (ANTIGENIC DRIFT) கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும், SARS-CoV-2 என்பது மனிதர்களுக்குப் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்னும் பல இந்த வைரஸ் பற்றி  அறியப்படாதவை உள்ளன, மேலும் SARS-CoV-2 வைரஸ் குறித்த நமது புரிதல் தொடர்ந்து வளர்ந்து வருகிறது"
படம்-5
Novel Corona Vaccine Hypothesis

காப்பு மூல நகர்வு (ANTIGENIC DRIFT) வேகமாக இல்லை என்பதும் ஒரு தவறான கணிப்பாக போகலாம். இவர்கள் சொல்வதைப்போல உருமாற்றம் அவ்வளவு மெதுவாக இல்லை 2019 இல் ஆரம்பித்த முதல் அலை 2021 முடிவதற்குள் மூன்றாவது அலையாக உருவெடுத்து பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது.
சில விஞ்ஞான கற்பனை (ScFi) திரைப்படங்களில் வருவதுபோல் விஞ்ஞானிகளாலேயே உருவாக்கப்பட்ட சில பூதங்கள் அந்த விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டையும்  மீறி வெளியேறி எல்லாவற்றையும் அழித்து நாசம் செய்வதுபோல் ஆகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

2.காப்புமூல மாற்றம் (ANTIGENIC SHIFT)- -(COVID-19 வைரஸ் Vs இன்ப்ளூயன்ஸா வைரஸ்) :-
படம்-6

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் ஆன்டிஜெனிக் மாற்றத்திற்கு ANTIGENIC SHIFT) உட்படுகின்றன, இது வைரஸின் ஆன்டிஜென்களில் ஏற்படும் திடீர், பெரிய மாற்றமாகும், இது ஆன்டிஜெனிக் சறுக்கலைக் (ANTIGENIC DRIFT) காட்டிலும் குறைவாகவே நிகழ்கிறது.

இது இரண்டு வெவ்வேறு, ஆனால் தொடர்புடைய, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் விகாரங்கள் (STRAINS)  ஒரே நேரத்தில் ஒரு ஹோஸ்ட் செல்லை  பாதிக்கும்போது நிகழ்கிறது. இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மரபணுக்கள் ஆர்.என்.ஏவின் 8 தனித்தனி துண்டுகளால் (“மரபணு பிரிவுகள்” என அழைக்கப்படுகின்றன) உருவாகின்றன, சில சமயங்களில் இந்த வைரஸ்கள் இனச்சேர்க்கை போல் ஒன்றோடு ஒன்று இணைந்து மறுசீரமைப்பை உருவாக்கலாம். இந்த  மறுசீரமைப்பின் போது, ​​இரண்டு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களின் மரபணு பிரிவுகளும்  ஒன்றிணைந்து ஒரு புதிய  இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் புதிய விகாரத்தை (NEW STRAIN) உருவாக்கலாம்.(படம்-6 மேலே)
ஒரு காப்பு மூல (ANTIGENIC SHIFT) மாற்றம் நிகழும்போது, ​​இதன் விளைவாக வரும் புதிய வைரஸுக்கு எதிராக பெரும்பாலானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவோ அல்லது இல்லாமலோ போய்விடும்   ஆன்டிஜெனிக் மாற்றத்தின் (ANTIGENIC SHIFT) விளைவாக வெளிவரும் வைரஸ்கள் தான் பெரும்பாலும் தொற்றுநோயை (PANDEMIC) ஏற்படுத்துகின்றன.
ஆனால் கொரோனா வைரஸ்கள் இன்ப்ளூயன்ஸா வைரசைப் போல்  பிரிக்கப்பட்ட மரபணுக்களைக் கொண்டிருக்கவில்லை. எனவே இதில்  மறுசீரமைப்பு (REASSORTMENT) செய்ய முடியாது.
 கொரோனா வைரஸ் மரபணு பிரிவுகளில்லாத மிக நீண்ட ஒற்றை,  ஆர்.என்.ஏவால் ஆனது. இருப்பினும், இரண்டு கொரோனா வைரஸ்கள் ஒரே செல்லை பாதிக்கும்போது, ​​அவை  ஒன்றிணைய முடியும், இது மறுசீரமைப்பை விட வேறுபட்டது. மறுசீரமைப்பில், ஒரு புதிய ஒற்றை ஆர்.என்.ஏ மரபணு இரண்டு "பெற்றோர்" கொரோனா வைரஸ் மரபணுக்களின் துண்டுகளிலிருந்து ஒன்றாக இணைக்கப்படும். இது கிட்டத்தட்ட ஒரு ஆணும் பெண்ணும் கலந்து புதிய ஒரு குழந்தையை பெற்றெடுப்பதுமாதிரி. ஆனால்  கொரோனாவில் இதுமாதிரி மறுசீரமைப்பைப் போல எதுவும் இல்லை.  ஆனால் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ்கள் இயற்கையில் இணைந்ததாக நம்புகிறார்கள். (பார்க்க மேலே படம்-6)
இங்கு இனச்சேர்க்கை இல்லை. மறுசீரமைப்பு இல்லை. இணைவு மட்டும்தான் இருக்கிறது. எனவே மாற்றம் (SHIFT) இல்லை. ஆனால் தொற்று வீரியம் (PANDEMIC POWER) மட்டும் எப்படி வந்தது.?

கோவிட் -19 -பற்றிய புரியாத புதிர்கள்  

1.இந்த வைரஸ் மிக மிக மெதுவாகத்தான் காப்பு மூல பிறழ்வு அடைகிறது (Slow antigenic drift)
2.காப்பு மூல மற்றம் என்பது இந்த வைரஸில் இல்லை (No antigenic shift ). ஆனால் எப்படி அலை அலையாக உருமாறி வருகிறது.?
3.புதிய வைரஸ் (Novel virus) என்கிறீர்கள். அப்படியானால் இது தானே உருவாக்கியதா? அல்லது உருவாக்கப்பட்டதா ?
4.தடுப்பூசிகள் போட்டும் கட்டுப்படவில்லையே. மூன்றாவது அலை வருகிறதே ஏன்?
5.RNA நகல்களை சரிபார்த்தல் (Proof Reading) செய்வதற்கான திறன் இந்த புதிய கொரனவைரஸிற்கு மட்டுமே இருக்கிறது வேறு எந்த RNA வைரசுக்கு இல்லை என்றால் இந்த வைரஸ் எங்கிருந்து?, எப்போது ? எப்படி வந்தது.? இதற்கு விஞ்ஞானிகள் பதில் தரவேண்டும்?




திங்கள், 10 மே, 2021

கொரோனா-திட்டமிடப்பட்ட சதி?

தொற்றுநோய் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் ஒரு நோக்கமும் இருக்கலாம்?

(பொறுப்பு துறப்பு :-இந்த கட்டுரையில் தரப்படும் தரவுகளுக்கு நாம் பொறுப்பல்ல )

இந்த கட்டுரை 30-09-2020 இல் ஜேம்ஸ் ஃபெட்ஜெர் என்பவரால் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை அடிப்டையாகக்கொண்டது.

இவர் அமெரிக்காவின் பிரபலமான ஓர் எதிர்மறை கருத்தாளராவார்
இவருடைய கருத்துக்களில் மிகையும் இருக்கலாம் குறையும் இருக்கலாம். ஆனால் தர்க்க ரீதியாக சில யதார்த்தங்களும் இருக்கலாம்.)

சான்று

ஜெர்மனியில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழு "மருத்துவத் தகவல்கள் (Doctors For Informations )" என்ற தலைப்புடன் கூட்டப்பட்ட ஒரு தேசிய பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டது. கோவிட் -19 என்பது மக்களை பீதியடைய வைக்க திட்டமிட்டு மருந்து கம்பெனி மாபியாக்களால் உருவாக்கப்பட்ட ஒரு விபரீத விளையாட்டு என்று அந்த அறிக்கை கூறியது.
மேலும் இது ஒரு உலகளாவிய ஊழல். மோசடி. மேலும் மருத்துவத்துறையே ஒரு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம் என்றும் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்கள்.
இது போல உண்மையை கூறும் மருத்துவர்கள் (Doctors For Truth) என்ற 600 பேர் அடங்கிய ஸ்பானிய மருத்துவக்குழு இதே போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையின் சாரம், "கோவிட்-19 என்பது அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பொய்யான தொற்று நோய். இது சுகாதாரத்தை சாக்காக (Sanitary Excuse) வைத்து உலக அளவில் திணிக்கப்பட்ட ஒரு சர்வாதிகாரமாகும். தயவு செய்து மருத்துவர்களும், ஊடகங்களும் அரசியல் துறையும் சத்தியத்தை பரப்புவதன் மூலம் இந்த மோசமான செயலுக்கு முடிவு கட்டுங்கள் என்று நாங்கள் வேண்டுகிறோம் என்று அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
இதே மருத்துவக்குழு குளோரோகுயின் ஹையிட்றாக்சி குளோரோகுயின் PCR டெஸ்ட் போன்ற பயன்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தும் குறை கண்டும் இருக்கிறார்கள். அந்த விமர்சனங்கள் சரியாகவே நிரூபணம் ஆகி இருக்கின்றன. இப்போது எந்த டாக்டரும் குளோரோகுயின் போன்ற மருந்துகளை கொரோனாவுக்கு பயன்படுத்தவில்லை. PCR பரிசோதனை குழாயை மூக்கில் தவறுதலாகப்பிரயோகித்ததால் சிலருக்கு மூளை நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
ஏன் அல்லது எந்த ஆதாரங்களை வைத்து இந்த ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் மருத்துவக்குழு இவ்வாறு இந்த கோவிட்-19 இல்லுமினாட்டி மருந்து தயாரிப்பு கம்பெனிகளின் திட்டமிட்ட சதி என்று கூறுகிறார்கள்?
அவர்கள் அறிந்து நாம் அறியாதவைகள்தான் அப்படி என்னென்ன?

அவர்கள் அறிந்து தரும் ஆதாரங்கள்.
படம்-1

2015-ல் அதாவது கோவிட்-19 தொற்று ஆரம்பிக்க நான்கு வருடங்களுக்கு முன்பே 'கோவிட்-19 க்கான பரிசோதனை முறை (System and Method for Testing for COVID-19) என்ற பெயரில் ரிச்சர்ட் ரோத்ஷீல்டு (Richard Rothschild) என்பவர் அன்றைய டச்சு அரசிடமிருந்து ஒரு காப்புரிமையை பெற்றார். (மேலே படம்-1)
இதை தொடர்ந்து 2017, மற்றும் 2018 களில் மில்லியன்கணக்கில் விற்கப்பட்ட கோவிட்-19 பரிசோதனை கிட்டுகள் பற்றிய விபரமும் 'உலக ஒருங்கிணைந்த வர்த்தக தீர்வு என்ற அமைப்பின் (World Integrated Trade Solution-WITS) மூலம் இப்போது கசிய ஆரம்பித்து இருக்கிறது. (கீழே படம்-2)
படம்-2


இந்த குழப்பமான விபரம் சமூக ஊடகங்களில் வைரலாகியதால் திகைத்துப்போன WITS அமைப்பு அவசர அவசரமாக தனது விலைப் பட்டியலில் இருந்த கோவிட்-19 என்ற வாசகத்தை திருத்தி பொதுவாக மருத்துவ பரிசோதனை கிட் என்று மாற்றியது. இது உலக வர்த்தக விதிக்கு முரணானது. ஏனென்றால் ஒரு பொருளுக்கு இன்வாய்ஸ் போடும்போது அதன் விபரம் தெளிவாக இருக்கவேண்டும் என்பது உலக வர்த்தக விதி. இதை WITS அப்பட்டமாக மீறியது. ஆனாலும் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அதிலுள்ள Code 300215 என்ற குறியீட்டை மட்டும் மாற்ற மறந்து விட்டார்கள். அந்த குறியீடு கோவிட்-19 குறிக்கும் குறியீடு ஆகும்.
2017 -லேயே அதாவது கோவிட்-19 ஆரம்பிக்க 2 வருடங்களுக்கு முன்பே யு.எஸ்,ஐரோப்பிய கூட்டமைப்பு(E.U),சீனா போன்ற உலக நாடுகளுக்கு இடையில் கோவிட்-19 பரிசோதனை கிட்டுகள் ஏற்றுமதியாக தொடங்கிவிட்டன.
படம்-3

உலகவங்கியின் ஆவணங்களின் படி (மேலே படம்-3)இந்த கோவிட்-19 திட்டமானது 2025 வரை தொடரும் என்ற திகைப்பூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கிடையில் எத்தனை அலைகள் உருவாகுமோ தெரியவில்லை.

முன்னறிவிப்புகள் (PREDICTIONS )

1.டாக்டர் அந்தோணி பாஸி (Dr.Antony Fausci):-

இவர் அமெரிக்காவின் பிரபலமான தொற்றுநோயியல் நிபுணர் ஆவார்.இவருடைய ஆலோசனையின் பெயரில்தான் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை பல முடிவுகளை எடுக்கிறது. அதில் ஒன்று ரெம்டெசிவிர் என்ற வைரஸ் எதிர்ப்பானை கோவிட்-19 க்கு தற்காலிக அவசர நிலை சிகிச்சைக்கு கொடுக்க அனுமதி (EUA ) வழங்கியது.
இவர் 2015-ல் வூஹானிலுள்ள வைரஸ் ஆய்வு கூடத்திற்கு சுமார் 4 மில்லியன் யுஎஸ் டாலர் வழங்கியதாகவும் இது அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் தெரியும் என்றும் ஜேம்ஸ் ஃபெட்ஜெர் தன் கட்டுரை யில் குறிப்பிடுகிறார்.
மேலும் அவர் டாக்டர் பாஸி பற்றி கூறும்போது 2017 லேயே அவருக்கு இப்படி உலகளாவிய தொற்று  சீனாவில் அதுவும் வூஹானிலிருந்து பரவும் என்று தெரியும் என்றும் அவர் அதை 2017-ல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருப்பதாகவும் கூறுகிறார். அவருக்கு எப்படி தொற்று தொடங்குவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே தெரியும் என்ற கேள்வியையும் இவர் முன்வைக்கிறார்.

2.பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் :-

2018 இல் பில் கேட்ஸ் உலகளாவிய தொற்று நோய் ஒன்று வரப்போவதாகவும் அது சுமார் 30 மில்லியன் மக்களை அழிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் பகிரங்கமாக அறிவித்தார். இது அடுத்த சகாப்தத்தில் நிகழவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மனைவி மெலிண்டா கேட்ஸ் பொறியியல் நுட்பத்துடன் ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்ட (Lab Engineered) இந்த வைரஸ் மனித குலத்திற்கே ஒரு அச்சுறுத்தல் என்றும் வரும் ஆண்டுகளில் மனித குலத்தை தாக்கும் என்றும் உறுதியளித்தார்.
இவ்வாறு அவர்கள் மக்களை மிகையாக அச்சுறுத்த காரணம் மனிதாபிமான அடிப்படையில் அல்ல வியாபார நோக்குடன் தான் ஃபெட்ஜர் வாதிடுகிறார்.
ஏனென்றால் பில் கேட்ஸ் ஒரு மிகப்பெரும் வேக்சின் விற்பனையாளர் ஆவார். மிகப்பெரும் வேக்சின் தயாரிப்பு நிறுவனங்களில் அவர் டீலர் ஆக இருக்கிறார். என்றும் ஜேம்ஸ் ஃபெட்ஜெர் தன் கட்டுரை யில் குறிப்பிடுகிறார்.
பில் கேட்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் "வரும் ஆண்டுகளில் உலகளாவிய ஆரோக்கியத்தில் மிகச்சிறந்த வாங்கும் பொருளாக எது இருக்கும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அந்தப்பொருள்-தடுப்பூசி -VACCINE" என்று குறிப்பிடுகிறார்.(படம்-4 கீழே)
படம்-4


3.உலகளாவிய தயார் நிலை  கண்காணிப்பு குழு (GPMB):-

செப்டம்பர் 2019 இல் அதாவது தொற்று  ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே The Global Preparedness Monitoring Board-GPMB  என்ற இந்த அமைப்பு உலகம் மிகப்பெரியதோர் ஆபத்தை எதிர்கொள்ளவிருப்பதாக முன்னறிவிப்பு செய்தது.
(கீழே படம்-5)
படம்-5

உலக சுகாதார நிறுவனமும் இது பற்றி அறிந்தே இருந்தது என்று அந்த ரிப்போர்ட் மேலும் கூறுகிறது 
ஜேம்ஸ் ஃபெட்ஜெரின் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் ஆதாரமற்றவை வேண்டுமென்றே புனையப்பட்டவை என்று ராய்ட்டர்  செய்திக்குழுமத்தின் FACT CHECK என்ற ஒரு வலைய தளம் கட்டுரை வெளியிட்டுள்ளது.

புதன், 5 மே, 2021

கோவிட் -19 க்கு ரெம்டெசிவிர் முழுமையான சிகிச்சை அளிக்கிறதா?

 கொரோனா ஆபத்தானதா?
Miss COVID-19


கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் ஒரு வைரஸ் அல்லது வைரஸ் குடும்பம் இருக்கத்தான் செய்கிறது  என்பது மிகவும் வெளிப்படையான  உண்மை .நிச்சயமாக இது ஒரு தொற்று  நோயை உண்டாக்கும் ஒரு வைரஸ் குடும்பத்தை சேர்ந்ததுதான். சிலருக்கு இது மரணத்தையும் உண்டாக்கலாம். அது அவருடைய வயது, உடல் சக்தி மற்றும் அவருக்கு இருக்கும் பிற உடல் உபாதைகளைப் பொறுத்தது.
ஆனால் இந்த வைரஸ் ஊரை ஒடுக்கிவைக்குமளவுக்கு அவ்வளவு பயங்கரமானதா? இதை விட வேறு கொடிய நோய்களும் இல்லையா? இதற்கு முன்னர் இந்தியாவிலோ அல்லது உலகத்திலோ வைரஸ் தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லையா?
டெங்கு காய்ச்சல் பல உயிர்களைக் கொன்றது.
பன்றிக் காய்ச்சல் பல உயிர்களைக் கொன்றது.
கொடிய ஸ்பானிஷ் காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் இன்றும் உள்ளது மற்றும் தொடர்ந்து மக்களைக் கொன்று வருகிறது.
ஆனால் இந்த கொரோனா வைரஸிற்கு  மட்டும் ஏன் இப்படி பல கட்டுப்பாடுகள்?
இன்று உலக சுகாதார அமைப்பு (WHO) இதை ஒரு ஹீரோவாக தூக்கிப்பிடிக்கிறது. அதுவும் குறிப்பாக இந்தியாவில் இது ஒரு வி.ஐ.பியாக மதிக்கப்படுகிறது . ஏனென்றால் 
இந்திய பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி மக்களை சரியாக இரவு 9.09 மணிக்குபால்கனிகளில் நின்று விளக்குகளை ஏற்றி, மணிகள் ஒலிக்கவும், கைதட்டவும் சொன்னபோது ஒவ்வொரு விவேகமான மக்களின் ஆறாவது அறிவும் விக்கித்து நின்றது.மார்ச் 2020 இல் அரங்கேற்றப்பட்ட கொரோனா நாடகத்தின் முதல் கட்டங்களில் நடிக்கப்பட்ட முதல் காட்சி இது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த நேரத்தில் விவேகமுள்ளவர்கள் உடனடியாக அந்த நாடகத்தின் துர்நாற்றத்தை உணர்ந்தார்கள். நிச்சயமாக இது இல்லுமினாட்டி மருந்து மாபியாக்களின் நன்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நாடகம் என்பதை ஒரு சிலர் உணராமல் இல்லை. ஆனால் உலகம் ஏமாந்தது. நான் ஒரு வைரஸ்தானே,நான் என்ன பேயா பூதமா என்று கொரோனா திகைத்தது.
இந்த நாடகத்திற்குள் தானும் ஒரு பாத்திரமாக உலக சுகாதார அமைப்பும் ஒளிந்து கொண்டிருக்கிறதா என்ற சந்தேகமும் வலுக்கிறது. இந்த நோய்க்கு WHO சூட்டிய பெயரைப் பாருங்கள்.
2019-இல் ஏதோ உலக வைரஸ் அழகிப்போட்டியில் முதல் பரிசு பெற்ற  அழகிக்கு சூட்டப்பட்ட பட்டம் மாதிரி கோவிட் -19. உலகில் எந்தவொரு நோய்க்கும் இதுபோன்ற அதிசயமான பெயர் தரப்பட்டு இருந்ததா?
பின்னே என்னதான் நடக்கிறது? இதில் பெரிய மர்மம் ஒன்றும் இருக்கிறது. 
இந்த மருந்து மாஃபியாக்கள் மக்களின் ஆரோக்கியத்தில் சூதாட்டம் செய்கின்றன. COVID-19 என்பது அவர்களின் கடும் பண தாகத்தை பூர்த்தி செய்வதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த விளையாட்டின் பெயர். இது ஒரு சூதாட்ட நாடக விளையாட்டு.
இனி இந்த விளையாட்டின் தொடராக கொரோனா முதல் அலை இரண்டாவது அலை மூன்றாவது அலை என்று  சமுத்திரத்தில் தோன்றும் எண்ணிக்கையில் அடங்காத அலைகளாக கொரோனா உருவெடுத்து படிப்படியாக முன்னேறி உச்சத்தை தொடும் போது நாமும் செத்து அதுவும் செத்து உலகம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஆனால் நாடகம் தொடரும். மாஃபியாக்களின் தாகமும் தீராது. இந்த கபட நாடகத்தின் மூலம் அவர்கள் ஓர்  உண்மையை மறைக்கப்பார்க்கிறார்கள்.
அந்த உண்மை சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணி போல் இப்போது வெளியாகிவிட்டது.
உண்மை என்னவென்றால், அலோபதி மருந்தியலில் சரியான மருந்தும்  சரியான சிகிச்சையும் இந்த நோய்க்கு இல்லை என்பதே.
அனைத்தும் சோதனை மற்றும் பிழை (Trial & Error) சிகிச்சைகள். சிகிச்சையின் முடிவில் நோயாளி உயிர்வாழ்வார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, அதற்காக எதுவும் உறுதியாகவும்  இல்லை. ஆனால் சிகிச்சையின் விலை மட்டும் பல லட்சம் மதிப்புடையது.
தான்சானியா போன்ற சில நாடுகள் தங்களது இயற்கை வைத்தியம் மூலம் COVID-19 வைரஸை முற்றிலுமாக ஒழித்ததாகக் கூறுகின்றன .
இந்தியாவுடன் ஒப்பிடும்போது தான்சானியா மருத்துவம் அல்லது பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேறிய நாடு அல்ல. ஆனால் இந்த நோயை நாங்கள் ஒழித்துவிட்டோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அங்கு முகமூடி இல்லை. வாய்ப்பூட்டு இல்லை. மருத்துவமனைகளில் எந்தவிதமான மோதல்களும் இல்லை, சடலங்களும் அங்கே குவிந்து கிடக்கவில்லை.
ஏனென்றால் அந்த நாடு மருந்து உற்பத்தி மாபியாக்களின் வலையில் விழவில்லை. அங்குள்ள ஆட்சியாளர்கள் நேர்மையானவர்கள், தங்கள் மக்களை நேசிக்கிறார்கள். அவர்கள் நம்ம  ஆட்சியாளர்களைப் போன்ற மருந்து நிறுவனங்களின் வணிக கூட்டாளிகள் அல்ல. தான்சானியா COVID-19 துயரங்களை இயற்கை வைத்தியம் மூலம் தீர்த்தது. (இந்த கட்டுரை எழுதப்படும் போது உயிருடன் ஆரோக்கியமாக இருந்த தான்சானியா அதிபர் திடீரென்று மர்மமான முறையில் இறந்தார் )
ஆனால் இங்கே என்ன நடக்கிறது.?
உலக சுகாதார அமைப்பு சொல்கிறார்கள் அமெரிக்க அதிபர் பாராட்டுகிறார் டாக்டர்களும் நல்ல மருந்துகள் என்று சிபாரிசு செய்கிறார்கள் என்று நம்ம நாட்டு மக்கள் என்ற செம்மறி கூட்டம் பார்மசிகளுக்கு போய் டாக்டரின் சீட்டோ பரிந்துரையோ கூட இல்லாமல் பார்மசி கெளண்டரிலேயே  குளோரோகுயின் அஜித்ரோமைசின் ஹைடிராக்சிகுளோரோகுயின் என்று மளிகை பொருள் வாங்குவது மாதிரி கட்டுக்கட்டாக வாங்கிக்கொண்டு போய் தின்றார்கள். இதுதான் அலோபதியின் ஆரம்பகட்ட கொரோனா முயற்சி/பிழை (Trial/Error) மருத்துவம். இங்கு மட்டுமல்ல உலக முழுக்க. 
நுண்ணுயிர் எதிர்ப்பான்களை (Antibiotics) வைரஸ் நோய்களுக்கு தரக்கூடாது என்ற மருத்துவ விதிகள் கூட காற்றில் பறக்கவிடப்பட்டன. ஏன் கொடுத்தால் என்னாகும். வேறு ஒன்றும் ஆகாது. அழிப்பதற்கு சரியான நுண்ணுயிர் (பாக்டீரியா) கிடைக்காமல் போய் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பான்கள் உங்கள் உடல் செல்களை சிதைக்கலாம். இரத்த அணுக்களை சிதைக்கலாம். குளோரோகுயின் கண்ணின் விழித்திரையை தாக்கலாம் உங்கள் இதயத்தையும் தாக்கலாம். இத்தனை பக்க விளைவுகளையும்  உங்களுக்கு தந்து அந்த மருந்து தயாரிப்பு மாபியாக்கள் தங்கள் கிட்டங்கிகளில் தேங்கிக்கிடந்த அந்த ஸ்டாக்குகளை விற்று தீர்ந்துவிட்டன. பார்மசிகளும் தங்களுக்கு அடித்த யோகத்தில் ஒரு கை  பார்த்துவிட்டன.
மற்றொரு மருத்துவர், டெக்ஸாமெதாசோனை மிகவும் மலிவான மருந்தாகப் பயன்படுத்தலாம், இது மூச்சுக்குழாயில் உள்ள சளி அடைப்பை நீக்குகிறது என்று டெக்ஸாமெத்தசோனுக்கு ஒரு பெரும் விளம்பரம் கொடுத்தார். மக்கள் என்ற செம்மறியாட்டுக்கூட்டம் அதில் போய் விழுந்தது. உடனே பார்மசிகள் டெக்ஸ்சாமெத்தசோனை பெரிய அளவில் கொள்முதல் செய்து விற்று லாபம் பார்த்தன. கார்டிகோஸ்டெராய்டுகளை தொற்று நோய்களுக்கு கவனமாக தரவேண்டும் என்ற பொது விதியும் இங்கு காற்றில் பறக்கடப்பட்டன.
ஆனால் மருத்துவர்கள் எந்த அடிப்படையும் இல்லாமல் இந்த மருந்துகளை பரிந்துரைத்தனர். ஏன்? இந்த மருத்துவர்களின் பேராசை காரணமாகவே மருந்து நிறுவனங்களின் லஞ்சம் அதிகரித்துள்ளது.
இந்த அலப்பரைகளால் என்ன நடந்தது.
மலேரியாவுக்கு தரவேண்டிய குளோரோகுயினை கொரோனாவுக்கு விற்று தீர்த்தத்தால் மலேரியாநோயாளிக்கு மருந்து கிடைக்கவில்லை.
ஆஸ்துமாவுக்கு தரவேண்டிய டெக்ஸ்சாமேதாஸோனை கொரோனாவுக்கு விற்று தீர்த்தத்தால் ஆஸ்துமா நோயாளிக்கு மருந்து கிடைக்கவில்லை. யார் எக்கேடு கெட்டால் என்ன என்னுடைய ஸ்டாக் விற்று தீர வேண்டும் என்பதே மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை மாபியாக்களின் நிலை.
இன்னும் இந்த குளறுபடி மருத்துவத்தால் வைரஸும் மறு உரு வெடுத்து 2-ஆவது அலையாக வந்திருக்கிறது என்பாதை விட  கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதே சரி.
வெறும் இஞ்சிகஷாயத்தில் குணப்படும் இந்த வைரஸை அப்படியெல்லாம் செய்து சுகப்பட விடாமல் இப்படி குளறுபடி மருத்துவத்தின் மூலம் உருமாற்றிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது தானோ இந்த இல்லுமினாட்டிகளின் விருப்பம்?

ரெம்டெசிவிர் 
நரகவாசலை நாடும் செம்மறி ஆடுகள் 

இப்பொது அவர்களுக்கு கிடைத்திருக்கும் அட்சய பாத்திரம் ரெம்டெசிவிர். இது ஒரு உயிர் காக்கும் மருந்து என்கிறார்கள்  ஆனால் தெளிவான விளக்கம் இல்லை. இந்த மருந்து GILEAD SCIENCE என்ற பிரபல அமெரிக்க கம்பெனியால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இது ஒரு வைரஸ் எதிர்ப்பான் (Antiviral) ஆகும். இருக்கட்டும். ஆனால் இது கோவிட்-19 நோயை முற்றிலுமாக குணப்படுத்துகிறதா? கொரோனா வைரஸை முற்றிலும் அழித்து விடுகிறதா? இந்த கேள்விகளுக்கு இல்லவே இல்லை என்பதுதான் கசப்பான பதில். அதுதான் கசப்பான உண்மையும் கூட.
தூண்டில் மீன்கள் 

இந்த மருந்து முதலில் எபோலா, H.I.V. போன்ற வைரஸ்களை வெல்வதற்காக தயாரிக்கப்பட்டது. ஆனால் அவற்றில் அது படு தோல்வி அடைந்தது.
என்ன செய்வது கிட்டங்கிகளில் ஸ்டாக் தேங்கிவிட்டதே. எப்படியும் விற்று தீர்க்கவேண்டும். அமெரிக்க FDA இடம் மண்டியிட்டது GILEAD. என்ன மாயமோ 2020-இல் FDA இந்த மருந்திற்கு அவசர கால உபயோக அனுமதியை (EUA)  கொடுத்தது.
ஏற்கனவே குளோரோகுயினுக்கும் இதுமாதிரி ஓர் அனுமதியை கொடுத்து தலையில் குட்டு வாங்கியது FDA. அது வேறு கதை.
தீவிர சிகிச்சையில் கடுமையான சுவாசப்பாதை தடுப்பால் Respiratory Distress) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்று EUA கூறியது.
ஏனென்றால் இது மருத்துவமனையில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையை இரண்டு முதல் மூன்று நாட்கள் குறைக்கிறது. சளியின் தீவிரத்தை சிறிது குறைக்கிறது. ஒட்டுமொத்தமாக 31% நன்மை அளிக்கிறது என்று அமெரிக்காவின் வைரஸ் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் FAUCI கூறுகிறார்.
இந்த மருந்தை சிபாரிசு செய்யும் சிகாகோ பல்கலைக்கழக மருத்துவப்பள்ளி தற்போது இந்த மருந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இது ஒரு முழுமையான சிகிச்சையாக கருதப்படக்கூடாது என்றும் கூறுகிறது.
ஏப்ரல் இறுதிக்குள் கடுமையான COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட 21 பேர் பரிசோதிக்கப்படுவார்கள் என்று கிலியட் தெரிவித்துள்ளது. இந்த மருந்தின் முழு ஆய்வறிக்கை மே 2020 இறுதிக்குள் வெளியிடப்படும் என்று இந்த மருந்தை தயாரித்த கிலியட் நிறுவனம் கூறுகிறது.
உண்மை என்னவென்றால், அலோபதி மருந்தியலில் COVID-19 க்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருந்து எதுவும் தற்போது இல்லை.
ஆகவே எதையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் செம்மறி ஆடுகளைப் போல அலைய வேண்டாம்.
உங்களுக்கு உங்கள் பணம் மற்றும் பொருள் வீணாகிறது.
ஆனால் உண்மையான நன்மை ரெம்டேசிவிர் மற்றும் அதன் தயாரிப்பாளருக்கு ஆதரவாக சென்றுள்ளது.
கறுப்புச் சந்தையில் இந்த மருந்தின் விலை தங்கத்தின் விலையை நெருங்குகிறது. அதன் உற்பத்தி நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு 25% உயர்ந்துள்ளது.
இது காகம் மற்றும் நரியின் கதை போன்றது. எப்படியோ நரி (மருந்து கம்பெனி) தந்திரத்தால் காகத்திடமிருந்து வடையை ஏமாற்றி  பறிக்க நினைக்கிறது..
காகம் (மக்கள்)வீணாக ஏமாறக்கூடாது.

என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது?

.நீங்கள் ஒரு COVID-19 அறிகுறியை உணர்ந்தால் பீதி அடைய வேண்டாம்.
உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருங்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு முறையாவது நீராவி உள்ளிழுக்க வேண்டும். இன்ஹேலர் இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம். ஒரு வீட்டு கிண்ணத்தைப் பயன்படுத்தி தண்ணீரைக் கொதிக்க வைத்து நீராவியை உள்ளிழுக்கவும்.
.இஞ்சியை நசுக்கி, தலைவலிக்கு தலையில் தேய்க்கவும்.
உங்களுக்கு காய்ச்சல் இருந்தால், இஞ்சி சாற்றில் தேன் மற்றும் மிளகு தூள் கலக்கலாம்.
.நீரிழிவு நோய், பிபி மற்றும் இதய நோய்கள் போன்ற கொமொர்பிடிட்டிகள் இருந்தால் மட்டுமே, ஒரு நல்ல மருத்துவரிடம் செல்லுங்கள்.










வியாழன், 29 ஏப்ரல், 2021

தூக்க மருந்துகள் சிறுநீரகங்களை பாதிக்குமா?-ஆம்

தசை சிதைவு நோயும் சிறுநீரக செயலிழப்பும் 
படம்-1-அ 


ரெபிடோமயோலைஸிஸ் (Rhabdomyolysis) என்ற தசை சிதைவு நோய் அசாதாரணமாக ஏற்படக்கூடியதாக இருக்கலாம். ஆனால் உயிருக்கே உலை வைக்கும் ஒரு நோயாகும். மேலும் நாம் மிக சாதாரணம் என்று கருதக்கூடிய வெட்டு காயங்கள், விபத்து காரணமாக கீழே விழுந்து அல்லது இடிபாடுகளில் அல்லது நெரிசலில் சிக்கி சதை சேதப்படுத்தல்,சதை வீங்குதல் சதை பிடிப்பு இவையும் கூட அசாதாரணமாக இந்த துரதிருஷ்ட நிலையில் கொண்டு போய் விடலாம். ஒரே இடத்தில வெகு நேரம் இருப்பில் இருப்பதும் அல்லது படுக்கையில் கிடப்பதும் சரி ஓடியாடி உழைக்கிறோம் ஓட்டப்பந்தயம் கடும் உடற்பயிற்சி செய்கிறோம்  என்று உடலை அளவு மீறி துன்புறுத்துவதும்,  சில நேரங்களில் உங்கள் கெட்ட காலமாக இந்த துரதிருஷ்ட கொடிய நோய் நிலையில்  கொண்டுபோய் விடும் . எனவே எதிலும் மிதமாக அல்லது நடு நிலையுடன் இருந்து கொள்ளுங்கள்.
மேலே சொன்ன நோய் காரணங்கள் நேரடியான சதை தாக்குதலினால் ஏற்படுபவை. இதை மருத்துவ மொழியில் 'அதிர்ச்சிகரமான காரணிகள் (Traumatic Causes) என்பார்கள்.
இவை அல்லாது அதிர்வு இல்லாத காரணிகளும் உண்டு. இவற்றிக்கு Nontraumatic Causes என்பார்கள். இவை சில மருந்துகளை டாக்டரின் ஆலோசனை இல்லாமல் தான்தோன்றித்தனமாக சாப்பிடும்போது ஏற்படுவது.
இந்த மருந்துகளில் பிரதானமானவை ஸ்டேட்டின் (...statin) வகை கொலஸ்ட்ரால் மருந்துகள். அதாவது சிம்வாஸ்டேட்டின் (simvastatin), அட்டோர்வாஸ்டேட்டின்  (Atorvastatin), ரோஸுவாஸ்டேட்டின் (Rosuvastatin) என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதற்கு அடுத்தபடியாக வருவது தூக்க மருந்துகள் அடங்கிய அனைத்து மனநோய் மருந்துகளும்.
இந்த அத்தனை மருந்துகளுமே தான்தோன்றித்தனமாக அளவுமீறி உபயோகிக்கும் பொழுது தசைகளில் அழுத்தம் உண்டாக்கி தசை நார்களை சிதைத்து நாளடைவில் இந்த கொடிய தசை சிதைவு நோயை உண்டாக்குகின்றன.
சாதாரணமாக நாம் இருமல் அலர்ஜி என்று பார்மசி கெளண்டர்களில் வாங்கி சாப்பிடும் ஹிஸ்டமின் எதிர்ப்பான்கள் (Antihistamin), மேலும் அல்சருக்கு சாப்பிடக்கூடிய கிளைக்கோபைரோலேட் போன்ற கோலினர்ஜிக் எதிர்ப்பான்கள் (Anticholinergic) இன்னும் ஆஸ்துமா மருந்துகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

வேறு சில காரணிகள் 

1.தைராய்டு கோளாறுகள்.
2.பொட்டாசியம் சோடியம் அயனிகளில் ஏற்ற இறக்கங்கள் (வயிற்றுப்போக்கு)
3.வெயிலில் வெகுநேரம் நிற்பது,அலைவது கனமான பணிகளில் ஈடுபடுவது.
4.வைட்டமின் டி குறைபாடு (ஸ்டேட்டின் மருந்துகள், rickets என்ற  எலும்புருக்கி நோய்.)
5. வைரல் மற்றும் பாக்டீரியா தொற்று  நோய்கள் எலும்பு தசைகளை தாக்கும் போது. 

அறிகுறிகள் 

முற்றிய நிலையில் தசை நார்கள் சிதைந்து அதிலிருந்து மையோகுளோபின் (Myoglobin),மற்றும் கிரியாட்டின் பாஸ்போ கைனேஸ் (Creatine Phospho Kinase-CPK) ஆகிய நச்சுக்கள் இரத்த ஓட்டத்தில் கலந்து சிறுநீரகம்,கல்லீரல் இதயம் ஆகிய முக்கிய உறுப்புகளை தாக்குகின்றன.
சிறுநீரகம் சேதமடைவதால் இரத்தத்தில் கிரியாட்டினின் ,யூரியா போன்ற நச்சுக்கள் உயரும்.
கல்லீரல் பாதிக்கப்படுவதால் இரத்தத்தில் கல்லீரல் என்ஜைம்களான 
SGOT, SGPT மற்றும் LDH இவற்றின் அளவுகள் உயரும்.

மயோகுளோபின் :-

இரத்தத்தில் ஆக்சிகனை சுமந்து செல்லும் ஹீமோகுளோபினை போன்றதுதான் மயோகுளோபின். இது தசை செல்களுக்கிடையில் ஆக்சிஜனை சேமித்துவைக்கும். இதுவும் ஹீமோகுளோபினைபோல் சிவப்பாகவே இருக்கும்.
சிறுநீரைப்பரிசோதிக்கும் போது இரண்டு காரணங்களுக்காக சிறுநீரில் சிவப்பு நிறம் கலந்து இருக்கும்.
1.இரத்த சிவப்பணுக்கள் -தொற்று நோய்,சிறுநீரக அழற்சி,புராஸ்டேட் புற்று ஆகிய காரணங்கள்.
2.மயோகுளோபின் -தசை சிதைவு நோய் காரணமாகும்.
மயோகுளோபின் சிறுநீரகம் வழியாக வெளியேறும் போது சிறுநீரக முன் குழாயை (PCT) பாதிக்கும். இரத்தக்குழாயை சுருக்கி சிறுநீரகத்திற்கு இரத்த ஓட்டத்தை குறைத்து விடும். இதனால் சிறுநீரகமும் செயலிழந்து மயோகுளோபினும் சிறுநீரில்  வெளியேற முடியாமல் இரத்தத்தில் தேங்கிவிடும்.

கிரியாட்டின் பாஸ்போ கைனேஸ் (CPK)

நம்முடைய தசைகள் ஆரோக்கியமாக இயங்குவதற்கு இந்த என்ஜைம் மிகவும் அவசியம். இந்த என்ஜைம் எப்போதும் தசைகளுக்குள்  இருக்கவேண்டும். நாம் உண்ணும் புரதங்களை தசைகள் உட்கொள்ள இந்த என்ஜைம் உதவுகிறது. அப்படி உட்கொள்ளப்படும் பொழுது இந்த என்ஜைம் கிரியாட்டினின் கழிவாக மாறி சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படும்.
இந்த என்ஜைம் தசை சிதைவு நோயின் போது இரத்த ஓட்டத்தில் கசிந்து கீழ் கண்ட பாதிப்புகளை உண்டாக்குகிறது.
1.குறை இரத்த அழுத்தம் (Low B.P)
2.இரத்த ஓட்டம் தேங்குதல் 
3.பல்லுறுப்பு செயலிழப்பு (Multiple Organs Failure)
மேலே தரப்பட்ட பாதிப்புகளை பார்க்கும் பொது இது எவ்வளவு ஆபத்தான வியாதி என்பதை நம்மால் கணிக்க முடியும்.
இது அசாதாரணமானதுதான் என்றாலும் சாதாரண நிலைகளில் கூட இது ஏற்பட வாய்ப்புண்டு என்பதே உண்மை.
படம்-1ஆ 


உதாரணமாக அடிக்கடி ஏற்படும் கழுத்து வலி, முதுகு மற்றும் இடுப்பு வலி இவற்றைக்கூட நாம் அலட்சியப்படுத்த முடியாது.
இவை இந்த நோயின் ஆரம்பக்கட்டமாக இருக்கலாம்.
உடனே CPK மற்றும் மையோகுளோபின் இரத்தத்தில் எந்த அளவு இருக்கிறது என்பதை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
ஆண்களுக்கு CPK அளவு (சாதாரணமாக) இரத்தத்தில் 40 - 300 யூ/லிட்டர் இருக்கலாம்.
பெண்களுக்கு 30-190 யூ/லிட்டர் வரை இருக்கலாம் 
இந்த டெஸ்ட் மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஆரம்ப நிலையில் CPK தான் முதலில் இரத்தத்தில் கசிகிறது. பிறகுதான் மயோகுளோபின் கசிகிறது.
இரத்தத்தில் மயோகுளோபின் சாதாரண அளவு =25 to 70 ng/ml 
கடுமையான உடல் உழைப்பு,உடற்பயிற்சி, தசைகளில் அடிபடுதல்,காயங்கள் போன்றவை கூட இரத்தத்தில் மயோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

பெட்டி நோய்க்குறி (Compartment Syndrome:
படம்-2

நமது எலும்பு தசை அமைப்பு (Skeletal Muscle System) பல பெட்டிகளான (Compartments) பிரிவுகளை கொண்டது.இந்த பிரிவுகள் Fascia என்ற விசேஷ உறுதியான தசை நார்களால் அறை அறையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டிக்கும் தசை நார்கள், நரம்புகள் உள் வெளி செல் திரவங்கள் இன்னும் பலவசதிகள் தரப்பட்டுள்ளன.
எந்த ஒரு பாதிப்பும் தசைநார்களுக்கு நேரடியாக அடிபடுதல் காயங்கள் மூலமோ அல்லது மறைமுகமாக மேலே குறிப்பிடப்பட்ட கொலஸ்ட்ரால் மற்றும் தூக்க மருந்துகள் மூலமாக ஏற்படுத்தப்பட்டால் அது இந்த அற்புத பெட்டி அமைப்புகளை சீர்குலைத்து தசை சிதைவு நோயை உண்டாக்கும் (பார்க்க மேலே படம்-2)
மேலே படத்தில் முழங்கால் தசை எலும்பு பெட்டி எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது.
நம் உடலின் முழு எடையையும் தாங்கி நிற்பது அந்த பெரிய எலும்புதான்.அதற்கு Tibia எலும்பு என்று பெயர்.அதோடு துணையாக நிற்கும் அந்த சிறிய எலும்புக்கு Fibula என்று பெயர். நாட்பட்ட எந்த ஒரு பாதிப்பும் இந்த எலும்புகளை சிதைத்து நீர் கட்ட செய்து வீங்கி தசை நார் செல் நச்சுக்களை இரத்த ஓட்டத்தில் கலக்கச்செய்யும். இது தசை சிதைவு நோயின் மிக கொடிய நிலை ஆகும்.

தசை சிதைவு நோயினால் ஏற்படும் சிக்கல்கள்:

1.இரத்த உறைவு அதிகரித்தல் 
2.இரத்த ஓட்டம் தடைபடுவதால் குறை இரத்த அழுத்தம் 
3.இதயம் சிறுநீரகம் கல்லீரல் போன்ற பல்லுறுப்புகள் பாதிக்கப்படுதல்.
4.சோடியம், பொட்டாஷியம் போன்ற தாதுப்பொருள்கள் அல்லது மின்பகு அயனிகள் சமநிலை இழத்தல் (Electrolytes Imbalance)
5.சிறுநீரில் ஆல்புமின் வெளியாவதால் இரத்தத்தில் ஆல்புமின் குறைபாடு உண்டாகுதல் 
6.இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரித்தல்.
7.பெட்டி நோய்க்குறி
8.இரத்த குழாய்களில் அடைப்புகள் உண்டாகுதல் 

மருத்துவ ஆலோசனைகள் 

1.ஸ்டேட்டின் கொலஸ்ட்ரால் மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவதை நிறுத்துங்கள். டாக்டரை கலந்து கொண்டு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு மாதம் இடைவெளிவிட்டு சாப்பிடலாம். அல்லது அதை சாப்பிடுவதை ஒரேயடியாக நிறுத்தியும் விடலாம். இதெல்லாம் கல்லீரலை கெடுப்பதை தவிர வேறு எந்த நிவாரணமும் தரப்போவதில்லை. மருந்து மாபியாக்களின் பித்தலாட்டம் இந்த ஸ்டேட்டின் கொலஸ்ட்ரால் மருந்துகள்.
2.படிப்படியாக தூக்க மற்றும் மன நோய் மருந்துகளை நிறுத்துங்கள்.இவை யெல்லாம் உங்களை கொல்லக்கூடியவையே  அன்றி எந்த நோய்க்கும் நிவாரணிகள் அல்ல.
3.ஹிஸ்டமின் எதிர்ப்பான்கள் மற்றும்  கோலினர்ஜிக் எதிர்ப்பான்களை மிகவும் கவனமாக கையாளுங்கள் 
4.சுயமாக அல்லோபதி மருந்து சாப்பிடும் பழக்கத்தை விடுங்கள்.
5.ஸ்டெராய்டுகளை டாக்டரின் பார்வையிலில்லாமல் சாப்பிடாதீர்கள் 
6.எபிட்ரின் போன்ற கோலினர்ஜிக் எதிர்ப்பான மருந்துகள் அடங்கிய டயட் கட்டுப்பாட்டு மருந்துகளை வாங்கி சாப்பிடாதீர்கள் 
7.ஹார்மோன் மருந்துகளிடம் மிகவும் கவனமாக இருங்கள்.

மருந்து அல்லாத ஆலோசனைகள் 

1.கடுமையான உடற்பயிற்சி, சக்திக்கு மீறிய உடல் உழைப்பு ஆகியவற்றை தவிருங்கள் 
2.அதிகமாக வெகுநேரம் கடும் வெய்யிலில் விளையாட்டுகள் உடற்பயிற்சி ஆகியவற்றை செய்யாதீர்கள்.
3.நிறைய தண்ணீர் பழ ரசம் போன்றவற்றை அருந்துங்கள்.
4.அளவுக்கதிகமான புரதம் மற்றும் உடலில் சதைபோடும் உணவுகள் இவற்றை தவிருங்கள்.
5.ஒரே இடத்தில நீண்ட நேரம் இருப்பது அல்லது படுப்பது போன்ற செயல்களை தவிருங்கள்.




திங்கள், 12 ஏப்ரல், 2021

மனச்சோர்வு மருந்துகள் -அமிட்ரிப்ட்டையிலின்

 மனச்சோர்வு மருந்துகள் -அமிட்ரிப்ட்டையிலின் 
படம் -1

மனச்சோர்வு என்பது தீவிரமான சோகம், வாழ்க்கையின் அன்றாட அம்சங்களில் பொதுவான நலன்களை இழத்தல், தூக்கமின்மை, பசியின்மை, தன்னை பற்றிய குறைவான சுயமதிப்பீடு,ஆகிய அறிகுறிகளைக்கொண்ட ஒரு மன நோய் ஆகும்.
நரம்பியல் ரீதியில் இதை விளக்குவதென்றால் நரம்புகளுக்கு இடையேயான சந்திப்பு இடைவெளியில் (nerve synapse)  செய்தி பரிமாற்றங்களுக்கு தேவையான நாரெட்ரீனலின், டோப்பமின் செரோட்டோனின் போன்ற ஹார்மோன்கள் குறைவு பட்டோ அல்லது சுத்தமாக இல்லாமலோ இருப்பது.
இந்த நோய் வந்தவர்கள் செய்யும் முதல் தவறு பொறுமையின்மை. அதாவது மனதளவில் ஏற்பட்ட சோர்வை உடல் ரீதியான பாதிப்பாக எண்ணிக்கொண்டு உடனே ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டிடமோ அல்லது எதோ ஒரு அல்லோபதி டாக்டரிடமோ  போகிறார்கள்.
அவருக்கு அடித்தது லாட்டரி. அதுவும் ஒரு சைக்கியாட்ரிக் ஸ்பெஷலிஸ்டிடம் போனால் கேட்கவே வேண்டாம். உங்களை நிரந்தர நோயாளியாக்கி தானும் வருமானம் பார்த்து மருந்தகங்களும் வருமானம் பார்ப்பதற்கு அவர் பண்ணும் முஸ்தீபுகள் ஒன்று தூக்க மாத்திரையை எழுதித்தருவார் இல்லை என்றால் மனச்சோர்வு மருந்துகளை எழுதித்தருவார். நீங்கள் இந்த மாத்திரைகளுக்கு அடிமையாகி உங்கள் பணமும் பாழாகி மருத்துவத்துறைக்கும் மருந்தியல்துறைக்கும் ஒரு நல்ல வருமானத்தை கொடுத்துவிடுவீர்கள். காரணம் இந்த மருந்துகள் எதுவுமே நோய் நிவாரணிகள் அல்ல.
அந்த மனச்சோர்வு மருந்துகளில் ஒரு சில  மட்டும் கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
Fig-Table

மேலே உள்ள பட்டியலில் முக்கியமானவை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இவை போக இன்னும் இந்த லிஸ்டில் ஏராளம் இருக்கின்றன. 
இவை அனைத்துமே வித்தியாசமான முறையில் மனச்சோர்வை தணித்தாலும் கீழ்கண்ட விதங்களில் இவை ஒன்றாகவே இருக்கின்றன.
அதாவது நரம்பு முண்டுகளில் இருக்கும் இடைவெளிகளில் (Synapses) நாரெட்ரீனலின், டோப்பமின்  அல்லது செரோட்டோனின் என்ற குறிப்பிட்ட மூன்று ஹார்மோன்களில் ஏதோ ஒன்றையோ  அல்லது மூன்றையும் சேர்த்தோ அதிகரிக்கச் செய்து மனச்சோர்வை போக்குகின்றன.
படம்-2

உதாரணமாக அமிட்ரிப்ட்டையிலின் நரம்பு முண்டு ஒத்திசைவுகளில் (இடைவெளிகளில்) நாரெட்ரீனலின் மற்றும் செரோட்டோனின் ஹார்மோன் சுரப்புகளை திரும்பவும் உறிஞ்சப்படாமல் செய்து அதிகரித்து நரம்புகளின் செய்திப்பரிமாற்றங்களை உற்சாகப்படுத்துகிறது.

இதே போல் SSRI வகையை சேர்ந்த புளூவாக்சைடின் (Fluoxetin), சிட்டாலொப்ரேம் (Citalopram), மற்றும் எசிட்டாலொப்ரேம் (Ecitalopram) போன்ற மருந்துகள் செரோட்டோனின் ஹார்மோனை மட்டும் நரம்பு சந்திப்பு இடைவெளிகளில் அதிகரிக்கச்செய்து மனச்சோர்வை போக்குகிறது.
ஆயினும் இவை எல்லாமே தொடர்ந்து சாப்பிடப்படும் பொழுது மத்திய நரம்புமண்டலத்தையும் மூளையையும் சிதைக்கின்றன . அதுமட்டுமில்லாமல்  தானியங்கி நரம்பு மண்டலத்தையும்  கீழ்கண்டவாறு பெரும் பாதிப்புகளுக்கு ஆளாக்குகின்றன.
2.ஆல்பா அட்ரீனெர்ஜிக் அழுத்த உயர்வு (புராஸ்டேட் பிரச்சினை உள்ளவர்கள் கவனம்)
3.இதயத்துடிப்பு அதிகரித்தல். ஒழுங்கற்ற இதயத்துடிப்பு  
4.இரத்த அழுத்த சீர்குலைவு 
5.தூக்கமின்மை 
6.நீண்ட கால அமிட்ரிப்டையலின் உபயோகம் சிறுவர்,குழந்தைகள் உட்பட இளம்பிராயத்தினரின் இயல்புநிலையில் தடுமாற்றத்தை உண்டாக்கும். பொறுமையின்மை, விரக்தி மற்றும் தற்கொலை எண்ணம் ஆகியவை அதிகரிக்கும். எனவே அமிட்ரிப்ட்டையிலினை நீண்ட காலம் உபயோகிப்பவர்களின் தினசரி நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளவேண்டும்.
முடிவாக எந்த ஒரு மனநோய் மருந்துகளானாலும் அவை நிரந்தர பரிகாரம் தராது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
உங்கள் உடலுக்கு தேவை இல்லாத சுமைகளையும் பாதிப்புகளையும் உண்டாக்கும் என்பதுதான் உண்மை.
உடல் நோய்க்கு டாக்டரிடம் போங்கள்.
ஆனால் மன நோய்க்கு நீங்கள் தான் டாக்டர்.
முதலில் உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள் 
சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்துப்போக பழகிக்கொள்ளுங்கள் 
பொறுமை சகிப்புத்தன்மை இவற்றை கடைபிடியுங்கள்.
போதும். பிறகு,
"மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்.
வ்ழிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்".

செவ்வாய், 23 மார்ச், 2021

தூக்க மருந்துகள்-பெண் கர்ப்ப சிதைவுகள்

கர்ப்ப கோளாறுகளை உண்டாக்கும் ஆல்ப்ரஜோலாம் போன்ற தூக்க மருந்துகள் 
படம்-1

ஆல்ப்ரஜோலாம் (Alprazolam) -இன்றைக்கு டாக்டர்கள் அதிகமாக தூக்கத்திற்கு எழுதிக்கொடுக்கும் மருந்துகளில் ஒன்று. இது ஒரு பென்ஜோடையஜாப்பின் (Benzodiazepine)  என்ற வகையை சேர்ந்த தூக்க மருந்தாகும். இந்த வகையை சேர்ந்த  கீழே பட்டியலிடப்பட்ட மற்ற மருந்துகள்:-
1. டையஜிப்பம் (Diazepam)-1 டு 3நாட்கள் 
2.குளோர்டையசப்பாக்ஸைடு -(Chlordiazepoxide)-1 டு 3 நாட்கள் 
3.டெமஸிப்பம் -Temazepam -10 டு 20 மணி நேரம் 
4.லொராஜிப்பம் -Lorazepam -   -do -
5.ஆக்ஸஜிப்பம் -Oxazepam -  2 டு 8 மணித்துளிகள் 
6.குளோனஜிப்பம் -Clonazepam - -do -
7.மிடஜோலம் - Midazolam -2 டு -8 மணித்துளிகள் 
8.டிரையஜோலாம் -Triazolam -2 டு 8 மணித்துளிகள் 
மேல் குறிப்பிடப்பட்டவைகளில் ஆல்ப்ரஜோலமும் 10 டு 20 மணிநேரம் தூக்கத்தை தரக்கூடியதாகும்.
இந்த தூக்க மாத்திரை ஆண் பெண் என்ற பேதமில்லாமல் வயது வரம்புமில்லாமல் எவ்வித முன்னெச்சரிக்கை வழிகாட்டுதலுமில்லாமல் டாக்டர்களால் அதிகம் எழுதிதரப்படுகிறது. நம் ஊரில் 75 சதவீதத்திற்குமேல்பட்டவர்கள்  ஆண் பெண் என்ற பாலின வேற்றுமை இல்லாமல் வயது வித்தியாசமுமில்லாமல் டாக்டர்களின் இந்த பொறுப்பற்ற தன்மையினால் இந்த தூக்க மாத்திரைக்கு அடிமைப்பட்டு உருக்குலைந்து கிடக்கின்றனர்.
பென்ஜோடையஜாப்பின் (Benzodiazepine)  வகை தூக்க மாத்திரைகள் குறிப்பாக ஆல்ப்ரஜோலாம் பெண்களின் கர்ப்ப உறுப்புகளில் கோளாறுகளை உண்டாக்குவதாக கண்டிருக்கிறார்கள் 

கர்ப்பக்குழாய் பிரசவம் -ECTOPIC PREGNANCY:-
படம்-2
கர்ப்பக்குழாய் பிரசவம் 
மேலே படம்-2 இல் காட்டப்பட்டுள்ளது பிரசவத்தின் ஒரு அசாதாரண நிலை ஆகும். ஆபத்தான நிலையும் கூட. அதாவது விந்தணுவுடன் கூடி கருத்தரித்த நிலையில் கருமுட்டையானது கர்ப்பப்பைக்குள் நுழைய முடியாமல் கருக்குழாயிலேயே குழந்தையாக வளரத்துவங்குவது. இந்த நிலை கருத்தரித்த நிலையில் நீண்ட காலம் ஆல்ப்ரஜோலம் தூக்க மாத்திரையை  உபயோகிக்கும் கர்ப்பிணிக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்ப கோளாறுகள்-DEFECTIVE CONCEPTIONS :-

டாக்டர்கள் பென்ஜோடையஜாப்பின் (Benzodiazepine)  பற்றி சொல்லும் போது கர்ப்ப காலங்களில் ஆல்ப்ரஜோலத்தை விட டையாசிப்பம் பாதுகாப்பானது. ஆனால் அது பாலூட்டும் நிலையில் நல்லதல்ல என்பர். மேலும் கர்ப்ப நிலையிலும் பாலூட்டும் நிலையிலும் குளோர்டையசப்பாக்ஸைடு (லிப்ரியம்) மிக பாதுகாப்பானது என்பர்.
ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். அதாவது அலோபதி மருத்துவத்தில் பாதுகாப்பானது என்ற வார்த்தை அதன் அசல் அகராதி அர்த்தத்தில் சொல்லப்படுவதில்லை. பாதுகாப்பானது என்றால் குறைந்தபட்ச பின்விளைவுகளை கொண்டது என்று அர்த்தம்.
குறைந்த பட்சம் என்ற அளவீடும்  சரியான அர்த்தத்திலும் வராது. நிலையான அர்த்தமும் தராது. இதுதான் அலோபதி.
பென்ஜோடையஜாப்பின் (Benzodiazepine) தூக்க மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்ளத்தால் ஏற்படும் கர்ப்பக்கோளாறுகள் ஏராளம்.
அவற்றில் சில,
1.ஒழுங்கற்ற பிளவுபட்ட உதடுகளுடன் பிறக்கும் குழந்தை.
2.குழந்தைக்கு தூக்க மருந்து பழக்கம் ஏற்படுவது.

தூக்கமருந்தும் பெண் மலட்டுத்தன்மையும் :-

எல்லா தூக்க மருந்துகளுக்கும் கோலினெர்ஜிக் எதிர்ப்பு சக்தி உண்டு.
இதனால் நாட்பட்ட தூக்க மருந்து உபயோகிக்கும் திருமணமாகி குழந்தை பேற்றை எதிர்பார்க்கும் பெண்களுக்கு மலட்டு தன்மை உண்டாகலாம்.
காரணம் இவர்களின் இனப்பெருக்க உறுப்புகளின் இயக்கங்களில் மந்த நிலை உண்டாகும். இதனால் யோனியின் வழியாக உள்ளே நுழையும் விந்தணு கருக்குழாயில் காத்திருக்கும் பெண் கரு முட்டையை எட்ட முடியாமல் போகலாம். 
எனவே தூக்க மாத்திரைகளை கையாள்பவர்கள் கவனமாக இருக்கவும்.
முதலில் தூக்க மருந்துகள் நோய் நிவாரணிகள் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவும்.
அவை உங்களுக்கு தூங்குவது போன்று ஒரு வித மயக்கத்தை தந்து உங்கள் நரம்புகளை சிதைத்து உங்களை நிரந்தர நோயாளிகளாக்கும் நச்சுக்கள் என்பதை புரிந்து கொள்ளவும் 


அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...