வியாழன், 28 ஜூன், 2018

சிந்திப்போம் செயல்படுவோம்

தமிழ்நாடு -நேற்றும் இன்றும்


தமிழ் நாடு நேற்று இன்று நாளை என்று பிரித்து பாப்போம்
இந்தியா சுதந்திரம் அடைந்து குடியராசாகிய பின்
நான்கு மாகாணங்களாக இருந்த அது பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டது
1967 வரை ஒன்றாக இருந்த காங்கிரஸ் மதராஸ் மாநிலத்தை ஆண்டது
மதராசுக்கு பல பெருமைகள் உண்டு
வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நவீன நகரம்
புனித ஜார்ஜ் கோட்டை அகழிகளால் சூழப்பட்டு அமைக்க பட்ட ஒரு பெருமை மிக்க அமைப்பு
இந்தியாவின் முதல் மாநகராட்சி என்ற பெருமையும் லண்டனுக்கு பிறகு வெள்ளையர் சாம்ராஜ்யத்தின் இரண்டாவது மாநகராட்சி என்ற பெருமையும் மதராஸுக்கே உண்டு
உலகின் இரண்டாவது நீளமான அழகிய மெரினா கடற்கரை உள்ள நகரம் மதராஸ்
ஆக்ஸ்போர்ட் ,கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கு அடுத்து உலகின் மூன்றாவது என்று போற்றத்தக்க மதராஸ் யுனிவர்சிட்டி என்று போற்றப்பட்ட காலம் மாண்புமிகு சதாசிவ முதலியார் வைஸ் சென்சலராக இருந்து உண்ணத்தமிக்க முதலியார் யுனிவர்சிட்டி என்று வெளிநாட்டவர் வியந்து போற்றும் அளவிற்கு மதராஸ் யுனிவர்சிட்டி திகழ்ந்த பொற்காலம் என்றால் அது 1967 க்கு முன்
இன்றும் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவு மிக பரந்த இடப்பரப்பில் உன்னதமான பிரிட்டிஷ் கட்டிடக்கலையின் பிரமாதத்திற்கு சான்றாக பிரமிப்பூட்டும்படியாக அமைந்து இருப்பதுதான் மதராஸ் உயர்நீதி மன்றம்
இங்கு இன்னமும் இரண்டாவது உலகப்போரின்போது ஜெர்மனியின் எம்டன் கப்பல் போட்ட குண்டின் அடையாளம் இருக்கிறது
இந்தியாவிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் மஹாராஷ்டிரா பஞ்சாபி மாநிலங்களுக்கு அடுத்த நிலையில் இருந்த பெருமை சென்னை மாநிலத்திற்கு உண்டு அதாவது 1967 க்கு முன்
பாரம்பரியம் கலாச்சாரம் கல்வி அமைதி இது அத்தனையிலும் சிறந்து விளங்கிய மாநிலம்தான் இது
இந்தியாவின் அமைதி பூங்கா
தொழில் தொடங்குவதற்கு அருமையானதொரு மாநிலம் என்று பலராலும் போற்றப்பட்ட மதராஸ் மாநிலம் 1967 க்கு பின் கொஞ்சன்கொஞ்சமாக சிதைந்து சின்னாபின்னமாகி இன்று அலங்கோலத்திலும் அலங்கோலமாக எங்கும் அரசியல் எதிலும் அரசியல் அராஜகம் போராட்டம் அரசிற்கும் மக்களுக்கும் இடையே எந்த ஒரு புரிந்துணர்வும் இல்லாத ஒரு நிலை ஊழல்,விலைவாசி ஏற்றம் என்று ஐயோ தலை சுற்றுகிறது
பின்னி தொழிற்சாலை மூடப்பட்டதால் ஆரம்பித்து
ஸ்டாண்டார்ட் கார்க்கம்பெனி
பிறகு நோக்கியா
பிறகு ஹூண்டாய் என்று ஒவ்வொன்றாக இழுத்து மூடப்பட்டதே ஏன்
யார் மீது பழியை போடுவது
என்னை பொறுத்தவரை மக்களின் மீதுதான்
1967 இல் ஆட்சியை மாற்றி திராவிடம் என்ற குறுகிய வட்டத்திற்குள் தங்களை சுருக்கிக்கொண்டார்களே அந்த தலை முறை மீதுதான்
நான் திராவிடத்திற்கு எதிரானவன் அல்ல
அது கலாச்சாரம் ஆனால் அதை அரசியலாக்கியதும் அதற்கு மக்கள் துணை போனதும் தான் 1967 இல் மக்கள் செய்த தவறு
திமுக ஒரு நல்ல ஒரு எதிர்கட்சியாகவே கடைசிவரை இருந்திருக்கலாம்
காங்கிரஸையே ஆளவிட்டு  மாநிலம் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகுவதை தடுத்திருக்கலாம்
மேதை  டர்.அண்ணா அவர்கள் ஒரு பேரறிஞர்.நாவன்மை மிக்கவர் மிகச்சிறந்த எழுத்தர் சாமர்த்தியமும் சாதுர்யமும் மிக்கவர் தமிழின் மீதும் தமிழகத்தின் மீதும் மிகுந்த பற்று உடையவர் இதில் எதிலும் சந்தேகமில்லை
ஆனால் ஏட்டில் அறிவு என்பது வேறு ஆட்சி அனுபவம் என்பது வேறு என்று திமுக 1967 மார்ச்சில் ஆட்சியில் அமர்ந்த உடனேயே திரு அண்ணா அவர்கள் உணர்ந்திருக்கிறார்
ஒரு மிகப்படிக்காத காமராஜருக்கு இருந்த அனுபவ ஞானம் கூட தனக்கு இல்லையே என்று அவர் உணர்ந்திருப்பார்
ஏனென்றால்  காமராஜை பார்த்து கருப்பிட்டி விலை என்னாச்சு என்று ஏளனம் பேசிய அவரால் ஆட்சிக்கு வந்த வுடன் கருப்பிட்டி விலை மாத்திரம் அல்ல படி அரிசி விலையை கூட ஒரு ரூபாய் அளவிற்கு கொண்டு வர முடியவில்லை
மக்களை ஏமாற்றிவிட்டோமோ என்ற மன உளைச்சல் கூட அந்த நல்ல மனிதருக்கு ஏற்பட்டிருக்கலாம்
அது மட்டுமல்ல
தனக்கு பிறகு என்னவாகுமோ என்று கூட அவர் அஞ்சி இருக்கலாம்
காரணம் அவருக்கு கீழே உள்ளவர்களின் நாணயத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்க வாய்ப்பில்லை
காரணம் பொய் சொல்லி பழக்கப்பட்டவர்கள்
மக்களும் பொய்யையும்  சினிமாவையும் உண்மை என்று நம்மபதலைப்பட்டு விட்டார்களே
ஐயோ எல்லாம் மோசம் போய்விடுமே என்று அவர் எண்ணி இருக்கலாம்
அவர் மரணித்து விட்டார்
அண்ணாவின் மரணத்திற்கு பின் தமிழகம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள துவங்கியது
காவிரி பிரச்சினை முல்லைபெரியார் பிரச்சினை என்று ஒவ்வொரு பிரச்சினைகளாக தலை தூக்க ஆரம்பித்தன
திமுக பல துண்டுகளாக உடைந்து நொறுங்கியதுதான் அது ஆட்சியை கைப்பற்றியதன் பலன்
காங்கிரசை வளர்ப்பதற்கோ மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கோ டெல்லியும் சரி இங்குள்ள காங்கிரஸ்காரர்களும் சரி முனைப்பு காட்டவில்லை
விளைவு தமிழகத்தின் தலை எழுத்து திமுக அ இ.அ தி முக என்று குறுகிய திராவிட வட்டத்திற்குள் சுழல துவங்கியது
அரசியல் என்பது புனிதமானது என்பது போய் பெரும் சூதாட்டக்களம் ஆகியது
மக்களும் ஓட்டிற்கு துட்டு,இலவசங்களுக்கு மயங்கி களமிறங்கி சூதாட தலைப்பட்டுவிட்டனர்
விளைவு மாநிலம் மதிப்பிழந்து
வளங்கள் சூறையாடப்படுகின்றன
பக்கத்துக்கு மாநிலங்களின் கழிவுகளை கொட்ட பயன்படும் குப்பை தொட்டியாக தமிழகம் ஆகிவிட்டது
ஆறுகள் தூர் வரப்படவில்லை
ஆற்று மணல் வரம்பு மீறி கொள்ளை போகிறது
அரசியல் மற்றும் ஆளும் வர்க்கத்திற்கோ மக்களுக்கோ எந்தவிதத்திலும் மாநில அக்கறை என்பது கிஞ்சிற்றும் இல்லாமலேயே போய்விட்டது
விளைவு பக்கத்து மாநிலங்களுக்கு இங்கிருந்து சரக்குகள் ஏற்றிக்கொண்டு போகும் சரக்கு லாரிகள் சரக்குகளை அங்கு இறக்கிவிட்டு அதிக வாடகை கிடைக்கிறது என்பதற்காக அங்கிருந்து அவர்கள் ஏற்றிவிடும் கழிவுகளையும் குப்பைகளையும் இங்கே கொண்டு வந்து தன் சொந்த மாநிலம் என்றுகூட பாராமல் திருட்டுத்தனமாக  கொட்டிவிட்டு  போகிறார்கள்
இவர்களை என்னவென்பது
யாராவது பக்கத்துக்கு வீட்டுக்குப்பைகளை அவர்கள் அதிக பணம் கொடுத்தார்கள்  என்பதற்காக வாரி கொண்டுவந்து தன வீட்டில் கொட்டுவார்களா?
வீடுவரை உள்ள அக்கறை (self or house interest) இந்த தமிழர்களிடம் ஏன் மாநில (state) அளவுக்கு விரிவடைய வில்லை
இத்தனைக்கும் தமிழர்கள் சிறந்த கல்வி அறிவுடையவர்கள் உழைப்பாளிகள் பிறகு என் அவர்களிடம் மாநில அக்கறை இல்லை ஏன் இந்த நிலை
இதை மாநில அக்கறை இன்மை என்பதா  அல்லது பரந்த மனப்பான்மை என்பதா?
எப்படிப்பார்த்தாலும் இந்த அணுகுமுறை இந்த சூழ்நிலையில் அறிவுடைமை இல்லை
காரணம் இன்றைய இந்தியாவில் மாநிலங்களின் கூட்டாட்சி என்றிருந்தாலும் மாநிலங்களிடையே  சுயநலமும் போட்டி மனப்பான்மையும் தான் அதிகமாக இருக்கிறது
கர்நாடகா காவிரியில் தனக்கே உரிமை என்கிறது
கேரளா ஆறுகளை கடலில் பொய் விடுவேன் தவிர விவசாயத்திற்கு திருப்ப மாட்டேன் என்கிறது
ஆந்திரா பாலாற்றில் தடுப்பணை கட்டி  கொண்டு நீர் தரமாட்டேன் என்கிறார்கள்
சேர சோழ பாண்டிய சாம்ராஜ்ஜியங்கள் மாதிரி தமிழகம் இன்று தனி நாடாக இல்லை
பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு ஏக இந்தியா என்ற கூட்டாட்சி தத்துவத்தில் விரும்பியோ விரும்பாமலோ நாம் சிக்கிக்கொண்டோம்
இந்த நிலையில் நாம் திராவிட மாயையில் இருக்கிறோம்
தனித்தமிழ்நாடு என்ற குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறோம்
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தை அவர்கள் மதிப்பதில்லை
காரணம் நம்முடைய இந்த குறுகிய அணுகுமுறைதான்
எனவே இனியாவது தூர நோக்குடன் சிந்திப்போம் செயல் படுவோம்








அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...