இசிஜியில் மார்வலி (ANGINA PECTORIS)
மார்வலி அல்லது அன்ஜைனா பெக்டோரிஸ் (Angina Pectoris) என்பது ஒரு நோய் அல்ல.ஆனால் ஒரு கோளாறின் அறிகுறியாக இருக்கலாம்.
(சொல்லியல் (Terminology )-Angina -வலி ;Pectoris -மார்பு )
பொதுவாக நம் இதயம் இரத்தத்தை உள்வாங்கி சுத்தீகரித்து உடலின் பல பாகங்களிலுள்ள திசுக்களுக்கும் தமனிகள் (Arteries) மூலம் அனுப்புகிறது.அதே போல தன்னுடைய திசுக்களுக்கும் கொரோனரி தமனிகள் (Coronary Arteries)
(சொல்லியல் (Terminology )-Angina -வலி ;Pectoris -மார்பு )
![]() |
படம் 1A |
![]() |
NORMAL RHYTHM படம் 1B |
என்ற விசேஷ ரத்த குழாய்கள் மூலம் அனுப்புகிறது.
இதன் மூலம் இதயத்தின் எல்லா பகுதிகளும் பிராணவாயு போஷாக்கு (OXYGEN ) பெறுகின்றன.இதயம் நலமுடன் இயங்குகிறது
ஆனால் இரத்த கட்டிகள்,கொலஸ்ட்ரால் கட்டிகள்,காற்று குமிழ்கள் அல்லது ரத்தக்குழாய்களின் உள்பகுதியில் புண் அல்லது வீக்கம் (Atherosclerosis) இவற்றின் மூலம் கொரோனரி தமனி வலை பின்னலின் (Coronary Artery Network)ஏதோ ஒருபகுதியில் இரத்த ஓட்டம் தடைபட்டால் இதயத்தின் அந்த பகுதியில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் அந்த பகுதியில் உள்ள சதை கறுக்க தொடங்கும்.இதற்கு இஸ்கீமியா அல்லது புரையோடுதல் (Ischemia) என்பர் ஆரம்ப கட்டத்தில் இது மிதமாகவே இருக்கும் இந்த கட்டத்தில் இதற்கு நிலையான (Stable Angina)அல்லது மிதமான அன்ஜைனா என்பர்.இந்நிலையில் பளு தூக்கும் போது,உடற்பயிற்சியின் போது,அல்லது அலுவலக வேலை,வீட்டு வேலை இவற்றில் ஈடுபடும்போது நெஞ்சில் இறுக்கம் அல்லது வலி இருக்கும்.ஆனால் ஓய்வு எடுத்துக்கொண்டால் அந்த வலி போய் விடும். மீன்டும் வேலைகளில் ஈடுபடும்போது அதே அளவு வலி மீண்டும் வரும்.
இதை கவனிக்காமல் விட்டால் இந்த நிலை முற்றி நிலையற்ற அன்ஜைனாவாக (Unstable Angina)வாக மாறும்.இதுவே இறுதியில் மாரடைப்பாக (Myocardial Infarction -M.I.)ஆக மாறும்.
எனவே ஆஞ்சைனா பெக்ட்டோரிஸ் என்பது வரவிருக்கும் மாரடைப்பின் அறிகுறியாகும். மேலே படம் -2 இல் நார்மல் இதயத்துடிப்பை மாதிரி வரைபடமாக காட்டப்பட்டுள்ளது அதேபோல் படம் 1இல் அன்ஜைனாவின்போது போது இந்த நார்மல் ரிதம் இசிஜியில் எப்படி மாறுகிறது என்று காட்டப்பட்டுள்ளது.
அதாவது இசிஜியின் ST-பகுதி மிக முக்கியமானது.இதில்தான் இதயத்தின் கீழறைகள் (Ventricles)சுருங்கிய நிலையில் விரிவடைய எடுத்துக்கொள்ளும் நேரம் விரிவடையும் விசையின் அளவு ஆகியவை அடங்கி இருக்கிறது.இசிஜியில் இதில் ஏற்படும் மாற்றங்கள் நிச்சயம் இதயத்தில் கோளாறு இருக்கிறது என்பதை அறிவிக்கும்.
ST -பகுதி உயர்ந்திருந்தால் மாரடைப்பு உடனே வரப்போகிறது என்று அர்த்தம் அது தாழ்ந்திருந்தால் அன்ஜைனாவிற்கு பிறகு அது வரப்போகிறது என்று அர்த்தம்.
இனி மாதிரி இசிஜிகளில் அன்ஜைனாவை எப்படி அடையாளமிடுவது என்று காணலாம்.
படம் 2A
<