விஷமாகும் மருந்துகள் -1
சமீபத்தில் ஒரு பெண் சென்னையில் தன் கள்ளக்காதலுக்கு இடையூறு என்று கருதி தன் குடும்பத்தையே கொலை செய்ய முயன்றாள் அதில் அவள் கணவன் தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டான்.ஆனால் அவள் இரண்டு குழந்தைகளும் மாண்டன.இந்த செய்தியின் முழு விபரம் இந்த தலைப்புக்கு அவசியம் இல்லை என்றாலும் அதில் அவள் கொலை செய்ய பயன்படுத்திய அந்த மருந்து மிக முக்கியம் ஏனென்றால் அது தூக்க மாத்திரையோ அல்லது மூட்டை பூச்சி மருந்தோ இல்லை வெறும் கர்ப்பத்தடை மாத்திரை தான்.
இந்த டெக்கினிக்கை அவளுக்கு கூறியது அவளது கள்ள காதலன்தான் அவன் மருந்து கடை சட்டங்களை ஓரளவு தெரிந்தே வைத்திருக்கிறான்
ஆம் தூக்க மாத்திரையோ பூச்சி மருந்துகளோ வாங்க வேண்டும் என்றால் மருந்தாளுனரிடம் டாக்டர் சீட்டை காட்டவேண்டும் அல்லது அதற்கான சில விவரங்களை காட்டவேண்டும் அப்படியே இல்லாமல் தெரிந்தவர் மூலம் அதை வாங்கினாலும் அது மிகப்பெரும் சிக்கலை பின்னால் பார்மஸிக்கும் வாங்கியவருக்கு உண்டாகலாம்
இதனால் அவன் மூளை கருத்தடை மாத்திரைக்கு திரும்பி இருக்கிறது
சாதாரண அல்லது டாக்டரின் வழிகாட்டுதலின் பெயரில் இந்த மாத்திரைகளை யாரும் பயன்படுத்தலாம் எந்த பிரச்சினையும் இல்லை பார்மஸியில் இதை OTC யில் டாக்டர் சீட்டு இல்லாமலே தருவார்கள் இதனால் எந்த சந்தேகமும் வராது
ஆனால் ஒன்றை மறந்து விடக்கூடாது
அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷமாகும்
விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான்
அதன் அர்த்தம் அளவுக்கு மீறி விருந்து சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு கேடோ அது போல்தான் அளவுக்கு மீறி எடுக்கப்படும் மருந்தும் உடலுக்கு கேடே
மேலே கண்ட அந்த கொலை செய்தியில் கொலைகாரி தன் ஐந்து வயது குழந்தையை கொல்ல ஐந்து மாத்திரைகளை பாலில் போட்டு கொடுத்தவளுக்கு பத்து வயது இன்னொரு குழந்தையை கொல்ல பத்து மாத்திரைகள் தேவைப்பட்டு இருக்கிறது
ஒரு கருத்தடை மாத்திரை பேக்கில் 21 மாத்திரைகள் இருக்கும்
இந்த மாத்திரைகளை ஒவ்வொரு மாதவிடாய் காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும் 21 நாட்கள் இவ்வாறு சாப்பிட்ட பின் 7 நாட்கள் இரத்த போக்கு இருக்கும் வரை மாத்திரை ஏதும் சாப்பிட வேண்டாம் .அந்த 7 நாட்கள் மாத விடாய் நின்ற பிறகு மீண்டும் அடுத்த மாதவிடாய் கால ஆரம்பத்தில் மீண்டும் தொடர வேண்டும் இதுதான் அதன் நியதி
சரி இப்போது அந்த மாத்திரைகளில் என்னதான் மருந்துகள் இருக்கிறதென்று விபரமாக பாப்போம்
இவற்றில் பெரும்பாலும் இரண்டு வகையான ஹார்மோன்கள் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருக்கும்
அவை ப்ரோஜெஸ்டின் மற்றும் ஈஸ்ட்ரோஜென் வகை ஹார்மோன்களாகும்
இவை பெரும்பாலும் செயற்கையாக (SYNTHETIC) உருவாக்கப்பட்டவை ஆகும் இவை இயற்கை ஹார்மோன்களை விட வீரியம் குறைந்தவை என்றாலும் தவறுதலாக பயன்படுத்தினால் ஆபத்தை விளைவிக்கும்
பொதுவாக கர்ப்பத்தடை மாத்திரைகளில் ஏராளமான பக்க விளைவுகள் இருந்தாலும் அதில் மிக முக்கியமானவை 1.இரத்தம் குழாய்க்குள் உறைந்து சிறு சிறு உறைவுகளாக (CLOTS) மாறி அங்கங்கே இரத்தக்குழாய்களை அடைத்துக்கொள்ளுதல் இதில் முக்கியமானது நுரையீரல் இரத்தக்குழாய் அடைப்பு.இதற்கு PULMONARY EMBOLISM என்பார்கள் மூச்சு முட்டி மரணம் சம்பவிக்கும்
2.ஹார்ட் அட்டாக்
3.ஈரல் வீக்கம்
4.இரத்த கொதிப்பு
சிறுவர்கள், சிகரெட் புகைப்பவர்கள் ,இதய நோயாளிகள் ,இன்னும் புற்று நோயாளிகள் இந்த மாத்திரைகளை கண்டிப்பாக எடுத்து கொள்ள கூடாது