தசை சிதைவு நோயும் சிறுநீரக செயலிழப்பும் 
படம்-1-அ

ரெபிடோமயோலைஸிஸ் (Rhabdomyolysis) என்ற தசை சிதைவு நோய் அசாதாரணமாக ஏற்படக்கூடியதாக இருக்கலாம். ஆனால் உயிருக்கே உலை வைக்கும் ஒரு நோயாகும். மேலும் நாம் மிக சாதாரணம் என்று கருதக்கூடிய வெட்டு காயங்கள், விபத்து காரணமாக கீழே விழுந்து அல்லது இடிபாடுகளில் அல்லது நெரிசலில் சிக்கி சதை சேதப்படுத்தல்,சதை வீங்குதல் சதை பிடிப்பு இவையும் கூட அசாதாரணமாக இந்த துரதிருஷ்ட நிலையில் கொண்டு போய் விடலாம். ஒரே இடத்தில வெகு நேரம் இருப்பில் இருப்பதும் அல்லது படுக்கையில் கிடப்பதும் சரி ஓடியாடி உழைக்கிறோம் ஓட்டப்பந்தயம் கடும் உடற்பயிற்சி செய்கிறோம் என்று உடலை அளவு மீறி துன்புறுத்துவதும், சில நேரங்களில் உங்கள் கெட்ட காலமாக இந்த துரதிருஷ்ட கொடிய நோய் நிலையில் கொண்டுபோய் விடும் . எனவே எதிலும் மிதமாக அல்லது நடு நிலையுடன் இருந்து கொள்ளுங்கள்.
மேலே சொன்ன நோய் காரணங்கள் நேரடியான சதை தாக்குதலினால் ஏற்படுபவை. இதை மருத்துவ மொழியில் 'அதிர்ச்சிகரமான காரணிகள் (Traumatic Causes) என்பார்கள்.
இவை அல்லாது அதிர்வு இல்லாத காரணிகளும் உண்டு. இவற்றிக்கு Nontraumatic Causes என்பார்கள். இவை சில மருந்துகளை டாக்டரின் ஆலோசனை இல்லாமல் தான்தோன்றித்தனமாக சாப்பிடும்போது ஏற்படுவது.
இந்த மருந்துகளில் பிரதானமானவை ஸ்டேட்டின் (...statin) வகை கொலஸ்ட்ரால் மருந்துகள். அதாவது சிம்வாஸ்டேட்டின் (simvastatin), அட்டோர்வாஸ்டேட்டின் (Atorvastatin), ரோஸுவாஸ்டேட்டின் (Rosuvastatin) என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதற்கு அடுத்தபடியாக வருவது தூக்க மருந்துகள் அடங்கிய அனைத்து மனநோய் மருந்துகளும்.
இந்த அத்தனை மருந்துகளுமே தான்தோன்றித்தனமாக அளவுமீறி உபயோகிக்கும் பொழுது தசைகளில் அழுத்தம் உண்டாக்கி தசை நார்களை சிதைத்து நாளடைவில் இந்த கொடிய தசை சிதைவு நோயை உண்டாக்குகின்றன.
சாதாரணமாக நாம் இருமல் அலர்ஜி என்று பார்மசி கெளண்டர்களில் வாங்கி சாப்பிடும் ஹிஸ்டமின் எதிர்ப்பான்கள் (Antihistamin), மேலும் அல்சருக்கு சாப்பிடக்கூடிய கிளைக்கோபைரோலேட் போன்ற கோலினர்ஜிக் எதிர்ப்பான்கள் (Anticholinergic) இன்னும் ஆஸ்துமா மருந்துகள் ஆகியவையும் இதில் அடங்கும்.
வேறு சில காரணிகள்
1.தைராய்டு கோளாறுகள்.
2.பொட்டாசியம் சோடியம் அயனிகளில் ஏற்ற இறக்கங்கள் (வயிற்றுப்போக்கு)
3.வெயிலில் வெகுநேரம் நிற்பது,அலைவது கனமான பணிகளில் ஈடுபடுவது.
4.வைட்டமின் டி குறைபாடு (ஸ்டேட்டின் மருந்துகள், rickets என்ற எலும்புருக்கி நோய்.)
5. வைரல் மற்றும் பாக்டீரியா தொற்று நோய்கள் எலும்பு தசைகளை தாக்கும் போது.
அறிகுறிகள்
முற்றிய நிலையில் தசை நார்கள் சிதைந்து அதிலிருந்து மையோகுளோபின் (Myoglobin),மற்றும் கிரியாட்டின் பாஸ்போ கைனேஸ் (Creatine Phospho Kinase-CPK) ஆகிய நச்சுக்கள் இரத்த ஓட்டத்தில் கலந்து சிறுநீரகம்,கல்லீரல் இதயம் ஆகிய முக்கிய உறுப்புகளை தாக்குகின்றன.
சிறுநீரகம் சேதமடைவதால் இரத்தத்தில் கிரியாட்டினின் ,யூரியா போன்ற நச்சுக்கள் உயரும்.
கல்லீரல் பாதிக்கப்படுவதால் இரத்தத்தில் கல்லீரல் என்ஜைம்களான
SGOT, SGPT மற்றும் LDH இவற்றின் அளவுகள் உயரும்.
மயோகுளோபின் :-
இரத்தத்தில் ஆக்சிகனை சுமந்து செல்லும் ஹீமோகுளோபினை போன்றதுதான் மயோகுளோபின். இது தசை செல்களுக்கிடையில் ஆக்சிஜனை சேமித்துவைக்கும். இதுவும் ஹீமோகுளோபினைபோல் சிவப்பாகவே இருக்கும்.
சிறுநீரைப்பரிசோதிக்கும் போது இரண்டு காரணங்களுக்காக சிறுநீரில் சிவப்பு நிறம் கலந்து இருக்கும்.
1.இரத்த சிவப்பணுக்கள் -தொற்று நோய்,சிறுநீரக அழற்சி,புராஸ்டேட் புற்று ஆகிய காரணங்கள்.
2.மயோகுளோபின் -தசை சிதைவு நோய் காரணமாகும்.
மயோகுளோபின் சிறுநீரகம் வழியாக வெளியேறும் போது சிறுநீரக முன் குழாயை (PCT) பாதிக்கும். இரத்தக்குழாயை சுருக்கி சிறுநீரகத்திற்கு இரத்த ஓட்டத்தை குறைத்து விடும். இதனால் சிறுநீரகமும் செயலிழந்து மயோகுளோபினும் சிறுநீரில் வெளியேற முடியாமல் இரத்தத்தில் தேங்கிவிடும்.
கிரியாட்டின் பாஸ்போ கைனேஸ் (CPK)
நம்முடைய தசைகள் ஆரோக்கியமாக இயங்குவதற்கு இந்த என்ஜைம் மிகவும் அவசியம். இந்த என்ஜைம் எப்போதும் தசைகளுக்குள் இருக்கவேண்டும். நாம் உண்ணும் புரதங்களை தசைகள் உட்கொள்ள இந்த என்ஜைம் உதவுகிறது. அப்படி உட்கொள்ளப்படும் பொழுது இந்த என்ஜைம் கிரியாட்டினின் கழிவாக மாறி சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படும்.
இந்த என்ஜைம் தசை சிதைவு நோயின் போது இரத்த ஓட்டத்தில் கசிந்து கீழ் கண்ட பாதிப்புகளை உண்டாக்குகிறது.
1.குறை இரத்த அழுத்தம் (Low B.P)
2.இரத்த ஓட்டம் தேங்குதல்
3.பல்லுறுப்பு செயலிழப்பு (Multiple Organs Failure)
மேலே தரப்பட்ட பாதிப்புகளை பார்க்கும் பொது இது எவ்வளவு ஆபத்தான வியாதி என்பதை நம்மால் கணிக்க முடியும்.
உதாரணமாக அடிக்கடி ஏற்படும் கழுத்து வலி, முதுகு மற்றும் இடுப்பு வலி இவற்றைக்கூட நாம் அலட்சியப்படுத்த முடியாது.
இவை இந்த நோயின் ஆரம்பக்கட்டமாக இருக்கலாம்.
உடனே CPK மற்றும் மையோகுளோபின் இரத்தத்தில் எந்த அளவு இருக்கிறது என்பதை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
ஆண்களுக்கு CPK அளவு (சாதாரணமாக) இரத்தத்தில் 40 - 300 யூ/லிட்டர் இருக்கலாம்.
பெண்களுக்கு 30-190 யூ/லிட்டர் வரை இருக்கலாம்
இந்த டெஸ்ட் மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஆரம்ப நிலையில் CPK தான் முதலில் இரத்தத்தில் கசிகிறது. பிறகுதான் மயோகுளோபின் கசிகிறது.
இரத்தத்தில் மயோகுளோபின் சாதாரண அளவு =25 to 70 ng/ml
கடுமையான உடல் உழைப்பு,உடற்பயிற்சி, தசைகளில் அடிபடுதல்,காயங்கள் போன்றவை கூட இரத்தத்தில் மயோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
பெட்டி நோய்க்குறி (Compartment Syndrome:
படம்-2

நமது எலும்பு தசை அமைப்பு (Skeletal Muscle System) பல பெட்டிகளான (Compartments) பிரிவுகளை கொண்டது.இந்த பிரிவுகள் Fascia என்ற விசேஷ உறுதியான தசை நார்களால் அறை அறையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டிக்கும் தசை நார்கள், நரம்புகள் உள் வெளி செல் திரவங்கள் இன்னும் பலவசதிகள் தரப்பட்டுள்ளன.
எந்த ஒரு பாதிப்பும் தசைநார்களுக்கு நேரடியாக அடிபடுதல் காயங்கள் மூலமோ அல்லது மறைமுகமாக மேலே குறிப்பிடப்பட்ட கொலஸ்ட்ரால் மற்றும் தூக்க மருந்துகள் மூலமாக ஏற்படுத்தப்பட்டால் அது இந்த அற்புத பெட்டி அமைப்புகளை சீர்குலைத்து தசை சிதைவு நோயை உண்டாக்கும் (பார்க்க மேலே படம்-2)
மேலே படத்தில் முழங்கால் தசை எலும்பு பெட்டி எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது.
நம் உடலின் முழு எடையையும் தாங்கி நிற்பது அந்த பெரிய எலும்புதான்.அதற்கு Tibia எலும்பு என்று பெயர்.அதோடு துணையாக நிற்கும் அந்த சிறிய எலும்புக்கு Fibula என்று பெயர். நாட்பட்ட எந்த ஒரு பாதிப்பும் இந்த எலும்புகளை சிதைத்து நீர் கட்ட செய்து வீங்கி தசை நார் செல் நச்சுக்களை இரத்த ஓட்டத்தில் கலக்கச்செய்யும். இது தசை சிதைவு நோயின் மிக கொடிய நிலை ஆகும்.
தசை சிதைவு நோயினால் ஏற்படும் சிக்கல்கள்:
1.இரத்த உறைவு அதிகரித்தல்
2.இரத்த ஓட்டம் தடைபடுவதால் குறை இரத்த அழுத்தம்
3.இதயம் சிறுநீரகம் கல்லீரல் போன்ற பல்லுறுப்புகள் பாதிக்கப்படுதல்.
4.சோடியம், பொட்டாஷியம் போன்ற தாதுப்பொருள்கள் அல்லது மின்பகு அயனிகள் சமநிலை இழத்தல் (Electrolytes Imbalance)
5.சிறுநீரில் ஆல்புமின் வெளியாவதால் இரத்தத்தில் ஆல்புமின் குறைபாடு உண்டாகுதல்
6.இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரித்தல்.
7.பெட்டி நோய்க்குறி ↑
8.இரத்த குழாய்களில் அடைப்புகள் உண்டாகுதல்
மருத்துவ ஆலோசனைகள்
1.ஸ்டேட்டின் கொலஸ்ட்ரால் மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவதை நிறுத்துங்கள். டாக்டரை கலந்து கொண்டு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு மாதம் இடைவெளிவிட்டு சாப்பிடலாம். அல்லது அதை சாப்பிடுவதை ஒரேயடியாக நிறுத்தியும் விடலாம். இதெல்லாம் கல்லீரலை கெடுப்பதை தவிர வேறு எந்த நிவாரணமும் தரப்போவதில்லை. மருந்து மாபியாக்களின் பித்தலாட்டம் இந்த ஸ்டேட்டின் கொலஸ்ட்ரால் மருந்துகள்.
2.படிப்படியாக தூக்க மற்றும் மன நோய் மருந்துகளை நிறுத்துங்கள்.இவை யெல்லாம் உங்களை கொல்லக்கூடியவையே அன்றி எந்த நோய்க்கும் நிவாரணிகள் அல்ல.
3.ஹிஸ்டமின் எதிர்ப்பான்கள் மற்றும் கோலினர்ஜிக் எதிர்ப்பான்களை மிகவும் கவனமாக கையாளுங்கள்
4.சுயமாக அல்லோபதி மருந்து சாப்பிடும் பழக்கத்தை விடுங்கள்.
5.ஸ்டெராய்டுகளை டாக்டரின் பார்வையிலில்லாமல் சாப்பிடாதீர்கள்
6.எபிட்ரின் போன்ற கோலினர்ஜிக் எதிர்ப்பான மருந்துகள் அடங்கிய டயட் கட்டுப்பாட்டு மருந்துகளை வாங்கி சாப்பிடாதீர்கள்
7.ஹார்மோன் மருந்துகளிடம் மிகவும் கவனமாக இருங்கள்.
மருந்து அல்லாத ஆலோசனைகள்
1.கடுமையான உடற்பயிற்சி, சக்திக்கு மீறிய உடல் உழைப்பு ஆகியவற்றை தவிருங்கள்
2.அதிகமாக வெகுநேரம் கடும் வெய்யிலில் விளையாட்டுகள் உடற்பயிற்சி ஆகியவற்றை செய்யாதீர்கள்.
3.நிறைய தண்ணீர் பழ ரசம் போன்றவற்றை அருந்துங்கள்.
4.அளவுக்கதிகமான புரதம் மற்றும் உடலில் சதைபோடும் உணவுகள் இவற்றை தவிருங்கள்.
5.ஒரே இடத்தில நீண்ட நேரம் இருப்பது அல்லது படுப்பது போன்ற செயல்களை தவிருங்கள்.