திங்கள், 2 ஜனவரி, 2017

முதல்வர் ஒருவரின் மர்ம மரணம் தொடர்கிறது

 தமிழ் நாடு -நரகத்தை நோக்கி 

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது ஒரு போதும் கருணாநிதியுடனும் திமுக வுடனும் பரிவோ சமாதானமோ பாராட்டியதில்லை .அவர்களது துயரங்களில் கூட பங்கெடுத்ததுமில்லை பகிர்ந்து கொண்டதுமில்லை முரசொலி மாறன் மரணம்,கருணாநிதி நோய்வாய் பட்டு சக்கர நாற்காலியில் அமர்ந்தது என்று எதையும் அவர் பொருட்படுத்தியதில்லை முரசொலி மாறன் மரணத்திற்கு போயஸ் தோட்டத்தில் இனிப்பு பரிமாற்றத்துடன் கொண்டாட்டங்கள் நடந்ததாக கூட செய்திகள் கசிந்தன.கருணாநிதியின் சக்கரநாற்காலி உலாவை பொதிமூட்டையை நாற்காலியில் சுற்றவைத்திருப்பதுபோல் இருக்கிறது என்று ஜெயலலிதா கிண்டல் பண்ணியதாக கூட சில வதந்திகள் பரவின.
ஆனால் சமீபத்தில் கருணாநிதியை காவேரி ஆஸ்பத்திரியில் சேர்த்த போது  சசிகலா தம்பிதுரையை அங்கு அனுப்பி துயரத்தை பகிர்ந்து கொண்டார் ஜெயலலிதாவை ஸ்டாலின்  அப்போலோ வந்து விசாரித்து சென்றதற்கு பகரம் என்றாலும் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது.பார்த்தீர்களா நான் ஜெயலலிதா மாதிரி இல்லை.நாகரீகம் தெரிந்தவள் என்று சொல்வது மாதிரி இல்லை?எனவே நமக்குள் மோதல் வேண்டாம்.எங்கள்  முதுகை நீங்கள் சொரிய வேண்டாம் உங்கள் முதுகை நாங்கள் சொரிய மாட்டோம் ஏனென்றால் நம் இருவர் முதுகிலும் அவ்வளவு அழுக்கு மண்டிக்கிடக்கிறது.
இந்த compramise க்கு திமுக எவ்வளவு தூரம் ஒத்து வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
ஏனென்றால் சசிகலாவின் துவக்கம் திமுகவிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.அவரின் ஆதிக்கம் ஜெயலலிதாவில்  துவங்குகிறது அதன் உச்சம் ஜெயலலிதாவின் மரணத்திலிருந்து துவங்குகிறது.எனவே சசிகலாவின் ஒவ்வொரு கட்டமும் வேறு வேறு கோணங்களில் இருந்து துவங்குகிறது எனவே ஜெயலலிதாவில் இருந்து இவர் வித்தியாசமானவர்.
இப்பொழுது ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் சசிகலாவுக்கு ஒரு சோதனை.அது எப்படியாவது மறக்கப்பட வேண்டும் அப்போதுதான் எல்லாம் சரியாகும்
இதில் திமுகவை சரிகட்டிவிட்டால் போதும் மற்றபடி தமிழ்நாடு என்பது 99% மண்டூகங்களை கொண்ட ஒரு மாநிலம்.இந்த கழிசடை மாக்கள் கருணாநிதியின் அழிச்சாட்டியங்களையே மறந்து மன்னித்தவர்கள்.ஜெயலலிதா கொலையுண்டிருந்தால் கூட அதை அவர்கள் பொருட்படுத்த போவது இல்லை.அவர்களுக்கு கீதாவையும் தெரியாது.தீபாவையும் தெரியாது.இந்த மாக்களை ஆட்சி செய்ய எத்தனை கொலை கொள்ளைகளை செய்தாலும் குவாட்டரும் தீனியும் கொடுத்தால் போதும் ஒட்டு வாங்கிவிடலாம்
நிலைமை இப்படி இருக்க மத்தியிலுள்ள பிஜேபி வேறு கோணத்தில் இருந்து இவர்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.அதை சசிகலா சுலபமாக சமாளித்து விடுவார்.இப்போதே மத்திய திட்டங்களில் எதை எல்லாம் ஜெயலலிதா எதிர்த்தாரோ அதிலெல்லாம் மவுனமாக ஓ பி எஸ் அரசு தலையாட்டி கையெழுத்திட்டிருக்கிறது
ஆனால் காவிரி முல்லை பெரியார் போன்ற நதி நீர் பிரச்சினைகளில் என்ன செய்யப்போகிறார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.
நிச்சயமாக ஓபிஎஸ் மத்திய அரசை பகைக்க முடியாது ஆனால் அதே நேரம் சசிகலாவுக்கு அடங்கியே இருக்க வேண்டும் காலப்போக்கில் அவர் பதவியை சசிகலாவிடம் இழக்கவும் நேரிடலாம்
சசிகலாவை பொறுத்தவரை ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள மர்மங்கள் வெளிப்படாதவரை அவர் சந்தேகத்திற்கு உரியவர்.அவர் பின்னால் இருந்து இயக்குபவர் அவரது கணவர் நடராஜன்.சசிகலாவின்  மூளையாக இயங்குபவர்.சூத்திரங்கள் அமைத்துக்கொடுக்கும் சூத்திரதாரி ஒரு குள்ள நரி.
வினைக்கு துணை போனவனும்  வினை அறுப்பான் என்ற நிலைதான் ஒபிஸிற்கு.ஜெயலலிதாவை ஒழிக்க சசியுடன் துணை நின்றதால் தக்க சமயத்தில் அவர் பதவியையே பறிகொடுக்கப்போகும்  நிலையில் இப்போது  தவிக்கலாம் இல்லை என்றால் அவருக்கும் ஜெயலலிதாவின் கதியே ஏற்படும்
ஓபிஎஸ் தானும் சசிகலாவின் தேவர் குளத்தை சேர்ந்தவன் என ஆறுதல் அடையலாம்.ஆனால் மிஸஸ் நடராஜனுக்கு குடும்பம் தான் பெரிதே தவிர குலமெல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்று போக போக தெரிந்துகொள்வார்
இனி தமிழகம் ஒரு மாபியா கும்பலின் கைகளில் முழுக்க முழுக்க போவதை யாராலும் தடுக்க முடியாது
சசிகலா நடராஜன் கட்சி பொறுப்பேற்பதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பவர்களில் ஒருவர் முன்னாள் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா.இவரது கணவர் லிங்கேஸ்வரன்.இருவரும் சேர்ந்து சசிகலா நடராஜன் மீது அவர் கட்சியில் சேர்ந்து ஐந்து வருடங்கள் கூட ஆகாத நிலையில் அவர் கட்சி தலைமை பொறுப்பு ஏற்க முடியாது என்று சென்னை ஹைகோர்ட்டில் போட்ட வழக்கின் தீர்ப்பு வர இருக்கிறது.இதற்கிடையில் கட்சி தலைமைப்பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்ய கட்சி தலைமையகத்திற்கு சென்ற இடத்தில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் மற்றும் அவரது வக்கீல் ஆகியோர் கொலை வெறியுடன் அதிமுக மெம்பர்களால் தாக்கப்பட்டு இருக்கிறார்கள் இதுவும் கோர்ட்டில் தெரிவிக்க பட்டு இருக்கிறது.
தீர்ப்பு எப்படி இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை
ஏனென்றால் இந்தியாவில் நீதிபதிகள் நீதிபதிகளாக இல்லை.நீதி வளைந்து கொண்டேதான் இருக்கிறது குற்றவாளிகள் சாட்சியங்களை வளைத்து தப்பித்துக்கொள்கிறார்கள்.பணம் நீதியை கொன்றுவிடுகிறது.நீதிபதிகளும் மேலிடங்களை பகைத்துக்கொள்ள தயங்குகிறார்கள் .
மக்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.அதிலும் குறிப்பாக தமிழக மக்கள் எதையும் தூர நோக்குடன் பார்ப்பதில்லை.குறுகிய கண்ணோட்டம் உடையவர்கள்.எதையும் மாநில கண்ணோட்டத்துடன் பார்ப்பதில்லை தன்  வீடு,தன் சம்பாத்தியம்,தன்  குடும்பம் தன்  மக்கள் என்ற சுயநல குறுகிய கண்ணோட்டமே இவர்களிடம் இருக்கிறது.பக்கத்தில் உள்ள மாநிலத்தவரை பார்த்தும் கூட இவர்கள் பாடம் படிப்பதில்லை.ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் தான் மகா புத்திசாலி என்று காட்டிக்கொள்ள அவனை வாரி விடக்கூட தயங்க மாட்டான்.ஆனால் இன்னொருத்தன் காலை நக்கி தன சுய நலன்களை பார்த்துக்கொள்வான்.அதனால்தான் தமிழர்களை நாம் 99%சுரணைகெட்ட மாக்கள் என்று இதே கட்டுரையில் நாம் முன்னர் குறிப்பிட்டு இருந்தோம்
இதோ பாருங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் ஏன்? எதற்க்காக? எப்படி நடந்தது? என்று அறிய எந்த ஒரு தமிழனும் கொதித்து எழவில்லை.இது தங்களுக்கு தேவையற்றது என்று நினைக்கிறார்கள் ஆனால் இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.இதில் நம்முடைய மாநிலத்தின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது.இவர்களுடைய இந்த மெத்தனப்போக்கால் எவ்வளவு அசிங்கங்களை கேவலங்களும் அரங்கேறுகின்றன.அரசியலுக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத இந்த சசிகலா சின்னம்மா என்ற பட்டத்துடன் அதிமுக பொது செயலாளராக பதவி ஏற்கிறார் .அவரது எழுதிக்கொடுக்கப்பட்டு வாசிக்கப்பட்ட கன்னி ப்பேச்சில் "மக்களால் நான் .." என்கிறார்.இவரை எந்த தொகுதி மக்கள் எங்கே எப்போது தேர்ந்தெடுத்தார்கள் இவர் மக்களால் நான் என்று புழுகுவதற்கு .காரணம் நாம் கொடுக்கிற தைரியம்தான்.
அது மட்டுமல்ல மீடியாக்களும் பணம் பொறுக்கித்தின்னும் பொறுப்பற்ற நாய்களாகவே இருக்கின்றன.
ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை என்ன? 75 நாட்கள் அப்போல்லோவில் என்ன நடப்பு? என்ற கேள்விகளுக்கெல்லாம் மனம் திறக்கிறார் சசிகலா அத்தனை கேள்விகளுக்கும் செருப்படி பதில் என்ற தலைப்பில் ஊடகங்களில் வந்த செய்திகளை கண்டு நாமும் துணுக்குற்றோம் ஆனால் அந்த செய்திகளில் வரிக்கு வரி மனம் திறக்கிறேன் என்ற பெயரில் ஒப்புக்கு சப்பாணி கொட்டி இருந்தார்  சசிகலா.
உண்மையில் இந்த காரியத்தில் சசிகலா உண்மையாளர் ஆக இருந்தால் செப் 22 முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரை நடந்த ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அத்தனை நடப்புகளையும் வீடியோ காட்சிகளுடன் ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு இருக்க வேண்டும்.இதை எல்லாம் நாம் கேட்பதற்கு ஆர்ப்பரிக்க வேண்டாமா?
அதை விட்டு விட்டு ஜல்லிக்கட்டு வேண்டும் என்று ஆர்ப்பார்க்கிறீர்களே.வெட்கமாக இல்லை.தமிழனின் வீர விளையாட்டு என்கிறீர்கள் உடனே நீதிபதி அப்படியானால் ஒரு சிங்கத்தை தருகிறோம் உங்கள் வீரத்தை காட்டுங்கள் என்றவுடன்  டோனை மாற்றி இல்லை இல்லை எங்கள்  பாரம்பரிய விளையாட்டு என்கிறீர்கள் வெட்க கேடு .
இப்படி மற்றவர்கள் நம்மை ஏளனப்படுத்தும் அளவுக்கு ஏன் நடந்து கொள்ள வேண்டும் ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு என்றே வைத்து கொள்வோம் அது நடக்க வில்லை என்றால் தமிழத்திற்கு என்ன நஷ்டம் ஒரு நஷ்டமும் இல்லை
அதே சமையம் காவிரி உட்பட மேற்கிலிருந்து பாயும் நதிகள் அடை  பட்டால் நமக்கு பெருத்த நஷ்டம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் ஜெயலலிதா.அவர் நோய்  வாய்ப்பட்டதிலிருந்து அவர் எப்படி இறந்தார் என்பது வரை ஒரு பெரிய கேள்விக்குறி நம் முன் சிலையாக நிற்க அது பற்றி நாம் ஆர்ப்பரிக்க வில்லை என்றால் நம்மை நாமே நரகத்திற்கு இட்டு செல்வது ஆகாதா.
எவ்வளவு பெரிய பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கிறார் சசிகலா.இவர் நம்மை நாளை ஆளப்போகும் முதல்வர் ஆகவும் முடி சூடுவார் என்றால் நிச்சயம் இந்த மாநிலம் நரகத்தை நோக்கித்த்தான் போகும் என்பதில் சந்தேகம் இல்லை





அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...