அழிவு நெருங்குகிறது
ஆண்டாள் பற்றி ஒரு பெரிய சர்ச்சை இப்போது கிளப்பிவிடப்பட்டிருக்கிறது கவிஞர் வைர முத்து தினமணி ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் பற்றி ஒரு சர்ச்சை குரிய கருத்தை பதிவு செய்த்துவிட்டார்.இது சம்பந்தமாக சங்க் பரிவார்கள் வைரஃமுத்துவின் மீதும் தினமணி ஆசிரியர் மீதும் வழக்கு பதிவு செய்ததுடன் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் மிக மோசமான எதிர் கோஷங்களும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் பத்திரிகைகள் மூலமாகவும் கிளப்பிவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்
அருமையான ஒவ்வொருவரும் காண வேண்டிய பதிவு.இந்த பதிவிற்கு பிறகு அவர் உயிருடன் இல்லை என்பது ஒரு சோகம்
இந்த சர்ச்சையின் மூலம் ஒரு விஷயம் என்னவென்றால் ஆண்டாளை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் தெரிந்து கொண்டதுதான்
இத்தனைக்கும் திரு வைரமுத்து பெருந்தன்மையுடன் மன்னிப்பும் கேட்டு கொண்டார்
இப்போது விஷயம் என்ன வென்றால் ஆண்டாள் ஒரு தேவதாசி அல்லது தேவடியாள் குலப்பெண்மணி என்று ஒரு ஆங்கில நூலை மேற்கோள் காட்டி திரு வைரமுத்து பேசியதுதான்
இப்பொழுது நாம் கேட்பது மேற்கண்ட வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளா எச்.ராஜா பதில் சொல்லட்டும்
ஆம் என்றால் களங்கம் இல்லாத இந்த வார்த்தைகளை கெட்ட வார்த்தைகள் ஆக்கியது யார்?சந்தேகமே இல்லாமல் கோயில் பூஜாரிகளும்,தர்மகர்த்தாக்களும் கோயில் நிர்வாகிகளும்தான்
இறை சேவைக்காக தங்களை அர்பணித்துக்கொண்ட இளம் பெண்களை ஏய்த்து அவர்களை தங்கள் சுகபோகத்த்திற்காக பயன்படுத்த்திக்கொண்டது அவர்கள்தான் மற்றபடி ஆதிகாலங்களில் இப்படி இறை சேவைக்காக ஆண்களும் பெண்களும் தங்களை அர்ப்பணித்து கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் புனிதர்களாகவே கருதப்பட்டனர்
இப்படி ஒரு நிலையில் இருந்தவர்கள்தான் ஏசு அவர்களின் தாயார் புனித மேரி அவர்கள் அவர்களின் மீது யூதர்கள் களங்கம் கற்பிக்க முயன்றனர் ஆனால் இறைவன் அவற்றை மறுத்து வேதங்களில் அவர்களை புனிதவதி என்றே கூறுகிறான் என் தாய் களங்கமற்றவள் நான் அற்புதமாகவே என் தாயின் கருவறையில் உருவானேன் நான் தேவனின் தூதனாக இருக்கிறேன் என்று அன்று பிறந்த பச்சிளம் பாலகனாக புனித ஏசு இருக்கும் பொழுதே அவரை இறைவன் பேச வைத்தான் இந்த அற்புத செய்தி முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆனால் கூறப்பட்டிருக்கிறது
எனவே தேவதாசிகளும் தேவடியாள்களும் புனிதர்களாகவே ஆதி காலங்களில் இருந்திருக்கின்றனர்.அந்த வார்த்தைகளும் தவறான அர்த்தங்களை தரவில்லை
ஆண்டாள் தேவதாசி குலத்தில் பிறந்த நிலையில் குழந்தையாக பெரியாழ்வாரால் தத்தெடுக்கப்பட்டார் என்பது உண்மையானால் அக்கால கட்டங்களில் கல்யாணமாகி குழந்தை பெற்றெடுத்த நிலையில் கூட சில பெண்கள் தங்களை இறை பணிகளுக்காக அர்ப்பணித்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது
இது ஒருபுறமிருக்க மேற்கண்ட வீடியோவில் திரு ஞாநி அவர்கள் ஆண்டாள் என்பதே பெரியாழ்வாரால் கற்பனையாக புனையப்பட்ட ஒரு பெயர்தான் என்றும் அந்த பெயரில் அவரே திருப்பாவை போன்ற பாடல்களை புனைந்தார் என்றும் திரு இராஜாஜி அவர்களின் ஒரு குறிப்பை மேற்கோள்காட்டுகிறார்
இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த ஆண்டாள் சர்ச்சையை கிளப்பிவிட்டவர்கள் வெறும் உரலைத்தான் இடிக்கிறார்கள் என்பது தெளிவு
இதை கிளப்புபவர்கள் அனைவரும் தமிழகத்தின் நலனில் அக்கறை இல்லாதவர்கள்.எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்ப்பவர்கள்
துட்டுக்கொடுத்தது ஓட்டு வாங்கி ஆட்சியை பிடித்தவர்கள் ஆட்சி என்ற பெயரில் அராஜகத்தை பஸ் கட்டணங்களை சகட்டு மேனிக்கு உயர்த்தி அரங்கேற்றிவிட்டார்கள்
இன்னொரு பக்கம் காவிரியில் கர்நாடகமும் மத்திய அரசும் செய்யும் துரோகம்
வேறொருபக்கம் முல்லை பெரியாறில் கேரளம் செய்யும் அக்கிரமம்
தமிழகத்திற்கு வரும் பெரும் பெரும் தொழிற்சாலைகளை எல்லாம் வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடும் கொடுமை காரணம் கமிஷன்
மீத்தேன் திட்டம் ஹைடிரோகார்பன் திட்டம் விளை நிலங்களில் வாயுக்குழாய்களை பதித்தல் .
இதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது ஒன்றும் இல்லாததற்கு சர்ச்சை
சாரி தமிழ் நாடு
உனக்கு அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது