வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

நுரையீரல் புற்று ,அறிகுறிகள் காரணிகள் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை

நுரையீரல் புற்று 

 

நுரையீரல் புற்று நோய்க்கு பல காரணிகள் இருந்தாலும் புகைபிடித்தல்தான் முக்கிய காரணியாக இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் 40%பேர் இந்நோயால் உயிரிழக்கிறார்கள் என்று தெரிகிறது 
புகையிலையை புகைக்காமல் வேறுவகையில் பயன்படுத்துவது கூட பரவாயில்லை காரணம் புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின் நேரடியாக புற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை 
உதாரணமாக புகையிலையை வாயில் போட்டு மெல்லுதல் புகைப்பழக்கத்தை விட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை 
ஆனால் புகைக்கும் பொழுது எரியும் புகையிலையில் உள்ள நிக்கோட்டின் எரிந்து  NNK (NICOTIN DRIVED NITROSAMINE -KETONE) என்ற கொடிய புற்று நோய் ஊக்கியாக (CARCINOGEN) ஆக மாறுகிறது.இப்பொருள் நேரடியாக நுரையீரல் காற்றறை செல்களுக்கும் புகுந்து செல் அணு உட்கருவில் உள்ள DNA -ஐ தாக்கி அந்த செல்லை புற்றுநோய் செல் ஆக மாற்றுகிறது
புற்று நோய்களிலேயே புராஸ்டேட் புற்று மற்றும் நுரையீரல் புற்று இரண்டும் தான் உடனே மற்ற  இடங்களுக்கு பரவாமல் (METASTATIC) அவகாசம் எடுத்துக்கொள்ளும் தன்மையுடையவை 
அதற்குள் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது நலம் 

மேலேயுள்ள நிக்கோட்டின் மூலக்கூறு அமைப்பில் ஐகோண வடிவை கவனியுங்கள் அதற்க்கு பைரோலிடின் வளையம் என்று பெயர்.நிகோடின் தீயில் பொசுங்கும் போது இந்த வளையம் உடைந்து கீழ்கண்ட மூலக்கூறு வடிவத்தை பெறுகிறது
இந்த கூட்டு பொருள்தான் கேன்சரை உண்டாக்கும் NNK என்பது
இது சிகரெட்டில் என்றில்லை நிகோடின் இருக்கும் எந்த பொருள் ஆனாலும் இந்த ரசாயன மாற்றங்கள் தீயினால் ஏற்படுகின்றன
மேலும் சிகரெட் புகையில் 75% NNK இருக்கிறது சிகரெட் புகைப்பவரை விட அவர் எதிரில் அமர்ந்திருப்பவரைத்தான் அதிகம் பாதிக்கிறது காரணம் சிகரெட் புகை பெரும்பாலும் புகைப்பவரின் வாய்க்குள்தான் போகிறது பிறகு அவர் அதை வேகமாக ஊதி வெளியேற்றும் போது எதிரே இருப்பவரின் மூக்கிற்குள் சுவாசமாக கலந்து உள்ளே போகிறது .
NNK நம் உடலுக்குள் வந்தவுடன் ஈரல் அதை வீரியப்படுத்துகிறது

நுரையீரல் புற்று 

மேலேயுள்ள படத்தில் கறுத்து இருக்கும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட உறுப்பு ஆகும்

வகைகள் :-

1.பெரிய செல் நுரையீரல் கார்ஸினோமா இதை NON SMALL CELL LUNG CARCINOMA அல்லது SQUAMOUS CELL LUNG CARCINOMA என்றும் அழைப்பர் 
இது அவ்வளவு வேகமானது அல்ல என்றாலும் பாதிக்கப்பட்ட நுரையீரலில் வீரியமாக வேதனை உண்டாக்கும் .இது ஓரிடத்திலேயே நீண்டகாலம் நிலைத்திருப்பதால் இதை சிகிச்சை மூலமோ அல்லது சர்ஜரி மூலமோ சுலபமாக குணப்படுத்தலாம்.மேலும் பெரும்பாலும் இந்த நோயே தாக்குகிறது 
2.சிறிய செல் நுரையீரல் கார்ஸினோமா இதை மருத்துவத்துறையினர் SMALL CELL LUNG CARCINOMA என்பர் 
இது வீரியமாக மற்ற இடங்களுக்கும் பரவக்கூடியது என்றாலும் இது மிகவும்  அசாதாரணமாகவே உண்டாகிறது இது வேகமாக பரவக்கூடியது எனவே இதன் சிகிச்சையும் கடினமானது 
3.நுரையீரல் கார்சினாய்டு டியூமர் (LUNG CARCINOID TUMOR இது மிக மிக அசாதாரணமானது எனினும் மிகவும் ஆபத்தானது இதன் சிகிச்சையும் மிகவும் கடினமானது.இது நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளை தாக்கக்கூடியது 

அறிகுறிகள் 

ஆரம்பகட்ட அறிகுறிகள் பெரும்பாலும் தெரிவதில்லை 
நோய் முற்றிய பிறகு கீழ்காணும் சில அறிகுறிகள் தென்படலாம் 
1.குரல் கடினமாதல் 
2.களைப்பு 
3.பலவீனம் 
4.அடிக்கடி சளிபிடித்தல் 
5.சிகிச்சைக்கு மட்டுப்படாத தொடர் இருமல் 
6.இருமும்போது சளியுடன் இரத்தம் வருதல் 
7.வழியும் கட்டி சளியும் கூடிய இருமல் இதனால் விழுங்குவது கடினமாகும் 
8.மூச்சு திணறல் 
9.நோய் எலும்பை தாக்கும் போது எலும்பு வலி 
10எடை குறைதல் 

காரணிகள் 

1.நீண்ட நேர புகை சுவாசம் 
2.அடிக்கடி புகைத்தல் 
3.ரேடான் போன்ற கதிர்வீச்சுகள் 
4.நோய் எதிர்ப்பு சக்தி குறையும் சூழ்நிலைகள் (உம்):எய்ட்ஸ் நோய்,நோய் தொற்றுகள்,நீண்ட கால ஸ்டெராய்ட் உபயோகம் 

சிக்கல்கள் 

1.சளி அடைப்பு 
2.நிணநீர் ஓட்டத்துடன் நோய் எலும்பு மூளை போன்ற இடங்களுக்கும் பரவுதல் 
3.வாய் தோற்று,நா வறட்சி,வாய் புண்கள் 
4.ஜீரண மண்டல கோளாறுகள்,வயிற்று போக்கு,மலச்சிக்கல் 

நோய் நிலைகள் 

0-1-நிலை :- இந்த நிலையில் கேன்சர் உண்டாகி இருக்காது.ஆனால் DNA ஆரம்பகட்ட பாதிப்புக்கு தயாராக்கப்பட்டு இருக்கும் சிறு சிறு பொடுகு போன்ற டியூமர்கள் நுரையீரல் காற்றறைகளில் உண்டாக துவங்கும்.அறிகுறிகள் அப்போதைக்கப்போது உண்டாகி மறையும் தொண்டை புகைச்சல் 
1-ஆம் நிலை :- DNA பாதிக்கப்பட துவங்கும் டியூமர்கள் வளர துவங்கி ஆரம்பகட்ட புற்று ஆக மரத்துவங்கும் ஆனாலும் பரவும் நிலையில் இல்லை 
2-ஆம் நிலை :-டியூமர்கள் இன்னும் பெரிதாக தெளிவாக மாறி புற்று நோய் உறுதிப்படும் ஆனாலும் பரவும் நிலையில் இல்லை தொண்டை புகைச்சல் சளியுடன் அதிகரித்து இருக்கும் 
3-ஆம் நிலை :-டியூமர்கள் இன்னும் பெரிதாகி பரவும் நிலைக்கு வரும் ஆனால் நிணநீர் முடிச்சுகளை தொட்டிருக்காது 
4-நாலாம் நிலை :-இப்போது டியூமர்கள் நிணநீர் முடிச்சுகளை அடைத்து நிணநீர் ஓட்டத்தில் கலந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவத்துவங்கும் இதற்கு மருத்துவ பாஷையில் மெட்டஸ்டேஸிஸ் (METASTASIS ) என்பர் 
ஆரம்ப கட்டத்திலேயே எலும்பு ஜீரண மண்டலம் மூளை பகுதிகள் பாதிப்படைய துவங்கும் 

சிகிச்சைகள் :

1.நுரையீரல் புற்று ஆரம்ப கட்டமாக வெறும் தொண்டை புகைச்சல் இருமல் சளி இவற்றை தவிர வேறெதுவும் அறிகுறிகள் காட்டாது சங்கிலி தொடராக புகை பிடிப்பவர்கள் இத்தகைய அறிகுறிகள் தென் பட்டால் உடனே தகுந்த ENT நிபுணரிடம் போய்  பூரண பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும் 
2.புகையிலை பழக்கத்தை நிறுத்த வேண்டும் 
3.பொதுவாக ஆரம்பகட்டத்தில் நுரையீரல் புற்றை கண்டுபிடிக்க சரியான பரிசோதனை முறைகள் இல்லை என்றாலும் ஓரளவு கணிக்க முடியும் 
இருமல் சளி போன்ற அறிகுறிகளுக்கு கீமோதெராப்பி மற்றும் ஆன்டிபயோட்டிக்குகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுக்கவேண்டும் 
4.பெரிய செல் கார்சினோமா (NON SMALL CELL LUNG CARCINOMA )இதை ஓரளவு சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம் ஏனென்றால் இது உடனே மற்ற பகுதிகளுக்கு குறிப்பாக மூளைக்கு பரவாது 
5.சிகிச்சைகள் பொதுவாக அடிப்படையாக DNA நூல்கள் ஒழுங்கற்று பின்னப்படாமல் தடுப்பதே ஆகும்.இதை சத்தியமாக செல் குரோமோசோம்களில் உள்ள ஒரு விசேஷ ஜீன் புரோடீனை முடக்குவதே ஆகும் இதற்கு ஆங்கிலத்தில் INHIBITION OF ABNORMAL FUSION PROTEIN என்பர் 
இந்த ஜீன் புரதம் தான் NNK யினால் தூண்டப்பட்டு DNA ஐ தாக்கும் இந்த முறைக்கு மருத்துவத்துறையில் ALK GENE REARRANGEMENTS என்பர் 
கீழ்காணும் மூன்று மருந்துகள் இந்த வகையில் பயனாகின்றன 
1.Crizotinib (Xalkori )
2.Ceritinib (Zykadia )
3.Alcetinib (Alecehsa )
அடைப்பு குறிகளில் கொடுக்கப்பட்டிருப்பது அவற்றின் வர்த்தக பெயர்களாக்கு 
இம்மருந்துகளை தகுந்த டாக்டரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுடன் எடுத்துக்கொள்ளலாம்

 




அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...