இரத்தத்தில் உயர் நிலை பொட்டாசியம்
பொட்டாசியம் என்பது காரத்தன்மை நிறைந்த எளிதில் உடையக்கூடிய ஒரு மெது உலோகமாகும்
இந்த வகையில் சோடியத்திற்கு அடுத்த நிலையில் இது இருக்கிறது வேதியியலில் பொட்டாசியம் மற்ற மூலகங்களுடன் கூடும்போது தனது அணுவிலிருந்து ஒரு மின்துகளை (ELECTRON) இழந்து நேர்மின் அயனி ஆகிறது இதன் இரசாயன வலு எண்(VALENCY) ஒன்று ஆகும்.எனவே இதன் ஒவ்வொரு அயனியும் தன தலையில் ஒரே ஒரு நேர்மின் அடையாளத்தை சுமந்து கொண்டு இருக்கும்.இதன் அர்த்தம் இந்த அயனிக்குள் ஒரு புரோட்டான் (நேர் மின் துகள்) மிகையாக இருக்கிறது அதனை எதிர்கொள்ள ஒரே ஒரு எலெக்ட்ரான்(எதிர் மின் துகள் )தேவை என்பதாகும்
பொட்டாசியம் அயனியின் அமைப்பு கீழே தரப்பட்டு இருக்கிறது
நமது உடலில் பொட்டாசியம் பெரும்பாலும் க்ளோரைடு அல்லது பைகார்போனேட் உப்புக்களாகவே இருக்கிறது
நமது திசு செல்களுக்குள் இருக்கும் திரவம் பெரும்பாலும் நேர் மின் பொட்டாசியம் அயனிகளை கொண்டிருக்கும் அதேவேளை செல்களுக்கு வெளியே அல்லது இடையே உள்ள திரவத்தில் பெரும்பாலும் நேர் மின் சோடியம் அயனிகள் நிறைந்திருக்கும்
இரண்டு திரவங்களிலும் எதிர் மின் துகள் கொண்ட குளோரைடு அயனிகள் ஏற்ற தாழ்வுகளுடன் இருக்கும்
இப்பொது ஒரு செல் துடிப்பு அடைய வேண்டுமென்றால் முதலில் அது முனைவு நீக்கம் (DEPOLARIZATION)அடைய வேண்டும்
ஒரு செல்லை மின் முனைவு நீக்குவதில் சோடியம் மிக வீரியம் கொண்டது ஆகும் .மிகவும் பலஹீனமானது குளோரைடு அயனி ஆகும்
இதை கீழ்கண்டவாறு உணரலாம்
Na+ > > Ca++ >> K+ >>> Cl--
Na+ ---- sodium ion
Ca++ --- Calcium ion
K+ ---- Potassium ion
Cl-- = = Chloride ion
எனவே மேலேயுள்ள வரிசைப்படி நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் ஒரு செல் உசுப்பப்பட அல்லது துடிக்கவேண்டுமென்றால் சோடியம் அதற்குள் பாய வேண்டும் அதே அளவு பொட்டாசியம் வெளியேற வேண்டும்
இப்பொது செல் துடித்து செயல்படும் செயல் பாடு முடிந்து அது நிதானம் அடையும் போது மீண்டும் மின் முனைவு ஆக்கம் (REPOLARIZATION) நடைபெறும் இப்பொது மீண்டும் இடம் மாறிய அயனிகள் மீண்டும் பழைய நிலைகளுக்கு திரும்பும்.மேல் கூறிய கோட்பாட்டிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது ஒரு தசை இயங்கவேண்டும் என்றால் அதன் திசுமண்டலத்திலுள்ள செல்களுக்குள் சோடியம் பாய வேண்டும் பொட்டாசியம் நீங்க வேண்டும் எனவே சோடியம் ஒரு உந்து (EXCITATORY ) அயனி ஆகும் பொட்டாசியம் ஒரு தடுக்கும் (INHIBITORY) அயனி ஆகும்
இதுதான் ஒரு பொதுவான கோட்பாடு இதையே எல்லா தானியங்கி அல்லது நாம் இயக்கும் தசைகளும் பின்பற்றுகின்றன
இப்பொது நாம் தலைப்பிற்கு வருவோம்
நம் இரத்தத்தில் பொட்டாசியம் அளவு பொதுவாக 3 இலிருந்து 5 மில்லி மோல் இருந்தால் போதும்
இதுவே 7 மில்லி மோலுக்கு மேல் அதிகரித்தால் அந்த நிலைக்கு உயர் நிலை பொட்டாசியம் என்பர் இதை மருத்துவ மொழியில் HYPERKALEMIA என்பர்
பொதுவாக இதன் ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரியாது முற்றிய நிலையில்தான் இது கீழ்கண்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும்
அறிகுறிகள் :-
1.தசை பலஹீனம்
2.களைப்பு
3.குமட்டல் வாந்தி
4.சதை பிடிப்பு ,வலி
5.மூச்சு திணறல்
6.ஒழுங்கற்ற இதய துடிப்பு
7.நெஞ்சு வலி
காரணிகள் :-
1.நாட்பட்ட சிறுநீரக கோளாறு (ESKD )
2. கட்டுப்படுத்தப்படாத உயர் சர்க்கரை நிலை(HYPERGLYCEMIA ) ,நீரிழிவு
3.கீழ்கண்ட சிலவகை மருத்துகள் :-
A .வலி மருந்துகள்
B.ட்ரிமேதோப்ரிம் (சல்பா ஆண்டிபயாடிக்)
C.கேன்சர் மருந்துகள் (சைக்ளோஸ்போரின்)
D.ரத்த கொதிப்பு மருந்துகள்:- (--PRIL மருந்துகள் ,--lol மருந்துகள் )
E.அமிலோடிப்பின், நிபிடிப்பின்,வெரப்பாமில் டில்டியாஜிம் போன்ற கால்சியம் அயனி அடைப்பான் மருந்துகள்
F.சக்சினில்கோலின்
G.ஹெப்பாரின்
H.டிகாக்சின்
I .மன்னிட்டால்
4.சிறுநீரக கோளாறு
5.உடலில் ஏற்படும் காயங்கள்
6.ஆல்டோஸ்ட்டிரோன் ஹார்மோன் குறைபாடு
E.அமிலோடிப்பின், நிபிடிப்பின்,வெரப்பாமில் டில்டியாஜிம் போன்ற கால்சியம் அயனி அடைப்பான் மருந்துகள்
F.சக்சினில்கோலின்
G.ஹெப்பாரின்
H.டிகாக்சின்
I .மன்னிட்டால்
4.சிறுநீரக கோளாறு
5.உடலில் ஏற்படும் காயங்கள்
6.ஆல்டோஸ்ட்டிரோன் ஹார்மோன் குறைபாடு
பொட்டாசியம் அதிகம் உள்ள பண்டங்கள் :-
1.சர்க்கரை வள்ளி கிழங்கு
2.டின்னில் அடைக்கப்பட்ட தக்காளி பண்டங்கள்
3.உருளைக்கிழங்கு
4.புரதங்கள் :-பீன்ஸ்,கொடுவா மற்றும் டூனா மீன்கள்
5.தோலுரிக்கப்படாத ,காய்கறிகள் பழங்கள்
6.தயிர்
7.காரட் ஜூஸ்
8.உலர்த்திய பிளம் (PRUNE) மற்றும் அதன் ஜூஸ்
9. உலர்த்திய ஆப்ரிகாட் மற்றும் பீச் பழம்
10. பீட் ரூட்டின் பசும் இலைகள்
பரிசோதனைகள் :-
1.முதலில் டாக்டர் சிறுநீரகத்தை பரிசோதிப்பார்
2. இதய பரிசோதனைகள்
3.நீர்ச்சத்தின் அளவு பரிசோதனைகள்
சிகிச்சை முறை :-
1.இறுதிக்கட்ட சிறுநீரக நோயாளிகள் (ESKD) டயாலிசிஸ் செய்துகொள்வது அவசியம்
2.குறுகிய சிறுநீரக நோயாளிகளுக்கு கீழ்கண்ட சிகிச்சைகள் அளிக்கலாம் :-
a)கால்சியம் ஊசி (IV )
b)இன்சுலின் ஊசி (IV)10 யூனிட் அதை தொடர்ந்து 25கிராம் க்ளுகோஸ் IV ஊசி
c)albuteral இது ஒரு ஆஸ்துமா மருந்து ஆகும் .சிலருக்கு இதை உபயோகிக்கலாம்