செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

சுய மருத்துவ பரிசோதனை-இ.சி.ஜி சுய பரிசோதனைகள்-உ

இசிஜி அலைகளை அடையாளம் காண்பது எப்படி?
இசிஜி கல்வியில் இது ஒரு மிக முக்கியமான ஒரு அம்சமாகும் 
இசிஜியின் நார்மல் சைனஸ் துடிப்பில் உள்ள அலைகளை P,Q,R,S, மற்றும் T-ஐ நம்மால் சுலபமாக அடையாளமிட முடியும்.காரணம் அவை தெளிவாக அதில் பதிந்து இருக்கும். 
ஆனால் ஒரு நோயாளியின் இசிஜி நார்மலாக இருக்காது.பெரும்பாலும் அதில் நார்மல் சைனஸ் துடிப்பு இருக்காது.அதில் அலைகள் குளறுபடியாக இருக்கும்.சில அலைகள் மறைந்தும் இருக்கும் 
எனவே தவறாக நாம் அலைகளை அடையாளமிட்டால் நோய்களையும் தவறாக கணித்து தவறான சிகிச்சைக்கு வழிவகுத்துவிடும். 
எனவே இசிஜி அலைகளை அடையாளமிட்டு அறிந்து கொள்ளவேண்டும்.இதற்கு மருத்துவ மொழியில் NOMENCLATURE of ECG என்பர் .
P -அலையை அடையாளம் காணல் 
படம்-1


மேலே உள்ள படத்தில் நான்கு விதமான P-அலைகள் கட்டப்பட்டு உள்ளன
மேலே உள்ள படம் -1 -ல் முதலாவது உள்ள P -அலை தான் சாதாரண நார்மல் சைனஸ் துடிப்பில் உள்ள P -அலை ஆகும்.மற்றவை அனைத்தும் நோய் உள்ள நிலையில் வரும் P-அலைகளாகும்.எனவே இப்படி உருமாறி குளறுபடியில் தோன்றும் P-அலைகளை எப்படி அடையாளம் காண்பது ?

முதலில் நாம் ஒரு கோட்பாட்டை தெரிந்த்துக்கொள்வோம்.இதற்கு ECG NOMENCLATURE என்று பெயரிடலாம்.அதற்கு முன் மூன்று விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.அவை 1.அலை விலகலின் இயல்பு -நேர் அல்லது எதிர் (NATURE OF THE WAVE DEFLECTION-Positive or negative)
2.அலையின் அளவு (SIZE)
3.அலை நிலைப்பாடு (POSITION)
இந்த கோட்பாட்டின்படி ஒரு இசிஜி யில் முதலில் தோன்றும் அலை P-அலை ஆகும்.அதை தொடர்ந்து வருவது QRS-கூட்டமைப்பாகும்.அதை தொடர்ந்து இறுதியாக வருவது T -அலை ஆகும்.
ஒரு நோய் உள்ளவரின் P-அலைகள் (படம்-1-1)-ல் காட்டியபடி ஒரு கூம்பு போன்ற அமைப்புடன் வரலாம்.
அடுத்து படம்-1-2-ல் காட்டியபடி M -வடிவத்தில் வரலாம் .
படம்-1-3-ல் காட்டியபடி P-அலை மறைந்து இருக்கலாம்.இதை உற்று நோக்கினால் இது நேர்கோடாக இல்லாமல் சிறு சிறு குறு (Fibrillatory) அலைகளாக இருக்கலாம் .இதற்கு F-அலைகள் என்று பெயர். 

QRS-கூட்டமைப்பைஅடையாளமிடுவது 

இசிஜியில் மிக முக்கியமான அங்கம் இந்த கூட்டமைப்பாகும்.
இந்த கூட்டமைப்பில் மூன்று தனித்தனி அலைகள் இருக்கின்றன.அவை Q,R மற்றும் S ஆகியவை.இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி இயல்பு உண்டு.அவற்றை தெரிந்து கொண்டால்தான் அவற்றை நாம் சுலபமாக அடையாளம் காண முடியும் .
இந்த Q- அலை,QRS- கூட்டமைப்புக்குள் R-அலைக்கு முன்பாக கீழ்நோக்கி வளையும் எதிர்மறை விலகல்(Negative Deflection) ஆகும்.இந்த அலை ஒருபொழுதும் நேரலை விலகலுக்கு(Positive Deflection) 
எழும்பாது.நிலைப்பாட்டின்படி இது எப்போதும் QRS-ல் R-அலைக்கு முன்பாகவே வரும் அல்லது மறைந்தும் போகும் 
அளவின்படி இது சிறிதாகவும்(q-அலை)இருக்கலாம் அல்லது பெரிதாகவும்(Q-அலை)இருக்கலாம்.ஒன்றுக்கு மேற்பட்டும் இருக்கலாம்(q,q',q'',Q,Q',Q'').

படம்-2-A
படம்-2-A ஐ நோக்கவும் .இது ஒரு நார்மல் சைனஸ் துடிப்பு ஆகும் இதில் Q-அலையை நாம் சுலபமாக அடையாளமிடலாம்.அதாவது R-அலைக்குமுன் QRS-கூட்டமைப்பிற்குள் இறங்கி ஏறக்கூடிய(NEGATIVE DEFLECTION) அலை. 
அடுத்து R-அலை.இதன் விலகல் எப்போதும் மேல் நோக்கியே அதாவது நேர் அலை விலகல் (POSITIVE DEFLECTION) ஆகத்தான் இருக்கும் 
இதன் நிலைப்பாடு இது எப்பொழுதும் Q-அலை இருந்தால் அதை தொடர்ந்தோ,Q-அலை இல்லை என்றால் S-அலைக்கு முன்பாகவோ தோன்றும்.
இதிலும் பெரிதும் உண்டு சிறிதும் உண்டு(R,r);ஒன்றும் உண்டு.ஒன்றுக்கு மேல்பட்டும் உண்டு (R,R'R'',r,r',r'')
படம் -2-B
மேலே உள்ள படத்தை கவனமாக ஆய்வு செய்யவும்.உற்று பாருங்கள்.இரண்டு r-அலைகள் (மேல்நோக்கிய பாசிட்டிவ் சிறிய அலைகள் )இருக்கின்றன ஆனால் அவற்றிற்கு முன் எந்த எதிர் அலை விலகல்களும் (நெகட்டிவ் அலைகள் ) இல்லை.எனவே இதில் Q-அலைகள் இல்லை.
மேலும் S-அலையை நோக்குங்கள் 
R-அலையை தொடர்ந்து ஒரு கீழிறங்கும் நெகட்டிவ் விலகல் S-அலையின் சரியான நிலைப்பாடு.
அதன் அளவு பெரிதாக இருப்பதால் S.
படம்-2-C 
மேலே உள்ள படத்திலும் Q-அலை இல்லை 
நிலைப்பாடு,அளவு மற்றும் விலகல் இந்த மூன்றின் அடிப்படையிலும் மேலேயுள்ள இசிஜியில் இரண்டு R-அலைகளும் இரண்டு S-அலைகளும் இருக்கின்றன.
அடுத்தது T-அலை.இதுதான் நிலைப்பாட்டின்படி இசிஜியின் இறுதி அலையாகும்.இது இதயத்தின் கீழ் அறைகள் விரிவதால் உண்டாவது.இதன் பிறகு அடுத்த துடிப்பு வரை மின் கடத்தல் எதுவும் இருக்காது.எனவே T-P இடைவெளிதான் சரியான ISOELECTRIC LINE ஆகும் 
மேலே உள்ள படத்தின் படி T-அலை தான் இறுதி அலை ஆகும் இது S-அலைக்கு பின் சிறிது இடைவெளிவிட்டு வரும் 
                                 தொடர்கிறது .....

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...