சிறுநீரகம் -ஓர் அறிமுகம்
![]() |
படம் 1 |
சிறுநீரகங்கள் என்னும் இந்த முந்திரிக் கொட்டை வடிவில் அமையப்பெற்ற கழிவு உறுப்புகள் மேல் வயிற்று பகுதியில் பின்புறத்தண்டு வடத்தின் இருபுறமும் எதிர் எதிராக பின்புற முதுகின் உள்சதையின் பிடிமானத்துடன் பொருந்தியுள்ளன.
வலது சிறுநீரகத்தின் தலை மீது கல்லீரல் அமைந்திருப்பதால் (பார்க்க படம் 1) அது சிறிது தாழ்ந்தும் இடது சிறுநீரகம் சிறிது உயர்ந்தும் அமைந்துள்ளன.

சிறுநீரக இரத்த ஓட்டம்
![]() |
படம் 2 |
மிகச்சிறிய ஒரு முந்திரிக் கொட்டையின் அளவே இருப்பினும் இதயம் வெளிப்படுத்தும் இரத்தத்தில் சுமார் 20 to 25% சிறுநீரகம் சிறுநீரக தமனி மூலம் பெறுகிறது(பார்க்க படம் 2).இந்த இரத்தம் வடிகட்டி சுத்தீகரிக்கப்பட்டபின் அதில் 3%இரத்தத்திலிருந்து தனக்கு தேவையான ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு மொத்த இரத்ததையும் சிறுநீரகம் சிறுநீரக சிரை மூலம் இதயத்திற்கே அனுப்பிவிடுகிறது (பார்க்க படம் 2)
சிறுநீரகம் இரத்தத்தை அதன் அழுகுகளான யூரியா,யூரிக் அமிலம்,ஹிப்பூரிக் அமிலம்,கிரியாட்டினின்,மருந்து வளர் சிதை கழிவுகள் நீரில் கரையக்கூடிய தேவையற்ற விஷப்பொருட்கள் ஆகிய அனைத்தையும் நீக்கி சுத்தமாக்கும் மிக முக்கிய கழிவு உறுப்பு ஆகும்.இதன் தேய்மானம் மற்றும் இதில் ஏற்படும் கோளாறுகள் நம் ஆரோக்கியத்திற்கு மிக பெரும் கேடு விளைவிக்கும்

நெப்ரான்கள் (சிறுநீர் வடிகட்டிகள்)
![]() |
படம் 3அ |
![]() |
படம் 3ஆ |
நெப்ரான்கள் என்ற இந்த சிறுநீர் வடிகட்டிகள்தான் சிறுநீரகத்தின் அடிப்படை யூனிட்டுகளாகும்.இறைவனின் மிகப்பெரும் அருட்கொடையால் நம் ஒவ்வொரு சிறு நீரகத்திலும் சுமார் பத்து லட்சம் நெப்ரான்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதாவது பிறந்த போது ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கிய நிலையில் மொத்தம் இருபது லட்சம் நெப்ரான்கள் தரப்பட்டுள்ளன.எல்லாப் புகழும் இறைவனுக்கே.ஆனால் ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கை மாற்றத்தாலும் பொறுப்பற்ற உணவுப்பழக்கங்களாலும் நாம் கிட்னியை தாக்குவதன் மூலம் நெப்ரான்களை சேதப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.வாலிப மிடுகிலும் இளமை தரும் ஆரோக்கியத்தில் சிறுநீரகம் சேதப்பட்ட நெப்ரான்களை அவ்வப்போது சரிசெய்து கொள்கிறது .அது ஒவ்வொருவரின் வயதையும் ஆரோக்கியத்தையும் பொறுத்தது.ஆனால் ஒருபோதும் சிறுநீரகத்தால் ஒரு புதிய நெப்ரானை உருவாக்க முடியாது.
நெப்ரான்களின் பாகங்கள் :-(பார்க்க படங்கள் 3அ ,3ஆ )
1.பெளமென் குப்பி :- இது உட்புறம் குழிந்து ஒரு குப்பி போல் இருக்கும் .இதுதான் நெப்ரானின் தலை.இந்த குப்பியின் அளவு 8 to 10 நானோ மீட்டர் ஆகும்.ஒரு நானோ மீட்டர் என்பது 1000X1000 மில்லி மீட்டரில் ஒரு பங்கு ஆகும் அல்லது 1000 மில்லி மைக்ரானில் ஒரு பங்கு ஆகும்.இதற்குள் தான் இரத்த குழாய் தந்துகிகள் க்ளமெரோலஸ் என்ற ஒரு பந்துபோல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்.இங்கிருந்துதான் இரத்தம் வடிகட்டப்படும் (பார்க்க படம்)
இந்த குப்பியின் கீழ் நெளிவுகளாக இறங்கி பிறகு மேலெழும் குழாய்க்கு முன் நெளிவு குழாய் (Proximal Convoluted Tubule)என்று பெயர்.இந்த குழாயில் இரத்தம் வடிகட்டப்படும் போது பெரும்பாலும் மிக சிறிய மூலக்கூறுகள் கொண்ட இரத்த பொருட்கள் (சோடியம் பொட்டாசியம் குளோரைடு போன்ற அயனிகள் இன்னும் பிற நுண் மூலக்கூறுகள் கிரியாட்டினின் யூரியா யூரிக் அமிலம் போன்ற அழுக்குகள்) அனைத்தும் இந்த குழாய்க்குள் வடிந்துவிடும்.புரோட்டீன் போன்ற பெரிய மூலக்கூறுகள் இரத்தத்திலேயே தங்கிவிடும்
இருப்பினும் வயது ஆக ஆக சிறிது புரதம் இதில் வடியக்கூடியது எனினும் அதிக பட்சம் 0.05%வரை இதில் புரதம் கசியலாம் .மற்றபடி இந்த வடிதிரவம்(கிளாமருலஸ் வடிதிரவம்)கிட்டத்தட்ட பிளாஸ்மாவை ஒத்திருக்கும்.இதில் சாதாரணமாக 175 கிராம் வரை குளூக்கோஸும் சேர்ந்து வடிந்திருக்கும்.
2.கிளாமருலஸ் :-இரத்த தந்துகி குழாய்கள் ஒரு பந்து போல் பின்னப்பட்டு பெளமன்ஸ் குப்பிக்குள் அடங்கி இருக்கும்.இதற்கு கிளாமருலஸ் என்று பெயர்.இரத்தம் இங்கிருந்துதான் வடிகிறது.
3.முன் நெளிவு வடிகுழாய் (Proximal Convoluted Tubule,or PCT):-
இது பௌமன் குப்பியிலிருந்து கீழே தொடங்கும்.பிறகு மேலெழுந்து பல நெளிவுகளாக (Convoluted) மீண்டும் கீழிறங்கும்.இங்கு 100%க்ளூகோஸ் அமினோ அமிலங்கள் போன்ற உடலுக்கு தேவையான ஊட்டப்பொருள்கள் மீண்டும் இரத்தத்திற்குள் உறிஞ்சப்படும்.ஏறக்குறைய ஒரு 65% to 70%சோடியம்,பொட்டாசியம்,குளோரைடு பைகார்போனேட்,பாஸ்பேட் சிட்ரேட் மற்றும் லேக்டேட் போன்ற அயனிகளும் நீருடன் மீண்டும் இரத்தத்திற்கு திரும்பும்.அதே அளவு ஹைட்ரஜன் அயனிகள் மற்றும் கிரியாட்டினின்(10%) கழிவுகள் வடித்திரவத்திற்குள் இங்கு சுரக்கப்படும் .இந்த குழாய் பகுதியில் கொஞ்சம் யூரியா மீண்டும் உறியப்பட்டு இரத்தத்திற்கு திருப்பலாம்.ஆனால் கிரியாட்டினின் சுத்தமாக மீண்டும் இரத்தத்திற்குள் உறியப்படாது.
4.ஹெண்லேயின் லூப் (இறங்கும் பகுதி)
முன்நெளிவு குழாய் குறுகி லூப் ஆக கீழே மெடுல்லா பகுதிக்கு இறங்கும்(பார்க்க படம் 3அ ).வடி திரவம் இங்கு இறங்கும் போது கிட்டத்தட்ட முன் நெளிவு குழாயில் மூன்றில் இரண்டு பங்கு பொருட்களும் சிறிது நீரும் உறிஞ்சப்பட்ட பிறகு மீதி மூன்றில் ஒருபங்கு வடி திரவம் இந்த பகுதிக்கு வரும்.இப்பொது அதில் அதிக நீர்ச்சத்தும் குறைந்த கரைபொருளும் இருக்கும்.அதாவது வடிதிரவம் நீர்த்து(Diluted)குறை உரத்தன்மை (Hypotonic) உடையதாக இருக்கும் .எனவே இந்த இறங்கு ஹென்லேயின் லூப் பகுதியின் சுவர் ஒரு அரை ஊடுருவி சவ்வாக(Semipermeable Membrane) மாறி வடிதிரவத்தின் நீரை மட்டும் இரத்தத்திற்குள் மீண்டும் உறிஞ்சி வடித்திரவதை அடர்த்தியாக்கி அடுத்த பகுதிக்கு நகர்த்தும்.
5.ஹென்லேயின் லூப் (உயரும் பகுதி )
இந்தப்பகுதியில் திரவம் நகரும் போது அது அடர்த்தி அதிக (Concentrated) நிலையில் இருக்கும் அதாவது உயர் உர தன்மை (Hypertonic)உடையதாக இருக்கும்.இந்த பகுதியின் சுவர் மீண்டும் அரை ஊடுருவி சவ்வாக இருந்து இதிலிருக்கும் கரைபொருட்களான சோடியம்,பொட்டாசியம்,மற்றும் குளோரைடு அயனிகளை மட்டும் இரத்தத்தில் மீண்டும் உறிஞ்சிக்கொண்டு சமப்படுத்தப்பட்ட (Isotonic)கரைசலாக அடுத்த பகுதிக்கு அனுப்பும்.
6.கடை நெளிவு வடி குழாய் (Distal Convoluted Tubule or DCT):-
கிட்டத்தட்ட நெப்ரானின் இறுதிக்கட்ட வடிகட்டுதல் இங்குதான் நிறைவேறும்.நெப்ரானின் இந்த பகுதிவரைதான் இரத்த ஓட்டமும் இருக்கும்.இங்குதான் பிட்டியூட்டரியிலிருந்து வரும் vasopressin என்ற ஹார்மோன் (நீர்ம எதிர்ப்பு இயக்குநீர் ,Anti Diuretic Hormone)தாக்கமும் இருக்கும்.இந்த ஹார்மோன் வடிதிரவத்திலிருந்து சோடியத்துடன் மேலும் நீரை இரத்தத்தில் உறிஞ்சி சிறுநீரை அடர்த்தி உள்ளதாக்குகிறது.இங்குதான் அட்ரீனலிலிருந்து சுரக்கப்படும் ஆல்டோஸ்ட்டிரான் என்ற ஹார்மோன் சோடியம் மீண்டும் இரத்தத்திற்குள் உறிஞ்சப்பட உதவுகிறது இந்த இடத்தில்தான் பொட்டாசியம் வடித்திரவத்திற்குள் கடைசியாக மீண்டும் கசியப்படுகிறது.இந்த இடத்தில்தான் ஹைட்ரஜன் அயனியும் வடிதிரவத்திற்குள் கசியப்பட்டு சிறுநீரின் அமிலத்தன்மை pH 5 -ஐ சுற்றி நிலைநிறுத்தப்படுகிறது.
இனி இந்த வடித்திரவதை சிறுநீர் என்று அழைக்கலாம் .
இப்படி உருவாகும் சிறுநீர் இனி DCT யின் பின்பகுதியான சிறுநீர் சேகரிப்பு நூல்குழாயின் மூலம் சிறுநீர் சேகரிப்பு குழாயை அடைகிறது.பிறகு அங்கிருந்து யூரேட்டர் எனப்படும் முன் சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பையை அடையும்.
சிறுநீர் சேகரிப்பு நூல் குழாய்,சிறுநீர் சேகரிப்பு குழாய் யூரேட்டர் ஆகிய பகுதிகளில் இரத்த ஓட்டம் இருக்காது.
சிறுநீரகத்தின் குறுக்கு மற்றும் நெடு வெட்டு தோற்றமும் அதில் நெப்ரானின் அமைந்திருக்கும் விதமும் :-
மேலே உள்ள இரு படங்களும் சிறுநீரகத்தில் அதன் அடிப்படை யூனிட்டுகளான நெப்ரான்கள் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை காட்டுவதற்காக வரையப்பட்ட மாதிரி படங்கள்.உதாரணத்திற்காக ஒரே ஒரு நெப்ரான் மட்டும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.படம் 4அ சிறுநீரகத்தின் குறுக்கு வெட்டு தோற்றமாகும்.இதில் கார்ட்டக்ஸ் பகுதியில்தான் நெப்ரானின் முக்கால் பகுதி அமைந்திருப்பதை காணலாம் எனவே இப்பகுதிதான் அதிக இரத்த புழக்கமுள்ள பகுதியாகும்.
மெடுல்லா பகுதியில் நெப்ரானின் லூப் மட்டுமே நீட்டிக்கொண்டிருக்கிறது .எனவே அந்த பகுதியில் மட்டும் இரத்த ஓட்டம் இருக்கும்.
கீழே தரப்பட்டுள்ள நெடு வெட்டு தோற்றம் (படம் 4ஆ) படத்தில் கார்ட்டக்ஸ் பகுதியில் இரத்த குழாய்கள் நெளிவு நெளிவாக பிரமிடுகள் போல் சிறிது மெடுல்லாவுக்குள் இறங்கி ஏறி இருக்கின்றன.மெடுல்லா பகுதியிலுள்ள பெல்விஸ் அமைப்பில்தான் நெப்ரான்களின் சேகரிப்பு குழாய்கள் பகுதி பகுதியாக குவிந்து பிறகு மொத்தமாக முன் சிறுநீர் குழாயாக மாறுவதை காணலாம்.இதுதான் சிறுநீரகத்தின் இயக்கவியல் மற்றும் அகவியல் பற்றிய சிறு குறிப்பு ஆகும்.இனி இதில் ஏற்படும் நோய்களை பற்றி இறைவன் நாடினால் அடுத்த பதிவில் பார்க்கலாம்
தொடரும் .....
இந்த குப்பியின் கீழ் நெளிவுகளாக இறங்கி பிறகு மேலெழும் குழாய்க்கு முன் நெளிவு குழாய் (Proximal Convoluted Tubule)என்று பெயர்.இந்த குழாயில் இரத்தம் வடிகட்டப்படும் போது பெரும்பாலும் மிக சிறிய மூலக்கூறுகள் கொண்ட இரத்த பொருட்கள் (சோடியம் பொட்டாசியம் குளோரைடு போன்ற அயனிகள் இன்னும் பிற நுண் மூலக்கூறுகள் கிரியாட்டினின் யூரியா யூரிக் அமிலம் போன்ற அழுக்குகள்) அனைத்தும் இந்த குழாய்க்குள் வடிந்துவிடும்.புரோட்டீன் போன்ற பெரிய மூலக்கூறுகள் இரத்தத்திலேயே தங்கிவிடும்
இருப்பினும் வயது ஆக ஆக சிறிது புரதம் இதில் வடியக்கூடியது எனினும் அதிக பட்சம் 0.05%வரை இதில் புரதம் கசியலாம் .மற்றபடி இந்த வடிதிரவம்(கிளாமருலஸ் வடிதிரவம்)கிட்டத்தட்ட பிளாஸ்மாவை ஒத்திருக்கும்.இதில் சாதாரணமாக 175 கிராம் வரை குளூக்கோஸும் சேர்ந்து வடிந்திருக்கும்.
2.கிளாமருலஸ் :-இரத்த தந்துகி குழாய்கள் ஒரு பந்து போல் பின்னப்பட்டு பெளமன்ஸ் குப்பிக்குள் அடங்கி இருக்கும்.இதற்கு கிளாமருலஸ் என்று பெயர்.இரத்தம் இங்கிருந்துதான் வடிகிறது.
3.முன் நெளிவு வடிகுழாய் (Proximal Convoluted Tubule,or PCT):-
இது பௌமன் குப்பியிலிருந்து கீழே தொடங்கும்.பிறகு மேலெழுந்து பல நெளிவுகளாக (Convoluted) மீண்டும் கீழிறங்கும்.இங்கு 100%க்ளூகோஸ் அமினோ அமிலங்கள் போன்ற உடலுக்கு தேவையான ஊட்டப்பொருள்கள் மீண்டும் இரத்தத்திற்குள் உறிஞ்சப்படும்.ஏறக்குறைய ஒரு 65% to 70%சோடியம்,பொட்டாசியம்,குளோரைடு பைகார்போனேட்,பாஸ்பேட் சிட்ரேட் மற்றும் லேக்டேட் போன்ற அயனிகளும் நீருடன் மீண்டும் இரத்தத்திற்கு திரும்பும்.அதே அளவு ஹைட்ரஜன் அயனிகள் மற்றும் கிரியாட்டினின்(10%) கழிவுகள் வடித்திரவத்திற்குள் இங்கு சுரக்கப்படும் .இந்த குழாய் பகுதியில் கொஞ்சம் யூரியா மீண்டும் உறியப்பட்டு இரத்தத்திற்கு திருப்பலாம்.ஆனால் கிரியாட்டினின் சுத்தமாக மீண்டும் இரத்தத்திற்குள் உறியப்படாது.
4.ஹெண்லேயின் லூப் (இறங்கும் பகுதி)
முன்நெளிவு குழாய் குறுகி லூப் ஆக கீழே மெடுல்லா பகுதிக்கு இறங்கும்(பார்க்க படம் 3அ ).வடி திரவம் இங்கு இறங்கும் போது கிட்டத்தட்ட முன் நெளிவு குழாயில் மூன்றில் இரண்டு பங்கு பொருட்களும் சிறிது நீரும் உறிஞ்சப்பட்ட பிறகு மீதி மூன்றில் ஒருபங்கு வடி திரவம் இந்த பகுதிக்கு வரும்.இப்பொது அதில் அதிக நீர்ச்சத்தும் குறைந்த கரைபொருளும் இருக்கும்.அதாவது வடிதிரவம் நீர்த்து(Diluted)குறை உரத்தன்மை (Hypotonic) உடையதாக இருக்கும் .எனவே இந்த இறங்கு ஹென்லேயின் லூப் பகுதியின் சுவர் ஒரு அரை ஊடுருவி சவ்வாக(Semipermeable Membrane) மாறி வடிதிரவத்தின் நீரை மட்டும் இரத்தத்திற்குள் மீண்டும் உறிஞ்சி வடித்திரவதை அடர்த்தியாக்கி அடுத்த பகுதிக்கு நகர்த்தும்.
5.ஹென்லேயின் லூப் (உயரும் பகுதி )
இந்தப்பகுதியில் திரவம் நகரும் போது அது அடர்த்தி அதிக (Concentrated) நிலையில் இருக்கும் அதாவது உயர் உர தன்மை (Hypertonic)உடையதாக இருக்கும்.இந்த பகுதியின் சுவர் மீண்டும் அரை ஊடுருவி சவ்வாக இருந்து இதிலிருக்கும் கரைபொருட்களான சோடியம்,பொட்டாசியம்,மற்றும் குளோரைடு அயனிகளை மட்டும் இரத்தத்தில் மீண்டும் உறிஞ்சிக்கொண்டு சமப்படுத்தப்பட்ட (Isotonic)கரைசலாக அடுத்த பகுதிக்கு அனுப்பும்.
6.கடை நெளிவு வடி குழாய் (Distal Convoluted Tubule or DCT):-
கிட்டத்தட்ட நெப்ரானின் இறுதிக்கட்ட வடிகட்டுதல் இங்குதான் நிறைவேறும்.நெப்ரானின் இந்த பகுதிவரைதான் இரத்த ஓட்டமும் இருக்கும்.இங்குதான் பிட்டியூட்டரியிலிருந்து வரும் vasopressin என்ற ஹார்மோன் (நீர்ம எதிர்ப்பு இயக்குநீர் ,Anti Diuretic Hormone)தாக்கமும் இருக்கும்.இந்த ஹார்மோன் வடிதிரவத்திலிருந்து சோடியத்துடன் மேலும் நீரை இரத்தத்தில் உறிஞ்சி சிறுநீரை அடர்த்தி உள்ளதாக்குகிறது.இங்குதான் அட்ரீனலிலிருந்து சுரக்கப்படும் ஆல்டோஸ்ட்டிரான் என்ற ஹார்மோன் சோடியம் மீண்டும் இரத்தத்திற்குள் உறிஞ்சப்பட உதவுகிறது இந்த இடத்தில்தான் பொட்டாசியம் வடித்திரவத்திற்குள் கடைசியாக மீண்டும் கசியப்படுகிறது.இந்த இடத்தில்தான் ஹைட்ரஜன் அயனியும் வடிதிரவத்திற்குள் கசியப்பட்டு சிறுநீரின் அமிலத்தன்மை pH 5 -ஐ சுற்றி நிலைநிறுத்தப்படுகிறது.
இனி இந்த வடித்திரவதை சிறுநீர் என்று அழைக்கலாம் .
இப்படி உருவாகும் சிறுநீர் இனி DCT யின் பின்பகுதியான சிறுநீர் சேகரிப்பு நூல்குழாயின் மூலம் சிறுநீர் சேகரிப்பு குழாயை அடைகிறது.பிறகு அங்கிருந்து யூரேட்டர் எனப்படும் முன் சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பையை அடையும்.
சிறுநீர் சேகரிப்பு நூல் குழாய்,சிறுநீர் சேகரிப்பு குழாய் யூரேட்டர் ஆகிய பகுதிகளில் இரத்த ஓட்டம் இருக்காது.
சிறுநீரகத்தின் குறுக்கு மற்றும் நெடு வெட்டு தோற்றமும் அதில் நெப்ரானின் அமைந்திருக்கும் விதமும் :-
![]() |
படம் 4 அ |
![]() |
படம் 4ஆ |