செவ்வாய், 3 செப்டம்பர், 2019

இசிஜி அரிச்சுவடி -ஊ -




        இசிஜி புற,இயல்பு மற்றும் நோய்க்குறி இயல்

;இசிஜியை அடையாளமிட்ட பிறகு அதன் அலைகளின் அமைப்பு,தோற்றம் அவற்றின் இயல்பு இவற்றை கொண்டு அவை உணர்த்தும் நோய்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம் 
நாம் இசிஜியை ஆய்வு செய்யும் முன் அந்த இசிஜியின் அதன் செல்லுபடியை (VALIDITY) அல்லது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் .அதாவது அந்த இசிஜி எடுக்கப்பட்டவிதம்,இசிஜி கருவியின் நம்பகத்தன்மை,மின் முனைகள் சரியாக பொறுத்தப்பட்டனவா போன்றவற்றை உறுதி செய்யவேண்டும். இது மிகவும் எளிமையானது.       

படம்-1
படம்-1 இல் சாதாரண ஒரு நார்மல் சைனஸ் ரிதம் இரண்டு மின் முனைகளில் பதிவானதை குறிப்பிடுகிறது.அவை முறையே மின் முனை -II ,மற்றும் aVR ஆகும் .மின் முனை-II இதயத்தின் கீழ் அறைகளை கீழிருந்து நோக்குவதாலும் இதயத்தின் நார்மல் கோணத்தில்(NORMAL AXIS-30To +90) மின் ஓட்டத்தின் நார்மல் அச்சுவின் கோணத்தில் இருப்பதாலும் இதில் இசிஜியின் பதிவுகள் மேலெழுந்த நிலையில் பாசிட்டிவ் ஆக இருக்கிறது. aVR மின் முனை வலது புறமிருந்து இதயத்தை நோக்குவதால் அதன் பதிவு எதிரிடையாக கண்ணாடியில் விழும் பிம்பத்தைப்போல் இருக்கிறது (பார்க்க படம்-1).இதேபோல் நார்மல் சைனஸ் ரிதம் aVF ,V5,V6 போன்றவற்றிலும் பாசிட்டிவ் ஆகவே இருக்கும்.காரணம் aVF இதயத்தை நார்மல் கோணத்தில் மேலிருந்தும் ,V5,V6 ஆகியவை இதயத்தின் இடதுபுறமிருந்தும் நோக்குகின்றன.
இப்படி இல்லாமல் aVR இல் ரிதம் பாசிட்டிவ் ஆக பதிவாகி மற்ற மின் முனைகளில் ரிதம் நெகட்டிவ் ஆக கீழ் நோக்கியும் பதிவாகி இருந்தால் அதற்கு இரண்டு காரணங்களை குறிப்பிடலாம்.
1.மின் முனைகள் மாற்றி பொருத்தப்பட்டு இருக்கலாம் 
2.Dextrocardia (இதயத்தின் கோணம் வலது பக்கம்)புரண்டு இருக்கலாம்.Dextrocardia என்ற நிலை இதயத்தின் வலது புறம் ஏதோ பிரச்சினை என்பதை குறிக்கும் 
அப்படி இல்லை என்றால் முதல் காரணமாகத்தான் இருக்கும்.முதல் காரணம் என்றால் அந்த இசிஜி செல்லுபடி ஆகாது(INVALID ).திரும்பவும் எடுக்கவேண்டும்.
P-அலையின் தோற்றம் ,இயல்பு ,நோய்க்குறி :-
படம்-2
படம்-2 இல் காட்டியபடி P -அலை நான்கு விதமாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகளில் இருக்கலாம்.
முதலில் P-அலையை பற்றி தெரிந்து கொள்வோம்.இதயத்தின் மேல் அறைகள் (ATRIA) சுருங்குவதால் இசிஜியில் ஏற்படும் பாசிட்டிவ் அதிர்வுதான் P -அலை என்பது நாம் முன்பே அறிந்ததுதான்.எனவே இதன் தோற்றத்தில் ஏற்படும் மாறுதல்கள் இதயத்தின் மேலறைகளில் ஏற்படும் நோய்களை குறிக்கும் என்பது தெளிவாகும்.மேலே படம்-1 இல் முதலாவது உள்ள P -அலை நார்மல் ஆகும்.அடிகோட்டிலிருந்து உயரே 2.5மிமீ உயரமும் அதே அளவு அகலமும் கொண்ட ஒரு அரை வட்டமாகும்.இது மின் முனை -II -இல் பதியப்பட்டதாகும்.
2-ஆவது P-அலை மேலே கூம்பு வடிவ முனையை கொண்டிருக்கிறது.இந்த அமைப்பில் இருந்தால் அதன் அர்த்தம் இதயத்தின் வலது மேல் அறையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது எனவே அது சரியாக சுருங்க முடியவில்லை என்று அர்த்தம்.எனவே இதயத்தின் இடது பக்கமும் மின் அலைகள் பரவ முடியாமல் இடது அறையும் சரியாக சுருங்காமல் இப்படி கூம்பு வடிவ P-அலையை உண்டாக்கி இருக்கின்றன.
3-வது P-அலை M-வடிவத்திலோ அல்லது ஒட்டகத்தின் முதுகு வடிவிலோ இருக்கிறது இதற்கு அர்த்தம் இதயத்தின் இடது மேல் அறை வீங்கி இருக்கிறது என்று பொருள்.இப்படி அறைகள் வீ ங்குவதற்கு பொதுவாக அதன் கீழ்நோக்கி திறக்கும் வால்வுகள் (ஈரிதழ் மற்றும் மூவிதழ்) சரியாக வேலை செய்யாமல் இருப்பதே காரணம்  ஆகும் 
3-ஆவது P-அலை மறைந்து இருக்கிறது உற்று நோக்கினால் சிறு சிறு துடிப்புகளாக இருக்கலாம்.இதை F-அலை என்றும் கூறலாம் 
இந்த நிலை மேலறை குறுந்துடிப்பு  (ATRIAL FIBRILLATION)என்ற மிக ஆபத்தான நிலை ஆகும்.
4-ஆவது உள்ள படத்தில் QRS-க்கு முன்பு பல P-அலைகள் இருக்கும்.இந்நிலைக்கு மேலறை படபடப்பு என்பர்(ATRIAL FLUTTER).இதில் மேலறையின் துடிப்புகள் வேகமாக இருக்கும்  இருக்கும்.கீழறைகளின் துடிப்பு அதற்கேற்றமாதிரி இருக்காது.  
QRS-கூட்டமைப்பு -தோற்றம் இயல்பு நோய் குறி  :-
நாம் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் அறிந்த மாதிரி QRS-கூட்டமைப்பு இதயத்தின் கீழ் அறைகள் சுருங்குவதால் உண்டாவது ஆகும்.எனவே QRS-இல் ஏற்படும் மாற்றங்கள் குளறுபடிகள் அனைத்தும் இதயத்தின் கீழ் அறைகளில் ஏற்படும் நோய் குறிகள் ஆகும்.
படம் -3

 மேலே படம்-3 இல் உள்ள இசிஜி முறையே மின்முனைகள் V1,V6 ஆகியவற்றின் பதிவுகள் ஆகும்.மின்முனை--V1 நடு மார்பு எலும்பின் 4 ஆவது 5ஆவது விலா எலும்புகளுக்கிடையில் வலது புறமிருந்து இதயத்தின் கீழறைகளின் நடுப்பகுதியை நோக்கிக்கொண்டு இருக்கும் இதயத்தின் மின் ஓட்டம் நார்மலாக வலமிருந்து இடமாக இந்த மின்முனைக்கு எதிர்திசையில் இருப்பதால் இந்த மின்முனை நெகட்டிவ் அலைகளை பதிவுசெய்யும்.ஆனால் அசாதாரண நிலையில் மின்னோட்டம் இடமிருந்து வலமாக இருந்தால் இது பாசிட்டிவ் ஆக அலைகளை பதிவு செய்யும் 
இதே போல் V-6 மின்முனை இடது கோடியில் அக்குள் பகுதியிலிருந்து இதயத்தின் கீழறைகளை நோக்குவதால் V1 ன் பதிவுகளுக்கு எதிராகவே அலைகளை பதிவு இருக்கும் . இதைத்தான் மேலேயுள்ள படம்-3 இல் காண்கிறீர்கள்.
முதலாவது பதிவு நார்மல் QRS ஆகும்.
இது V1-ல் நெகட்டிவ் ஆகவும் V-6-ல் பாசிட்டிவ் ஆகவும் இருக்கிறது 
2-ல் வலது பக்க HIS கொத்து கிளையில் மின்கடத்தல்  அடைப்பை காட்டுகிறது .இதற்கு மருத்துவ மொழியில் (RIGHT BUNDLE BRANCH BLOCK-RBBB).இந்நோயில் வலது பக்க கீழறை  நேரடியாக மின் கடத்தல் கிடைக்காமல் மெதுவாகவே இயங்கும்.
3ஆவதில் இடது கீழறை தாமதமாக இயங்குவது பதிவு ஆகி இருக்கிறது.இந்நோய் நிலைக்கு இடது His கொத்து கிளை அடைப்பு என்பர்.மருத்துவ மொழியில் (LEFT BUNDLE BRANCH BLOCK -LBBB)என்பர்.
இந்த இரண்டு நிலைகளும் ஆபத்தானவை ஆகும்.சரியாக கவனிக்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.(பார்க்க படம் -3)
மாரடைப்பில் -QRS-ன் தோற்றம்:-
படம்-4-A 
                                      

படம்-4-B
 மேலே உள்ள இரண்டு படங்களில் படம் -4A நார்மல் இதய துடிப்பை பதிந்து இருக்கிறது 
ஆனால் படம்-4-B மாரடைப்பின் போது இதயத்தின் துடிப்பை காட்டுகிறது 
படம்-4-B யில் Q-அலை மிகவும் தாழ்ந்து இருப்பதையும் ST பகுதி உயர்ந்திருப்பதையும் அறியவும்.T -அலை அடிகோட்டிலிருந்து (ISOELECTRIC LINE) விலகி மேலே எழுந்திருக்கிறது.R-அலை குறைந்த உயரத்துடன் இருப்பதாய் காணவும்.
அதாவது நார்மலாகஇரண்டு கீழ் அறைகளையும் பிரிக்கும் சுவரில் (INTERVENTRICULAR SEPTUM) முதலில் மின்னோட்டம் சிறிது பலகீனமாக இடமிருந்து வலமாக பாயும் அப்பொழுது மின் முனை-II ல்  Q-அலை சிறிது தாழ்ந்து பதிவாகும் . பிறகு  உடனே மின்னோட்டம் எதிர்திசையில் அதாவது வலமிருந்து இடமாக உயர் mV யில் பாயும்.இதுவே R-அலை ஆகும்.(படம்-4-A)
ஆனால் மாரடைப்பின் போது மின்னோட்டம் இடமிருந்து வலமாக மிகு mV யில் பாயும்.மீண்டும் இடது நோக்கி பகீனமாகவே ஓடும்.விளைவு Q -அலை நீண்டு பெரிதாக தணிக்கிறது.R-அலை குறைந்த அளவே உயர்கிறது இதனால் S-அலையும் சரியாக தணியாது இடது கீழறை சரியாக சுருங்கி விரியாது எனவேதான் உயர்ந்த நிலையில் T-அலை இருக்கிறது.இசிஜியில் இந்த நிலை நீடித்தால் அது மாரடைப்பின் அறிகுறி என்று அர்த்தம்.(படம் -4-B) 
கீழறைகளின் மிகு துடிப்பில் QRS-ன் தோற்றம்  :-
இதை மருத்துவ மொழியில் Ventricular Tachycardia (VT )என்பர்.இதுவும் மிகவும் ஆபத்தான நிலையே.இதில் இசிஜி எப்படி இருக்கும் என்பதை கீழே படம் 5-ல் பாருங்கள்.
படம்-5
VENTRICULAR TACHYCARDIA



மேலே படம்-5 இல்  9 மின்முனைகளின் பதிவுகள் காட்டப்பட்டுள்ளன.உங்கள் இசிஜியில் 12 மின் முனை பதிவுகள் இருக்கும் அவற்றில் மிக முக்கியமானவை மின் முனை-II,V1-V6 பதிவுகள் ஆகும் இட நெருக்கடி கருதி V4 to V-6 ஐ பதிய முடியவில்லை.இருப்பினும் V3 யினுடைய பதிவு அவற்றை ஒத்திருக்கலாம்.பொதுவாக இந்த நோய் நிலையில் QRS ஒழுங்கற்ற நிலையில் மிகவும் அகண்டு(
P-அலைகளுக்கும் QRS கும் தொடர்பு இருக்காது.
TORSE DE POINTS :-
மேலே கண்ட VT யின் முற்றிய நிலை TORSE DE POINTS ஆகும்.
படம்-6

VT ஐ சரியாக கவனிக்கவில்லை என்றால் இசிஜி மேலே உள்ள படத்தில் இருப்பது மாதிரி ஒரு ஒழுங்கற்ற நிலைக்கு போகும் கீழறைகள் சுருங்கி விரிவது தாமதமாகும்.இதை மேலே உள்ள படத்தில் Q-T இடைவெளி நீண்டு இருப்பதின் மூலம் நாம் புரியலாம்.இந்த இடைவெளி காலதாமதம் 500 மில்லி செகண்டுக்கும் அதிகமாக போகும்.அதாவது  
1வினாடி                        =25 மிமீ 
1000மில்லி வினாடிகள் =1விநாடி                                                              =25மிமீ 
500 மில்லி வினாடிகள் =12.5மிமீ 
                                               =12.5ss 
நார்மல் அளவு (9 to 11 ss )
TERMINOLOGY :ss =small squire =1mm 
                              LS =Large Squire =5mm 
மேலும் இந்த நோய் நிலையில் QRS தாறுமாறாக மேலும் கீழும் அலைபாய்ந்துகொண்டு இருக்கும் (படம்-6)
இதை கவனிக்கவில்லை என்றால் இது முற்றி கீழ்கண்ட V-Fib என்ற ஆபத்தான கீழறை குறுந்துடிப்பு (FIBRILLATION) நிலைக்கு போகும்.அதை தொடர்ந்து மரணம் நிச்சயம்.
இதய கீழறை குறுத்துடிப்புகள் -V.Fib :-
படம்-7-A
படம் -7-B

மேலே உள்ள படத்தை உற்று கவனியுங்கள்.நாம் மேலே இதற்கு முன் விளக்கிய கீழறை மிகு துடிப்பு (VT) மற்றும்  TORSE DE POINTS ஆகியவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு ஆபத்தான ஒரு நோய் நிலையை நீங்கள் உணரலாம்.
VT யிலும் TORSE DE POINTS யிலும் இசிஜியில் ஓரளவு ஒழுங்கு நிலை random ஆக மாறி மாறி இருக்கும் 
ஆனால் V-Fib -இல் முற்றிலும் ஒழுங்கற்ற நிலையே இருக்கும் (படம்-7).இந்நோய் நிலை வந்த பிறகு இதயம் நின்று விடும் மரணம் சம்பவிக்கும் எனவே இது ஒரு அவசர நிலை ஆகும் .                      தொடரும் ....


அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...