நீரிழிவு நோயாளிகள் இனிப்பு பழவகைகளை ருசிப்பது எப்படி ?
இனிப்புகள் என்றாலே நீரிழிவு நோயாளிகள் தயங்குவது இயல்பு. மாம்பழம், வாழைப்பழம்,சப்போட்டா பழம் மற்றும் இனிப்பு பண்டங்களான ஹல்வா, ஜிலேபி லட்டு போன்றவைகளை அவர்கள் ஆதங்கத்துடன் ஒதுக்கிவிடுவார்கள்
இனி அவ்வாறு ஒதுக்க வேண்டியதில்லை.
நவீன நீரிழிவு மருத்துவம் எந்த இனிப்பு பொருளையும் ஒரு அளவுக்குள் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம் என்று கூறுகிறது. அந்த அளவுகளை கணக்கிடுவதற்கு சில அளவுகோல்களையும் அதன் அடிப்படையில் சில சூத்திரங்களையும் நவீன நீரிழிவு இயல் நமக்கு வகுத்து தந்திருப்பது ஒரு மிகப்பெரும் அனுகூலமாகும்.
அந்த பகுதி அல்லது அந்த அளவை யை எடை போடுவதற்கு நாம் ஒரு சூத்திரத்தை தெரிந்துகொள்வோம். அந்த சூத்திரத்தை பயன்படுத்த கீழ்கண்ட சில அளவுருக்கள் (PARAMETERS) தேவை.
1.அந்த இனிப்பின் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள பகுதியில் மொத்த மாவு சத்தின் அளவு (Total Carbohydrates)(கூகுளில் தேடவும்) அந்த பகுதி அல்லது அந்த அளவை யை எடை போடுவதற்கு நாம் ஒரு சூத்திரத்தை தெரிந்துகொள்வோம். அந்த சூத்திரத்தை பயன்படுத்த கீழ்கண்ட சில அளவுருக்கள் (PARAMETERS) தேவை.
2.நார்ச்சத்த்தின் அளவு -FIBERS -கூகுளில் தேடவும்
3.சர்க்கரை குறியீட்டு எண் (GI) -கூகுளில் தேடவும்
கணக்கீடுகள் :-
கிடைக்கும் மாவு சத்து=மொத்த மாவு சத்து - நார்ச்சத்து ;
சர்க்கரை குறியீட்டு எண் =GI
சர்க்கரை ஏற்றும் திறன்(GL) சூத்திரம்:-
GL = (n x GI)/100
[ n= கிடைக்கும் மாவுச்சத்து ]
சர்க்கரை ஏற்றும் திறன் அளவுகோல்
10 க்கு கீழ் - பாதுகாப்பு
10-20 - நடுநிலை
20க்கு மேல் -தீமை
எனவே எந்த ஒரு இனிப்பாக இருந்தாலும் அதன் ஒரு குறிப்பிட்ட பகுதியின் சர்க்கரை ஏற்றும் திறனை(GL) கணக்கிட்டு அது பத்துக்குள் இருக்கும் பட்சத்தில் அந்த பகுதி வரை அந்த இனிப்பை உண்ணலாம்.
ஒருவேளை நீங்கள் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொண்ட பகுதி இனிப்பின் GL பத்துக்கு மேல் இருந்தால் அந்த பகுதி இனிப்பை மேலும் குறைத்து GL பத்துக்குள் அமையும்படியாக செய்து அந்த பகுதி அளவு வரை அந்த இனிப்பை நீங்கள் சாப்பிடலாம்.
இதை கீழே உள்ள 15 உதாரணங்கள் மூலம் விளங்கலாம்.
[நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு கட்டுப்பாடு அளவுக்குள் இனிப்பு சாப்பிடுவதால் அவர்களது இன்சுலின் சுரப்பு நிவர்த்தி அடையும் வாய்ப்புகள் உண்டு.]
1.மாம்பழம் (170 gm ):-
மொத்த மாவு பொருள் -28gm
நார்ச்சத்து -6gm
மீதி மாவுப்பொருள் =28-6 =22gm
GI =56
GL (170gm)மாம்பழத்திற்கு :-
GL =(n x GI)/100 =(22 x 56)/100=12.32❌
12.32 GL க்கு பரிமாறும் அளவு =170gm
∴10 GL க்கு [170/12.32] x 10=138gm✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி ஒரு நாளைக்கு 100-138gm க்குள் மாம்பழத்தை பாதுகாப்பாக சாப்பிடலாம்.
2.தர்ப்பூசணி (120gm):-
மொத்த மாவுப்பொருள் =8gm
நார்ச்சத்து = 0.4gm
மீதி மாவுப்பொருள் 8-0.4 =7.6gm
GI =72
GL (120gm) [nxGI]/100=[7.6x72]/100=5.5✔️
எனவே 100-200gm வரை சாப்பிடலாம்
3.வாழைப்பழம் (100gm)
மொத்த மாவுப்பொருள் =23gm
GL (120gm) [nxGI]/100=[7.6x72]/100=5.5✔️
எனவே 100-200gm வரை சாப்பிடலாம்
3.வாழைப்பழம் (100gm)
மொத்த மாவுப்பொருள் =23gm
நார்ச்சத்து =2.6gm
கிடைக்கும் மாவுப்பொருள்-n]
(23 - 2.6) ] ≈ 20 approx
Glycemic Index- GI =62
Glycemic Load-GL=(nxGI)/100 }
=(20 x 62)/100} = 12.40 ❌
12.4 க்கு பரிமாறும் அளவு=100 gm
12.4 க்கு பரிமாறும் அளவு=100 gm
GL 10 க்கு ,, =(100/12.6) x 10
≈ 80 gm✅
எனவே ஒரு நீரிழிவு நோயாளி ஒரு நாளைக்கு 80 gm வரை வாழைப்பழம் சாப்பிடலாம்.
4.பேரிச்சை (100gm):-
100gm பேரீச்சையில் மொத்த மாவு சத்து =100gm
நார்ச்சத்து =0gm
கிடைக்கும் மாவுச்சத்து 100-0 =100gm
GI (சர்க்கரை குறியீட்டு எண்) =42
GL (சர்க்கரை ஏற்று திறன்/100gm)
(nxGI)/100 = (100x42)/100 =42❌
GL 42க்கு பரிமாறும் அளவு =100gm
ஃ GL 10க்கு ,, (100/42)x 10= 23gm✓
எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 23gm வரை சாப்பிடலாம்
எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 23gm வரை சாப்பிடலாம்
5.திராட்சை (100gm):-
மொத்த மாவுப்பொருள் =17gm
நார்ச்சத்து =01gm
கிடைக்கும் மாவுப்பொருள்17-01 = 16gm
GI = 59gm
GL (100 கிராமுக்கு) (nxGI)/100]
= (16 x 59)/100 ] = 9.44✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 100gm வரை சாப்பிடலாம்
6.கிசுமிசு (100gm):-
மொத்த மாவுப்பொருள் =79gm
நார்ச்சத்து =3.7gm
கிடைக்கும் மாவுப்பொருள்]
n =79-3.7] =75.3gm
GI =64
GL = (75.3x64)/100 = 48.2❌
GL 48.2க்கு பரிமாறும் அளவு =100gm
GL 48.2க்கு பரிமாறும் அளவு =100gm
ஃ GL 10க்கு ,, [100/48.2]x10=20gm✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி நார்ச்சத்து இல்லாததால் இரண்டு நாளைக்கு ஒரு முறை 20gm கிசுமிசு (உலர் திராட்சை) எடுத்துக்கொள்ளலாம்
7.பலா (165gm)
மொத்த மாவுப்பொருள் =38gm
நார்ச்சத்து =2.5gm
கிடைக்கும் மாவுப்பொருள்(n)]
38-2.5 ] =35.5gm
GI =75
GL (165gm க்கு)=(nxGI)/100=(35.5x75)/100
=26.6❌
GL 26.6க்கு பரிமாறும் அளவு =165gm
ஃGL 10 க்கு ,, [165/26.6]/10 =62gm✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 60gm பலாப்பழம் சாப்பிடலாம்.
8.சப்போட்டா பழம் (100gm):-
மொத்த மாவுப்பொருள் =20gm
நார்ச்சத்து =5gm
கிடைக்கும் மாவுப்பொருள்20-5 =15gm(n)
GI =57
GL (100gm) (nx57)/100=(15x57)/100 =8.55✔
9.சீத்தாப்பழம் (100gm):-7.பலா (165gm)
மொத்த மாவுப்பொருள் =38gm
நார்ச்சத்து =2.5gm
கிடைக்கும் மாவுப்பொருள்(n)]
38-2.5 ] =35.5gm
GI =75
GL (165gm க்கு)=(nxGI)/100=(35.5x75)/100
=26.6❌
GL 26.6க்கு பரிமாறும் அளவு =165gm
ஃGL 10 க்கு ,, [165/26.6]/10 =62gm✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 60gm பலாப்பழம் சாப்பிடலாம்.
8.சப்போட்டா பழம் (100gm):-
மொத்த மாவுப்பொருள் =20gm
நார்ச்சத்து =5gm
கிடைக்கும் மாவுப்பொருள்20-5 =15gm(n)
GI =57
GL (100gm) (nx57)/100=(15x57)/100 =8.55✔
மொத்த மாவுப்பொருள் =26gm
நார்ச்சத்து =05gm
மீதி மாவுப்பொருள் 26-5 =21gm
GI =54
GL (100gm) =(nxGI)/100 =[21x54]/100 =11.3❌
ஃ GL (85gm) =[11.3/100]x85 =9.6✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 85gm வரை சாப்பிடலாம்.
10.மாதுளை (100gm):-
மொத்த மாவுப்பொருள் =19gm
நார்ச்சத்து =04gm
கிடைக்கும் மாவுப்பொருள்19-04=15gm
GI =53
GL (100gm) =[nxGI]/100=[15x53]/100=7.95✔️
தினமும் 100gm வரை சாப்பிடலாம்.
11.கொய்யா (100gm)
மொத்த மாவுப்பொருள் =14gm
நார்ச்சத்து = 5gm
மீதி மாவுப்பொருள் (n) 14-5 =09gm
GI =65
GL (100gm) =[nxGI]/100 =[9x65]/100 =5.85✔️
தினமும் 100-150gm வரை சாப்பிடலாம்
12.பப்பாளி (100gm):-
மொத்த மாவுப்பொருள் =11gm
நார்ச்சத்து =02gm
மீதி மாவுச்சத்து (n) 11-02 =09gm
GI =60
GL (100gm) [nxGI]/100=[09x60]/100=5.4✔️
தினமும் 100-200gm வரை சாப்பிடலாம்
13.ஆரஞ்சு (100gm):-
மொத்த மாவுச்சத்து =12gm
நார்ச்சத்து =2.5gm
மீதி மாவுச்சத்து (n) 12-2.5 =09.5gm
GI =40
GL (100gm) =[nxGI]/100=[9.5x40]/100 =3.8✔️
தினமும் 100-150gm வரை சாப்பிடலாம்
14.எலுமிச்சை (100gm):-
மொத்த மாவுச்சத்து =09gm
நார்ச்சத்து =2.5gm
மீதி மாவுச்சத்து (n) 09-2.5 =6.5gm
GI =20
GL (100gm) =[nxGI]/100 =[6.5x20]/100=1.3✔️
தினமும் 800gm வரை சாப்பிடலாம்
15.நாவற்பழம் (100gm):-
மொத்த மாவுச்சத்து =14gm
நார்ச்சத்து =01gm
மீதி மாவுச்சத்து (n) 14-01 =13gm
GI = 25
GL (100gm) =[nxGI]/100 =[13x25]/100 =3.25✔️
தினமும் 100-300gm வரை சாப்பிடலாம்
தொகுப்பு (SUMMARY ):- மேலேயுள்ள கணக்கீடுகள் மூலம் நமக்கு சில உண்மைகள் விளங்கும்.நார்ச்சத்து என்பது ஒரு மாவுப்பொருளாக இருந்தாலும் அது சீக்கிரம் ஜீரணம் ஆகாது.மேலும் அது குடலில் உறிஞ்சப்படாதுஎனவே தான் இதை நாம் GL கணக்கீட்டின் போது மொத்த மாவுச்சத்திலிருந்து கழித்து விடுகிறோம்.மேலும் ஒரு இனிப்பில் எவ்வளவுக்கு எவ்வளவு நார்ச்சத்து இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது நன்மை பயக்கும்.காரணம் இந்த நார்ச்சத்து குடலின் மூலம் சர்க்கரை உடனுக்குடன் உறியப்படுவதை தடுத்து இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனுக்குடன் திடீரென்று உயராமல் பாதுகாக்கிறது.
அதேபோல் எந்த இனிப்பு பண்டத்தையும் அதன் சர்க்கரை ஏற்றும் திறன் (GL)பத்துக்குள் இருப்பது போன்ற ஒரு அளவீட்டுடன் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை திடீரென்று உயர்வது கட்டுப்படுத்தப்படும்.
இன்னும் ஒருபொருளின் சர்க்கரை குறியீட்டு எண் (GI)அதிகம் இருந்தாலும் அதன் ஒரு பகுதியை சர்க்கரை ஏற்றும் திறன் பத்துக்குள் இருப்பது மாதிரி குறைத்து சாப்பிடலாம். [உ-ம்] மாம்பழம்,தர்பூசணி,பேரீச்சை,சப்போட்டா போன்றவை