கஞ்சா அடிக்கலாம் வாங்க
செய்தி :-டிசம்பர் -4. 2020 தேதியிட்ட பிசினஸ் டுடே இதழில் வந்த ஒரு செய்தி.
 |
| பூனை முகம் காட்டும் புலி | النمر ذو وجه القطة | ಬೆಕ್ಕಿನ ಮುಖದ ಹುಲಿ | പൂച്ച മുഖമുള്ള കടുവ | بلی کا سامنا والا شیر |
கனாபிஸ் என்று சொல்லப்படக்கூடிய கஞ்சா அல்லது மரிஜுவானா என்ற செடி போதை பொருளா இல்லையா என்று ஐ.நா வின் போதை பொருள் பிரிவான போதை பொருள் கமிஷன் (UN COMMISSION ON NARCOTIC DRUGS-C.N.D)
உலக சுகாதார அமைப்பின் (W.H.O.) பரிந்துரையின்படி கடந்த புதன்கிழமை (02-12-20) அன்று ஓட்டெடுப்புக்கு விட்டதில் இந்தியா, யு.எஸ். மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட 27 நாடுகள் கஞ்சாவை.1961-ல் உருவாக்கப்பட்ட ஆபத்தான மருந்துகள் (Schedule-IV ) பட்டியலிலிருந்து எடுத்துவிட ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. ரஷியா ,பாகிஸ்தான், சீனா உட்பட 25 நாடுகளே எதிர்த்து வாக்களித்த நிலையில் தீர்மானம் கஞ்சாவுக்கு ஆதரவாக நிறைவேறியது. ஆக இனி கஞ்சாவும் கஞ்சா பிசினும் அபின் ஹெராயின் போல கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளாக கருதப்படாது.
இந்தியாவும் இதை ஆதரித்து இருப்பதால் இந்தியா தனது NDPS (Narcotic Drugs and Psychotropic Substances-1985) அதாவது 1985 இல் இந்தியாவில் இயற்றப்பட்டு நடைமுறையில் இருக்கும்
போதை மருந்துகள் மற்றும் மனப்பாதிப்புகளை உண்டாக்கும் மருந்துகள் என்ற பட்டியலிலிருந்து கஞ்சாவை விடுவிக்கலாம். இந்த ஓட்டெடுப்பின் முடிவின்படி
WHO வின் ஆலோசனையுடன் கஞ்சாவும் கஞ்சா பிசினும் இனி மிக கொடிய ஆபத்தான மருந்துகள் என்ற பிரிவிலிருந்து (Schedule-IV) மிக இலேசான ஆபத்துள்ள பொருட்கள் (Shedule-I) என்ற பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே அவை இன்னும் போதை பொருட்கள்தான். ஆயினும் மிக இலேசான போதை தரக்கூடிய இலாகிரிப் பொருளாக கருதப்படுமாம். நல்ல வேடிக்கை.
கண்ணெதிரே பற்றி எரியும் நெருப்பையும் வெறும் மாயத்தோற்றம் என்று சொல்ல வருகிறார்களா இவர்கள் ?.மலத்தில் கெட்ட நாற்றமுடைய மலம் எது நாய் மலமா அல்லது மனித மலமா என்ற அடுத்து ஓர் ஆய்வு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .
கொரோனா என்ற ஒரு மாயப்பிசாசினால் உலகப்பொருளாதாரமே சீரழிந்து போய் நிற்கிறது .மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள் . இந்த நிலையில் ,
உலக சுகாதார நிறுவனம் இந்த வாக்கெடுப்புக்கான அவசியம் பற்றி சொன்ன விளக்கம்தான் வேடிக்கையானது.
அதாவது கடந்த 59 வருடங்களாக கஞ்சாவை மிக ஆபத்தான பொருள் என்று வகைப்படுத்தி அதன் மருத்துவ குணம் பற்றிய ஆய்வுகளை முடக்கிவிட்டார்கள் என்பதுதான்.
ஆய்வுகள் மேற்கொள்வதற்கு போதை தரக்கூடிய ஒரு பொருளின் மீதுள்ள சமூக கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டிய தேவை என்ன?என்பதை அவர்கள்தான் சொல்லவேண்டும்..
எல்லாப்பொருட்களிலும் நன்மையையும் தீமையும் கலந்தே இருக்கிறது.
கஞ்சாவில் சில நல்ல மருத்துவ குணங்கள் இருக்கலாம். அனாலும் அது சமூகத்தில் இளைய தலைமுறையினரால் துஷ்பிரயோகம் பண்ணப்படுகிறதே. தெரியவில்லையா?கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் கஞ்சா போதைக்கு அடிமையானவர்களை அது ஊக்கப்படுத்துவதுபோல் ஆகாதா?
அப்படியானால் அபினிலும் சிலநன்மைகள் இருக்கின்றன.அதற்காக அதையும் மிக எளிதாக சந்தையில் கிடைக்கும்படி செய்துவிடுவீர்களா?
உங்கள் விஞ்ஞான ஆய்வு அறிவின் நோக்கங்களின் எல்லைதான் என்ன?
போதை என்பது மனிதனை கெடுக்கும். சமூகத்தை சீரழிக்கும். அதில் கடுமையானது இலேசானது என்று வேறுபாடுகாட்டி என்ன சொல்ல வருகிறீர்கள்? மேலும் நீங்கள் இலேசானது என்று சந்தைக்குள் விட்டிருக்கும் புகையிலையும் பீடி சிகரெட் போன்ற பொருட்களும் எவ்வளவு கொடூரமாக மனிதனின் ஆரோக்கியத்தையும் அவனது பொருளாதாரத்தையும் சீரழித்துக்கொண்டிருக்கின்றன என்பதை கொஞ்சமாவது சிந்திக்கவும்.
இத்தனைக்கும் புகையிலையில் இருக்கும் நிக்கோட்டினுக்கு எந்த மருத்துவ குணமும் கிடையாது. புகைப்பது உடலுக்கு கேடு-அதிகாரப்பூர்வ எச்சரிக்கை (SMOKING IS INJURIOUS TO HEALTH-STATUTORY WARNING) என்ற வெற்று எச்சரிக்கையுடன் பீடியையும் சிகரெட்டையும் சந்தையில் உலவ விட்டமாதிரி இனி கஞ்சாவுக்கும் லேபிள் போட்டு உலவ விடப்போகிறீர்களா? |
இந்த படத்திற்கு விளக்கம் தேவையில்லை |
ஏற்கனவே குடி அரக்கனை திறந்துவிட்டு வருவாய் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஆளும் மாநில அரசுகள் இனி இந்த புகை அரக்கனையும் உலவ விடும் அந்த கெட்ட காலம் இந்தியாவில் மிக சமீபித்து விட்டது.
ஒவொரு குடும்பத்திலும் பெண்கள் கானான்மார்களை குடிகாரர்களாய் கண்டது போக இனி தங்கள் ஆண் பிள்ளைகளையும் புகை போக்கிகளாக காணும் கேடு நெருங்கிவிட்டது .
இதில் இந்தியா ஆதரித்து ஓட்டளித்திருப்பது மிகவும் கவலைக்குரியது. இனி மளிகைக்கடையில் இஞ்சி வெள்ளைப்பூண்டு வாங்குவது மாதிரி கஞ்சாவையும் வாங்கிக்கொள்ளலாம் போலும்.
கஞ்சாவை பற்றிய சில குறிப்புகள்:- இங்கே க்ளிக்குங்கள்