கஞ்சாவை தெரிந்துகொள்ளுங்கள
வேறுபெயர்கள் :-மரிஜுவானா ,ஹஷீஷ்
கலைப்பெயர் :கன்னாபிஸ் சட்டைவா
கன்னாபீஸ் இண்டிகா
கிடைப்பது :- மொட்டுக்கள் ,பிசின்கள்
உபயோகம் :-வாய்வழியாகவும் சாப்பிடலாம். போதையும் பாதிப்புகளும் தாமதமாகவே கிடைக்கும். ஆனால் கடுமையாக இருக்கும்
மூக்கு அல்லது தொன்டை வழியாக புகைக்கலாம். பாதிப்பு உடனடியாக இருக்கும். போதையும் உடனடியாக ஏறும். ஆனால் இலேசாகவே இருக்கும்
கஞ்சாவின் மருந்துகளும் மருத்துவ குணங்களும் :-
கஞ்சாவில் அடங்கி இருக்கும் முக்கிய மருந்துகள் நான்கு. அவை,
1.△9-டெட்ராஹைடிரோகன்னாபினால் (△9-tetrahydrocannabinol -THC)
2.கன்னாபினால் -Cannabinol (CBN)
3.கன்னாபிடயோல் -Cannabidiol (CBD)
4.ட்ரொனோபினால் -Dronobinol-செயற்கை THC
மேல் கண்ட பொருட்களை ஆல்கலாய்டுகள் (ALKALOIDS) அல்லது கன்னாபினாய்டுகள் (CANNABINOIDS) என்பார்கள் .காரணம் இவை காரத்தன்மையும் (ALKALINITY )இல்லாமல், அமிலத்தன்மையும் (ACIDITY) இல்லாமல் இரண்டுங்கெட்டான் நிலையிலுள்ள ஆல்கஹால்களாகும்.
மருத்துவ குணங்கள் :-
1.வலிநிவாரணி (CBN, CBD)
கண்ணபிஸ் ஆல்கலாய்டுகளை சாப்பிடுவதால் உடல் வலிகளுக்காக வலிநிவாரண மருந்துகள் சாப்பிடுபவர்கள் அந்த மருந்து அளவுகளை குறைத்துக்கொள்ளலாம் .
2.புற்றுநோயாளிகள் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பசியை தூண்டுதல்
3.புற்றுநோய் செல்களை அழித்தல்(ஆய்வில்)
C.sativa வில் அதிகம் CBN -ம் CBD-ம் உள்ளன.எனவே இது அதிகம் போதை தராது.ஆனால் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
C.Indica வில் அதிகம் THC இருப்பதால் இது அதிகம் நரம்பு மண்டலத்தையும் மூளையையும் பாதிக்கும். அதிகம் போதையையும், கிரக்கத்தையும் கொடுக்கும்.
இந்த மருந்துகள் கஞ்சா பிசினில் அடர்த்தியாக இருக்கின்றன.
பாதிப்புகள் -மூளை
1.மயக்கம்,கிரக்கம்
2.சாத்தியமில்லாத கற்பனைகள்
3.மனநிலை பாதிப்பு
4.ஞாபக சக்தி குறைதல்.
To study in English click here
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக