நரகை நோக்கி
ஆம் தங்களது அதிமேதாவித்தனத்தாலும் அலட்சியத்தால் தமிழர்கள் நம் தங்கத்தமிழகத்தை நரகப்படுகுழியில் தள்ளிவிட்டு விட்டார்கள்.ஐயோ தமிழகமே இனி உன் சாம்பல் கூட மிஞ்சாது
ஒருபக்கம் மத்திய அரசின் பாராமுகமும் துவேஷமும்.இன்னொரு புறம் மற்ற மாநிலங்களின் சகோதரத்துவமின்மை,இப்படி தத்தளித்துக்கொண்டு இருக்கும் நிலையில் கூட இருந்தே குழிபறித்து குப்புற தள்ளி விட்ட மாதிரி உள்ளூர் அரசியல் கட்சிகளின் சுயநலமிக்க நயவஞ்சகம் இத்தனையும் தமிழகம் என்ற சொர்க்க பூங்காவை சுடுகாடாக்கி விட்டு நிற்கின்றன.
சசிகலா-நடராசன் மாபியா கும்பல் எப்படியோ ஒரு வழியாக தன் காரியத்தை சாதித்து கொண்டது.சசிகலா சிறை சென்றாலும்,பன்னீர் செல்வம் பகைத்தாலும் தன் புத்தி சாதுர்யத்தால் தனது பினாமி எடப்பாடி பழனி சாமி மூலமாக தமிழக ஆட்சியை பிடித்துவிட்டார்.
இனி நடக்கப்போவது வெறும் சூதாட்ட பேரங்களாக இருக்குமே ஒழிய மக்கள் நன்மை என்று ஒன்றும் இருக்காது.
ஜெயலலிதாவின் மறைவு இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.கோர்ட்டில் இது சம்பந்தமாக டிராபிக் ராமசாமி மற்றும் ஜெயலலிதாவின் பழைய தோழி திருமதி கீதா ஆகியோர் போட்ட வழக்குகள் கிணற்றில் போட்ட பாறாங்கல் மாதிரி கிடப்பில் மவ்னம் சாதிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கு கூட 20 வருடம் இழுத்தடிக்கப்பட்டு முதல் குற்றவாளியின் மரணத்திற்குப்பிறகு தீர்க்கமான முடிவாக இப்போது வந்திருக்கிறது.இது முன்னாலேயே வந்திருந்தால் பல குழப்பங்களில் இருந்து தமிழகம் தப்பி இருக்கும்.
சரி ஆனால் இப்போது ஒரு முன்னாள் முதலமைச்சரின் மரணத்தினுள் பொதிந்திருக்கும் அந்த 75 நாள் மர்மம் விலகுவது எப்போது?
சசிகலா தரப்பினரும் மௌனம் காக்கிறார்கள்.அப்பல்லோ தரப்பினரும் ஒரு கண்துடைப்பு நாடகத்தை பிரஸ் மீட்டிங்க் என்ற பெயரில் நடத்தி விட்டு விஷயத்தை கை கழுவி விட்டார்கள்.
இருட்டினில் நீதி மறைந்திருக்கிறது .அதை வெளிக்கொணர வேண்டிய பொறுப்புள்ள அதிகார வர்க்கமோ மடியில் கனத்தை வைத்துக்கொண்டு அமைதி காக்கிறது.மறைந்திருக்கும் நீதியே உன்னை வெளியாக்குபவர்கள் யார்?
இந்த நாட்டில் பொய்யும் திருட்டும் மிரட்டிக்கொண்டு வெளியே உலா வருகிறது அதை தட்டி கேட்கும் நீதி மான்களோ கை கட்டி உட்கார்ந்திருக்கிறார்கள் ஆக எங்கு பார்த்தாலும் துரோகம்,துவேஷம் bureaucracy .
சமீபத்திய தீர்ப்பில் வரம்பு மீறி சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தமிழக அரசின் கருவூலத்தில் சேர்க்கும் படி நீதி மன்றம் கூறி இருப்பது வரவேற்கத்தக்கதுதான் ஆனால் அதன் முன் பின் செயல் பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்று நீதி மன்றம் வரையறுக்கவில்லையே.
தமிழகத்தின் தலையில் ஏறி உட்கார்ந்து இருப்பதோ ஒரு பினாமி அரசு.மன்னார்குடி மாபியா கும்பல் தமிழகத்தையே கபளீகரம் செய்ய போடுகிற திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற தொடங்கியுள்ளன.இந்த நிலையில் அரசின் கருவூலத்தை மட்டும் இந்த மாபியா கும்பல் விட்டுவைக்குமா.
அரசியல் என்பது வெறும் சாக்கடை என்றால் அதில் முங்கி குளிக்கும் அரசியல் சாணக்கியர்கள் வெட்கம் கெட்டவர்கள்.என்ன செய்வது என்று இந்த சாக்கடை குளியல்களை சகிக்கும் மக்கள் விவஸ்தை கெட்டவர்கள்.இதுதான் இன்றைய தமிழ் நாட்டின் நிலை .
இப்போது மத்திய அரசு குழப்பத்தோடு குழப்பமாக மீண்டும் தமிழ்நாட்டின் பசுமையையே சுரண்டி சாகடிக்கும் வேலையை தொடங்கி உள்ளது.
அதுதான் மீத்தேன் திட்டம்.இதை தமிழக விவசாயிகள் கடுமையாக எதிர்த்ததால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதை எதிர்த்து அனுமதிக்க மறுத்தார்.
ஆனால் அவர் மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக திணித்த மத்திய அரசு அவர் மூலம் இதற்க்கு அனுமதி வாங்கிவிட்டது.பன்னீரும் மீத்தேன் என்ற பெயர் தனக்கு அலர்ஜி என்பதால் Hydrocarbon என்று பெயர் மாற்றி கையெழுத்துப்போட்டார்.என்ன செய்ய நம் தலையெழுத்து .தஞ்சை தரணியே பாழாக்கப்போகிறது .
பன்னீரிடம் பேரம் தோற்றதால் சசி மாபியா அவரை குப்புறத்தள்ளி தனக்கு வேண்டிய எடப்பாடி பழனியை முதல்வராக நிறுத்தி எல்லா நியாயம் சட்டம் நெறிகள் அனைத்தையும் உடைத்து எறிந்து வெறும் வாய் ஒட்டு மூலம் தேர்ந்தெடுத்து அவர் பெயரை கவர்னருக்கு சிபாரிசு செய்து உள்ளனர் .இப்போது மத்திய அரசின் பிடியில் தமிழகத்தின் தலையெழுத்து உள்ளது
ஆளுநர் வித்யாசாகர் மத்திய அரசின் சமிக்ங்கைக்கு காத்திருக்கிறார்.மத்திய அரசு இப்போது தன்னுடன் பேரம் பேச ஆள் தேடுகிறது.பினாமி பழனியா ?,பழைய உறவு பன்னீரா? இல்லை ஸ்டாலினா ?கடவுளே நான் யார் கையில்?-தமிழகத்தின் கதறல்.
மத்திய அரசிற்கு மற்ற மாநிலங்களில் செயல் படுத்த முடியாத அத்தனை பாதக திட்டங்களையும் திறந்த வெளி கழிவறையான தமிழகத்தில் நிறைவேற்ற ஒரு கை பொம்மை அரசு வேண்டும் .இதுதான் அவர்களின் பேரம் மற்றபடி ஆட்சி அமைப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் எப்படி வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம் கொள்ளை அடிக்கலாம்.கண்டுகொள்ளப்படாது.ஆனால் எங்கேயாவது இடறினால் ......அதை பின்னால் பார்க்கலாம்.
இந்த பேரத்திற்கு நம் தமிழ்நாட்டு அரசியல் வர்க்கம் மறுக்கும் என்று சொல்ல முடியாது.
இதற்கு பின்னால் காவிரி பிரச்சினை முல்லைப்பெரியாறு பிரச்சினை ஆந்திராவுடன் பாலாறு பிரச்சினை என்று பக்கத்து மாநிலங்களுடன் பிரச்சினைகள்.இந்த பிரச்சினைகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை.காரணம் மக்களிடமும் விழிப்புணர்வு இல்லை ஆண்ட வர்க்கமும் இலவசங்கள்,ஓட்டுக்கு ரூபாய் என்று மக்களை மடையர்களாகவே ஆக்கி வைத்துவிட்டனர்.
என்ன படித்து என்ன செய்ய.மாணவர்கள் கூட இங்கு அரசியல்வாதிகளின் கைகளில் பொம்மைகளாகிறார்கள்.சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் பெரிய வெற்றி என்று கூறுகிறார்கள்.அது உண்மையில் மத்திய மாநில அரசியல்கிங்கிறர்கள் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை சிதறடிக்க மாணவகண்மணிகளை பொம்மைகளாக்கி ஆடிய ஒரு பொம்மலாட்டம் அது.அது ஒரு வேஸ்ட் .ஜல்லிக்கட்டு கிடைத்ததாம் அதனால் என்ன? அது எவ்வளவு காலத்திற்கு? ஆண்டவனுக்கே வெளிச்சம்.இந்த ஜல்லிக்கட்டினால் மாநிலம் அடையப்போகும் நன்மைகள் என்ன?
மாட்டிற்கு பேசத்தெரிந்தால் தனக்கு நீர் வேண்டும் உணவு வேண்டும் விவசாயம் வேண்டும் என்று தான் கேட்டிருக்குமே ஒழிய இப்படி ஜல்லிக்கட்டு ஆட்டம் வேண்டும் என்று கேட்டிருக்காது.ஆனால் மாட்டின் மீது பழியை போட்டு ஒரு அர்த்தமற்ற போராட்டத்திற்கு தூண்டி விட்டு மாணவர்களின் படிப்பையும் கெடுத்து நம் கவனத்தை சிறகடிக்க அரசியல் நயவஞ்சகர்கள் நம் மாநிலத்தின் நமைகளை அற்ப லாபத்திற்காக காட்டிக்கொடுத்துவிட்டார்களே.
இப்போது ஒரு நிரூபணமில்லாத ஒரு செய்தியை ஊடகங்கள் தமிழகத்தின் நலனை கெடுப்பதற்காகவே பரப்புகின்றன.செய்தி வேறு அதன் தலைப்பு வேறாக இருக்கிறது.கீழே பாருங்கள்
ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.100 கோடி அபராதம் கர்நாடக கருவூலத்துக்கு போகுமாம்
இது தலைப்பு
ஆனால் கீழே செய்தியை பாருங்கள்.
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லாததால் அவரது அபராதத் தொகை எந்த அரசின் கருவூலத்துக்குச் செல்லும் என்பது கேள்வி குறியாக உள்ளது.
கடந்த 1991- 96 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக அன்றைய மதிப்பில் ரூ.66 கோடியை தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த பெங்களூர் தனி நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும், ரூ.100 கோடி அபராதம் விதித்தது. அதேபோல் அவருக்கு உடந்தையாக இருந்த தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதத்தையும் விதித்தது.
Source: tamil.oneindia.com தலைப்பில் உள்ள கருத்து செய்தியில் இல்லை
இப்படி ஊடகங்களே புதுப்பிரச்சினையை கிளப்புவது மாதிரி செய்திகளுக்கு தலைப்பிடுகின்றன.
இது போல்தான் அந்த நாட்களில் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த மாதிரி மலையாள மனோரமா என்ற பத்திரிக்கை தேவை இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் முல்லை பெரியார் அணை பலகீனமாக உள்ளது என்று ஒரு கட்டுரையை வெளியிட்டு இடுக்கி பகுதியில் பெரும் பீதியை உண்டாக்கியாது.விளைவு இன்று நாம் அந்த அணையையே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்
அன்று டாக்டர் ஷிவாகா மற்றும் போல்ஷ்விக்கர்களின் எழுச்சியினால் ரஷ்யா ஜார் மன்னர்களின் அராஜகத்திலிருந்து விடுபட்டது.
பதினாறாம் லூயியின் அதிகார துஷ்பிரயோகம் பிரஞ்சு புரட்சியாக வெடித்து பிரான்ஸ் காப்பாற்றப்பட்டது.
ஒரு தொழிற் புரட்சி பிரிட்டனை தலை நிமிர்த்தியது
இது போல தமிழகமும் ஒரு புரட்சியை அதுவும் ஒட்டுமொத்த அரசியல் அநாகரீகத்திற்கு எதிராக ஒரு கிளர்ச்சியை சந்திக்காதவரை இது நரகத்தை நோக்கித்தான் போய்க்கொண்டு இருக்கிறது.இது திண்ணம.
ஆனால் அந்தோ இங்குள்ள படித்தவர்களும் மாணவர்களும் கூட அரசியல் சூதாட்டத்தில் பகடைகளாகி அர்த்தமற்ற ஜல்லிக்கட்டு புரட்சியையும் இந்தி எதிர்ப்பு என்றோரு கிளர்ச்சியையும் நடத்திக்கொண்டு தங்களையும் தங்கள் சந்ததிகளையும் பெரும் நஷ்டத்த்திற்கு ஆளாக்கி விட்டார்களே.
இனி தமிழகம் எந்த அரசியல் கட்சியையும் நம்பி பலனில்லை .மாற்றம் மாற்றம் என்று கூறி இரு திமுகவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்டு எந்த நன்மையையும் எதிர்பார்க்க முடியாது.மற்ற கட்சிகளும் அப்படித்தான் என்ன செய்வீர்கள்
ஒரு நல்ல புரட்சிக்கு தயாராகுங்கள் ஒரு நல்லவனை தேடி கண்டுபிடித்து சுயேட்சையாக அவரை ஆட்சியில் அமர்த்துங்கள்
இல்லை என்றால் தலையில் ஒரு துண்டும் கையில் திருவோடும் ஏந்திக்கொண்டு தமிழகத்தை ஆந்திரா கேரளா கர்நாடகா என்று பிய்த்து கொடுத்துவிட்டு எல்லோரும் காசி யாத்திரை போய் கங்கையில் விழுங்கள்.