வியாழன், 8 நவம்பர், 2018

மருந்தே விஷம்-4

விஷமாகும் மருந்துகள்-ஸ்டிராய்டு அல்லாத வாத மற்றும் எரிவு மருந்துகள் 

இந்த வகை மருந்துகளை மருத்துவர்கள் NSAIDs (NON STEROIDAL ANTI INFLAMMATORY DRUGS ) என்று ஆங்கிலத்தில் டெக்னீக்கல் ஆக கூறுவார்கள் 
காரணம் பொதுவாக எரிவுகளுக்கு (INFLAMMATIONS) ஸ்டிராய்டுகளே பொருத்தமான மருந்துகளானாலும் அது ஒத்து கொள்ளாதவர்களுக்கு பகரமாக இந்த வகை மருந்துகளை தருவார்கள் 
இவை IBUPROFEN (BRUFEN),NAPROXEN(PROXEN),KETOPOPROFEN (KETOFEN)INDO METHACIN  (இண்டோஸிட் ),DICLOFENAC (VOLTAREN),ACECLOFENAC (ACEBLAC),PIROXICAM (FELDENE )இப்படி ஒரு பட்டியல் நீண்டு கொண்டே போகும் 
உண்மையில் ஆஸ்பிரினும்,பாராசிட்டமாலும் இவ்வகையை சேர்ந்தவைதான் எனினும் நாம் அவற்றை சில காரணங்களுக்காக தனித்தனியாக பிரித்து விட்டோம்.
மேல் சொன்ன மருந்துகள் அனைத்துமே அபாயகரமானவை
எப்போதாவது ஒரு முறை எடுத்துக்கொண்டால் பரவாயில்லை
ஆனால் அடிக்கடி அல்லது தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது கண்டிப்பாக டாக்டரின் மேற்பார்வை அவசியம்
சைக்ளோ ஆக்சிஜனேஸ் -1,மற்றும் -2 என்று இரு வகை என்சய்ம்கள் நம் உடலுக்குள் இருக்கின்றன .
இவற்றை COX-1, COX-2 என்பர்
இவை இரண்டுமே ப்ராஸ்டாகிளான்டின் மற்றும் ப்ரோஸ்டாசைக்ளின் போன்ற உடல் இயக்கு புரதங்களை சுரக்க வகை செய்கின்றன
அராக்கிடோனிக் அமிலம் என்றோரு ஒமேகா -3 கொழுப்பு அமிலத்திலிருந்துதான் ப்ரோஸ்டாக்ளான்டின் உற்பத்தி ஆகிறது இதற்கு டெக்கனிகலாக Ecosa Tetranoic Acid என்பார்கள்

இவ்வகை ஒமேகா -3 கொழுப்பு அமிலம் மிருக வகைகளில் மனித உடலில் மட்டும்தான் சுரக்கிறது என்பது தனிச்சிறப்பு இந்த அமிலம்தான் ப்ரோஸ்டாக்க்ளான்டின் உற்பத்தியின் மூலப்பொருள்
இப்போது பாராசிட்டமால் -ஐ தவிர்த்து மேலே கூறப்பட்ட அனைத்து  வலிநிவாரணிகளும் இந்த COX-1 ,COX-2 என்சைம்களை முடக்கி ப்ரோஸ்டாக்ளான்டின் சுரப்பை நிறுத்துகின்றன
COX-1 மூலம் சுரக்கப்படும் ப்ரோஸ்டாக்ளான்டின் நிரந்தரமானது இது நம் உடல் சீராக இயங்குவதற்கு துணை புரிகிறது.மேலும் வயிற்றின் உட்புற சுவர் அமிலத்தினால் அரிக்கப்படாமல் காக்கும் ஒருவித பிசுபிசுப்பான மியூகஸ் திரவம் சுரப்பதற்கும் சிறுநீரகம் கல்லீரல் போன்ற  முக்கிய உறுப்புகள் சீராக இயங்குவதற்கும் இந்த COX-1 மூலம் சுரக்கப்படும் புரோஸ்டாக்ளான்டினே காரணம் ஆகும்
ஆனால் COX-2 மூலம் சுரக்கப்படும் ப்ரோஸ்டாக்ளான்டின் உடலில் ஏதேனும் ஒரு பகுதி பாதிப்புக்கு ஆளாகும்போது உடல் அந்த பாதிப்பை வேதனை எரிவு ஒவ்வாமை போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்த இந்த ப்ரோஸ்டாக்ளான்டின்  உதவு கிறது.அதோடு இந்த COX-2 என்ஜைமும் பாதிப்பு நேரங்களில் மட்டுமே இயங்குகிறது
ஆனால் மேலே கூறப்பட்ட  இந்த வலி நிவாரணிகள் அனைத்தும் COX-1,மற்றும் COX-2 ஆகிய இரண்டு என்சய்ம்களையும் முடக்குவதால் வலியும் வாதமும் குணமானாலும் இவை வயிற்றின் உட்சுவற்றையும் சிறுநீரகம் கல்லீரல் மண்ணீரல்  போன்ற முக்கிய உறுப்புகளையும் பாதுகாப்பற்றவையாக்கிவிடுகின்றன காரணம் அவற்றை பாதுகாக்கும் COX-1 என்சய்மும் முடங்குவதால்.
COX-1 என்சைமை முடக்காமல் COX-2 என்சைமை மட்டும் முடக்க கூடிய வலி நிவாரணிகளை நாம் பின்னால் பார்க்க இருக்கிறோம்
இந்த வலி மருந்துகளில் புரூபென் சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த வலிமருந்து ஆகும் இதன் அதிக பட்ச டோஸ் அளவு ஒரு நாளைக்கு 2400 மிகி -3200 மிகி ஆகும் இப்பொது புரூபன்  200 மிகி -800மிகி வரை மாத்திரைகளாக கிடைக்கிறது
இதை இதய நோயாளிகள்,கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மிக கவனமாக டாக்டரின் ஆலோசனையின் பேரில் கையாள வேண்டும்
இந்த மருந்துகளை ஆல்கஹாலுடன் சாப்பிடக்கூடாது சாப்பிட்டால் ஈரல் சிறுநீரகம் ஆகியவை பாதிப்புக்கு ஆளாகும்
வயிற்றில் இரத்த கசிவு அல்லது இரத்த போக்கு உண்டாக்குவதில் INDOMETHACIN DICLOFENAC ,மற்றும் ACECLOFENAC  ஆகியவை மிகவும் தீவிரமானவை
கீழேயுள்ள ஒரு சிறு பட்டியலில் சிலவற்றின் அதிக பட்ச டோஸ்களை பதிந்துள்ளேன்
DICLOFENAC டோஸ் அளவு        75 மிகி முதல்      150 மிகி வரை
INDOMETHACIN டோஸ் அளவு 50 மிகி  முதல்      150 மிகி வரை
IBUPROFEN டோஸ் அளவு          1200 மிகி முதல்  1800 மிகி வரை
NAPROXEN  டோஸ் அளவு          500 மிகி முதல்    1000 மிகி  வரை
PIROXICAM  டோஸ் அளவு          10 மிகி  முதல்     20 மிகி    வரை
மேலே குறிப்பிட்ட டோஸ் அளவு அனைத்தும் பெரியவர்களுக்கானதாகும்
10 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு டாக்டர்கள்தான் சிபாரிசு செய்யவேண்டும்
மேலே குறிப்பிட்ட டோஸ் அளவுகள் அனைத்தும் வெறும் கோட்பாட்டு அளவுகள்தான்
நடைமுறையில் இந்த அளவுகள் நோயாளிகளின் உடலமைப்புகளுக்கு மற்றும் தேவைக்கு ஏற்ப மாறும் அனாலும் மேல் குறிப்பிட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும்
டாக்டரின் சிபாரிசு இல்லாமல் எப்போதாவது சாப்பிடுபவர்கள் எப்போதும் குறைந்த பட்ச டோஸ்களையே எடுக்க வேண்டும்
இந்த மருந்துகள் அனைத்தும் கவனமாக கையாளப்படவேண்டும்
இவற்றை தவறான  முறையில் பயன்படுத்தினால் அது கொலை அல்லது தற்கொலைக்கு சமம்
இவை அனைத்துமே கல்லீரல்,,இதயம் சிறுநீரகம் வயிறு ஆகியவற்றை பாதிக்க கூடியவை
பெரும்பாலும் இவை வெறும் வயிற்றில் நன்றாக பலன் கொடுக்கும் ஆயினும் வயிற்றுக்கு கெடுதல் செய்யும்
எனவே இவற்றை சாப்பிட ஒரு பத்து நிமிடங்களுக்கு முன் எடுத்துக்கொண்டு நிறைய நீர் அருந்த வேண்டும் கூடவே ஒன்றிரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிடலாம்
பத்து நிமிடங்களில் நன்றாக ஆகாரம் எடுத்து கொள்ளலாம்

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...