காவிரியும் அரசியலும்
ஒரு நேர்மையான அரசாங்கத்தை அவர் உருவாக்கினார்.அவரை தொடர்ந்து வந்த ஹஜ்ரத் அபூபக்கர்(இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான்),ஹஜ்ரத் உமர் (இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான் )ஹஜ்ரத் உஸ்மான் (இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான்),ஹஜ்ரத் அலி (இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான்)ஆகிய நான்கு கலீபாக்களும் நெறி பிறழாத நல்லாட்சியை மக்களுக்கு வழங்கினார்கள்.ஜாதி மத வேறுபாடின்றி எல்லோரும் நல்லாட்சியை அனுபவித்தார்கள்
மக்களின் உயிர் உடைமைகள் பாதுகாக்கப்பட்டன
அவர்களது உரிமைகள் மதிக்கப்பட்டன
குறிப்பாக பெண்களின் உரிமைகள் பேணப்பட்டு அவர்கள் அச்சமின்றி வாழ்வது உறுதி செய்யப்பட்டது
இவர்களது ஆட்சியை நமது தேச பிதா காந்திஜி அவர்களே சிலாகித்தார்கள்
கலீபா உமரின் ஆட்சி போன்று ஒரு ஆட்சி இந்தியாவில் மலர வேண்டும் என்று அவர் விரும்பினார்
ஆனால் அவரது விருப்பம் நிறைவேறியதா?
அந்த மனிதருள் மாணிக்கம் அற்பத்தனமாக கொல்லப்பட்டாரே அப்போதே அவர் விருப்பத்தோடு அவரையும் தீயிலிட்டு பொசுக்கிவிட்டார்கள்
இன்று பொசுங்கிய ஜநாயகம்தான் நம்மை கருவறுக்கிறது
இந்த ஜனநாயகத்தில் பெயரளவில்தான் ஜனங்கள் நாயகர்களாக இருக்கிறார்கள் மற்றபடி அமைச்சர்களுக்கும் அதிகார்வர்க்கத்திற்கும் பொறுப்பற்ற முறையில் அதிகாரங்களை வாரி இறைத்திருக்கிறது நமது அரசியல் நிர்ணய சட்டம்.இந்த அபத்த சட்டத்தை உண்டாக்குவதில் எப்படித்தான் அம்பேத்கார் போன்ற மேதைகளும் பங்கேற்றார்களோ தெரியவில்லை
மக்களுக்கு பாதுகாப்பு இல்லை அரசாங்கம் வரி என்ற பெயரில் மக்களை எப்படி எப்படியெல்லாமோ பயமுறுத்தி வகை வகையாக பிடுங்கிக்கொள்கிறது ஆனால் ஒவ்வொரு முறையும் நிதி பற்றாக்குறையையே காரணம் காட்டி மேலும் மேலும் கட்டண உயர்வு கூடுதல் வரி என்று மக்களை வதைக்கிறார்கள்.அரசே மக்களிடம் வியாபாரம் நடத்துகிறது கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள் அதை அதிகார வர்க்கம் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.பிறகு மீண்டும் கொள்ளை மீண்டும் பங்கீடு இப்படி தொடர்கதை இதற்கு பெயர் அரசியலா அல்லது சூதாட்டமா
மக்கள் நீதி மன்றங்களை நாடினால் பெரும் சம்பளங்களில் திளைத்துவீட்ட கோடீஸ்வர நீதிபதி கூட்டம் சாமானிய மக்களின் பிரச்சினைகளை பொருட்படுத்துவதே இல்லை தங்களின் பதவியிலும் பணத்திலும் குறியாக இருந்து அநியாயம் செய்யும் அரசிற்கு சார்பாகவே ஒன்று தீர்ப்பளிப்பார்கள் அல்லது கேஸை இழுத்தடித்தது நீர்த்து போக செய்துவிடுவார்கள்
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் மேல் மட்ட சிபாரிசுகள் இதில் சாமானியன் எப்படி வாழ்வது
நஷ்டப்பட்டவன் தன் உரிமைகளுக்காக காவல் நிலையத்தில் போய் காவல் தேடினால் அங்கும் ஊழல் பயமுறுத்தல்கள்கள்.என்ன செய்வது சரி தன் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தினால் ஒருபுறம் போராட்டம் நடத்துங்கள் என்று நம்மை தூண்டி விடும் நம் அரசியல் சட்டம் மறுபுறம் போலீசை தூண்டி விட்டு போங்கள் போய் தடியடி நடத்துங்கள் கண்ணீர்குண்டு வீசுங்கள் முடிந்தால் போலி என்கவுண்டர் மூலம் நாலு பேரை காவு வாங்குங்கள் என்கிறது இதுதான் ஜன நாயகமா.சரி மீண்டும் கோர்ட்டுக்கு போகவும் என்கிறார்கள் அங்கெ போனால் ஆயிரம் முறை அல்லது முடிவற்ற கேஸ் ஒத்திவைப்புகள்
உதாரணம் காவிரி பிரச்சினை பாபர் மஸ்ஜித் பிரச்சினை
நீதிமன்றங்களுக்கு நியாயம் எது அநியாயம் எது என்று அப்பட்டமாகவே தெரிந்தாலும் தீர்ப்புகளை தருவதில்லை காரணம் அநியாயக்கார அதிகாரவர்கத்திற்கு பயம்
காவிரி பிரச்சினையில் நியாயம் எது என்று நீதிபதிகளுக்கு தெரியும் ஆனாலும் அவர்கள் நியாயத்தின் பக்கம் தீர்ப்பு தர தயங்குகிறார்கள் காரணம் தரங்கெட்ட அரசியல்
பாபரி மஸ்ஜித் விவகாரத்திலும் அதே கதைதான்
ஒருவேளை நியாயமான தீர்ப்பு வந்தாலும் அதை பார்லிமென்டில் சட்டம் போட்டு தடுத்து விடுகிறார்கள்
இந்த கேடுகெட்ட அரசியல் தாக்கங்களினால் நீதிமன்றங்களில் குற்றவாளி தப்பிவிடுகிறான் நிரபராதி தண்டிக்கப்படுகிறான்
எனவே போலீசிடம் போகவும் பயமாக இருக்கிறது
நீதிமன்றங்களை நாடவும் தயக்கமாக இருக்கிறது
ஒரு நீதிபதி நியாயமாக நடக்க விரும்ப கூடாது என்பது எழுதப்படாத விதி
உதாரணம் சிபிஐ கோர்ட் நீதிபதி லோயாவின் மர்ம முடிவு
மாநிலத்தில் ஒரு கட்சி மத்தியில் வேறு கட்சி என்று ஆட்சி அமையும் பொழுது மாநிலத்தில் ஆளும் கட்சி மத்தியில் ஆளும் கட்சிக்கு மாநில உரிமைகளை தொலைத்து விட்டு ஜால்றா போடவேண்டும்.எங்கே தன் ஆட்சி கலைக்கப்பட்டுவிடுமோ தன் பதவி பறிபோய்விடுமோ என்று பயத்துடன் தன் மக்களின் உரிமைகளையும் மாநில நலனையும் மத்திய அரசுக்கு அடகுவைத்து விடவேண்டும்
நம்முடைய நீதி மன்றங்களும் எப்படி அரசியல் உள்நோக்குடன் செயல்படுகின்றன என்பதற்கு இந்த காவிரி நீர்பங்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்திருக்கும் இறுதி தீர்ப்பு ஒரு உதாரணம்.நீதி தேவனே மயங்கி விழும் அளவிற்கு ஒரு அபத்தமான மோசமான அநியாயமான ஒரவஞ்சனையான தீர்ப்பு இதை நான் ஒரு தமிழகத்த்தை சேர்ந்தவன் என்பதற்காக சொல்லவில்லை.தீர்ப்பளித்த நீதிபதிகள் எவரும்கூட தமிழகத்தை சேர்ந்தவர்களாக இல்லாமல் இருக்கட்டும்.ஆனால் தேசிய ஜனநாயக கண்ணோட்டத்தில் அவர்கள் இந்தியர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தமிழ் நாட்டையும் இந்தியாவின் ஒரு பகுதி என்ற ரீதியில் தீர்ப்பை தரவில்லை.பேசாமல் வெளிப்படையாகவே தமிழகம் காவிரியை ஒட்டுமொத்தமாக மறந்துவிடவேண்டும் என்று கூறி இருக்கலாம் ஏனென்றால் தீர்ப்பின் உள்நோக்கமே அதுதான்.ஆனால் ரொம்ப புத்திசாலித்தனமாக தமிழகத்திற்கு சில சாதகங்களை உண்டாக்கி இருப்பது மாதிரி தீர்ப்பில் ஒரு தோற்றத்தை உருவாக்கி ஏமாற்றி இருக்கிறார்கள்.
உதாரணமாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை ஏற்படுத்தி தரவேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை.இதை சுப்ரீம் கோர்ட் தன் தீர்ப்பில் ஏற்றுக்கொண்டு ஆறு வாரங்களுக்குள் (FEBRUARY 10 2018 இலிருந்து )அதை அமைக்கவேண்டும் என்று மத்திய அரசிற்கு கெடு விதித்து விட்டு மிக புத்திசாலித்தனமாக வாரியம்(BOARD) என்ற சரியான வார்த்தைக்கு பதில் திட்டம் (SCHEME )என்ற வார்த்தையை போட்டு குழப்பி நம்மை ஏய்த்து இருக்கிறார்கள்
இது மட்டுமல்ல காவிரி யாருக்கும் சொந்தமில்லை அது தேசிய சொத்து என்று தீர்ப்பில் சொல்லிவிட்டு ஏற்கனவே தீர்ப்பாயத்தில் தமிழகத்திற்கு தரப்பட்ட ஆண்டின் ஒட்டு மொத்த நீர் அளவான 192 TMC யிலிருந்து 14.5 TMCஐ
குறைத்து அதை கர்நாடகாவிற்கு வழங்கி தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இதற்கு அவர்கள் கூறியுள்ள காரணம் எந்த ஒரு உண்மை தேசியவாதியையும் கொதிப்படைய வைக்கும் அதாவது காவிரியின் தமிழக எல்லையில் சுமார் 20TMC நீர்வளம் இருப்பதை தீர்ப்பாயம் கணக்கில் கொள்ளவில்லை அதையும் நாம் கணக்கில் கொண்டால் அதுவும் இதுவும் tally ஆகிவிட்டது எனவே தமிழகம் அதில் 10 TMC வரை எடுத்துக்கொள்ளலாம் என்று காரணம் சொல்லி இருக்கிறார்கள் . ஆனால் ஒன்றை வசதியாக மறந்து விட்டார்கள்.வழக்கு கர்நாடகாவிலிருந்து எவ்வளவு நீர் தமிழகத்திற்கு வரவேண்டும் என்பதற்கு தானே தவிர தமிழகத்தின் நிலத்தடிநீர் பற்றியதல்ல அப்படியானால் கர்நாடக எல்லையிலும் நிலத்தடி நீர் இருக்குமே அதை ஏன் கணக்கில் கொள்ளவில்ல.
இந்த தீர்ப்பை கொஞ்சமும் சிந்திக்காமல் நாம் வரவேற்பது நம் தலையில் நாமே மலத்தை அள்ளி போட்டுக்கொள்வதற்கு சமம்
இதில் நமக்கு சாதகமாக எதுவுமே இல்லை .நம்மை ஏமாற்றிவிட்டார்கள்
இந்த தீர்ப்பின் ஒரே ஒரு அம்சத்தை அதாவது தமிழகத்திற்கு தரவேண்டிய நீரின் அளவை குறைப்பதைமட்டுமே கர்நாடகம் ஏற்றுக்கொள்ளும் இருந்தாலும் அதிலும் அவர்கள் குளறுபடி செய்வது தொடரும் அதற்கு மத்திய அரசும் துணை போகும.அதுதான் தேசியம் அதுதான் ஜனநாயகம் இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால் இப்படி ஒரு அநியாயம் நடக்கும் பட்சத்தில் பாதிக்கப்படக்கூடியது தமிழகம்தான் ஆனால் இதை எதிர்த்து எந்த கோர்ட்டிலும் மேல்முறையீடும் செய்ய முடியாது ஏனென்றால் தீர்ப்பில் அப்படித்தான் இருக்கிறது
அது மட்டுமல்ல 15 வருடம் வரை இந்த தீர்ப்பு அமலில் இருக்கும் அதுவரை தமிழகம் கருநாடகத்தையோ அல்லது மத்திய அரசையோ எதிர்த்து ஒரு மயிரையும் பிடுங்க முடியாது
சரி 15 வருடத்திற்கு பிறகு இந்த பிரச்சினையின் முடிவு என்ன ?தெரியாது தீர்ப்பில் எதுவும் சொல்லப்படவேயில்லை
ஆனால் 15 வருடங்களுக்கு பிறகு காவிரி தமிழகத்திற்கு தேவைப்படாது.அதை கர்நாடகமே முழுவதும் பயன்படுத்திக்கொள்ளட்டும்
ஏனென்றால் அதற்குள் தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதியில் பெட்ரோல் கிணறுகள்,எண்ணெய் குழாய் பாதிப்புகள்,ஹெலோஜன் திட்டம் நியூட்ரினோ திட்டம் என்று செயல்படுத்தி விவசாயத்தை பாழ்படுத்தி அந்த மண்ணை மலடாக்கி இனி காவிரிக்கு அங்கு அவசியம் இருக்காது என்ற நிலையை உருவாக்கிவிடுவோம் என்பது அந்த தீர்ப்பில் எழுதப்படாத வரிகள்
இது அப்பட்டமான பாசிசமா? அல்லது தேசியமா ?
இனி நம்மவர்கள் இதை எப்படி அணுகினார்கள் என்று பார்க்கவேண்டாம் ஏனென்றால் அது கன்றாவி மேலும் முடிந்து போன கதை.காவிரியை நமது மக்களின் மெத்தனமும் முன் சென்ற ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறைகளும்தான் இவ்வளவு பூதாகரமான பிரச்சினையாக ஆக்கிவைத்தது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை
இனி என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம்
வருகிற FEB 23 2018 ஆம் தேதி காவிரி சம்பந்தமாக ஒரு அணைத்து கட்சி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இது எந்த அளவு பயன்தரும் என்று தெரியவில்லை
காரணம் திமுகவும் அதிமுகவும் எக்காலத்திலும் மாநில நன்மையை கருதி ஒருத்தருக்கொருவர் மனம்விட்டு கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுமில்லை விட்டுக்கொடுத்ததுமில்லை
அதனால் அவர்கள் குறுகிய நோக்கில் பலனைந்திருப்பார்களே தவிர தொலை நோக்கில் அவர்கள் எந்த பலனும் அடைந்ததில்லை அதில் அவர்களுக்கு அறிவுமில்லை அக்கறையுமில்லை
தொலை நோக்கு நன்மை என்பது மாநில உரிமைகளுடன் தங்களையும் முன்னேற்றி கொள்வது இதை மற்ற மாநிலங்களில் செய்கிறார்கள்
ஆனால் இந்த அறிவுஜீவிகளோ மாநில உரிமை மாநில நலன் என்பதெல்லாம் பின்னே முதலில் நான் என் ஆட்சி பதவி சுகங்கள் எனக்கு மட்டுமுள்ள பொருளாதாரம் என் வீடு வாசல் இதற்காகத்தான் நான் அரசியலுக்கே வந்தேன் என்ற ரீதியில் செயல்பட்டு எல்லாவற்றையும் குட்டிச்சுவர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்
குட்டிச்சுவர்களுக்கு நடுவே என்ன செல்வசுகங்களில் மிதந்தாலும் அது உண்மையில் சுகம் அல்ல என்ற அறிவு கூட இங்கு ஆள்பவர்களிடம் இல்லை
அமெரிக்காவை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டு அதை ஆள்பவர்கள் மட்டும் தனித்தீவாக சுகப்படமுடியுமா.முடியாது எனவே அவர்கள் தன் நலனுடன் நாட்டு நலனையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.இதுதான் உலகின் எல்லா பகுதிகளிலும் ஏன் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கூட இப்படித்தான்.
பக்கத்திலிருக்கும் கேரளாவை பாப்போம்
அவர்கள் கூறுகிறார்கள் நாங்கள் சினிமா தியேட்டர்களில் போய் முதல்வர்களை தேர்ந்தெடுக்கமாட்டோம் என்று எவ்வளவு எதார்த்தம் அவர்கள் சினிமாவை சினிமாவாகத்தான் பார்ப்பார்கள் அதில்வரும் ஹீரோக்களை ஹீரோ வொர்ஷிப் பண்ணுவதில்லை ஏனென்றால் மாநில நலன்
ஆந்திராவை பாருங்கள் ஒரு ஐந்து வருடம்தான் நடிகர் NTR இடம் ஆட்சியை தந்தார்கள் அதன் பிறகு கழட்டி விட்டார்கள் காரணம் மாநில நலன்
கர்நாடகாவை பாருங்கள் அங்கு ராஜ்குமார் இருந்தவரை அவர்தான் பெரிய ஹீரோ அதற்காக அவரை முதல்வராக்கினார்களா இல்லை காரணம் அதனால் மாநிலத்திற்கு என்ன நன்மை என்ற தொலை நோக்கு
சினிமா என்பது பொழுதுபோக்கு
ஆனால் அரசியல் நம் வாழ்வாதாரம்
அதில் சினிமா என்ற மாயையை புகுத்தலாமா கூடாது
ஆனால் அதில் நாம் தவறு செய்தோம் அதை அனுபவிக்கிறோம்
இப்போது இந்த சர்வகட்சி கூட்டத்தில் திமுக ஒத்துபோனாலும் அதிமுக ஒத்து வருமா என்பது சந்தேகம்தான்.
இந்த சந்தேகத்தையும்தாண்டி எல்லோரும் ஒத்த கருத்துக்கு வந்தால் அது நன்மைதான் ஆனால் அது அதிசயம்
முதலில் கூட்டம் தொடங்கும் முன் முதல்வர் பழனிசாமி ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் மற்ற கட்சிகள் அதிருப்தி அடைவது மாதிரி எந்த ஒரு கருத்தையும் தான்தோன்றித்தனமாக அவர் திணிக்க முயலக்கூடாது.ஒரு புத்திசாலி முதலில் மற்றவர்களை பேசவிட்டுதான் தான் பேசுவான் என்பது நினைவிருக்கட்டும்.திரு பழனிசாமி ஆட்சிக்கு முதல்வராக இருக்கலாம் ஆனாலும் மந்திரிதான் மன்னரல்ல என்பது கவனமிருக்கட்டும்
அத்தனை கட்சிகளும் தங்கள் உள்கருத்து வேறுபாடுகளை களைந்து மாநில நன்மை ஒன்றையே பிரதானமாக கொண்டு நல்ல முறையில் ஆலோசித்து ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம்