வெற்று சிறுநீரிழிவு டயாபடீஸ் இன்சிபிடஸ்
நீரிழிவு என்றாலே நமக்கெல்லாம் பெரும்பாலும் தெரிந்தது சர்க்கரை நீரிழிவு நோய் பற்றித்தான்
ஆனால் நாம் இங்கே பார்க்கப்போவது அதற்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு நீரிழிவு நோய் ஆகும்
இதில் வெறும் நீர்சத்து மட்டுமே சிறு நீரில் வெளியேறிக்கொண்டு இருக்கும்
எப்படி இன்சுலின் குறைபாடு சர்க்கரை நீரிழிவிற்கு காரணமோ அது மாதிரி இந்த நீரிழிவிற்கு வாஸோப்ரஸின் (Vasopressin ) எனப்படும் ஹார்மோன் குறைபாடே காரணமாகும்
நம் சிறுநீரகம் சிறுநீர் உற்பத்தியாகி வெளியேறும் நிலையில் கிட்டத்தட்ட 90% நீர்ச்சத்தை மீண்டும் உறிஞ்சி ரத்தத்தில் சேர்த்துவிடும் இதற்கு காரணம் நம் மூளைதான்
நம் உடலின் நீர்ச்சத்தை சமன்பாட்டுடன் நிர்வகிப்பதில் மூளைக்கு பெரும்பங்கு உண்டு இல்லை என்றால் நம் உடல் நீர்ச்சத்து முழுவதும் வெளியேறி மரணம் சம்பவித்துவிடும்
மூளை இதை எப்படி செய்கிறது என்பதை சுருக்கமாக பாப்போம்
நம் மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போ தலாமஸ் என்ற ஒரு சுரப்பி இருக்கிறது.இதில் இருந்துதான் வாஸோப்ரஸின் (Vasopressin) என்றோரு ஹார்மோன் உற்பத்தியாகிறது இதற்கு ஆன்டி டையூரட்டிக் ஹார்மோன் (Anti Diuretic Hormone) என்றும் சுருக்கமாக A.D.H. என்றும் கூறுவார்கள் .இது இரத்தத்தில் நீர்ச்சத்தை அதிகரித்து இரத்த அழுத்தம் குறையாமல் பார்த்துக்கொள்ளும் அதனால்தான்தான் இதற்கு வாஸோப்ரஸின் என்று பெயர்.
இந்த ஹார்மோன் ஹைபோதலாமஸில் உற்பத்தியாகி கீழ்நிலை பிட்யூட்டரியில் (Posterior Pituitary) சேகரிக்கப்பட்டு மூளையின் தூண்டுதலால் அங்கிருந்து வெளியாகி சிறுநீரகத்திற்கு நீரை திரும்ப உறிஞ்சும்படி கட்டளை இடுகிறது.
இந்த அமைப்பில் கோளாறு ஏற்படும் பட்சத்தில் Diabetes Insipidus எனப்படும் வெற்று சிறுநீரிழிவு என்ற கொடிய நிலை ஏற்படும்.
வெற்று சிறுநீரிழிவு என்ற இந்த நோய் மிகவும் அரியது என்றாலும் இது மிகவும் ஆபத்தானது ஆகும் .
இந்த நோய் ஆரம்பநிலையில் பெரும்பாலும் எந்தவித அறிகுறிகளையும் காட்டாது.எல்லாம் நார்மலாகவே இருக்கும் பிறகு நாட்பட நாட்பட அடிக்கடி சிறு நீர் கழிவதும் கடுமையான தாகம் களைப்பு என்று படிப்படியாக இதன் அறிகுறிகள் ஆரம்பமாகும்.நோய் முற்றிய நிலையில் இது ஆளை படுக்கையில் முடக்கிவிடும்.குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை சிறுநீர் பிரியும்
லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்தாலும் தாகம் தீராது.உடலிலிருந்து வெறும் நீர் மட்டும் வெளியேறுவதால் நீரில் கரையக்கூடிய தாதுக்கள் குறிப்பாக சோடியம் உடலிலேயே தங்கி சோடியம் மிகைப்பாட்டின் தாக்கங்களை உண்டாக்கும்
இந்த நோய் ஆரம்பநிலையில் பெரும்பாலும் எந்தவித அறிகுறிகளையும் காட்டாது.எல்லாம் நார்மலாகவே இருக்கும் பிறகு நாட்பட நாட்பட அடிக்கடி சிறு நீர் கழிவதும் கடுமையான தாகம் களைப்பு என்று படிப்படியாக இதன் அறிகுறிகள் ஆரம்பமாகும்.நோய் முற்றிய நிலையில் இது ஆளை படுக்கையில் முடக்கிவிடும்.குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை சிறுநீர் பிரியும்
லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்தாலும் தாகம் தீராது.உடலிலிருந்து வெறும் நீர் மட்டும் வெளியேறுவதால் நீரில் கரையக்கூடிய தாதுக்கள் குறிப்பாக சோடியம் உடலிலேயே தங்கி சோடியம் மிகைப்பாட்டின் தாக்கங்களை உண்டாக்கும்
நோய் வகைகளும் காரணிகளும் :-
A .மத்திய நரம்பு மண்டல வெற்று நீரிழிவு (CENTRAL DI ):-இது பிட்யூட்டரியிலிருந்து அதாவது மூளையிலிருந்து வாஸோப்ரஸின் சரியாக சுரக்காமல் இருப்பது.இதற்கு கீழ்கண்ட காரணிகளை வகைப்படுத்தலாம்.
1.தலையில் அடிபடுதல் இதனால் ஹைப்போதலாமஸ் பிட்யூட்டரி போன்ற உறுப்புகள் சேதமடைதல்
2.மரபு அணுக்கள் கோளாறு
3.தலை மற்றும் மூளைப்பகுதியில் ஏற்படும் புற்று நோய் கட்டிகள்
4.தலையில் அறுவைசிகிச்சை
B .சிறுநீரக கோளாறு (NEPHROGENIC DI):-இந்தவகையில் மூளையிலிருந்து வாஸோப்ரஸின் மூலம் மூளை கட்டளை இட்டாலும் சிறுநீரகம் அதை பொருட்படுத்தாமல் இருப்பது.
இதற்கு காரணம் ,
1.சிறுநீரக கோளாறு
2.சிறுநீரக கற்கள்
3.உயர் இரத்த அழுத்தம் (High B.P.)
4.தாழ்வுநிலை இரத்த அழுத்தம் (Low B.P.)
5.சர்க்கரை நோய் (Hyperglycemia)
C.அதிக நீர்ச்சத்து எடுப்பதால் வருவது (Dipsogenic DI):-இந்த வகை நீரிழிவு மிகவும் அலாதியானது இதில் வாஸோப்ரஸின் சுரப்பு ஒழுங்காகவே இருக்கும்.சிறுநீரகத்தில் குறிப்பிட்டு எந்த பாதிப்பும் இருக்காது இருப்பினும் சிறுநீரகம் மூளையின் கட்டளையை புறக்கணிக்கும் இதற்கு காரணம் தேவையில்லாமல் நீண்ட காலங்களுக்கு அளவு மீறி நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்வது அதிலும் குறிப்பாக மது பானங்கள் குளிர் பானங்கள் என்று ப்ரீயாக கிடைக்கிறதே என்று சகட்டு மேனிக்கு பீப்பாய் பீப்பாயாக வயிற்றுக்குள் பானங்களை பாய்ச்சுவது இதனால் சிறுநீரகம் பாதிப்படைவதோடு இதுமாதிரி வெற்று நீரிழிவிற்கும் வழிவகுக்கும் அதனால் உண்ணுங்கள் அளவோடு பருகுங்கள் அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சு
D.கர்ப்பகால DI (GESTAGENIC DI):-
இந்த வகை நோய் கர்ப்ப காலத்தில் மட்டும் இருக்கும் பிரசவத்திற்கு பிறகு தானாகவே நோய் நீங்கிவிடும் ஆனால் மீண்டும் அடுத்த கர்ப்ப காலத்தில் வரலாம் இது அவ்வளவு கடுமையாக இருக்காது.
நோய் அறிகுறிகள் (பொது)
1.ஒருநாளைக்கு மூன்று லிட்டர் வரை வெறும் தண்ணீரே சிறுநீராக வெளியேறும் அதில் நிறம் மணம் சுவை இருக்காது
2.அடிக்கடி கட்டுப்பாடில்லாமல் சிறுநீர் வெளியேறும்
3.அடங்காத தாகம்
4.வாய் வறட்சி
5.களைப்பு பலஹீனம்
6.தாழ்வுநிலை ரத்த அழுத்தம் (Low Pressure) மற்றும் இதயம் செயலிழப்பு(Heart Failure)
7.தோல் வறட்சி
8.மலச்சிக்கல்
பரிசோதனைகள் :-
1.சிறுநீர் பரிசோதனை
2.ரத்தத்தில் சோடியம் அளவு
3.ADH பரிசோதனை (இரத்தத்தில் )
சிகிச்சைகள் :-
இந்த நோய்க்கு நிவாரணம் இல்லை ஆனாலும் கீழ்கண்ட சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்
1.Desmopressin
2.Vasopressin
மேலே கண்ட மருந்துகள் மூக்கில் உறியக் கூடிய ஸ்ப்ரே ஆக கிடைக்கின்றன
மருத்துவ மேற்பார்வையில் அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்