செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

VACCINATION-முக்கிய குறிப்புகள்

தடுப்பூசி -ஆபத்தானதா 


இப்போது சமூக வலைத்தளங்களில் தடுப்பூசி போடாதீர்கள் அவை ஆபத்தானவை அவை மேல்நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று பல தெளிவற்ற புள்ளிவிவரங்களுடன் ஒரு எச்சரிக்கை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
இது பற்றி நாம் இங்கு சில கருத்துக்களை பார்ப்போம்.
முதலாவது தடுப்பூசிகள் (Vaccination )என்றால் என்ன,அவை எப்படி தயாராகிறது அவற்றில் என்ன இருக்கிறது அவை எந்த நோக்கத்திற்காக தரப்படுகிறது என்று பார்ப்போம்.
அதற்கு முன் தொற்று  வியாதிகளை பற்றி ஒரு சிறு விளக்கத்தை காண்போம்.
நாம் சுவாசிக்கும் காற்றில்,அருந்தும் நீர்பானங்களில்,சுகாதாரமற்ற சூழ்நிலைகள் சரியாக சமைக்கப்படாத அல்லது வேக வைக்கப்படாத உணவு வகைகளில் இவை எல்லாவற்றிலுமே கண்ணுக்கு தெரியாத நுண் உயிரிகள் இருக்கின்றன.
இவை நம் உடம்புக்குள் செல்லும்போது நம் உடம்பு இறைவன் இயற்கையாகவே அதற்க்கு அளித்திருக்கின்ற சில பாதுகாப்பு (IMMUNITY)அம்சங்களை கொண்டு தன்னை பாதுகாத்து கொள்கிறது.இதற்கு குடல் வால் எனப்படும் Appendix கூட துணை புரிவதாக இப்போது கண்டு பிடித்து இருக்கிறார்கள்.குடல் வாலுக்குள் பொதிந்துள்ள சில நல்ல நுண்ணியிரிகள் நம் உடம்பின் நோய்  எதிர்ப்பு  சக்திக்கு வலு ஊட்டுவதாக சமீபத்திய ஓர் ஆய்வு சொல்கிறது.
நோய் கிருமிகளின் விஷத்தன்மை சிலவற்றில் அதன் வெளிப்பகுதியில் சிலவற்றில் அதன் உட்பகுதியில் இருக்கிறது இதற்கு முறையே Exotoxin மற்றும் Endotoxin என்பர்.
பெரும்பாலும் Exotoxin கள் பாக்டீரியாவால் உயிருடன் இருக்கும்போதும் அல்லது இறந்த பிறகும் சுரக்கப்படுபவை.உதாரணம் Clostridium Botulinum என்ற கிருமியால் சுரக்கப்படும் Botulinum toxin,
Corynebacterium Diphtherea வினால் சுரக்கப்படும் கொடிய நோயான டிப்தீரியா விஷம்,மற்றும் 
Clostridium Tetany யினால் சுரக்கப்படும் டெட்டனஸ் விஷம் 
ஆகியவை Exotoxin களுக்கு உதாரணங்கள் ஆகும.இந்த Exotoxin ஐ வெளி விஷம் என்று சொல்லலாம்.இவை கிருமி உடம்பினுள் சென்றவுடன் சுர க்கப்பட்டு விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை 
இன்னொரு வகை உள் விஷம் என்ற Endotoxin கள் ஆகும்.இவை கிருமி உடம்பினுள் சென்ற வுடன் எந்த பாதிப்பும் தராது.ஆனால் கிருமி அழியும் பொது இவை வெளிப்பட்டு கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.இவை சில கிருமிகளின் மேலேயே இருக்கும் எனவே கிருமி உயிருடன் இருக்கும் போதும் வெளிப்படும் இதற்க்கு உதாரணம் Neisseria மற்றும் Haemophilius வகை கிருமிகளாகும்.இந்த Endotoxin கள் வேதி இயலில் சர்க்கரை கொழுப்புகளுடன்(Lipopolysachcharide) இணைந்த O-antigen,களாகும்.
சரி இப்போது தடுப்பூசிக்கு வருவோம் தடுப்பூசிகளில் இருவகை உண்டு ஒன்று Vaccination மற்றது Antiserum .
Vaccination இல் நோய் கிருமிகள் வீரியம் குறைக்கப்பட்ட நிலையில் இருக்கும் இதை உடம்பில் செலுத்தும் போது நம் உடல் இதை வீரியமுள்ள கிருமியாகவே எண்ணி நோய் ஏற்படாமலே எதிர்ப்பு சக்தியை (Antibodies)உடனே ஏற்படுத்திவிடும்.
ஆனால் சிலருக்கு எதிர்ப்பு சக்தி ஏற்படுவதில் சில நாட்கள் தாமதம் ஏற்படலாம் அந்த நிலையில் அவருக்கு Vaccination அளிக்கப்பட்ட  நிலையிலேயே அவர் மீது உண்மையான நோய் கிருமி தாக்குதல் ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.இதற்காக மருத்துவ உலகம் இவருக்கு Vaccin உடன் Antiserum என்ற மற்றொரு மருந்தையும் கொடுப்பார்கள்.இந்த Antiserum அவருடைய இரத்தத்தில் வெளியிலிருந்து ஏற்படுத்தப்பட்ட எதிர்ப்புசக்தியை (Antibodies) நேரடியாகவே செலுத்தி அந்த மனிதரின் இரத்தம் சுயமாகவே எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் அந்த ஒரு சில நாட்கள் அவரை பாதுகாக்கும் 
முன்பெல்லாம் துருப்பிடித்த ஆணி குத்தி விட்டால் ATS ( Anti Tetanus Serum)என்று போடுவார்கள்.இது உடனடி எதிர்ப்பு சக்தியை இரத்தத்தில் நேரடியாக தரப்பட்டதாக இருந்தாலும் இதன் வீரியம் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் இப்போது Tetanus Toxoid (TT )என்ற Vaccination போடுகிறார்கள்.
இந்த Toxoid கிருமியின் விஷத்தை Formaldehyde(0.5 to 1%)உடனும் lysine (0.005 to 0.25M) உடனும் சேர்த்து சுமார் 24 டு 32 நாட்கள் (6 டு 8pH)  அமிலத்தன்மையில் incubate செய்து தயாரிக்கிறார்கள் .

எட்வார்ட் ஜென்னர் இதை முதன் முதலில் Cow Pox என்ற நோய் பீடித்த பசுவின் சீழில் இருந்து உண்டாக்கியதால் இதற்க்கு Vaccination என்று பெயரிட்டார்.Vacca என்றால் லத்தீன்  மொழியில் பசு.
அவர் காலத்தில் கொடிய நோயாக இருந்தது பெரியம்மை என்ற Small Pox .
ஆனால் இது பசுவிடம் நெருங்கி பால் கறப்பவர்களுக்கு வருவதில்லை.
இதை அவர் வியப்புடன் ஆராய்ந்தார்.இவர்களுக்கு சில நாட்கள் மட்டுமே தாக்கக்கூடிய ஆபத்து இல்லாத மிகவும் எளிய பசு அம்மை நோய் தாக்குவதால் இவர்களது உடம்பு கொடிய பெரியம்மையையே எதிர்க்கக்கூடிய சக்தியை  பெறுவதாக கண்டு பிடித்தார்.
இதை செயலாக்க பசுவின் சீழை தன் வீட்டு வேலையாள் மகனுக்கு செலுத்தினார்.அவனுக்கு அபாரமான பெரியம்மை எதிர்ப்பு சக்தி கிடைத்தது ஜென்னர் சிலரின் விமரிசனங்களுக்கும் ஆளானார்.
ஆனாலும் எட்வார்ட் ஜென்னருக்கு 1821 இல் PHYSICIAN EXTRAORDINARY என்ற பதவி KING GEORGE-IV இனால் தரப்பட்டது.
இருப்பினும் எட்வர்ட் ஜென்னரின் VACCINATION இன்று பல மாற்றங்களுடன் பாதுகாப்பானதாகவே இருக்கிறது.
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்தார்கள் என்பதற்காக அவர்கள் ஒட்டிய விமானத்தை இப்போது நாம் பயன்படுத்த முடியுமா?இப்போது விமானங்கள் புது புது மாற்றங்களுடன் பாதுகாப்பானதாகவே இருப்பது போல் VACCINATION உம் பாதுகாப்பானதாகவே இருக்கிறது.இருப்பினும் ஒரு சில அசம்பாவிதங்கள் நடப்பது உண்மைதான்.
எனவே தடுப்பு ஊசிகளை மிக கவனமாக நம்பிக்கைக்கு உரிய மருத்துவர் மூலம் எடுத்து கொள்ளுங்கள்.இலவசமாக தரப்படுகிறது என்ற நிலையில் கவனமாக இருங்கள்


 

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...