Seyed1951 பாகம் -1
அற்புதங்கள் ,கண் கட்டி வித்தைகள் இன்னும் சில நம்பமுடியாத சங்கதிகள் மூலம்தான் இன்று ஒருமனிதனை ஆண்டனின் அந்தஸ்த்திற்கு உயர்த்துகிறார்கள்.அந்த மனிதன் இறந்து விட்டால் உடனே அவனை பற்றி நம்பமுடியாத கட்டுக்கதைகளை எல்லாம்அவிழ்த்துவிட்டு மக்களை மதி மயக்குகிறார்கள்.மக்களும் பெரும்பாலோர் இந்த வழிகெட்ட ஆன்மீகத்திற்கே மயங்குகிறார்கள் காரணம் போலித்கனத்தில் இருக்கும்கவர்ச்சியும்,மனமயக்கமுமே காரணம்வெறும் அற்புதங்களினால் தான் ஒரு மனிதன் தெய்வ அந்தஸ்து பெறுகிறார் என்றால் ஊரிலுள்ள அத்தனை செப்பிடு வித்தைக்காரர்களும் கடவுள்களாகி விடுவார்கள்.இன்று மனிதனும் தெய்வமாகலாம் என்ற குழப்பமான சங்கராச்சாரியாரின் அத்வைத கோட்பாடு நம்ப முடியாத பல கட்டுக்கதைகளை எல்லாம் ஆன்மீகமாக்கிவிட்டது.புத்தர் அன்பே கடவுள் வேறு கடவுள் இல்லை என்று தனக்கு போதி மரத்தடியில் ஞானம் இறங்கியதாக கூறி அரண்மனையை துறந்து வெளியேறினார்.இந்துக்களில் வேத மதத்தில் விரக்தியடைந்த பெரும்பாலோர் அவர் பின்னே போனார்கள்.இதைக்கண்ட ஆதி சங்கரர் இங்கே வாருங்கள் தாய் மதத்திற்கு வாருங்கள் இங்கே வந்தால் எல்லோரும் கடவுளாகலாம்.அவதார புருஷர்களாகலாம் என்று வேத மதத்திற்கு முரணான அத்வைதக்கோட்பாட்டை புகுத்தி உண்மையான இறைவனை மறை பொருளாக்கினார்
இதனால் மக்கள் அற்புதங்களில் மனமயக்கம் அடைந்தனர்.வேதங்கள் இறைவனின் சூத்திரங்கள் மறக்கப்பட்டு மனிதனின் கற்பனைக்கு தோன்றியதை எல்லாம் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் சிலர் எழுதித்தள்ளி மக்களை நம்பவைத்து மடமைக்கு ஆளாக்கினர்.இந்த மடமை இந்தியாவில் இந்துக்களை மட்டுமல்ல உலகிலுள்ள பெரும்பான்மை மதத்தவரான கிறித்துவ முஸ்லிம் யூதம் என்று அத்தனை பேரிடத்திலும் வைரஸ் ஆக பரவி விட்டது.இன்று மூட நம்பிக்கையே மார்க்கமாகி விட்டது
இதை சாதகமாக்கிக்கொண்ட சில CULTS சாய் மதம்,மெய்வழி மதம் ,பஹாய் மதம் ,மனு ஜோதி மதம் இத்யாதி இத்யாதி மதங்கள் என்று உருவாக்கி மக்களை ஏய்க்க துவங்கினர்.
- ஆனால் வெறும் அர்த்தமற்ற அற்புதங்களைக்காட்டி மதங்களை பரப்புவதென்பது இறைத் தூதர்களின் செயல் அல்ல.இறைவன் அப்படி அவர்களுக்கு கட்டளை இடவும் இல்லை.எந்த ஒரு இறைத்தூதரும் மேடை போட்டு வித்தை காட்டி விபூதி வரவழைத்து தன்னை விளம்பரப்படுத்தி கொண்டதில்லை இறைத்தூது என்பது ஒரு பிரம்மாண்டமான பாரம் கொண்ட ஒரு பணி.மிகவும்கடினமான ஒரு வேலை.திருக்குர் ஆனில் பெயர் குறிப்பிட்டு சொல்லப்பட்ட சுமார் 25 இறைத்தூதர்களில் இராஜாக்களாக ஆண்ட புனித சாலமன் (நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம்),புனித ஜோசப் (நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம்),புனித டேவிட் (நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம்)இவர்களைத்தவிர மற்ற அத்தனை இறைத்தூதர்களும் தாங்கள் யாருக்கு தூதராக அனுப்பப்பட்டோமோ அந்த கோத்திரங்களில் உள்ள மேல்வர்க்கத்தினரால் கடும் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள் .புனித ஜகரிய்யா (நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம்) அவர் மகன் புனித யோவான் (நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம்) ஆகியோர் விரட்டி விரட்டி கொல்லப்பட்டார்கள்.பெரும்பாலும் இராஜாக்களான அந்த இறைத்தூதர்களைத்தவிர வேறு எவரும் பெரும் பணக்காரர்களாகவும் வாழ்ந்ததில்லை அதே சமயம் பஞ்சப்பிராரிகளாகவும் வாழ்ந்ததில்லை.வயிற்றுப்பிழைப்புக்கு அவர்கள் வியாபாரிகளாகவும் அல்லது தொழிலாளிகளாகவும் தான் வாழ்ந்தார்களே தவிர வெறும் வித்தைகள் காட்டி பிழைப்பு நடத்தவில்லை.
மேலும் இந்தப்பணிக்காக இறைவன் ஒரு மனிதரை எப்படி தேர்ந்தெடுக்கிறான் என்றால் சகிப்புத்தன்மை, மனோதைரியம், நேர்மை நாணயம், வீரம்,காருண்யம் ஆகிய குணங்களைக்கொண்ட நல்ல மனிதர்களில் ஒருவரைத்தான் தன் தூதராகத்தேர்ந்தேடுக்கிறான்.
புனிதநோவா (St.NOVA) இவரை திருக்குர் ஆனில் நபி நூஹ்(அலை ) என்று சொல்லப்படுகிறது.இவர் ஒரு மீனவ இனத்தை சேர்ந்தவர்.சிறு சிறு படகுகள்,தோணிகள்,மீன் வலை போன்றவை செய்வதில் விற்பன்னர். இவர் தன் ஆயிரம் வருட வாழ்நாளில் கிட்டத்தட்ட 950 வருடங்கள் இறைத்தூதராக பணியாற்றினார்.இவருக்கு வந்த இறைத்தூது."இறைவன் ஒருவனே.அவனை தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு உரியவர் அல்லர் .நான் நோவா அவனுடைய தூதனாக இருக்கின்றேன்" என்பதுதான் .இத்தனை வருட தூது பணி யிலும் மிக சொர்ப்பமானவர்களையே அவரால் ஏகத்துவத்திற்கு கொண்டு வர முடிந்தது.மிகவும் சிரமப்பட்டார் கொடுமைகளுக்கு ஆளானார் சொந்த குடும்பமே அவரை பரிகசித்தது.களைப்படைந்தார் சோர்வுற்றார்.இப்போது பொறுமை எல்லை மீறியது இறைவனிடம் பத்துவா செய்தார் அவர்களை அழித்து விடும்படி.அவரும் மனிதர்தானே. ஏக இறைவனின் சக்தியை கொஞ்சமும் லட்சியம் செய்யாத அந்த கேடு கெட்ட சமுதாயத்தை இறைவன் ஒரு பெரும் வெள்ளப் பெருக்கின் மூலம் அழிக்க எண்ணினான்.புனித நோவாவிடம் அவரும் அவரை நம்பியவர்களும் தப்பிப்பதற்காக ஒரு கப்பலை செய்ய உதவினான்.இறுதியாக புனித நோவா அவர்கள் எச்சரிக்கை விட்டார்கள்.அலட்சியப்படுத்தப்பட்டார்கள்.வானம் கிழிந்து பெரும் மழை இறங்கியது.பூம்யிலிருந்தும் வெள்ளம் சீறி கிளம்பியது மூன்று நாட்கள் இந்த பிரளயம் தொடர்ந்தது தன் மகனிடம் இப்போதாவது திருந்தி ஏக இறைவனின் வல்லமையை நம்பி வா வந்து கப்பலில் ஏறிக்கொள் என்றார்கள்.அவன் மமதையுடன் மறுத்தான் அழிந்தான்.இப்பெரும் அற்புதம் சரித்திரப்புகழ் பெற்றது.இது எதற்க்காக? நோவாவிற்கு விளம்பரம் தருவதற்காகவா? நோவா இதன் மூலம்தான் பிரபலம் அடைந்தாரா? உண்மையில் இந்த அற்புதத்திற்க்கும் நோவாவின் சக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சூழ்நிலையின் நெருக்கடியில் பொறுக்க முடியாமல் அவர் தவிக்கும்போது இறைவன்தான் இந்த அழிவை அந்த மக்களின் மீது தீர்மானிக்கிறான்.எந்த நிகழ்வும் இறைவனின் தீர்மனப்படியே அன்றி வேறு எவருடைய தீர்மானப்படியும் அரங்கேறுவதில்லை.
பைபிளில் புனித யோஹன்னா என்றொரு தீர்க்கதரிசி பற்றி சொல்லப்பட்டு உள்ளது.இவரின் பெயர் திருக்குர் ஆனில் நபி யூனுஸ்(அலை ) என்று கூறப்பட்டு உள்ளது .அந்த காலத்து மீடியா என்ற நாட்டின் தலைநகரான நினேவே என்ற நகருக்கு இறைத் தூதராக அனுப்பப்பட்டார் .பல ஆண்டுகள் ஏகத்துவ பிரச்சாரம் செய்தார் கடுமையாக உழைத்தார் எண்ணி சொற்ப ஆட்களே இவரை நம்பி வந்தனர் .கடும் எதிர்ப்பு.சிரமங்கள்.இன்னல்கள்.இறுதியில் பொறுமை இழந்தார் பத்துவா செய்தார்.இறைவா இவர்கள் திருந்த மாட்டார்கள் எனவே இவர்களை அழித்துவிடு என்று இறைவனிடம் பத்துவா செய்தார்.இறைவனும் அவரையும் அவரை நம்பிவந்தவர்களையும் அந்த ஊரைவிட்டு வெளியேறும் படி கூறினான் புனித யொஹன்னாவும் தன் நண்பர்களுடன் அந்த மக்களுக்கு இறுதி எச்சரிக்கை விட்டு விட்டு வெளியேறினார்.ஆனால் அந்த மக்கள் பின்னால் மனம் மாறி தவ்பா செய்தனர் .இறைவன் அவர்கள் தவ்பாவை ஏற்றுக்கொண்டான்.புனித யோஹன்னா ஒரு இறை தூதர் என்றாலும் இறைவன் அவரது பத்துவாவை நிராகரித்துவிட்டான்.அவர் பொறுமை இழந்தவராய் இறைவன் மீது கோபப்பட்டார்.ஏன்?தான் இறைத்தூதர் என்ற நிலையில் அந்த மக்களின் அழிவு பற்றி கூறிய தீர்க்கதரிசனம் நடக்காமல் போய்விட்டதே என்ற ஆதங்கம்தான்.பிறகு இறைவன் அவரை மீண்டும் நிநேவாவுக்கு திரும்பும்படி ஏவியும் அவர் அதற்கு மாறு செய்தவராய் ஜோப்பா என்ற இடத்திற்குப் போக கப்பலேறினார்.நடுக்கடலில் கடல் கொந்தளித்தது.கப்பல் மேலே போக முடியாமல் தடுமாறியது. அதன் மாலுமி கூரிய அறிவுள்ளவர்.இந்த கப்பலில் நம்முடன் பிரயாணம் செய்கின்ற நம்மில் யாரோ ஒருவர் தன் எஜமானுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர். அவர் யாராக இருந்தாலும் இக்கணமே அவர் இந்த கப்பலை விட்டு வெளியேறட்டும் இல்லை என்றால் கப்பல் மேலே போக முடியாது என்றார்.
மனசாட்சியின் உந்துதலால் புனித யொஹன்னா தானே அந்த துரோகி என வலிய வந்து ஒப்புக்கொண்டார் .இருப்பினும் சீட்டு குலுக்கி போட்டார்கள் அதிலும் அவர் பெயரே வந்தது கொந்தளிக்கும் கடலில் எறியப்பட்டார்.ஒரு பெரிய மீன் அவரை விழுங்கியது மீனின் இருண்ட வயிற்றுக்குள் சிக்கிய அவர் தன் தவறை உணர்ந்து "இறைவா உன்னை தவிர வணக்கத்திற்குரியவர் யாரும் இல்லை .நீ பரிசுத்தமானவன்.நானோ அநியாயக் காரர்களில் ஒருவனாகி விட்டேனே என்று மூன்று இரவுகள் மூன்று பகல்கள் பச்சாதாபத்துடன் கதறினார்.கருணையுள்ள இறைவன் அவர் தவ்பாவை ஏற்றுக்கொண்டான்.பத்திரமாக அவரை கரையேற்றினான் கண்ணியப்படுத்தினான் மீண்டும் அவர் நிநேவாவுக்கே சென்றார் .இதிலிருந்து என்ன தெரிகிறது எந்த நிகழ்வும் ஆண்டவன் விருப்பத்திற்குத்தான் நடக்கிறதே தவிர வேறு யாருடைய விருப்பத்தின் பேரிலும் அது நடப்பதில்லை
புனித சாலமன் என்று ஒரு ராஜா இருந்தார் இவரது பெயர் திருக்குரானில் நபி சுலைமான் (அலை) என்று சொல்லப்படும்.பெரும் பெரும் அற்புதங்களுக்கெல்லாம் சொந்தக்காரர் இவர்.இந்த தூதரின் தகப்பனார் புனித தாவீது ராஜாவும் ஒரு இறைத்தூதரே இது மட்டுமல்ல இவர் இறைவனிடம் கேட்ட பிரார்த்தனை இறைவா எனக்கு சில அற்புத அறிவுகளையும் ஆற்றலையும் கொடு என்பது.அதன்படியே இறைவன் இவருக்கு பிசாசுகளை(பூதகணங்கள் ) வசபடுத்திக்கொடுத்தான்.அரபு மொழியில் ஜின் என்றும் ஆங்கிலத்தில் demons என்றும் அழைக்கப்படும் இவை நெருப்பினால் படைக்கப்பட்டவை.அபார ஆற்றலுடையவை மனிதர்களை போன்றே ஆசாபாசங்களுக்கு உட்பட்டவை.இவற்றிற்கும் பிறப்பு இறப்பு ,பசி பாலுணர்ச்சி ஆகியவை உண்டு ஆண் பெண் என இருபாலர் உண்டு.இவற்றில் நல்லவையும் உண்டு கெட்டவையும் உண்டு அறிவீனம் கொண்டவை சாத்தான் இந்த இனத்தை சேர்ந்தவனே.இவை இறைவனால் புனித சாலமனுக்கு வசப்படுத்திக்கொடுக்கப்பட்டு இருந்தன அதே போல் காற்றை இறைவன் வசப்படுத்தி கொடுத்தான்.பறவைகள் மிருகங்கள் இவற்றின் மொழியை கற்றுக்கொடுத்தான்.மாயாஜால வித்தை செய்ய எல்லாவசதிகளும் புனித சாலமன் அவர்களுக்கு இருந்தது.ஆனால் அதை வைத்து அவர் வித்தை காட்டி தனக்கு பின்னே கூட்ட ம் சேர்த்தாரா பாபா வேஷம் போட்டாரா?புரியாத கோட்பாடுகளை கூறினாரா.நீ என்னுள் இறைவனைப்பார் நான் உன்னில் இறைவனை பார்க்கிறேன் இந்தா பிடி விபூதி இந்தா பிடி நெக்லஸ் என்று ஆகாயத்திலிருந்து பொருள் வரவழைத்து ,மந்திரத்தில் மாங்காய் பழுக்கவைத்து கவர்ச்சி காட்டினாரா.இல்லை இல்லவே இல்லை பின் என்ன செய்தார் ?தனக்கு தரப்பட்ட அமானுஷ்ய சக்திகளைக்கொண்டு அவர் ஏகத்துவ பிராச்சாரமே செய்தார் அதாவது "வணக்குத்திற்கு உரியவன் கடவுளையன்றி வேறு யாரும் இல்லை நான் சுலைமான் அவனது அடியானாகவும் தூதனாகவும் இருக்கிறேன்"என்பது .சூரியனை வணங்கிக்கொண்டிருந்த ஷீபா(ஏமன் ) நாட்டு அரசியின் சிம்மாசனத்தை பிசாசுகளை ஏவிவிட்டு நொடிப்பொழுதில் தன் இடத்திற்கு கொண்டு வந்து அவளை பிரமிக்கவைத்தார்.அவருக்கு வழங்கப்பட்ட ஆற்றலையும் ராஜாங்கத்தையும் கண்டு பிரமித்துப்போன அவள் தன் அகந்தையை விட்டொழித்து புனித சாலமன் போதித்த ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டாள் ஷீபா நாடே ஏகத்துவத்திர்க்குள் வந்தது.புனித சாலமன் இறுதியாக ஜெரூசலத்தில் இறை ஆலயம் ஒன்றை பிசாசுகளின் ஆற்றலை கொண்டு அவர்களை பணியாட்களாக ஏவி கட்டினார் கட்டிமுடிக்கும் தருவாயில் அவர் மரணம் அடைந்தார்.அவரது மரணத்திற்கு பின் பில்லி சூனியமும் வித்தைகளும் காட்டி பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த யூதர்கள் தங்கள் செயலை நியாயப்படுத்த புனித சாலமன் செய்ததைத்தான் நாங்கள் செய்கிறோம் எனவே இது பாபம் அல்ல என்று தங்கள் புராணங்க ளிலும் இதிகாசங்களிலும் புனித சாலமன் பற்றி பொய் கூறி மக்களை நம்பவைத்தனர்.ஆனால் இறைவன் திருக்குர் ஆனில் (2:102) இதை வன்மையாக மறுக்கிறான் 'சுலைமான் நிச்சயமாக நிராகரிப்பவராக இருக்கவில்லை அவர் சூனியம் வைப்பவராகவோ அல்லது மந்திரம் ஓதி வித்தை காட்டுபவராகவோ இருக்கவில்லை மாறாக அவர்மீது அவதூறு கூறும் அந்த சாத்தான்கள்தான் இக்கொடிய பாவத்தை செய்பவர்களாக இருந்தனர் என்று இறைவன் கூறுகிறான் (002:102
எகிப்திய மன்னர் புனித ஜோசப் இவரை திருக்குர் ஆன் நபி யூசுப் (அலை ) என்று கூறும்.இவர் புனித யாகூபின் மகன்.சிறுவயதில் தனது சகோதரர்களால் மிகவும் சிரமத்திற்கு ஆளானார் இவர் இஸ்ரவேலராக இருந்தாலும் அதிருஷ்டம் அற்புத வடிவில் இவரை தேடி வந்தது.தகப்பனாரின் மிகுந்த பிரியத்திற்கு உரியவராக இவர் இருந்ததால் வேறு தாய்க்கு பிறந்த இவரது ஒன்றுவிட்ட சகோதரர்கள் இவரை தகப்பனிடமிருந்து பிரிப்பதற்காக தந்திரமாக இவரை காட்டிற்கு அழைத்துவந்து அங்குள்ள ஒரு பாழும் கிணற்றில் போட்டுவிட்டு வந்துவிட்டனர் அங்கு வந்த ஒரு வியாபாரக்கூட்டம் இவரை காப்பாற்றி எகிப்திய மன்னனிடம் விற்று விட்டனர் அங்கு இவர் வளர்ந்தார் இவரது அழகும் அறிவும் எல்லோரையும்கவர்ந்தது .அப்போதைய எகிப்திய மன்னர் அப்துல் அஜீஸ் இவரை மிகவும் நேசித்து அரண்மனையில் மிக அந்தஸ்த்தான பணியில் இவரை நியமித்தார்.அவரது மனைவியை இவரது அழகு வசீகரித்தது .ஏதோ வேலை இருப்பதாக கூறி இவரை தந்திரமாக தன் படுக்கை அறைக்கு வரவழைத்தாள்.அவர் வந்ததும் தன் படுக்கை அறையின் கதவுகளை தாழிட்டாள்.அவளது எழில் அவரையும் கவர்ந்தது.சூழ்நிலையும் சந்தர்ப்பமும் எவரையும் குற்றவாளியாகிவிடுமே.தனிமை எங்கும் சுகந்த மணம் ராணியின் மயக்கம் தரும் அழைப்பு.இத்தனையும் இருந்தும் புனித ஜோசப் அவர்கள் இறைவன் இருக்கிறான் என்ற இறை அச்சத்தின் அத்தாட்சியை அற்புதமாக அங்கு கண்டார்கள் ஆண்டவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.இந்த கேட்டிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்று ஒரு ஞானம் அவரது மனதில் மின்னலென பாய்ந்ததும் அவர் வாசலை நோக்கி ஓடினார் அந்த பெண் அவர் வெளியே சென்றால் நாலுபேருக்கு தெரிந்துவிடும் என்ற பயத்தில் அவரை போக விடாமல் தடுக்க சட்டையை பிடித்து இழுத்தாள் ஆனால் அவர் கதவை திறந்து வெளியே வர சட்டையின் பின்பகுதி கிழிந்தது காவலர்கள் அங்கு வரவும் அந்த பெண் சத்தம் போட்டு தன்னை கெடுப்பதற்காக அவர்தான் என் அறைக்கு வந்தார்.நான் அவரிடமிருந்து தப்புவதற்காக சட்டையை பிடித்து இழுத்தேன் சட்டை கிழிந்து விட்டது என்று அவர் மீது பழியை போட்டாள் அதிர்ச்சியில் புனித ஜோசப் வாயடைத்து நின்று பயத்தில் உறைந்து போனார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் இறைவன் ஞானத்தை அருளினான்.கனவுகளுக்கு பலன் கூறும் அற்புத அறிவையும் கொடுத்தான்.அரசனுக்கு விஷம் வைத்து கொல்ல முயன்ற குற்றத்திற்காக இரண்டு காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அதில் ஒருவன் தன் கனவில் ஒரு பறவை தன் தலையில் இருந்ததென்றும் அது தன் தலையை பிராண்டி தின்றதென்றும் கனவு கண்டதாக கூறினான்.புனித ஜோசப் நீ மரணதண்டனையை அடைவாய் என்று கூறினார் அது மாதிரியே நடந்தது.இன்னொருவன் திராட்சையை பிழிந்து ரசம் எடுத்ததாக தான் ஒரு கனவு கண்டதாக கூறினான் அதற்க்கு புனித ஜோசப் அவர்கள் நீ விடுதலை ஆவாய் என்றனர் அது போன்றே நடந்தது இதே சமயம் ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்றதாகவும் ஏழு காய்ந்த தானிய கதிர்கள் பசுமையாக மாறியதாகவும் அரசர் அஜீஸ் கனவுகண்டார் புனித ஜோசபின் அறிவை விடுதலை ஆன காவலன் மூலம் அறிந்த அவர் தன தூதுவரை சிறைக்கு அனுப்பி புனித ஜோசப்பை அரண்மனைக்கு அழைத்தார்.ஆனால் தான் குற்றமற்றவன் என நிரூபிக்காதவரை அவர் வர மறுத்தார்.மன்னர் அஜீஸ் அவர்களுக்கும் அவர் குற்றமற்றவர் தன் மனைவிதான் பொய் சொல்லுகிறாள் என்ற உள்ளுணர்வு இருந்தது.எனவே மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது விசாரித்த நீதிபதி சம்பவத்தின் போது ஜோசப் அணிந்து இருந்த சட்டையை கொண்டு வரும்படி கூறினார்.மன்னர் ஏன் என்று கேட்டார்.அந்த சட்டை முன் புறம் கிழிந்திருந்தால் உங்கள் மனைவி சொல்வதுதான் உண்மை .ஆனால் அது பின் புறம் கிழிந்திருக்கிறது.அவர் தவறு செய்ய மறுத்து ஓடும்போது உங்கள் மனைவிதான் அவர் சட்டையை பிடித்து இழுத்து இருக்க வேண்டும் எனவே அவர் நிரபராதி என்று தீர்ப்பளித்தார் அஜீஸின் மனைவியும் தன தவறை ஒப்புக்கொண்டாள் .புனித ஜோசப் விடுதலை ஆனார் மன்னரின் கனவுக்கும் அற்புதமாக விளக்கம் அளித்தார் அதாவது எகிப்தில் ஏழு வருடங்கள் வறட்சி ஏற்ப்படும் பிறகு ஏழு வருடங்கள் வளம் உண்டாகும் இதற்கு பரிகாரமாக அந்த ஏழு வருடம் மக்களின் தேவை போக மீதி தானியங்களை அதன் கதிர்களிலேயே விட்டுவைக்குமாறு கூறினார்.அவர் சொன்ன மாதிரியே நடந்தது அவரது பரிகாரமும் நிவர்த்தி அளித்தது மன்னர் அஜீஸ் அவரை தன வாரிசு ஆக்கினார் .இதிலிருந்து என்ன தெரிகிறது புனித ஜோசப் தன் அற்புத அறிவை கொண்டு வித்தை காட்டி விளம்பரம் தேடினாரா?இல்லை ஏகத்துவ பிரச்சாரம்தான் செய்தார் "வணக்கத்திற்கு உரியவன் இறைவனை அன்றி வேறு யாரும் இல்லை நான் ஜோசப் அவனது அடியானாகவும் தூதனாகவும் இருக்கிறேன் "என்ற ஏகத்துவ மந்திரத்தையே பரப்புபவராக இருந்தார்
புனித மோசே இவரை திருக்குர் ஆன் ஹஜ்ரத் நபி மூசா (அலை ) என்று கூறும் .இவர் எகிப்திய சக்கரவர்த்தி இரண்டாம் ராம்சிஸ் என்ற பாரோ மன்னனிடம் காட்டிய அற்புதங்கள் பிரமிக்கத்தக்கவை .கைத்தடியை பாம்பாக்கி பாரோவின் அரசவை சூனியக்காரர்களையே பிரமிக்கவைத்தார்.அவர்கள் நிச்சயமாக இவர் இப்போது நிகழ்த்தியது எங்களை போன்று கண்கட்டி வித்தையல்ல.இது ஏதோ ஒரு அற்புத சக்தியின் உதவியை கொண்டுதான் இவர் செய்கிறார்.புனித மோசஸும் இதில் என்னுடைய சக்தி ஒன்றும் இல்லை அந்த ஏக இறைவனின் அனுமதியை கொண்டே அல்லாது என்னால் இதை செய்யமுடியாது என்று கூறியபடிதான் ஒவ்வொரு அற்புதங்களையும் நிகழ்த்தினார்.இல்லை அற்புதங்கள் நிகழ்ந்தன.இந்த அற்புதங்கள் நிகழ வேண்டிய அவசியம் என்ன
உண்மையில் புனித மோசசுக்கு அற்புதங்கள் நிகழ்த்தும் அறிவு இருந்ததா அல்லது அவரது எண்ணமாவது அப்படி இருந்ததா என்றால் இல்லை
அவரது ஒரே நோக்கம் கொத்தடிமைத்தளையில் வீழ்ந்து கொடுங்கோன் மன்னன் எகிப்திய பாரோ விடம் அடிமைப்பட்டு கிடக்கும் தன் இஸ்ரவேல் மக்களை அவனிடம் இருந்து விடுவித்து விட வேண்டி தூர் சீனா மலை உச்சியில் தனிமையில் இறைவனிடம் பிரார்த்தித்தார் .இறைவனும் பதில் அளித்தான் அந்த காலத்து எகிப்தில் சூனியம் என்ற Blackmagic தான் பிரபலம்.பாரோ மன்னர் அரண்மனையிலேயே அரசவை சூனியக்காரர்கள் பலர் இருந்தனர்.இஸ்ரவேல் மக்களை சூனியத்தை காட்டியே அடக்கி வைத்திருந்தனர்.இறைவன் புனித மோசஸ் அவர்களுக்கு கட்டளை இட்டான் .நீயும் ஆரோனும் என்னுடைய தூதர்களாக பாரோவிடம் செல்லுங்கள் முதலில் நேரடியாக என்னுடைய தூதை சொல்லுங்கள் அதாவது "வணக்கத்திற்கு உரியவன் ஆண்டவனை தவிர வேறு யாரும் இல்லை நாங்கள் மூசாவும் ,ஹாரூனும் அவனது அடியாராகவும் தூதராகவும் இருக்கின்றோம்.பாரோவாகிய நீ உன்னை படைத்து உனக்கு இத்தனை ஐஸ்வரியங்களையும் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்து.உன் அகந்தையை விட்டுவிட்டு எல்லாம் வல்ல அந்த ஏக இறைவனையே நீ துதித்தால் நீ இன்னும் நன்மை அடைவாய்.அவனையன்றி ஒரு அணுவும் அசையாது அவனுக்கு நீ அஞ்சிக்கொள் என் மக்களை விடுதலை செய் நான் அவர்களை அழைத்து போகிறேன் என்று அவனிடம் கூறுங்கள் பயம் வேண்டாம் என் கண்காணிப்பில் நீங்கள் இருக்கிறீர்கள் போய் வாருங்கள்"என்று இறைவன் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் கட்டளை இட்டான் .
புனித மோசசும் புனித ஆரோனும் பாரோவிடம் சென்றனர்.இறைவனின் தூதை எடுத்துச் சொன்னார்கள்.அவன் எள்ளி நகைத்து தன் சூனியக்காரர்களை அழைத்து வித்தை காட்டும்படி பணித்தான்.அவர்கள் கைத்தடிகளை தரையில் போட்டு பாம்புகளாக்கி நெளியவிட்டனர்.இறைவனிடமிருந்து அனுமதி வந்தது .புனித மோசசும் பாரோவிடம் இது நீ தந்த கைத்தடிதான் என் இறைவனின் அனுமதியுடன் இதை நான் தரையில் போடுகிறேன் என்று கூறி தடியை தரையில் போட்டார்.அது ஒரு பெரும் அனகோண்டாவாக மாறி சூநியக்கார்களின் பாம்புகளை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டது இதை பார்த்த பாரோ அதிர்ச்சி அடைந்தாலும் தன அகந்தையை விட்டு கொடுக்க வில்லை .ஆனால் அந்த சூனியக்காரர்கள் அதிர்ந்தனர்.நிச்சயம் இது மூசாவினால் செய்யப்பட கண்கட்டி வித்தை அல்ல.இது அவருக்கு பின்னால் உள்ள ஒரு மகத்தான சக்தியின் கைங்கர்யமே அன்றி வேறில்லை என்று எண்ணி அவர்கள் ஒட்டு மொத்தமாக வணக்கத்திற்கு உரியவன் அந்த மகத்தான இறைவன்தான் .அவனை நாங்கள் நம்புகிறோம் இந்த மோசஸ் இறை தூதர் என்று ஒப்புக்கொள்கிறோம் என்று அனைவரும் முஸ்லிம்கள் ஆயினர்.பாரோ அவர்களை கொன்றான்.அவனது அகங்காரம் தீர புனித மோசஸ் நைல் நதியை தன கைத்தடியின் மூலம் பாரோவின் கண் எதிரே இறைவனின் கட்டளைப்படி இரத்தமாக மாற்றினார்.நெருப்பு கற்கள் மழையாக பெயவித்தார்.பாரோ அவரை சாத்தான் என்று பழித்தான்.எனவே இஸ்ரவேலர்களில் தலைச்சன் பிள்ளைகளை கொல்லுமாறு அதுவும் மோசஸின் பிள்ளையில் இருந்து தொடங்குமாறு ரகசியமாக பாரோ ஆணை இட்டான் இந்த நிலையில் வேறொரு அற்புதம் நிகழ்ந்தது எகிப்தியர்களின் தலைச்சன் பிள்ளைகள் ஒரே இரவில் ஒவ்வொருவராக மடிந்தனர்.இதைகண்ட பரோ பயந்து தன் பிள்ளையை காப்பாற்ற வேண்டி இஸ்ரவேலர்களுக்கு விடுதலை அளித்து மோசசுடன் வேளியேற உத்தரவிட்டான் அவர்கள் வெளியேறும்போது செங்கடல் குறுக்கிட்டது கடலை எப்படி கடப்பது என்று அவர்கள் கடற்க்கரையிலேயே தாமதித்தனர்.அப்போது பாரோவின் மகன் இறந்தான் இதனால் ஆத்திரமடைத்த பாரோ இஸ்ரவேலர்கள் கடற்கரையில் கடலை தாண்ட முடியாமல் அங்குதான் இருக்கின்றனர் என்பதை அறிந்து அவர்களை கூண்டோடு பிடிக்க பெரும்படையுடன் வந்தான் .மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.ஒருபக்கம் கடல் மறு பக்கம் பாரோவின் படைகள் .புனித மோசஸ் அவர்கள் இறைவன் மீது அபார நம்பிக்கை கொண்டவர்கள் .அவர்கள் மக்களை நோக்கி அஞ்சாதீர்கள் நம்முடன் இறைவன் இருக்கிறான் அவன் நம்மை காப்பாற்றுவான் என்றவாறு இறைவனிடம் கையேந்தி இறைவா எங்க களின் இன்னலை நீக்க நீயே போதுமானவன் எங்களை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று என்று இறைஞ்சினார்கள்.உடனே இரைவனிடமிருந்துசெய்தி வந்தது உங்கள் கைத்தடியால் மூன்று முறை கடலை அடியுங்கள் என்று இறைவனின் திரு நாமதத்தை உச்சரித்தவாறே அவர்கள் அவ்வாறு செய்தனர்.கடல் அற்புதமாக பிளந்து வழிவிட்டது.மூசாவும் அவரது மக்களும் வேகமாக கடலை கடந்து அக்கறை சென்றனர்.பின்னால் அவர்களை விரட்டி வந்த பாரோவும் அவன்கூட்டத்தினரும் அதே கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் தன முடிவை தெரிந்து கொண்ட பாரோ கடைசி நேரத்தில் இறைவா வணக்கத்திற்கு உரியவன் நீயே மூசா உனது தூதர் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றான் ஆனால் இறைவன் மரணத்திற்கு பயந்தே அன்றி மனப்பூர்வமாக அவன் அதை கூறவில்லை என்பதை அறிவான் இருப்பினும் அவன் அதை கூறியதற்காக "உனக்கு மரணம் நிச்சயம் ஆயினும் உன்னுடம்பை நான் இறுதிவரை பாதுகாப்பேன் என்றான் இன்றும் கெய்ரோ மியூசியத்தில் எந்தவித ரசாயனப்பூச்சோ அல்லது mummification ஒ இல்லாமல் அற்புதமாக பாரோ இரண்டாம் ராம்சிஸின் உடல் பாதுகாப்பாக இருக்கிறது. இப்போது இந்த அற்புதங்களை எல்லாம் யார் நடத்தியது இறைவன்தான் நிச்சயமாக புனித மோசசுக்கு தானே அற்புதங்கள் செய்யும் சக்தியுமில்லை அது அவருக்கு அவசியமுமில்லை சூழ்நிலையின் நிர்பந்தம் உண்டாகியதால்தான் இந்த அற்புதங்கள் நிகழ்ந்தன மற்றபடி தேவை இல்லாமல் மக்களின் வீடுதேடிப்போய் கதவை தட்டி இதோ பாருங்கள் என் அற்புதங்களை என்று எந்த இறை தூதரும் இன்றைய பாபாக்கள் பாவாக்கள் ஷேகுமார்களை போல் மோடி வித்தை காட்டவில்லை ....
இனி நபி ஈஸா (அலை ) அவர்களை பற்றி பார்க்கலாம் இவர்களை கிறித்தவர்கள் ஜீசஸ் என்கிறார்கள் இதில் எனக்கு உடன்பாடு இல்லை காரணம் பைபிளில் வரக்கூடிய ஜீசஸ் பற்றி பல முரண் பட்ட தகவல்கள் இருக்கின்றன.ஒரு இறைத்தூதருக்கு இருக்க கூடாத பண்புகளை எல்லாம் அவருக்கு கற்ப்பித்து இருப்பதால் அந்த வார்த்தையை நபி ஈஸா அவர்களுக்கு நாம் பயன்படுத்தவில்லை.திருக்குர் ஆனில் இவர் பற்றி பல இடங்களில் இறைவன் கூறுகிறான் பெரும்பாலான இடங்களில் இவர் பெயரை அவர் தாய் மரியமின் பெயரோடு சேர்த்து "மரியமின் மகன் ஈஸா "என்றே இறைவன் குறிப்பிடுகிறான்.காரணம் இவர் பிறப்பே அற்புதமானது எந்த வித ஆண் தொடுதலும் இல்லாமல் இவர் தாய் மரியம் (அலை )இவர்களை ஒரே நாளில் அற்புதமாக உண்டாகி பெற்றெடுத்தார்கள் என்பதை உறுதிப்படுத்தவே குர் ஆனின் பல இடங்களில் இவர் பெயரை இவர் தாயுடைய பெயருடன் இணைத்தே இறைவன் குறிப்பிடுகிறான்.இந்த அற்புதம்முழுக்க முழுக்க இறைவனால் நிகழ்த்தப்பட்டது.அது மட்டுமல்ல நபி ஈஸா அவர்கள் பிறந்த போதே தாயின் கையில் தவழ்ந்தவாறு பேசினார்கள் "இறைவனிடம் இருந்து எனக்கு தூது வந்துள்ளது நபி மூஸா அவர்களின் தூதை மெய்ப்பிப்பதற்க்காகவே என் இஸ்ரவேல் மக்களே என்னை இறைவன் உங்களுக்கு தூதராக அனுப்பியுள்ளான் நிச்சயமாக என் தாய் பரிசுத்தமானவள் அவளுக்கு நான் சேவை செய்ய கடமைப்பட்டுள்ளேன்" என்று பேசினார்கள்
இவர்களுக்கு இறைவன் பல அற்புதங்களை அதுவும் மருத்துவ ரீதியாக தடவிக்கொடுத்தே நோய்களை குணப்படுத்தும் அற்புத ஞானத்தை இறைவன் இவருக்கு கொடுத்தான் .காரணம் அந்த கால ஜெரூசலத்தில் தாங்கள்தான் இறைவனால் தேர்ந்தடுக்கப்பட்ட சிறந்த ஞானம் உடையவர்கள் என்று இறுமாந்து இருந்த யூதர்கள் நாசரத்தில் வாழ்ந்த இந்த இறைத்தூதரை மதிக்கவில்லை.இவரையும் இவர் தாயையும் அவதூறு கூறினார் .இறைவன் உச்சகட்டமாக இவருக்கு மரித்தோரை உயிர்ப்பிக்கும் சக்த்தியையும் இவருக்கு கொடுத்தான் ஆனால் இவற்றை கொண்டு அவர் தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை இறைவனின் கண்ணியத்தையும் அவனது மகத்துவத்தையும் ஒவ்வொரு அற்புதங்கள் நிகழ்த்தும் சமயங்களில் போதித்தார்.வணக்கத்திற்கு உரியவன் பிதாவே அன்றி வேறு எவரும் இல்லை நான் ஈஸா அவனது அடியானாகவும் தூதனாகவும் இருக்கிறேன் இஸ்ரவேல் மக்களே எனக்கு இறைவன் புதிதாக எந்த சட்டத்தையோ கோட்பாடுகளையோ தரவில்லை மூஸாவுக்கு கொடுத்த அந்த சட்டங்களையும் கோட்பாடுகளையுமே உறுதிப்படுத்த இறைவன் என்னை உங்களிடம் தூதனாக அனுப்பி இருக்கிறான் எனவே நீங்கள் அதில் உறுதி பட நில்லுங்கள் என்று இயம்பினார் இவர் ஜெரூசலத்தின் புனித சாலமன் அவர்களால் கட்டப்பட்ட கோவிலுக்குள் இறைவனால் அழைக்கப்பட்டு அங்கு வைத்து இவருக்கு இன்ஜில் என்ற மேற்கூறிய இறை செய்தியை இறக்கினான்.இதன் பிறகு இவரை கொல்வதற்கு முயன்றனர்.இறைவன் தன தூதரை அற்புதமாக உயிருடன் தன் பக்கம் உயர்த்தி காப்பாற்றினான்.இவ்வளவு அற்புதங்களை பெற்ற ஹஜ்ரத் நபி ஈஸா (அலை)அவர்கள் அந்த அதை கொண்டு இறை அந்தஸ்து தேடவில்லை மக்களை மதி மயக்கவில்லை மேடை போட்டு விளம்பரம் தேடவில்லை.
இனி இறுதி தூதராக வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்களின் அற்புதங்கள் பற்றி பார்க்கலாம்.முதலில் இவர் பிறப்பதற்கு முன்பே இவரது பிறப்பு பற்றி இவரது பெயருடன் முன் வந்த பைபிளிலும் மற்ற வேதங்களிலும் குறிப்பிடப்பட்டது மிகப்பெரும் அற்புதம் ஆகும்.மூல ஹீப்ரூ பைபிளில் சாலமோனின் கவிதைகள்(Songs of Solomon 5:16) என்ற பகுதியில் புனித சாலமன் அவர்களால் இவர் Mehmadim(MHMDIM ) என்று பெயர்குறிப்பிடப்பட்டே சொல்லப்பட்டு இருக்கிறார்.im என்ற அந்த கடைசி வார்த்தை மாண்புமிகு என்ற அர்த்தத்தில் வரும்.ஆனால் இதை அவர்கள் Altogether Lovely என்று ஆங்கிலத்திலும் Muazzi என்று அரபி யிலும் மொழிபெயர்த்து உள்ளனர்.இவர் கல்வி அறிவு இல்லாதவர் கை எழுத்து கூட போடத்தெரியாது.சிறு வயதில் பள்ளிக்கு போகவில்லை.இந்த நிலையில் தனது நாற்பதாவது வயதில் இருந்து தனக்கு இறைச்செய்தி வருவதாக கூறினார்.இறைவனது கட்டளையின் பெயரில் தன்னை இறைவனின் தூதர் (MESSANGER OF GOD)என்று அறிவித்தார் .மக்காவின் மேல்மட்டத்திலிருந்து அதுவும் குறிப்பாக அவரது சொந்த பெரியப்பா அபூ லஹப் என்பவரிடமிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது.அவர் மேல் பிரியமும் பாசமும் கொண்டு அவரை வளர்த்து ஆளாக்கிய அவரது இன்னொரு பெரியப்பா அபு தாலிப் செய்வதறியாது தவித்தார் அவரால் தன சகோதரர் மகனை வெறுக்கவும் முடியவில்லை அதே நேரம் அவரது தூதை ஏற்கவும் முடியவில்லை.எதிர்ப்பும் பரிகாசமும் கிளம்பியது ஒரு மேல் மட்ட கூட்டம் அவரிடம் வந்து முஹம்மதே உன்னை நபி என்று கூற என்ன அடையாளங்கள் (அற்புதங்கள்) காட்டுகிறாய் .நாங்கள் உன்னை நபி என்று நம்ப வேண்டும் என்றால் நீ அற்புதங்கள் காட்டவேண்டும் என்றனர்.நபி அவர்களுக்கு இறைவன் குர் ஆன் பல இடங்களில் குறிப்பாக Al Furqan என்ற அத்தியாயத்தில் இது மாதிரி அற்புதங்ககளை பார்த்து ஆன்மீகத்தை நம்புவேன் எனக்கூறும் போலி ஆன்மீக வாதிகளை பற்றி எச்சரிக்கிறான்.இன்னும் இது மாதிரி அற்புதங்கள் காட்டப்படும் போதும் அவர்கள் நபிமார்களை ஏற்றுக்கொள்ளாமல் பரிகசித்ததையும் அதனால் அவர்கள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்ட வரலாற்றையும் இறைவன் கூறுகிறான்.ஆத்,தமூத் ,பாரோ,சோதோம் இப்பகுதி மக்களின் சரித்திரங்கள் அனைத்தும் அற்புதங்களை பார்த்தும் நபிமார்களின் சாபக்கேட்டிற்கு ஆளாகி அழிந்த மக்கள் பற்றியதாகும்.
இறைவன் குரானிலேயே திரும்பத்திரும்ப கூறுகிறான் நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள் நிச்சயமாக நானும் உங்களை போன்ற ஒரு மனிதனே.நிச்சயமாக எனக்கு இறை தூது வருகிறது அது நீங்கள் வணங்குவதற்கு உரியவன் ஒரு இறைவனே என்பதுதான் என்று கூறி விட்டு நீங்கள் தள்ளிநில்லுங்கள் .நிச்சயமாக நாம் நம் தூதை நீங்கள் சரியாக எந்தவித முரண்பாடோ அல்லது உங்கள் சொந்த கலவையோ இல்லாமல் அப்படியே அதை வெளிப்படுத்துகிறீர்களா என்பதைத்தான் கவனிக்கிரோமே தவிர எத்தனை பேர் அதை ஏற்றுக்கொண்டார்கள் என்ற கணக்கில் உங்களிடம் எந்த பொறுப்பும் சுமத்தமாட்டோம் என்கிறான்
பாகம் -2
ஆனால் அற்புதங்களை காட்டியே ஆன்மீகத்தை பரப்பிய புட்டபர்த்தி சாய் பாபா அவர்களை பற்றி பார்ப்போம்
இவரது கோட்பாடு என்னவென்று நமக்கு தெரியவில்லை ஆனால் இவர் 'நீ என்னிலே இறைவனை பார் நான் உன்னிலே இறைவனை பார்க்கிறேன்"என்பதாக கூறப்படுகிறது .ஒரு சமயம் இவரை பகவான் என்கின்றனர்.இன்னொரு சமயம் இல்லை இல்லை இவர் இறைத்தூதர் என்கின்றனர்.ஆனால் பகவானுக்கு செய்ய வேண்டிய அத்தனை பூஜை வணக்க வழிபாடுகளையும் இவரது போட்டோவிற்கு செய்கின்றனர் ஒரே குழப்ப மயம்
இவர் பற்றிய சில தகவல்கள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன உதாரணத்திற்கு 1993 இல் இவரது ஆளுகைக்கு உட்பட்ட இவரால் மட்டுமே உள்ளே நுழையக்கூடிய பிரஷாந்தி நிலையத்தில் நடந்த கொலை சம்பவம்
4 சாய் பக்தர்கள் அதில் ஒருவர் பெயர் சுரேஷ் குமார் சாய் பாபாவின் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர் .இவர்கள் சாய் பாபாவை கொலைசெய்ய முயற்சித்த போது பாதுகாப்பிற்காக போலீஸ் இவர்களை சுட்டு கொன்றதாக கேஸ் முடிக்கப்பட்டது இது இப்போது முக்கியம் இல்லை
பகவான் சாய் பாபா மனித ரூபத்தில் இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு பகவானுக்கு தேவையாக இருந்திருக்கிறது
மனிதனுக்கு ஒரு பிறவிதான் அதன் பிறகு அவனுக்கு மோட்சம் உண்டு ஆனால் செய்வினை மற்றும் தீய கருமங்களினால் அந்த வினை தீரு மட்டும் அவன் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க கூடும் என்றார் ஆனால் இவர் தான் ஷீரடி சாய் பாபாவின் மறு அவதாரம் என்றார் இன்னும் தான் 93 வயது வரை வாழ்வேன் என்றார்.என் மரணத்திற்கு பிறகு கர்நாடகாவிலுள்ள உடுப்பி அருகில் நான் மீண்டும் பிறப்பேன் என்றார் ஆனால் இவற்றில் எதுவுமே நடைபெறவில்லை இவர் இறக்கும் பொது வயது 84.
சத்திய சாய் பாபா 1921 இல் அவரது பெற்றோருக்கு அற்புதமாக பிறந்தார் எனப்பட்டது சிறுவயதில் இருந்தே வயதிற்கு மீறிய அறிவு உடையவராக இருந்திருக்கிறார்.இதனால் இவர் இறைவன் ஆகிவிட முடியுமா எதிர் காலத்தை ஒருவர் கணித்திட்டாலும் கூட ஒருவர் இறைவன் ஆகிவிட முடியாது
இறைவனின் இலக்கணத்தை திருக்குர்ஆன் நன்னம்பிக்கை என்ற அத்தியாயத்தில் ஒரு ஐந்து வரிகளில் மிகவும் அற்ப்புதமாக வரையறுக்கிறது
திரு குரானின் 112 ஆவது அத்தியாயத்தில் இறைவன் தன்னை பற்றி கேட்பவர்களிடம் நபியே நீங்கள் "1.கூறுங்கள் அவன் இறைவன் அஹத் ஆக இருக்கிறான்
2.அவன் தேவைகளுக்கு அப்பாற்பட்டவன் யாரை கொண்டும் எதைக்கொண்டும் அவனுக்கு எந்த தேவையும் கிடையாது ஆனால் எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் அவனை கொண்டு தேவை இருக்கிறது
3.அவன் யாரையும் பெறவும் இல்லை
4.யாராலும் பெறப்படவும் இல்லை
5.அவனுக்கு நிகர் எதுவும் இல்லை "
அஹத் என்ற வார்த்தை அரபியில் வாஹித் என்ற சொல்லிலிருந்து வந்ததாகும்
வாஹித் என்றால் அரபியில் ஓன்று என்பதாகும்
இறைவனை அல்லாஹு வாஹித் என்றும் கூறலாம் அதற்கு இறைவன் ஒருவனே என்ற அர்த்தம் மட்டும்தான்
ஆனால் அல்லாஹு அஹத் என்று இறைவன் இங்கு கூறுவதற்கு காரணம்
அஹத் என்ற சொல்லாடலின் சிறப்புதான் காரணம்
அஹத் என்றால் அரபி சொல் இலக்கணப்படி ஒருவன் ,தனித்தவன் தனியாக எதையும் சாதிக்க கூடியவன் சக்தியுடையவன் வலிமையாக பிடிக்கக்கூடியவன் என்று அர்த்தங்கள் விரிவடையும்
மேலே கண்ட இறை இலக்கணம் சாய் பாபாவுக்கு பொருந்துமா என்றால் இல்லை
சரி அவர் ஒரு இறைத்தூதராக இருந்து அவர் கொண்டுவந்ததாக கூறப்படும் "என்னில் இறைவனை பார் நான் உன்னுள் இறைவனை பார்க்கிறேன் "என்ற இந்த வாசகம் அவருடைய சொந்த வாசகமே தவிர மூன்றாவது நிலையிலிருந்து வந்தது இல்லை என்று அந்த வாசகங்களின் அமைப்பே கூறும்
பல்லாயிரக்கணக்கான இறைத்தூதர்களின் தூது இறைவன் ஒருவனே வணக்கத்திற்கு உரியவன் இறைவனை அன்றி வேறு யாரும் இல்லை என்றிருக்க இவரது தூது மட்டும் வேறுமாதிரியாக இருப்பது ஏன் ?
இன்றைக்கும் சத்திய சாய் பத்தர்கள் தங்கள் வீட்டு பூஜை அறைகளில் ஆள் உயர சாய் படங்களை வைத்துக்கொண்டு பூஜை செய்கின்றனர்.காரணம் அவரில் இறைவனை பார்க்கின்றனர் படித்தவர்களும் கூட இதில்விதிவிலக்கு இல்லை
ஆனால் சாய் பாபாவின் பூஜை அறையில் நம்மில் எவரின் படமும் இல்லையே ஏன் ?அவரது ஐதீகப்படியே
நம்மில் அவர் இறைவனை பார்க்கமாட்டாரா ?
அவர் தினமும் ஒண்ணரை மணி நேரம் தனது பூஜை அறையில் கதவை உள்ளே தாழிட்டுக்கொண்டு பூஜை செய்வார் அந்த நேரம் யாராலும் அவரை சந்திக்க இயலாது
இப்போது சத்திய சாய் இல்லை மரணித்து விட்டார்
ஆதியும் அந்தமுமாகிய இறைவனுக்கு மரணமில்லை அவன் நிலையானவன் நித்திய ஜீவன் (ஹய்யுல் கையூம்) என்பதில் இவர் சத்திய சாய் இறைவன் அல்ல என்ற உண்மை தெளிவாகி விட்டது
அவரது தீர்க்கதரிசனமும் பொய்த்து விட்டது
அவர் விபூதி வரவழைத்தது,பரிசு பொருட்கள் வரவழைத்தது அனைத்தும் அர்த்தமற்ற ஆன்மிகம் என்பதே சரி
அவர் வரவழைத்து கொடுத்த அத்தனை பொருட்களும் இப்பூலோகத்தில் தயாரிக்கப்பட்டதே தவிர தேவலோகத்து பொருட்கள் அல்ல
எனவே அவர் காட்டிய எந்த ஒரு வெற்று அற்புதமும் ஆன்மீகம் ஆகாது
பாகம் -3.(தொடரும் )
இந்த வெற்று ஆன்மீக நம்பிக்கை முஸ்லிம்களிடமும் இருக்கிறது
இஸ்லாம் இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை
அனைவரும் ஆண்டவனின் அடிமைகளே
இஸ்லாம் கூறும் இறை தூதர்கள் கூட முதலில் தங்களை ஆண்டவனின் அடியார்கள் என்றே அறிமுகப்படுத்திக்கொண்டார்கள் பிறகுதான் தங்களை தூதர்கள் என்று அறிமுகப்படுத்தினார்கள்
வழிபாடுகள் கொண்டாட்டங்கள் அனைத்தும் இறைவனுக்கே தவிர வேறு எவருக்கும் இல்லை என்பது இஸ்லாம் கூறும் நிலைப்பாடு
காணிக்கைகள் பலி இடுதல் அனைத்தும் இறைவணக்கங்கள் ஆகும் என்று இஸ்லாம் போதிக்கிறது
ஒவ்வொரு முஸ்லிமும் தொழுகையின் தொடக்க நிலையில் ஒரு உறுதிமொழி எடுக்கும் வழிமுறையை இஸ்லாம் போதிக்கிறது
அந்த உறுதிமொழி "இந்த அகிலங்களை படைத்தது அதை ஒழுங்கு படுத்தி என்னையும் இணைவைப்போரில் இல்லாமல் காப்பாற்றிய அந்த இறைவனின் திரு முகத்தை நோக்கி என் முகத்தை திருப்பிக்கொண்டேன்
எனவே நிச்சயமாக என் தொழுகை என் அறுத்து பலியிடும் நேர்ச்சைகள் காணிக்கைகள் என் வாழ்க்கை என் மரணம் அனைத்தும் அகிலங்களையும் ரட்சிக்கும் இறைவனுக்கே
அவனுக்கு இணை இல்லை அவனுக்கே அதிகாரங்கள் அனைத்தும்
நான் அவனுக்கு கட்டுப்பட்டவர்களில் ஒருவனாக இருக்கிறேன் "என்று கூறுகிறது அந்த உறுதி மொழி
ஆனால் இன்று முஸ்லீம் என்று பெயருக்கு கூறிக்கொள்ளும் சிலர் தர்காக்களில் போய் தனி மனித வழிபாடுகளில் மூழ்கிக்கிடக்கிறார்கள்
சமாதிகளை பூப்போட்டு பூஜை செய்கிறார்கள் அங்கு அடைக்கப்பட்டிருக்கும் பெரியாரின் பெயரில் குர்பானி கொடுக்கிறார்கள் பணம் தங்கம் என்று எதையும் அங்கு காணிக்கை செலுத்துகிறார்கள் .இவர்களது தொழுகை உறுதி மொழிக்கும் இவர்களது தர்கா வழிபாடுகளுக்கும் ஏன் இந்த முரண்பாடு
காரணம் இவர்கள் தொழுவார்கள் ஆனால் அதனை புரிந்து தொழுவதில்லை -தொடரும்
அனைவரும் ஆண்டவனின் அடிமைகளே
இஸ்லாம் கூறும் இறை தூதர்கள் கூட முதலில் தங்களை ஆண்டவனின் அடியார்கள் என்றே அறிமுகப்படுத்திக்கொண்டார்கள் பிறகுதான் தங்களை தூதர்கள் என்று அறிமுகப்படுத்தினார்கள்
வழிபாடுகள் கொண்டாட்டங்கள் அனைத்தும் இறைவனுக்கே தவிர வேறு எவருக்கும் இல்லை என்பது இஸ்லாம் கூறும் நிலைப்பாடு
காணிக்கைகள் பலி இடுதல் அனைத்தும் இறைவணக்கங்கள் ஆகும் என்று இஸ்லாம் போதிக்கிறது
ஒவ்வொரு முஸ்லிமும் தொழுகையின் தொடக்க நிலையில் ஒரு உறுதிமொழி எடுக்கும் வழிமுறையை இஸ்லாம் போதிக்கிறது
அந்த உறுதிமொழி "இந்த அகிலங்களை படைத்தது அதை ஒழுங்கு படுத்தி என்னையும் இணைவைப்போரில் இல்லாமல் காப்பாற்றிய அந்த இறைவனின் திரு முகத்தை நோக்கி என் முகத்தை திருப்பிக்கொண்டேன்
எனவே நிச்சயமாக என் தொழுகை என் அறுத்து பலியிடும் நேர்ச்சைகள் காணிக்கைகள் என் வாழ்க்கை என் மரணம் அனைத்தும் அகிலங்களையும் ரட்சிக்கும் இறைவனுக்கே
அவனுக்கு இணை இல்லை அவனுக்கே அதிகாரங்கள் அனைத்தும்
நான் அவனுக்கு கட்டுப்பட்டவர்களில் ஒருவனாக இருக்கிறேன் "என்று கூறுகிறது அந்த உறுதி மொழி
ஆனால் இன்று முஸ்லீம் என்று பெயருக்கு கூறிக்கொள்ளும் சிலர் தர்காக்களில் போய் தனி மனித வழிபாடுகளில் மூழ்கிக்கிடக்கிறார்கள்
சமாதிகளை பூப்போட்டு பூஜை செய்கிறார்கள் அங்கு அடைக்கப்பட்டிருக்கும் பெரியாரின் பெயரில் குர்பானி கொடுக்கிறார்கள் பணம் தங்கம் என்று எதையும் அங்கு காணிக்கை செலுத்துகிறார்கள் .இவர்களது தொழுகை உறுதி மொழிக்கும் இவர்களது தர்கா வழிபாடுகளுக்கும் ஏன் இந்த முரண்பாடு
காரணம் இவர்கள் தொழுவார்கள் ஆனால் அதனை புரிந்து தொழுவதில்லை -தொடரும்