புதன், 10 மே, 2023

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை 



அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன?
அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள்
1.தீங்கு விளைவிக்கும் இடைவினைகள்(Harmful Drugs Interactions)
ஒரு நபர் உட்கொண்ட உணவு அல்லது கூடுதல் பொருட்களுடன் மருந்து வினைபுரியும் போது இது நிகழலாம்.
2.ஒவ்வாமை எதிர்விளைவு (Allergic Side Effects)
மருந்தை உட்கொள்ளும் வரையில் ஒரு குறிப்பிட்ட மூலப்பொருளுக்கு ஒவ்வாமை இருப்பது ஒருவருக்குத் தெரியாது. 
உதாரணமாக ஒருவர் வாயுத்தொல்லைக்காக கடையில் ஒரு சோடா வாங்கி குடிக்கிறார் இவருக்கு சோடியத்தில் ஒவ்வாமை இருந்தால் இந்த சோடா அவருக்கு எதிர்வினையை உண்டாக்கும்.
அதேபோல் அமில எதிர்ப்பானை (Antacid) வாங்கி சாப்பிடுகிறார். இவருக்கு கால்ஷியத்திலோ, மெக்னீஷியத்திலோ, அல்லது அலுமினியத்திலோ ஒவ்வாமை இருந்தால் நிச்சயமாக அவர் ஒவ்வாமை எதிர்வினைகளை சந்திக்க நேரிடும்.
3.எதிர்பாராத விளைவு(Unexpected Side Effect): 
மருந்து மருத்துவர் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக செயல்படும் போது இந்த நிலை ஏற்படும்.
ஆங்கில மருத்துவத்தில் மிக அரிதாக இப்படி ஒரு நிலை ஏற்படலாம்..
பெரும்பாலும் ஆங்கில மருந்துகள் வேதிப்பொருட்களாகவே (Chemicals) இருக்கின்றன. இவற்றை \கவனக்குறைவாக பயன்படுத்தும் போது இதயம் கல்லீரல் சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகள்  பாதிப்படைகின்றன.
உதாரணமாக பேராசிட்டமாலை அதிகம் உபயோகிப்பது கல்லீரல் பாதிப்பிற்கு வழிவகுக்கும். 
ஸ்டெராய்டு அல்லாத வலிநிவாரணிகளின் அபரிமிதமான உபயோகம் வயிற்று அல்சர்,சிறுநீரக செயலிழப்பு கல்லீரல் பாதிப்பு போன்ற விபரீதங்களுக்கு வழிவகுக்கும்.
ஆஸ்த்மா போன்ற இளைப்பு நோய்களுக்கு பெக்ளோமெத்தசோன் பிரிட்னிசோன் போன்ற ஸ்டெராய்டு மருந்துகள் மிகவும் பயன்தருகின்றன. எனினும் இவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் பட்சத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கின்றன.
வாய்வழியாகவோ ஊசிமூலமோ எடுத்துக்கொள்ளும் மருந்துகள்  அதி வேகமாக நிவாரணம் அளித்தாலும் அதிவேகமாக தீங்கும் விளைவிக்கின்றன.
அதேசமயம் தோலில் தடவப்படும் களிம்புகளும் சுவாசத்தின் மூலம் உறியப்படும் மருந்துகளும் மெதுவான பலனையே தரும் என்றாலும் தீங்குகளும் குறைவே.
உதாரணமாக ஆஸ்துமாவுக்கு வாய்வழியாக மாத்திரைகளாக எடுக்கப்படும் ப்ரெட்னிசோன் போன்ற மருந்துகள் நாளடைவில் நிரந்தர நிவாரணம் தரலாம் ஆனால் மிக கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். 
அதே சமயம் பெக்ளோ மெத்தசோன் போன்ற வாய்வழியே உறியப்படும் இன்ஹேலர் மருந்துகள் அவ்வளவு தீங்கு செய்வதில்லை எனினும் பலனும் எளிதில் கிட்டாது. 
இப்படித்தான் ஆங்கில மருந்துகள் எதிலும் பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளே இல்லை.
 ஒரு நோயை குணப்படுத்த நீங்கள் சாப்பிடும் மருந்து அதன் பக்க விளைவுகளால் வேறு நோய்களை உங்கள் உடலில் திருட்டுத்தனமாக உண்டாக்குகின்றன.
ஆக நீங்கள் எப்போதும் நோயாளியாகவே மருந்துகளை சார்ந்தே இருந்து மரிக்க வேண்டும் என்பதே ஆங்கில மருத்துவத்தின் அடிப்படை நோக்கம். இது ஒரு கார்பொரேட் பிசினஸ் யுக்தி.
நாடுகளுக்கிடையே எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்தால்தான் ஆயுத வியாபாரிகளுக்கு கொண்டாட்டம் என்பது மாதிரி நீங்கள் எப்போதும் நோயாளியாக இருந்தால்தான் மருந்து வியாபாரிக்கு .கொண்டாட்டம்.
தூக்க மாத்திரைகள் மற்றும் மனக்குழப்ப மருந்துகள் டாக்டரின் பரிந்துரையும் டாக்டர் சீட்டும் இல்லாமல் விற்கக்கூடாது என்பதெல்லாம் ஏட்டளவில்தான். சில பார்மசிகளில் கெளண்டர்களில் சீட்டு இல்லாமலேயே பெற்றுக்கொள்ளலாம்.
இது  வியாபார நோக்கத்தையே பிரதானமாக கொண்ட பார்மசிகளின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
இவை Addiction எனப்படும் கொடிய போதை பழக்கத்தை உண்டாக்கும். இதனால் இவற்றை தொடர்ந்து சாப்பிடும்போது நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.

அலோபதி மருந்துகளின் குறைபாடுகள்

இது முழுமையான ஆரோக்கியத்தை , கவனம் செலுத்துவதில்லை .
அலோபதி ஒரு பகுதி` நோய்க்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் ஆனால் நோய்க்கு  காரணமான வேர்களை முற்றிலும் ஒழிகாது.  எனவே, அல்லோபதி என்பது மருத்துவத்தை  சிறந்த முறையில் நடத்துவதற்கான முழுமையான அணுகுமுறை அல்ல. அல்லோபதி சிகிச்சைக்குப்பிறகு நோய் மீண்டும் தோன்றக்கூடும், இது பணம் மற்றும் நேரம் ஆகிய இரண்டின் செலவுகளுக்கும் வழிவகுக்கும்.
அலோபதி மருந்துகள் நல்ல பாக்டீரியாக்களை அழிக்கக்கூடும்.
அலோபதி மருந்துகள் மற்ற மருந்துகளுடன் வினைபுரிந்து, பிற சிகிச்சைகளின் செயல்திறனைக் குறைக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். கெட்ட பாக்டீரியாக்கள் வளர அனுமதிக்கும் அதே சமயம் உடலில் இருக்கும் சாதாரண பாதுகாப்பு பாக்டீரியாக்களை அவை கொல்லும்.
✋குருட்டாம்போக்கில் -எடுக்கப்படும் -மாத்திரை அணுகுமுறை
உங்கள் ஊட்டச்சத்து அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை குறித்து மருத்துவர்கள் அதிக கவனம் செலுத்தி தகவல்களைப் பெறுவதில்லை. ஆகவே அவர்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி பற்றி ஒரு சிறிய ஆலோசனையை மட்டுமே வழங்க முடியும், ஆனால் பெரிய வாழ்க்கை முறை மாற்றங்கள் பற்றி அவர்கள் அக்கறைப்படுவதில்லை. அவசர கால நோய் நிலைகளில் மாத்திரையையோ மருந்தையோ எந்தவித மருத்துவ அடிப்படை ஆலோசனையும் இன்றி எடுக்கசொல்லுவார்கள்..
மருந்துகள் நோயை குணப்படுத்தாது, அதைக் கட்டுப்படுத்துகின்றன அவ்வளவுதான் 
அலோபதியால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் பெரும்பாலும்  பிரச்சனையைத்தான்  ஏற்படுத்தும் நோயை குணப்படுத்தாது, அதற்கு பதிலாக, அவை  சில காலத்திற்கு நோயை  அடக்குகிறது அல்லது உடலின் செயல்பாட்டை மாற்றுகிறது. அலோபதி மருந்துகளை நீண்டகாலமாகப் பயன்படுத்துவதால், சில நாள்பட்ட மறைந்திருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும், அது பின்னர் உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும்.
அலோபதியில் கடுமையான சிகிச்சை   நடைமுறைகள் ஆபத்தானதாக இருக்கலாம்.
 அளவுக்கதிகமான மருந்து உட்கொள்ளல்  கேட்பதற்கு மிகவும் பொதுவானது . ஆனால் அது மரண சம்பவங்களை ஏற்படுத்தும். இந்த விரைவான-நிவாரண மருந்துகள் உங்களை அடிமையாக்கக்கூடும், மேலும் இதுபோன்ற மருந்துகளை அதிகமாக உட்கொள்வதால் உறுப்பு செயலிழப்பு அல்லது விரைவில் அல்லது பின்னர் மரணம் கூட ஏற்படலாம்.
அலோபதி நன்மை தீமைகளை மதிப்பிடுவதில்லை
அலோபதி மருந்துகள் பொதுவாக மேலிட்டாற்போல் உள்ள  அறிகுறிகளை மட்டும்  பார்த்து பரிந்துரைக்கப்படுகின்றன, மறைந்திருக்கும் அறிகுறிகள் அல்லது காரணங்கள் பார்த்து பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவது இல்லை . வெவ்வேறு உடல்களுக்கு ஏற்ற மாதிரி மருந்துகள்  பெரும்பாலும் மருத்துவர்களால் புறக்கணிப்பிற்கு  உட்படுத்தப்படுகிறது. விரைவான ஆனால் தற்காலிக நிவாரண மருந்துகள்தான்  அலோபதி மருந்து சந்தையின் முக்கிய சாராம்சம்.
✊முழு பிரச்சினையையும் நிதானமாக  ஆய்வதில்லை
பெரும்பாலான நேரங்களில் டாக்டர்கள் மிகவும் பரபரப்பான கால அட்டவணை மற்றும் நோயாளிகளின் நீண்ட வரிசை ஆகியவற்றில் அதிகமாக ஆக்கிரமித்திருப்பதால், சரியான நோயறிதல் மற்றும் நிமிட விவரங்களை அவர்கள் தவறவிடுகின்றனர். தவறாகக் கண்டறியப்பட்டு தவறான சிகிச்சை அல்லது தவறான அலோபதி மருந்துகளைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளத

விளைவு (முடிவுரை)

இதற்குக் காரணம், கூடிய விரைவில் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான இயல்பான மனிதப் போக்குதான். தற்காலிகமாக இருந்தாலும் சரி, விரைவில் நோய்களில் இருந்து விடுபடவே மக்கள் அலோபதியை நாடுகிறார்கள். இந்த அவசரம் மற்றும் பொறுமையின்மையின் காரணமாக, அலோபதி மருந்துகளின் முக்கிய குறைபாடுகளை அவை பெரும்பாலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன மற்றும் முற்றிலும் புறக்கணிக்கின்றன, இது தான் அத்தகைய மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி  நீண்ட கால பிரச்சனையாக மாறும் விளைவுகளுக்கு ஆளாக காரணம்.



அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...