விஷமாகும் மருந்துகள் -ஆஸ்பிரின்
வலி நிவாரணம் வாத உளைச்சல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு ஆஸ்பிரின் ஒரு அற்புதமான நிவாரணி
ஒரு காலத்தில் இது குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் தெரிந்து வைத்த ஒரு மருந்து
தலைவலியா ஒரு ஆஸ்ப்ரோ சாப்பிடுங்கள் தலைவலி மாயமாக நீங்கி விடும் என்று பட்டி தொட்டிகளிலெல்லாம் விளம்பர படுத்தப்பட்டு பெட்டி கடைகளில் கூட கிடைக்கப்பட்ட மருந்து
ஆஸ்பிரின்,ஆஸ்ப்ரோ,டிஸ்பிரின்,டிஸ்பிரில் என்றெல்லாம் விளம்பரப்படுத்த பட்டாலும் இதன் இரசாயன பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் என்பதாகும்
பாராசிட்டமால் மாதிரி இல்லாமல் இது ஒரு அமிலம் ஆகும்
இது ஒரு பலவீனமான அமிலம் தான் என்றாலும் இதன் வீரியம் வயிற்றின் உட்புற மெல்லிய தோலை அரித்தெடுக்க போதுமானது
இது இரத்தம் உறைவதையும் கட்டுவதையும் தடுத்து இரத்தத்தை நீர்த்து போக செய்யும் ஆற்றலுடையது எனவே ஓவர் டோஸ் எடுத்து கொண்டால் வயிற்றில் புண் உண்டாவதோடு உள் இரத்த போக்கையும் (INTERNAL BLEEDING ) ஏற்படுத்தும்.மேலும் இதை தினசரி சாப்பிடக்கூடிய இதய நோயாளிகள் மற்றும் பிரஷர் நோயாளிகள் உடலில் பலத்த காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஏனென்றால் இரத்தம் உறைவதை குறைக்கும் இந்த மருந்து பலத்த காயங்களிலிருந்து அதிக இரத்தப்போக்கை (EXTERNAL BLEEDING) உண்டாக்கும்.
பல் ஈறுகளில் இரத்தம் கசிவு இருந்தால் ஆஸ்பிரினை டாக்டரின் ஆலோசனையுடன் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும்
மேலும் மூட்டு வலி உடையவர்கள் ஆஸ்பிரினை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் ஆஸ்பிரின் யூரிக் அமிலம் சிறுநீரில் வெளியேறுவதை தடுக்க கூடியது இது ஒரு ANTI URICOSURIC ஆகும்
எனவே மூட்டு இடுக்குகளில் அதிகமான யூரேட் உப்புக்கள் தேங்கி வலியை அதிகரிக்கும் இவர்கள் மற்ற வலி நிவாரணிகளை குறிப்பாக ப்ரூபன், ,நெப்ரோக்ஸன், இன்டோஸிட் போன்றவற்றையோ அல்லது ஸ்டெராய்டுகளையோ டாக்டரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.
இப்போதெல்லாம் ஆஸ்பிரினை குழந்தைகளுக்கு அதுவும் ஐந்து வயதிற்கு கீழ் பட்ட குழந்தைகளுக்கு டாக்டர்கள் எழுதுவதில்லை
காரணம் GRAY BABY எனப்படும் RYE'S SYNDROM என்ற கொடிய வியாதி இது ஒரு RARE SYNDROM தான் என்றாலும் இது ஒரு கொடிய வியாதி ஆகும் குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் ஏற்படுத்தும் இந்த கொடிய வியாதியால் குழந்தைகள் இறந்து விடும்
எனவே பேபி ஆஸ்பிரின் என்ற பெயரில் இப்பொது ஆஸ்பிரின் மார்க்கெட்டில் இல்லை ஆனால் அதே பேபி ஆஸ்பிரின் 75கிராம் 80 கிராம்களில் இதய நோயாளிகளுக்கு மாத்திரைகளாக வருகின்றது
பிரசவ காலங்கள் முழுவதும் ஆஸ்பிரினை எடுக்காமல் இருக்க வேண்டும்
குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் ஆஸ்பிரின் எடுத்து கொண்டால் குறை பிரசவம் ஏற்படும்
நஞ்சு உண்டாவதில் பிரச்சினை ஏற்படும் உள் இரத்தப்போக்கு ஏற்படலாம் குழந்தைக்கும் பாதிப்புகளை உண்டாக்கும்
ஆஸ்பிரின் ஜாக்கிரதை
பொதுவாகவே எந்த மருந்தாக இருந்தாலும் அதை மருந்தாகவே பாருங்கள்
அது வைட்டமின் மாதிரியாகவே இருக்கட்டும்
வைட்டமின் மாத்திரைகளை கூட அஜாக்கிரதையாக பயன்படுத்தினால் அதுவும் விஷமாகவே முடியும் இது பற்றி நாம் பின்னால் பார்க்கலாம்
ஆஸ்பிரின் ஜாக்கிரதை
பொதுவாகவே எந்த மருந்தாக இருந்தாலும் அதை மருந்தாகவே பாருங்கள்
அது வைட்டமின் மாதிரியாகவே இருக்கட்டும்
வைட்டமின் மாத்திரைகளை கூட அஜாக்கிரதையாக பயன்படுத்தினால் அதுவும் விஷமாகவே முடியும் இது பற்றி நாம் பின்னால் பார்க்கலாம்