சனி, 10 நவம்பர், 2018

மருந்தே விஷம் -5

விஷமாகும் மருந்துகள்-வலி நிவாரணிகள்-COX-2 என்சைம் முடக்கிகள் 

இவ்வகை மருத்துகள் ஆஸ்பிரின் Brufen ,மற்றும் Voltaran -ஐ போல் வயிற்று உபாதைகளை உண்டாக்குவதில்லை என்ற விளம்பரத்துடன் வருகின்றன 
இவை மிக நவீனமானவை பிறகென்ன அல்சர் நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்தானே.அவர்கள் உடல்வலி தலைவலி காய்ச்சல் என்றுவந்தால் இதை மிட்டாய் மாதிரி வாங்கி விழுங்காலாமில்லையோ பத்தியம் கிடையாதுதானே என்று கன்னா பின்னா வென்று உங்கள் இஷ்டம்போல் கற்பனை செய்வீர்களேயானால் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இனி பார்க்கலாம் 
இவ்வகை மருந்துகளை டாக்டர்களும் பார்மசிஸ்ட்டுகளும் COXIB மருந்துகள் என்று செல்லமாக அழைப்பார்கள் காரணம் அவற்றின் இரசாயன பெயர்கள்தான் 
CELECOXIB (CELEBREX ),ETORICOXIB(ARCOXIA),ROFECOXIB (VOIOXX ),மற்றும் VALDECOXIB என்று பட்டியல் நீளும்
நாம் ஏற்கனவே போன கட்டுரையில் COX-2 என்சைம் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டோம்
இந்த என்சைம் சாதாரணமாக  ஆரோக்கிய  உடல் நிலையில் இயங்காது அதாவது ஆக்டிவ் ஆக இருக்காது  ஆனால் இது நம் உடலின் தோல் உட்பட அனைத்து பகுதிகளிலும் இருக்கும்
ஆனால் உடலில் பாதிப்பு ஏற்படும் போது அந்த பகுதியில் மட்டும் இது ஆக்டிவ் ஆகி ப்ரோஸ்டாக்ளான்டினை உற்பத்தி செய்யும் எனவே அந்த பகுதியில் வலியும் எரியும் சிவத்தலும் வீக்கமும் உண்டாகும்
ஆனால் ஒன்று இந்த COX-2 ப்ரோஸ்டாசைகிளின் என்ற இரத்தம் உறையாமல் தடுத்து இரத்த ஓட்டத்தை சீராக பாதுகாக்கும் புரதமும் உற்பத்தியாக காரணி ஆகிறது என்பதை மறந்து விடக்கூடாது
இப்போது இந்த என்சைமை மாத்திரம் முடக்குவதால் நிச்சயம் உடல் வலி வேதனை,வீக்கம்,எரிவு போன்றவற்றிலிருந்து சுகம் அடைகிறது என்பது உண்மைதான் எனினும் இதை தவறாக அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் நிச்சயம் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படலாம் உயர் ரத்த கொதிப்பினால் பாதிப்பு உண்டாகலாம்
அளவு மீறி இதை உட்கொள்ளும்போது இது COX-1 என்ஸைமையும் முடக்கி வயிற்று கோளாறுகள் அல்சர் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும்
பொதுவாக செப்டறான் போன்ற சல்பா மருந்து அலர்ஜி உள்ளவர்கள் COX முடக்கிகளை எடுக்கக்கூடாது இதுவும் அலர்ஜி உண்டாக்கும்
தலை சுற்றல் வாந்தி குமட்டல் தூக்கமின்மை தருமன் சைனஸ் போன்ற இதர பிரச்சினைகளும் இந்த மருந்துகளை தவறாக எடுத்துக்கொள்வதால் உண்டாகலாம்
எனவே முடிவாக எந்த மருந்தாக இருந்தாலும் வயதான காலத்தில் சுய மருத்துவத்தில் ஈடுபடாதீர்கள்


அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...