டிகாக்சின்(DIGOXIN)
சிலருக்கு இதயம் பலவீனமாக இயல்புக்கு குறைவாக துடிக்கும் இவர்களது இதயத்துடிப்பு சில நேரங்களில் நிமிடத்திற்கு 30கும் குறைவாக இருக்கலாம்
இதற்கு நெருக்கடி நிலை இதய செயலிழப்பு அல்லது இரத்த குழாய் அடைப்பு நிலை இதய செயலிழப்பு அல்லது பொதுவாக இதய செயலிழப்பு என்பர்.இதை மருத்துவ மொழியில் CONGESTIVE HEART FAILURE (CHF) என்பர்.இது பற்றி இங்கு ஒரு சிறு குறிப்பு மட்டுமே பாப்போம் விளக்கமாக காண இங்கு கிளிக் செய்யவும்
இதய தசைகளுக்கு இரத்தம் சரியாக கிடைக்கவில்லை என்றால் அவை பலவீனம் அடையும்.
இதற்கு பல காரணிகள் உண்டு.
அதில் முக்கியமாக இதய தசைகளுக்கு இரத்த ஓட்டம் தரும் கரோனரி தமனி வலை பின்னலில் ஏற்படும் அடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகிய காரணங்களினால் இதய தசைகள் பலவீனமடைந்து இதயம் சரியாக சுருங்கி விரியாது இதனால் இரத்தத்தை அது சரியாக வாங்கி அனுப்பாது இதுதான் இதய செயல் இழப்பிற்கு ஒரு காரணமாகும்
டிஜிட்டாலிஸ் பர்புரியா (D.Purpurea) அல்லது டிஜிட்டலிஸ் லேனடா (D.Lanata) என்பது ஐரோப்பாவின் வெப்ப மண்டல தாவரமாகும்.இதன் பூக்கள் ஊதா அல்லது வெண்ணிறத்தில் நரியின் கையுறை வடிவத்தில் இருக்கும் இதனால் இதன் வர்த்தக பெயர் foxglove என்பர்.இந்த செடியின் இலைகளிலிருந்து எடுக்கப்படும் glycosides என்ற வகை மருந்துகள் இதய நோய்களுக்கு நிவாரணமளிக்கின்றன.எனவே இவற்றிற்கு D.Cardiac Glycosides என்ற மருத்துவப்பெயரும் உண்டு.இவை Digitoxin,Digoxin,மற்றும் Ouabain என்று மூன்று வகைப்படும்.இவற்றில் Digoxin அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் தாக்கம் இசிஜியில் எப்படி தெரிகிறது என்பதை மட்டும் பாப்போம் மற்றவகைகளும் ஒரே மாதிரி தாக்கம் ஏற்படுத்துபவையாகவே இருக்கும்

![]() |
படம் 1 |
![]() |
படம் 2 |
மேலே படம் 2இல் மின்முனை II இன் பதிவை கவனிக்கவும்.அதில் ST -பகுதி தாழ்ந்து இருப்பதை சிவப்பு வட்டங்கள் இட்டு காட்டப்பட்டு உள்ளது.நாம் ஏற்கனவே கண்டது போல் ST பகுதி தாழ்ந்து இருந்தால் அது ஆஞ்சைனா (மார்வலி)யின் அடையாளமாகும்.எனவே அளவு மீறிய டிகாக்ஸின் பயன்பாடு மார்வலியில் கொண்டு போய்விடும் என்பது தெளிவாகிறது
டிகாக்ஸின் பக்கவிளைவுகள்
1.களைப்பு ,சோர்வு,அசதி 2.பார்வை மங்கல்
3.மார்வலி
4.குமட்டல்,வாந்தி.
5.ஜீரண கோளாறு
6.தலை சுற்றல்
7.மனப்பிராந்தி