வியாழன், 5 ஜூலை, 2018

இரும்பு சத்து

உணவிலிருந்து இரும்பு சத்தை அதிகம் பெறுவது எப்படி ?

இரும்பு சத்து உடம்புக்கு மிகவும் இன்றியமையாதது என்பது நம் அனைவருக்கும் தெரியும் 
இரும்பு சத்து இரத்தத்தை விருத்தி செய்ய உதவுகிறது 
இரும்பு சத்து  குறைவுப்பாட்டால் இரத்தத்தில்  சோகை உண்டாகும் 
இரத்த சோகை உடம்பில் பல நோய்கள் வர வழி வகுத்துவிடும் 
இரும்பு சத்து வேண்டும் என்பதற்காக இரும்பை நாம் உணவாக கொள்ள முடியாது 
இரும்பு சத்து மாத்திரைகள் டானிக்குகள் ஊசிமருந்துகள் என்று எல்லாவற்றிலும் பக்க விளைவுகள் உண்டு 
அவற்றை டாக்டரின் ஆலோசனை இன்றி எடுத்துக்கொள்ள கூடாது 
ஆனால் இறைவன் அற்புதமாக தன்  கருணையினால் நாம் சாப்பிடும் அன்றாட சாதாரண உணவு வகைகளில் கூட இரும்பு சத்தை சரிவிகிதத்தில் பொதிந்து வைத்திருக்கிறான்
அவற்றை முறையாக பயன் படுத்துவதன் மூலம் நாம் இரும்புச்சத்தை எவ்வித குறைவும் இன்றி பெறலாம் 
முதலில் ஒன்றை தெரிந்து கொள்வோம் 
நம் உடலில் சுமார் 65 சதவீத இரும்பு சத்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் என்ற புரதத்தில் உள்ளது 
ஹீம் என்ற இரும்பின் கூட்டு பொருளும் குளோபின் என்ற புரதமும் சேர்ந்து உருவாகும் பொருள்தான் ஹீமோகுளோபின் 
இதில் இருக்கும் இரும்பு கூட்டு பொருளான ஹீம் தான் இரத்தத்திற்கு அபாரமான செந்நிறத்தை தருகிறது.இரத்தத்தின் சிவப்பணுக்களுக்கு  நிறமே ஹீம்தான் கொடுக்கிறது
இரும்பு சத்து எவ்வளவு குறைவாக உள்ளதோ அவ்வளவு இரத்தம் வெளிறி இருக்கும் இதனால் இரும்பு சத்து குறைபாட்டினால் தோலும் வெளிறி இருக்கும் இதை வைத்து அனீமியாவை கண்டறியலாம் 

இரும்பு சத்தின் வகைகள் 

பொதுவாக உணவு மூலம் கிடைக்கும் இரும்பு சத்தை இருவகைகளாக பிரிக்கலாம் அவை :-

1.ஹீம் இரும்பு சத்து  

மிருகங்களின் சிவப்பு இறைச்சி (Red Meat) வகை உணவிலும் பறவை மற்றும் மீன் இறைச்சி (White Meat)வகையிலும் காணப்படுகிறது தாவர உணவில் இது முற்றிலும் கிடையாது 
ஹீம் இரும்பு சத்தை உடல்  வெகு எளிதில் உட்கொண்டு தன்மையமாக்கிவிடும் .இதனால் அசைவ உணவு பிரியர்களுக்கு இரும்பு சத்து குறைபாடு வேறு இடையூறுகள் ஏதும் இல்லாத பட்சத்தில் பொதுவாக ஏற்படுவது இல்லை

2.நான் ஹீம் இரும்பு சத்து 

அசைவ உணவில் ஹீம் இரும்பும் நான் ஹீம் இரும்பும் சேர்ந்து இருந்தாலும் காய் கறி  உணவில் நான் ஹீம் இரும்பு சத்து மட்டுமே உள்ளது நான் ஹீம் இரும்பு சத்தை உடல் மிக எளிதாக உட்கொள்ளாது இதனால் சைவ உணவு பிரியர்களுக்கு இரும்பு சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் 
இவர்கள் டாக்டரின் ஆலோசனையுடன் மாத்திரை டானிக்குகளை எடுத்துக்கொள்ளலாம் 

இரும்பு சத்து ஊக்கிகள் 

பொதுவாக உடம்பு உணவிலிருந்து இரும்பு சத்தை உறிய ஊக்கப்படுத்தும் சில பொருட்களை பார்க்கலாம் 

1.வைட்டமின் சி  

உணவு சாப்பிட்ட உடன்  எலுமிச்சை ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுவதால் அதிலுள்ள வைட்டமின் சி உணவுமூலம் கிடைக்கும் இரும்பு சத்தை உடல் எளிதாக பயன்படுத்துவதை ஊக்க படுத்தும் 

2.பைடேட்டு உப்புகள் 

இவைசாதாரணமாக உடல் இரும்பு சத்தை  உறிவதை  குறைக்கும் என்றாலும் இவற்றை தண்ணீரில் ஊறவைத்தோ நொதிக்க செய்தோ சாப்பிட்ட பிறகு எடுத்து கொண்டால்  இவை இரும்புசத்து உடலில் சேர்வதை ஊக்கப்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது 
பைடேட்டு உப்புகள் சோயா வாதுமை வால்நட்டுகள் முந்திரி போன்ற பருப்பு வகைகளில் அதிகம் இருக்கிறது 
மேலும் துத்தநாகம்,தாமிரம் மாங்கனீசு போன்ற உலோக சத்துக்களும் மிக சிறிய அளவில் Trace Elements சேர்த்துக்கொண்டால் உடல் இரும்பு சத்தை எளிதில் உட்கொள்ள எதுவாக இருக்கும் 
கடைகளில் வாங்கும் இரும்பு சத்து டானிக்குகள் மற்றும் மாத்திரைகளில் இந்த Trace Elements சேர்க்கப்பட்டிருக்கும் 
நாம் சாப்பிடும் சைவ மற்றும் அசைவ உணவுகளிலும் பழங்களிலும் இந்த Trace Elemens இருக்கின்றன 
துத்தநாகம் பிரேசில் ஓட்ஸ்,oyester,முட்டை ஆகியவற்றிலும்,தாமிரம் மாமிசம்,வெண்ணெய்,வேர்க்கடலை போன்ற உணவுகளிலும்,மாங்கனீசு ஓட்ஸிலும் இருக்கின்றன.

தேநீர் கூடாது 

சாப்பிட்டவுடன் ஒரு மணி நேரத்திற்குள்ளாக தேநீர் போன்ற பானங்களை தவிர்ப்பது  நன்று ஏனென்றால் அவற்றில் இருக்கும் டானின் என்ற பொருள் உணவிலிருந்து உடல் இரும்பு சத்தை எடுப்பதை தடுப்பதாக ஆய்வு கூறுகிறது 
தேநீரை பொறுத்தவரை அது பெரும்பாலும் நான் ஹீம் இரும்பு சத்து உறியப்படுவதைத்தான் தடுக்கிறது 
மேலும் தேநீர் ஏற்கனவே இரும்பு சத்து குறைபாடு உடையவர்களை அதிகம் பாதிக்கிறது

இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் 

1.ஈரல் 
2.மண்ணீரல் 
3.எலும்பு மஜ்ஜை 
4.சிவப்பு இறைச்சி (ஆடு மாடு மிருகங்கள் )
5.வெள்ளை இறைச்சி (பறவைகள் ,மீன்கள் )
6.உலர்ந்த அத்திப்பழம் 
7.பேரீச்சை 
8.முந்திரி,வாதுமை 
9.முட்டை 
10.பச்சை காய்கறி மற்றும் கீரை வகைகள் 

RDA -தினசரி இரும்பு சத்தின் தேவை :-

1.பெண்கள் (வயது 19 -50)   =18 மி கி 
2.ஆண்கள் (வயது 19 -50)   = 8 மி.கி 
3.கர்ப்பிணி பெண்கள்         = 27 மி கி 
4.பாலூட்டும் பெண்கள்      = 9 மி கி
மேலேயுள்ள தகவல் National  Institute Health  (NIH) இன் சிபாரிசின்படி தரப்பட்டது 

இரும்பு சத்து குறைபாடு சோகையின் அறிகுறிகள் 

1.களைப்பு 
2.சோர்வு 
3.வெளிறிய தோல் 
4.முடி உதிர்தல் 
5.உடல் அரிப்பு எரிச்சல் 
6.பலவீனம் 
7.தூசி கல் மண் இவற்றை தின்ன ஆர்வம் 
8.கால் ஓய்வின்மை 

9.நகம் உடைதல் வளைதல்


அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...