வெள்ளி, 17 நவம்பர், 2017

ஆல்கஹால் சில உண்மைகள்

ஆல்கஹால்-சில முக்கிய குறிப்புகள்

ஆல்கஹால் என்றாலே நமக்கு நினைவில் வருவது போதை தரும் பீர் ,பிராந்தி,விஸ்கி,ரம் ,ஜின் என்று மேல்நாட்டு மது வகைகளும் நாட்டு சரக்குகளான சாராயம் கள்ளு இவைகள்தான் ஆம் இவற்றில் இருக்கும் போதை பொருளான ஈதைல் ஆல்கஹால் பற்றி மட்டுமே நாம் இங்கு பார்க்கப்போகிறோம் 
ஆல்கஹாலில் ஆயிரம் வகைகள் இருந்தாலும் பொதுவாக ஈதைல் ஆல்கஹால் மட்டுமே சமூக நிகழ்வுகளிலும் இன்னும் பிற கொண்டாட்டங்களில் புழங்கப்படுகிறது .ஏனென்றால் இது மீத்தைல் ஆல்கஹால் போல் உடனடி விஷம் அல்ல அதோடு இது போதையுடன் சுவையாகவும் இருக்கும் 

மெட்டபாலிசம் 

ஆல்கஹால் அருந்தியவுடன் வயிற்றின் மூலம் 20% அளவு இது இரத்தத்த்தில் உறிஞ்சப்படுகிறது .மீதியில் 80% சிறுகுடல் மூலமாக இரத்தத்தில் உறிஞ்சப்படுகிறது.உடம்பினால் தன்மயமாகாத ஆல்கஹால் உமிழ்நீர் ,சிறுநீர்,மற்றும் வியர்வை மூலம் வெளியேறிவிடும் 
இரத்தத்தில் சேர்ந்த ஆல்கஹால் ஈரலில் தன்மயமாகிறது இந்த ஆக்ஸீகரண  கிரியையில் ஆல்கஹால் அசிடால்டிஹைடு என்ற விஷப்பொருளாக மாறி பிறகு உடனடியாக அசிடால்டிஹைடு மேலும் ஆக்ஸீகரணமாகி  ஆபத்தில்லாத அசிட்டிக் அமிலமாகி பிறகு அசிடேட் உப்புக்களாக சிறு நீரில் வெளியேறிவிடும்
பொதுவாக ஈரல் ஒரு அவுன்ஸ் ஆல்கஹாலை ஒரு மணி நேரத்தில் ஆக்ஸீகரணம் செய்துவிடும் 
ஆல்கஹாலின் போதை அது இரத்தத்தில் இருக்கும் போதும் திசுக்களில் சேரும் போதும் வெளிப்பட்டு விடும் 
ஆல்கஹால் அளவுக்கு அதிகமாக அதாவது  ஒருமணிநேரத்திற்குள் பத்து அவுன்ஸ் ஆல்கஹாலை ஒருவர் மொடாக்குடியாக குடிக்கும் பட்சத்தில் ஈரலின் ஆக்ஸிகரணிக்கும் தன்மை ஒழுங்கரு\ற்று தாறுமாறாக போய்விடும் இதனால் ஆல்கஹால் சரியாக ஈரலில் ஆக்சீகரணம் அடையாமல் உடலில் பல இடங்களில் தேங்கத்தொடங்கும் 
ஆல்கஹாலின் இரத்த அளவீடு BAC எனப்படும் அதாவது BLOOD ALCOHOLIC CONCENTRATION .
ஒருவரின் BAC அளவுக்கு மீறினால் கீழ்கண்ட தீமைகள் ஏற்படும் 
1.தள்ளாட்டம் 
2.நினைவு மாறாட்டம் 
3.உளறல் 
4.குழம்பிய மனநிலை 
5.கவனக்குறைவு 
6.மூச்சு திணறல் 
7.குமட்டல்,வாந்தி 
8.நிலையற்ற தளர்வு 
9.எரிச்சல் 

ஆல்கஹால் ஆக்ஸீகரணத்தில் தாக்கம் உண்டாக்கும் காரணிகள்

வயது 
முதுமை வயதில் ஆல்கஹாலை ஈரல் ஆக்ஸீகரணிக்கும் தன்மை குறையும் இதனால் ஆல்கஹால் ஈரலில் அதிகம் தேங்கும் 
இதற்கு காரணங்கள்  முதிய வயதில் இரத்த ஓட்டம் மெதுவாக இருப்பதாலும் முதியவர்கள் அதிகம் மருந்துகள் எடுத்து கொள்வதாலும்  இருக்கலாம் 
இதனால் உடலில் அதிக ஆல்கஹால் தேங்கும் வாய்ப்பு ஏற்படும் 

பாலினம் 

ஆண்களை விட பெண்களின் உடலில் ஆல்கஹால் அதிகம் தேங்கும் வாய்ப்பு உள்ளது இதன் காரணம் பெண்களின் உடலில் அதிக கொழுப்பு சத்து உள்ளது.இது எல்லா பெண்களுக்கும் பொருந்தாது என்றாலும் பெரும்பாலும் பெண்களின் உடம்பில் அதிகம் கொழுப்பு சத்து உள்ளது இது பெரும்பாலும் அவர்களிடம் அதிகம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற பெண்மை ஹார்மோனினாலும் இருக்கலாம் 

உணவு   

ஆல்கஹால் வயிற்றின் மூலமாகவும் உறிஞ்சப்படுவதால் வெறும் வயிற்றைவிட உணவு நிறைந்த நிலையில் வயிறு அதனை உறிஞ்சுவதில் தாமதம் அல்லது குறைவு ஏற்படலாம் 

இனம்   

சில கிழக்கு ஆசிய இனங்களில் ஆல்கஹாலை ஆக்ஸீகாரணிக்க வைக்கும் ஹார்மோன்கள் குறைபாடு இருக்கலாம் இதனால் இவர்களுக்கு முகம் வீங்குதல்,குமட்டல்,சோர்வு தலைவலி உயர் இதய துடிப்பு போன்ற கோளாறுகள் ஏற்படலாம் 

பாரம்பரியம் 

ஜீன்களும் சூழ்நிலையும் சிலருக்கு பார்ப்பரியமாகவே ஆல்கஹாலை ஆக்ஸீகணிக்கும் தன்மையில் மாற்றங்கள் ஏற்படலாம் 

உடல் பருமன் 

பருமனான உடலுடையவர்களை விட மெலிந்த உடலுடையவர்கள் ஆல்கஹாலினால் அதிகம் தாக்கப்படுவர் 

ஆல்கஹால் ஆக்ஸீகரணத்தில் தாக்கம் உண்டாக்கும் மருந்துகள்      

1.தூக்க மருந்துகள் --diazepam 
2.மன உளைச்சல் மருத்துகள் --Amitriptyline 
3.ஆண்டிபையாட்டிக்குகள் 
4.அலர்ஜி மருந்துகள் 
5.நீரிழிவு நோய் நிவாரணிகள் 

ஆல்கஹால் உடலில் தங்கும் இடங்களும் நேரங்களும் 

1.இரத்தம் 

இரத்தத்தில் BAC யின் அளவைக்கொண்டு ஆல்கஹால் தங்கும் நேரத்தை அளவிடலாம் 
பொதுவாக இரத்தம் ஆல்கஹாலை ஒரு மணிக்கூறில் 0.015 மில்லி கிராம்  வெளியேற்றுகிறது இதனால் ஒருமனிதரின் இரத்தத்தில் BAC  0.08 மில்லி கிராம்  இருக்கும் பட்சத்தில் அதை வெளியேற்ற இரத்தம் ஆறு மணி நேரம் எடுத்து கொள்ளும்

2.சிறு நீர் 

சில ஆய்வுகளின் படி ஆல்கஹால் சிறு நீரில் 3 முதல் நான்கு நாட்கள் வரை இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது 

3.மயிர்

ஆல்கஹால் கடைசியாக அருந்தியத்திலிருந்து சுமார் மூன்று மாதங்கள் வரை முடியில் அது இருக்கும் என்று சரியான ஹேர் டெஸ்டுகள் மூலம் தெரிய வருகின்றது 

4.மூச்சு 

கடைசி பெக் மது அருந்தியத்திலிருந்து 24 மணி நேரம் வரை ஆல்கஹால் நம் மூச்சு காற்றில் இருக்கும் என்று அடிக்கொருமுறை எடுக்கும் Breathing Tests மூலம் அறியலாம் 

5.முலை பால் 

மது அருந்தியவுடன் ஆல்கஹால் எத்தனை மணி நேரம் இரத்தத்தில் இருக்கிறதோ அவ்வளவு நேரம் அது குழந்தை அருந்தும் முலை பாலிலும் இருக்கும்.இங்கு ஒன்றை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும் இரத்தம் ஆல்கஹாலை முழுவதும் வெளியேற்றிய உடன் முலை பாலிலிருந்தும்  அது வெளியேறிவிடும் . இது அனிச்சை செயல் என்பதால் தன்னிச்சையாக முலை பாலை வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை

உமிழ் நீர் 

கடைசி டோஸ் மது அருந்தியத்திலிருந்து 24 மணி நேரம் உமிழ் நீரில் சிறுக சிறுக ஆல்கஹால் தென்படும் 

நாட்பட்ட பெரும் குடியால் வரும் தீமைகள் 

1.வாய் புற்று 
2.தொண்டை புற்று 
3.முலை புற்று 
4.ஸ்ட்ரோக் 
5.இருதய கோளாறுகள் 
6.மூளை மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் 
7.விபத்துகள் 
சுருக்கமாக 
1.ஆல்கஹால் வயிற்றிலிருந்து இரத்தத்திற்குள் உறிஞ்சப்படுகிறது எனவே காலி வயிற்றில் மது அருந்துவது கூடாது 
2.ஆல்கஹால் பெரும்பாலும் ஈரலில்தான் செரிமானம் அடைகிறது ஒரு மணிநேரத்தில் ஈரலால் 30 மில்லி வரை ஆல்கஹாலை எரிக்க முடியும் ஈரல் பாதிப்பு உள்ளவர்கள் கவனம் பகுதி எரிக்க பட்ட நிலையில் ஆல்கஹால் கொடிய விஷமான அசிட்டாலடிஹைடு  ஆக மாறிவிடும் இது உடனே மேலும் எரிக்கப்பட்டு ஆபத்தில்லாத அசிடேட் உப்புக்களாக மாற வில்லை என்றால் பெரும் தீங்கு ஏற்படும் 
3.மதுவின் போதை ஆல்கஹால் இரத்தத்திலும் திசுக்களில் இருக்கும் வரை நீடிக்கும் 
4.மது குடித்ததும் ஆல்கஹால் இரத்தம் வியர்வை,மூச்சு,சிறுநீர் முலைப்பால் இவற்றில் சேர்நது விடும்
    
       
 
  

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...