கோவிட் 19 தொற்றினால் இதயம் மற்றும் இரத்த அழுத்த பாதிப்புகள்
![]() |
படம்-1 |
கோவிட் 19 நோய் தொற்று சுவாச பகுதியை மட்டுமல்லாமல் நம் உடலின் மற்ற பகுதிகளையும் தாக்க வல்லது.நம் உடலில் உள்ள சில வசதிகள்தான் அதற்கு காரணம்.அதில் முக்கியமானது இந்த வைரஸ் நம் உடல் செல்களை தாக்குவதற்கு பயன்படுத்தி கொள்ளும் ACE 2 என்ற ஏற்பி தான்.
இந்த ஏற்பி நம் உடலின் பல அமைப்புகளிலும் பரந்து இருக்கிறது இந்த ஏற்பி எங்கெங்கெல்லாம் பரவி இருக்கிறதோ அங்கங்கெல்லாம் இந்த வைரஸும் தாக்கும்.
முதன் முதலாக தாக்கப்படுவது நம் சுவாசப்பகுதிதான்.அதிலும் தொண்டைக்கு கீழுள்ள சுவாசப்பகுதிதான்.அங்குதான் இந்த ACE 2 ஏற்பி அடர்த்தியாக உள்ளது.உதாரணமாக தொண்டை அதற்கு கீழுள்ள தொண்டை குழாய் நுரையீரல் காற்றறைகள் ஆகியவற்றின் EPITHELIAL LAYERS எனப்படும் மேலடுக்கு சுவர்களின் ஒவ்வொரு செல்களிலும் இந்த ஏற்பிகள் மிக தெளிவாக தம்மை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றன.எனவே இந்த பகுதியை இந்த புதிய கொரோனா வைரஸ் மிக எளிதாக தாக்கி சேதப்படுத்துகிறது.
இதற்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பது நம்முடைய இதய மற்றும் இரத்த குழாய் பகுதிகள்.
இதயத்தின் தசைகளில் இருக்கும் மையோசைட்டுகள்,இரத்தக்குழாய்கள் மற்றும் தந்துகிகளின் ENDOTHELIUM எனப்படும் உட் சுவர்கள், ஆகியவற்றில் வெளிப்படையாக மற்றும் தெளிவாக பொதியப்பட்டிருக்கும் இந்த ACE 2 ஏற்பிகள் வைரசை அங்கும் வந்து தாக்குவதற்கு வசதி பண்ணி கொடுக்கின்றன.
உலக அளவில் ஆஸ்பத்திரியில் இந்த வைரஸால் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களில் 80% பேர் இதய மற்றும் இரத்த அழுத்த நோயாளிகள்தான்.அதிலும் 40%உயர் இரத்த அழுத்தம்,36%உடல் பருமன்,12% மற்ற இதய கோளாறுகள் மீதி உள்ளது சர்க்கரை நோயாளிகள்.
இது தவிர வயதான பலகீனமான எதிர்ப்பு சக்தி குறைத்த ஆண் பெண்களை இது கடுமையாக பாதிக்கிறது.பெண்களில் மாதவிடாய் நின்ற அல்லது ஏதோ சில காரணங்களுக்காக சினைகள் நீக்கப்பட்ட (OVARIECTOMY)பெண்களை மட்டுமே இது கடுமையாக தாக்குகிறது.அது ஏன் என்பதை இந்த கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை இது கடுமையாக பாதிப்பதில்லை.இதன் காரணங்கள் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை.
20 யிலிருந்து 40% வரை ஆஸ்பத்திரியில் கோவிட் 19 நோய்க்காக சேர்க்கப்பட்ட இதய நோயாளிகளுக்கு நெஞ்சு வலி,இதய செயலிழப்பு ஒழுங்கற்ற இதய துடிப்புகள் மற்றும் மாரடைப்பு போன்ற அறிகுறிகள் இருந்தன.
50 வயதிற்கு உட்பட்ட எதிர்ப்பு சக்தி உள்ள இளைஞர்கள் யுவதிகள் ஆகியோருக்கு சாதாரண ஜலதோஷம் மெல்லிய காய்ச்சல் அல்லது தலைவலி இவற்றுடன் இது குணமாகிவிடும்.
ஆனால் அதே சமயம் எதிர்ப்பு சக்தி இல்லாத வயதான பலகீனமானவர்களுக்கு இந்த நோய் தொற்று கடுமையான பின்விளைவுகளை அதாவது அவர்களுக்கு இதற்கு முன் இல்லாத உயர் இரத்த அழுத்தம்,இதய கோளாறு நீரிழிவு நரம்பு கோளாறுகளை உண்டாக்கிவிடலாம்.அதுபற்றி நாம் இப்பொது பார்க்கலாம்.
முதலில் நம் உடல் இரத்த அழுத்தத்தை எப்படி சீராக வைக்கிறது என்று பார்க்கலாம்.
RAAAS மற்றும் AAAA அமைப்புகள்

படம் -2 |
நம் உடலில் இதற்காக இரண்டு அமைப்புகள் இருக்கின்றன .முதலாவது இரத்த அழுத்தத்தை உயத்துவதற்கு ஒரு அமைப்பு.அதற்கு RAAAS (Renin-Angiotensin-II-Aldosterone-Anti-Diuretic-Hormone System) ஆகும்.இதை இன்னும் சுருக்கமாக RAS என்றும் அழைக்கலாம்.காரணம் அதிலுள்ள ஆன்ஜியோடென்ஸின்-II மற்ற இரண்டு A-A க்கும் காரணமாக அமைகிறது.
இரண்டாவது இரத்த அழுத்தத்தை தணிப்பதற்கு என்று ஒரு அமைப்பு அதற்கு AAAA (ACE2-Angiotensin1-7-Angiotensin1-9-ATR2)என்று பெயர். (பார்க்க படம்-2)
RAAAS:-
நம்முடைய இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்வதில் சிறுநீரகத்திற்கும் கல்லீரலுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு.ஏனென்றால் இரண்டுமே இரத்தத்தை சுத்தீகரிக்கின்றன.
சிறுநீரகம் இரத்தத்திலுள்ள நீரை அதன் சத்துக்களுடன் முதல் நிலையில் அதன் வடிப்பான்கள் (NEPHRONS) மூலம் வடிக்கும் பொழுதே அந்த நெப்ரான்களின் தலைப்பகுதியில் இருக்கக்கூடிய சில செல்கள் (JUXTAGLOMERULAR APPARATUS) இரத்த அளவும் அழுத்தமும் குறையவிருப்பதை உணர்ந்து ரெனின் என்ற புரத ஹார்மோனை சுரக்கிறது.
இந்த ரெனின் கல்லீரலிலிருந்து சுரக்கப்படும் ஆன்ஜியோடென்சினோஜன் என்ற புரதத்தை ஆன்ஜியோடென்ஸின்-I என்ற புரத ஹார்மோனாக மாற்றுகிறது.இதை ACE 1 என்ற என்ஜைம் ஆன்ஜியோடென்ஸின்-II ஆக மாற்றுகிறது.இதுதான் RAAAS அமைப்பினுடைய முக்கிய ஹார்மோன்.
ஆன்ஜியோடென்ஸின்-II ஹார்மோன் அதன் ஏற்பி (ATR -1)யில் கிரியை செய்து கீழ்கண்ட விளைவுகளை உண்டாக்குகிறது:-
1.முதலில் இரத்த குழாய்களை குறுக்குகிறது -இரத்த அழுத்தம் உயர்வு
2.அட்ரீனல் சுரப்பியின் கார்ட்டக்ஸ் பகுதியில் இருந்து ஆல்டோஸ்டீரோன் என்ற ஹார்மோனை சுரக்க வைக்கிறது.
3.ஆல்டோஸ்ட்டிரோன் சிறுநீரக வடிப்பானின்(NEPHRON) வால் பகுதியில் உள்ள distal tubule (DCT) பகுதியில் சோடியத்தையும் நீரையும் மீண்டும் உறிஞ்சி இரத்தத்தில் சேர்க்கிறது.இதற்கு பகரமாக 2%பொட்டாசியம் வெளியேறுகிறது.2% பொட்டாசியம் வெளியேறும் அளவுவரைதான் ஆல்டோஸ்டீரோன் வேலை செய்யும்.மீதமுள்ள நீர் DCT ஐ தாண்டி சிறுநீர் சேகரிப்பு குழாய்க்கு சென்றுவிடும்.
4.உடனே ஆஞ்சியோடென்ஸின்-II மூளை பகுதியில் உள்ள கீழ் பிட்டியூட்டரியை தூண்டி சிறுநீர் அடர் இயக்குநீர் (ANTIDIURETIC HORMONE-ADH ) என்ற ஹார்மோனை சுரக்க வைக்கிறது.
5.இந்த ADH சிறுநீர் சேகரிப்பு குழாயை நீரை மட்டும் உறிஞ்சி மீண்டும் இரத்தத்தில் சேர்க்கும்படி பணிக்கிறது.ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய ஒரு லிட்டர் அளவு சிறுநீரக வடிகுழாய்களில் வடிக்கப்படும் வடிநீர் இறுதியில் இரண்டு அல்லது மூன்று மில்லி லிட்டர் அளவே சிறுநீராக மாறி சிறுநீர்ப்பையை அடைகிறது.இவ்வாறு நம் இரத்தத்தின் நீர் சத்து முழுவதும் வெளியேறி விடாமலும் இரத்தத்தின் அளவும் அதனால் இரத்த அழுத்தமும் குறைந்துவிடாமலும் பாதுகாப்பது இந்த RAAAS அமைப்பே ஆகும்.
இதற்கு எதிராக செயல்படும் அமைப்புதான் AAAA ஆகும்.இதன் முக்கிய என்ஜைம் ACE 2 ஆகும் (பார்க்க படம் -2.).
இந்த ACE 2 ஆஞ்சியோடென்ஸின்-II ஐ
ஆஞ்சியோடென்ஸின் 1-7 ஆகவும் ஆஞ்சியோடென்ஸின் -I ஐ ஆஞ்சியோடென்ஸின்-1-9 ஆகவும் மாற்றுகிறது.
அதே போல் ஆன்ஜியோடென்ஸின்-II ,ATR-2 இல் கிரியை செய்து இரத்தக்குழாய்களை விரிவடைய செய்கிறது.எனவே இந்த அமைப்பில் இருக்கக்கூடிய நான்கு AAAA களும் இரத்த குழாயை விரிவடைய செய்து அதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைகின்றன.
இனி இந்த கோவிட் -19 வைரஸிற்கும் இந்த அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு என்பதை பார்க்கலாம்.
இந்த புதிய கொரோன வைரஸ்-19 நம் உடலில் உள்ள செல்களை ACE 2 ஏற்பி மூலமாகவே தாக்குகிறது என்பதை நாம் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே பார்த்தோம்.
ACE 2 ஏற்பிகளை இந்த வைரஸ் அதிகமாக பயற்படுத்துவதால் இந்த ACE2 ஏற்பிகள், உடல் தேவைக்கு பயன்படமுடியாமல் தட்டுப்பாடாகிவிடுகிறது.
இதனால் நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி இரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடிய AAAA அமைப்பு பலஹீனமாகி விடுகிறது.அதன் எதிரணி அமைப்பு (RAAAS) பலம் பெற்று இரத்த அழுத்தத்தை உயர்த்திவிடுகிறது.
இரத்த அழுத்தம் அபரிமிதமாக உயர்வதால் இதயத்தின் சுமை அதிகமாகி இதய செயலிழப்பு ஏற்படலாம்.
வீக்கத்தை உண்டாக்கும் சுரப்புகளான சைடோகைன்கள் (cytokines),கிரியாட்டின் கைனேஸ் போன்றவை அதிகமாக சுரந்து நிமோனியா,நுரையீரல் இரத்த ஓட்டத்தில் சிறு சிறு இரத்த கட்டிகள் (PULMONARY EMBOLISM),மூளைக்கு இரத்த ஓட்டம் தடைப்படல்,வயிற்று போக்கு ஆகியவை ஏற்படலாம்.
எனவே இறுதியாக இந்த கோவிட்-19 வியாதி இதய மற்றும் இரத்த ஓட்டம் ஆகியவற்றை பாதிப்பதால் இந்த மாதிரி பாதிப்பு உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன.விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்