மனவெறி தணிப்பான்கள்-ஜாக்கிரதை
(BEWARE OF ANTI-PSYCHOTICS)
ஏற்கனவே இதுபற்றி இதே பிளாக்கரில் பொதுப்படையாக வேறு ஒரு பதிவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலும் மக்களுக்கு மருந்துகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் மீண்டும் மீண்டும் மனநோய் மருந்துகள் பற்றிய மேல்விவரங்களை இங்கு நாம் பதிவிடுகிறோம்.
பொதுவாக மன நோய் என்று ஒன்று கிடையாது. அதை நாம்தான் வீணாக கவலை பட்டு உண்டாக்கிக்கொள்கிறோம். கவலை என்பது ஒரு சோதனைதான். ஒன்று தீர்ந்தால் இன்னொன்று தானாகவே முளைத்துவிடும்.
ஒரு பழைய பாடல் "பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூமுடித்தேன் -மன்னாதி மன்னனைப்போல் மாளிகையில் வாழுகிறேன்-சொன்னாலும் வெட்கமடா....
பாய்விரித்துப்படுப்பவனும் வாய் திறந்து தூங்குகிறான் -பஞ்சணையில் நான்படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை -சொன்னாலும் வெட்கமடா....."ஆம் மேலே கண்ட பாடல் வரிகள் மனிதன் எதிலுமே திருப்தி அடைவதில்லை. இருக்கும் போது இல்லாதவனைப்பார்த்து ஏங்குகிறான். இல்லாதபோது இருப்பவனை பார்த்து ஏங்குகிறான். இதுதான் மனிதனின் மனநிலை.
இன்னொரு பாடல்
"இல்லை இல்லை என்பவர்க்கு கவலை இல்லை-ஆனால் இருந்தும் இல்லை என்பவர்க்கு அமைதி இல்லை"
மேலே கண்ட பாடல் வரிகள் மனிதனின் பேராசையை உணர்த்துகிறது. எவ்வளவுதான் செல்வம் சேர்ந்தாலும் அது காணவில்லை. இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற அந்த பேராசையால் தன ஆரோக்கியத்தை மறந்து குடும்பத்தை மறந்து ஆலாய் பறக்கிறான். நிம்மதியை தொலைக்கிறான். கடைசியில் தூக்கத்தை இழந்து மன ஆரோக்கியத்தை இழந்து மனவெறிக்கு ஆளாகி டாக்டரிடம் தஞ்சமடைகிறான். இனி தூக்க மாத்திரை, சைக்கோ மருந்துகள் என்று அவற்றிற்கு அடிமையாகி தன் ஆயுளை மிக வேகமாக தொலைக்கிறான்.
தூக்க மாத்திரைகள் பற்றி நாம் ஏற்கனவே இந்த பிளாக்கரில் பதிவிட்டு இருக்கிறோம்.
எனவே இங்கு மனவெறி மருந்துகள் பற்றி மட்டும் ஒரு எச்சரிக்கை பதிவிடப்பட்டு இருக்கிறது.
மனவெறி (PSYCHOSIS):-
நம் மனோநிலையின் எண்ண ஓட்டங்களுக்கேற்ப நமது மூளை நரம்பு ஹார்மோன்களில் நரம்பை தூண்டும் ஹார்மோன்கள் நரம்பை முடக்கும் ஹார்மோன்கள் என்று மாற்றி மாற்றி ஓடவிடுகிறது. மனம் அமைதி பெரும்பொழுது மூளை இந்த ஹார்மோன்களின் ஓட்டங்களை தானாகவே சரி செய்துவிடுகிறது.
மனம் பதட்ட நிலையில் இருக்கும் பொழுதும்,வெறி பிடித்த நிலையில் இருக்கும் பொழுதும் சரி மூளை கீழ்கண்ட நரம்பு தூண்டி ஹார்மோன்களை ஓடவிடுகிறது. அவை,
1.நார்-அட்ரீனலின் (நார்-எபிநெப்ரின்)
2.டோப்பமின்
3.அசிடைல்கோலின்
4.குளூட்டாமிக் அமிலம்
5.அஸ்பார்ட்டிக் அமிலம்
மேற்கூறியவற்றில் டோப்பமின் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது.
காரணம் டோப்பமின்தான்,ஞாபகசக்தி, சிந்திக்கும் ஆற்றல்,நோக்கத்திற்கேற்ப உடல் உறுப்புகளை அசைத்தல், அறிவாற்றல்,பேச்சு மூச்சு என்று பல நிலைகளுக்கும் காரணியான ஹார்மோன் ஆகும்.
அதே வேளை சில பதட்டமான எல்லை மீறிய விரும்பத்தகாத சூழல்களுக்கு மூளை ஆளாகும் போது டோப்பமின் ஆளுமையும் எல்லை மீறுகிறது. இப்போதுதான் மனதில் நிலை தடுமாறிய வெறித்தனமான எண்ணங்கள் உருவாகக்கூடும். விபரீதமான காரியங்களில் மனம் ஈடுபட முற்படும்.
இந்த நிலையில்தான் சைக்கியாட்ரிஸ்டுகளிடம் போகிறார்கள். அவர் என்ன செய்வார்? தூக்க மாத்திரையும், மனவெறி தணிக்கும் மாத்திரைகளையும்தான் தருவார். படுக்கையிலிருக்க கூடிய வயோதிகர்கள் மதியில்லாத நிலையில் தரும் தொல்லைகளை சகிக்க முடியாமல் இந்த மருந்துகளை தந்து அவர்களை தூங்க வைக்கிறார்கள். ஆனால் நடமாடக்கூடிய நல்ல நிலையில் இருப்பவர்களும் இந்த மருந்துகளுக்கு அடிமைப்பட்டு தங்கள் உடலையும் மூளையையும் சிதைத்துக்கொண்டு இருக்கிறார்களே என்பதுதான் வேதனை.
இந்த மருந்துகளை தின்றுதான் டோப்பமினை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மனக்கட்டுப்பாடு ,நல்ல சூழ்நிலைகள் பொழுது போக்குகளில் ஆட்படுத்தல்,பொறுமை,சகிப்புத்தன்மை, மென்மையான உடற்பயிற்சிகள், சுற்றுலா என்று மனதை மாற்றக்கூடிய நல்ல செயல்களின்மூலம் கூட நம்முடைய ஹார்மோன்களின் சுரப்புகளை சீர்செய்ய முடியும்.
விரும்பத்தகாத சூழல்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். தவிர்க்க முடியவில்லை என்றால் கடவுளின்மீது பாரத்தை போட்டு பொறுமையுடன் சகித்துக்கொள்ளுங்கள். சகிப்பு தரும் கஷ்டத்திற்கு பிறகு நிச்சயம் ஒரு சுகம் இருக்கிறது என்பது இறை வாக்கு.
நீங்கள் சாப்பிடும் மனவெறி தணிப்பான்கள் எப்படியெல்லாம் உங்கள் மூளையை தாக்குகின்றன என்பதை கீழ்கண்ட சில படங்களின் மூலம் விளக்கலாம்.
மேலே காட்டப்பட்டுள்ள படத்தில் சப்ஸ்டென்ஷியா நிக்ரா மற்றும் டெக்மெண்டல் கரு என்ற பகுதிகளிலிருந்துதான் டோப்பமின் உற்பத்தியாகிறது.(படம்-1)
![]() |
படம்-1-பெருமூளையின் அடிப்பகுதி-டோப்பமின் உருவாகுமிடங்கள் படத்தை இன்னும் தெளிவாக்க அதன் மீது க்ளிக் செய்யவும் |
![]() |
படம்-2-டோப்பமின் பெருமூளையில் பயணிக்கும் 4வழிகள் படத்தை தெளிவாகக்காண அதன் மீது க்ளிக் செய்யவும் |
![]() |
படம்-3 படத்தை தெளிவாகக்காண அதன் மீது க்ளிக் செய்யவும். |
மேலே படம் -3 இல் காட்டியபடி மனவெறி தணிப்பான்கள் டோப்பமினை அதன் ஏற்பிகளில் சேரவிடாமல் தடுத்து மனோநிலையை சீராக்குகின்றன. ஆனால் இதை தொடர்ந்து நீண்ட நாட்கள் சாப்பிடும் பொழுது மனோநிலையை மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன
மனோநிலை பாதிப்பு :-
படம்-4
தெளிவாகப்பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்
தூக்கமின்மை, மனவெறி, மனச்சோர்வு உட்பட அனைத்து விதமான மன நோய்களுக்காகவும் நீங்கள் எடுக்கும் மருந்துகளும் மருத்துவமும் எவ்வளவு போலியானவை உண்மைக்கு புறம்பானவை என்பதை விளக்கத்தான் மேலே உள்ள படம்-4 இங்கு பதியப்பட்டு இருக்கிறது.

தெளிவாகப்பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்
ஆம் தூக்கம் வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக நீங்கள் சாப்பிடும் தூக்க மாத்திரை உங்களை மீண்டும் தூக்கமின்மையிலும், தொடர்ந்து பரபரப்பு நிலையிலும் இறுதியில் மனவெறியிலும் கொண்டுபோய் விடுகிறது.
பிறகு டாக்டரிடம் போய் மனவெறிக்கு மருந்து சாப்பிடுகிறீர்கள். அதுவும் நீண்ட காலம் எடுக்கும் போது உங்களை அசதி, மயக்கம், மனச்சோர்வு என்ற நிலைகளுக்கு கொண்டு போய் தள்ளுகிறது.
மீண்டும் டாக்டரிடம் போய் மனச்சோர்வுக்கு மாத்திரை எழுதி வாங்கி வந்து நீண்ட நாட்களுக்கு உபயோகிக்கும் போது அது மீண்டும் உங்களை மனவெறிக்கும் தூக்கமின்மைக்கு கொண்டு போய் விடுகிறது. (படம்-4). இப்போது எண்ணிப்பாருங்கள் இதில் எங்கே உண்மையான நிவாரணம் இருக்கிறது?
உங்களை நிரந்தர நோயாளியாக்குவதுதான் இந்த சைக்கோ மருந்துகள்.
உடல் பாதிப்புகள் :-
சைக்கோ மருந்துகள் மனதை மட்டுமல்ல உடலையும் பாதிக்கக்கூடியவை ஆகும். அவை கீழ்கண்ட உடல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
2.இதய மற்றும் இரத்த அழுத்த சீர்கேடு
3.கல்லீரல் பாதிப்பு.
5.மூளை நரம்பு மண்டல பாதிப்பு.
6.வளர்சிதை மாற்றங்களில் சீர்கேடு -நீரிழிவு.