கோலினெர்ஜிக் நரம்புமண்டல அடைப்பான்கள்-பின் விளைவுகள்
![]() | ||
மனித நரம்பு மண்டலம்
(HUMAN N.S)
அசிடைல்கோலின், இது நம் உடலின் மொத்த நரம்பு மண்டலத்தில் 75% பகுதியை ஆட்டிப்படைக்கும் ஒரு நரம்பு தகவல் கடத்தி இயக்குநீர் (Neuro Transmitter Hormone) ஆகும். இதன் தாக்கம் தடுக்கப்பட்டாலும் பிரச்சினைதான் தூண்டப்பட்டாலும் பிரச்சினைதான் . இங்கு நாம் இதன் தாக்கங்களை தடுப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை பற்றி மட்டுமே சுருக்கமாக ஆனால் தெளிவாக பார்ப்போம்.
பொதுவாகவே அசிடைல்கோலின் என்ற நரம்பு கடத்தி நீரை (Neurotransmitter Hormone) அதன் ஏற்பிகளில் (Receptors) சேரவிடாமல் அடைக்கும் எந்த ஒரு மருந்தும் கோலினெர்ஜிக் எதிர்ப்பான் வகையில் சேரும் . எனினும் நாம் இங்கு தானியங்கி நரம்பு மண்டல (Autonomic Nervous System) தொகுப்பின் ஒரு கிளையான கோலினர்ஜிக் நரம்பு மண்டலத்தின் (Cholinergic Autonomic Nervous System) பின்பகுதியின் (Postganglionic) இறுதியில் சுரக்கும் அசிடைல்கோலினை அதன் மஸ்காரின் வகை ஏற்பிகளில் (Muscarinic Receptors) சேரவிடாமல் அடைக்கும் மருந்துகளைப்பற்றி மட்டுமே பார்ப்போம். ஏனெனில் இந்த மஸ்காரின் ஏற்பிகள் குறிப்பிட்ட இலக்குகளாக உள்ள உறுப்புகளில் அமைந்திருப்பதால் இந்த மருந்துகளின் தாக்கங்கள் அந்த உறுப்புகளின் இயக்கங்களை வெகுவாக பாதிக்கும். இதை சுருக்கமாக கோலினெர்ஜிக் எதிர்ப்பு விளைவுகள் (Anticholinergic Effects) என்றும் கூறலாம்
பாகம் -1
கீழேயுள்ள படம்-1 இல் கோலினெர்ஜிக் தானியங்கி நரம்பு மண்டலம் எந்தெந்த உறுப்புகளுக்கெல்லாம் பரவி இருக்கிறது என்பதை காணலாம்
கோலினெர்ஜிக் நரம்பு மண்டலத்தின் முண்டு பிற்பகுதி நரம்புகள் (Postganglionic neurons)உடலின் பல பாகங்களுக்கும் பரவி இருந்தாலும் முக்கியமான பகுதிகள், கண், இதயம், நுரையீரல் மண்டலம், வாய் மற்றும் ஜீரண மண்டலம், சிறுநீர் மற்றும் பாலுறுப்பு மண்டலம், மற்றும்
![]() |
படம் -1 |
கோலினெர்ஜிக் நரம்பு மண்டலத்தின் முண்டு பிற்பகுதி நரம்புகள் (Postganglionic neurons)
இதில் வியர்வை மண்டலமும் அடங்கும். (படம் -1).
இந்த நரம்பு மண்டலங்களின் இறுதியில் சுரக்கும் அசிடைல்கோலின் என்ற நரம்பு செய்திகடத்தியின் ஏற்பிகள் அந்தந்த உறுப்புகளிலேயே அமைந்துள்ளது. அதற்கு மஸ்காரினிக் ஏற்பிகள் என்று பெயர்.(படம் -1)
அசிட்டைல்கோலின் தனது மஸ்காரின் ஏற்பிகள் மூலம் எப்படி அதன் இலக்கு உறுப்புகளில் தாக்கங்கள் ஏற்படுத்துகின்றது என்று பார்க்கலாம்.
1.கண்:-
2.இதயம் :-
3.சுவாசமண்டலம்
4.ஜீரண மண்டலம்
5.சிறுநீர் & பாலுறுப்பு-ஆண் & பெண்
6.தோல் &வியர்வை சுரப்பிகள்
பாகம் -2-பின் விளைவுகள்
![]() |
படம்-1அ |
மேலே படம்-1இல் காட்டியபடி கண்ணின் மஸ்காரின் ஏற்பியை தாக்கும் அசிடைல்கோலின் கீழ்கண்ட விளைவுகளை கண்களில் ஏற்படுத்துகிறது .
1.கண்ணின் சீலியா தசைகளை குறுக்குகிறது
2.கண்ணின் கருவிழியை குறுக்கி விழித்திரையில் விழும் பிம்பத்தை சரிசெய்து தெளிவாக்குகிறது
3.கண்ணீரை சுரக்கவைப்பதன் மூலம் கண்ணின் ஈரப்பதத்தை உறுதி செய்கிறது
2.இதயம் :- 
படம் 1ஆ
இதயத்தின் மஸ்காரின் ஏற்பியை தாக்கும் அசிடைல்கோலின் இதயத்திலும் இரத்த அழுத்தத்திலும் பின் வரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.1.இதயத்துடிப்பு நிதானப்படுத்தல் 2.இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் சீராக இருத்தல்

3.சுவாசமண்டலம் 
படம்-1இ
நுரையீரல் மற்றும் சுவாசபகுதியிலிருக்கும் மஸ்காரின் ஏற்பிகளை அசிடைல்கோலின் தாக்குவதன் மூலம் கீழ்கண்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது 1.நுரையீரலிலிருந்து தொண்டை மற்றும் மூக்கு வரை உள்ள பகுதிகளின் சுரப்புகளை சீர்படுத்தி அவற்றின் ஈரப்பதங்களை நிலைப்படுத்துகிறது 2.சுவாசக்குழாய்கள் விரிவடைந்து சுவாசகுழாய் மற்றும் காற்றுப்பைகளின் அழுத்தம் (Alveolar Pressure) நிலைகுலைந்துவிடாமல் சீர் செய்கிறது. அதாவது சுவாசக்குழாய்கள் விரிவடையாமல் பார்த்துக்கொள்கிறது.

4.ஜீரண மண்டலம் 
படம்-1ஈ

5.சிறுநீர் & பாலுறுப்பு-ஆண் & பெண் 
படம் 1உ

அசிடைல்கோலினின் சிறுநீர் மற்றும் ஆண் பாலுறுப்புகளின் மீது ஏற்படும் மஸ்காரின் விளைவுகள் பின்வருமாறு:-
1.சிறுநீர் பை சுருங்குதல்
2.சிறுநீர்ப்பையின் கீழ்வாயிலுள்ள வளைய தசை விரிவடைந்து சிறுநீர் வெளியேற உதவுதல்
3.ஆணுறுப்பு விறைத்தல் (Erection)
பெண் பால் உறுப்புகளின் மீது அசிடைல்கோலினின் மஸ்காரின் தாக்கம் இல்லை.
எனினும் பொதுவாக உடல் முழுவதும் கோலினெர்ஜிக் அட்ரீனர்ஜிக் நரம்புத்தாக்கங்கள் ஒரு சமன்பாட்டிலேயே இருக்கின்றன. கோலினர்ஜிக் எதிர்ப்பான்களை பெண்கள் அளவு மீறி பயன்படுத்தும் போது இந்த சமன்பாடு சீர்குலைந்து பெண்பாலுறுப்புகளான சினை, கர்ப்பப்பை போன்ற உறுப்புகள் அசாதாரண நிலையில் இயங்கலாம். உதாரணமாக கர்ப்பிணியின் கர்ப்பப்பை கோலினர்ஜிக் எதிர்ப்பான்களால் அதிக அட்ரீனர்ஜிக் தாக்குதலுக்கு ஆளாகி சுருங்கி கருச்சிதைவையோ அல்லது குறைப்பிரசவத்தையோ உண்டாகலாம்.
6.தோல் &வியர்வை சுரப்பிகள் 
படம்-1ஊ

பாகம் -2-பின் விளைவுகள்
இனி கோலினெர்ஜிக் மஸ்காரினிக் எதிர்ப்பான்கள் மூலம் அசிடைல்கொலினின் மஸ்காரின் தாக்கங்களை முடக்குவதால் ஏற்படும் விளைவுகளை பார்க்கலாம். இதில் எவரும் மேலே பாகம் -1-இல் விவரிக்கப்பட்ட மஸ்காரின் விளைவுகளுக்கு எதிர்விளைவுகள்தான் உண்டாகும் என்று சுலபமாக கணிக்கலாம். இதை கீழே உள்ள படம்-2இல் காணலாம்.
![]() |
படம்-2 |
மேலே படம்-2 இல் மஸ்காரின் தாக்கத்தை முடக்கினால் என்னென்ன எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதை மேல் கீழ் அம்புக்குறிகள் (↑ ↓) இட்டு காட்டி இருப்பதால் இதை மேற்கொண்டு விவரிக்கத்தேவை இல்லை.
எனினும் சுருக்கமாக கோலினர்ஜிக் எதிர்ப்பான்களால் ஏற்படும் பாதிப்புகளை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்:-
1.கண் வறட்சி.,தெளிவற்ற பார்வை
2.இதயத்துடிப்பு அதிகரித்தல்
3.இரத்த அழுத்தம் உயருதல்
4.சுவாசமண்டலத்தில் விரிவு மற்றும் வறட்சி. மூச்சு திணறல் .
5.வாய் வறட்சி
6.மலச்சிக்கல்
7.சிறுநீர் அடைப்பு
8.ஆண்மைக் குறைவு
9.வியர்வை வெளியேற முடியாமல் உடல் உஷ்ணம் அதிகரிப்பு
10.மூளைக்கு இரத்த ஓட்டம் குறைவதால் தலை சுற்று,மயக்கம்,சோர்வு, மாயத்தோற்றங்கள் ஏற்படும்.
நாம் அன்றாடம் உபயோகிக்கும் எத்தனையோ மருந்துகளில் இத்தகைய கோலினர்ஜிக் எதிர்ப்பு தன்மைகள் உள்ளன. அவற்றில் டாக்டர் சீட்டில் கிடைக்கும் மருந்துகளும் அடங்கும்.
அலர்ஜி இருமல் டானிக்குகளை உபயோகிக்கும் போது கவனம். அவற்றில் இருக்கும் டைப்பன்ஹைட்ராமின் ஹைட்ரொக்ளோரைடு, குளோர்பெபெனிரமின் மாலியேட் போன்றவை கோலினர்ஜிக் எதிர்ப்பான்களாகும். இன்னும் செட்ரிஜின் (செட்ஜின்),லீவோசெட்ரிஜின், மான்டிலுகாஸ்ட் போன்ற அலர்ஜி மற்றும் ஆஸ்துமா மருந்துகளிலும் கோலினர்ஜிக் எதிர்ப்பு இருக்கிறது. பொதுவாக அலர்ஜி மருந்துகள், தூக்க மருந்துகள், ட்ரிப்டோமர் போன்ற சைகோட்டிக் மருந்துகளும் அனைத்திலும் கோலினர்ஜிக் எதிர்ப்பு சக்தி உண்டு.
தூக்க மாத்திரைகளை ரெகுலராக விழுங்கினால்தான் எனக்கு தூக்கமே வருகிறது என்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை நீங்கள் தூங்கும் இந்த தூக்கம் ஆரோக்கியமான தூக்கமல்ல. இப்படி மாத்திரை போட்டு தூங்குவதைவிட நீங்கள் தூங்காமலே ஆரோக்கியமாக இருக்கலாம்.ஏனென்றால் இந்த கெட்ட தூக்கம் உங்கள் உறுப்புகளையும் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து கொண்டிருக்கிறது. உங்களை வாழ்க்கையின் எல்லைக்கே கொண்டுபோய்க்கொண்டு இருக்கிறது. அவை அனைத்துமே கோலினெர்ஜிக் எதிர்ப்பான்களாகும். உங்கள் நரம்பு மண்டலம் சிதைந்து சின்னாபின்னமாகிப்போகும். கை நடுங்கி கண் மறையும் காலம் வெகு சீக்கிரம் வந்து சேரும்.
குழைந்தைகள் அழுது தொல்லை தருகிறது என்பதற்காக வயிற்றுவலி, அல்லது இருமலுக்கு தரும் சொட்டுமருந்துகளை கொடுத்து தூங்கவைக்கிறார்கள்.இது எவ்வளவு பெரிய கொடுமை. ஏனென்றால் அவை அனைத்துமே கோலினர்ஜிக் முடக்கிகளாகும்.
அல்சர் மாத்திரைகளான ரானிட்டிடின் (Ranitidine), இரத்தம் நீர்க்கும் மருந்தான வார்பாரின் (Warfarin), நீரிளக்கி மருந்துகளான லாசிக்ஸ் (Lasix or Furosamide), ஹைட்ரொக்ளோரோ தையசாய்டு (Hydrochlorothiazide or Esidrex) போன்றவை மிகக்கடுமையான கோலினர்ஜிக் எதிர்ப்பான்களாகும்.இவற்றை வழமையாக எடுப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஓய்வு எடுக்கவேண்டும். டிரைவிங், கட்டுமான பணிகள் சமையல் போன்ற ரிஸ்க்கான காரியங்களில் உடனே ஈடுபடக்கூடாது.
டாக்டர்கள் உடல் வலிகளுக்கும் வலிப்புகளுக்கும் அடிக்கடி எழுதிக்கொடுக்கும் மருந்துகள் பிரிகாபாலின் (Pregabalin or Lyrica), காபாபென்டின் (Gabapentin or Neurontin) ஆகியவை. இவை தாராளமாக பார்மசி கவுண்டர்களில் மிட்டாய் போல் கிடைக்கிறது. இவற்றை காபா தூண்டி (Gabaergic) மருந்து என்பார்கள். இவை அனைத்தும் கோலினெர்ஜிக் எதிர்ப்பு மருந்துகளாகும். அடிக்கடி இதை உபயோகித்தல் காக்காய் வலிப்பில் கொண்டுபோய் விடும், ஜாக்கிரதை. இன்னும் அதிகம் போனால் உங்கள் மூச்சையும் நிறுத்திவிடும், கவனம்.
நாம் அன்றாடம் உபயோகிக்கும் கோலினர்ஜிக் எதிர்ப்புமருந்துகளின் குறைந்தபட்ச எண்ணிக்கையை கீழ்கண்டவாறு மூன்று அட்டவணைகளாக இடலாம்.
![]() |
அட்டவணை-1 |
![]() |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக