புதன், 18 செப்டம்பர், 2019

இசிஜி பயிற்சிகள் -ஏ -நெஞ்சு படபடப்புகள் (நோய் நிலை -PALPITATIONS)

நோய் நிலையில் நெஞ்சு படபடப்பின் இசிஜி மாதிரிகளை படிப்பிக்கும் பயிற்சிகள் 

ஒழுங்கற்ற இதய துடிப்புகள் :(CARDIAC ARRHYHMIAS)
1.மேலறை குறுந்துடிப்புகள் 
இதை மருத்துவ மொழியில் ATRIAL FIBRILLATION என்பர்.                                        
கீழே படம் -1 இல் ஒரு நார்மல் ரிதம் காட்டப்பட்டு உள்ளது .
படம்-1

இந்த நார்மல் சைனஸ் ரிதமில் உள்ள P,Q,R,S, மற்றும் T அலைகளை நன்றாக மனதில் கொள்ளுங்கள்.இதை அடிப்படையாக வைத்துதான் இனி நோய் நிலையில் எடுக்கப்பட்ட இசிஜிகளின் மாதிரிகளை புரிந்து கொள்ளும் பயிற்சிகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 
படம்-2
1.மேலறை குறுந்துடிப்புகள் (Atrial Fibrillation)
மேலே உள்ள இசிஜி மாதிரியில் (படம்-2)  lead -II பதிவுகளை பார்க்கவும்.அதில் P-அலைகள் இல்லை.இன்னும் உற்று நோக்கும் பொது P-அலைகளுக்கு பதில் நெளிவுகளாக அலைகள் இருக்கின்றன இவற்றை F-அலைகள் என்று கூட சொல்லலாம்.நாம் ஏற்கனவே முன் பதிவுகளில் P-அலை என்பது நோயற்ற  இதயத்தின் மேலறைகள் சுருங்குவதால் ஏற்படுவது என்று அறிந்தோம்.ஆனால் P-அலை நார்மலாக இல்லாமல் நெளிவுகளாக இருப்பதால் இதை மேலறைகள் குறுந்துடிப்பு (Atrial Fibrillation) என்பர்.இதில் R -R இடைவெளி நீண்டும் குறுகியும் இருக்கும் சில இடங்களில் 3LS அளவிலும் சில இடங்களில் 2LS அளவிலும் இருக்கும் எனவே நாடித்துடிப்பை கீழ் கண்டவாறு கணக்கிடலாம்.
     HR (நாடித்துடிப்பு )=300 x 2/2+3=600/5
                                                              =100 bpm 
இந்த அளவு 100 என்ற ரீதியிலும் இருக்கலாம்.
6 செகண்ட் முறையில் 6 செகண்டுகளில் (30LS) 11 R-அலைகள் இருப்பதால் HR =11 X 10 =110 bpm ஆகும்.
இதில் lead -I இல் எதுவுமே சரியாக பதிவாகவில்லை ஏனென்றால் இதுதான் இதயத்தை 90 டிகிரியில் இருந்து நோக்குகிறது இது மேலறைகளை சரியான கோணத்தில் நோக்குவதால் இதில் எதுவுமே சரியாக பதிவாகவில்லை ஏனென்றால் மேலறைகள் சரியாக சுருங்கி விரியவில்லை 
மேலும் அலைகள் ஒழுங்கற்றும் அடிக்கோட்டிற்கு மேலும் கீழுமாக இருக்கின்றன.மேலறைகள் சரியாக சுருங்கிவிரியாததால் இரத்தம் சரியாக வெளியேறாமல் தங்கும் இதனால் பொடி பொடி உறைவுகளாக (Clots)மாறி மூளை மற்றும் நுரையீரல் ரத்த குழாய்களில் அடைப்புகள் உண்டாகி மூச்சு திணறல் மற்றும்  ஸ்ட்ரோக் ஆகியவை ஏற்படலாம்

அறிகுறிகள் :-

1.நெஞ்சு வேகமாக படபடத்தல் 
2.பலஹீனம்,அசதி,சோர்வு  
3.உடற்பயிற்சி செய்ய இயலாமை 
4.தலைவலி 
5.மூச்சு திணறல் 
6.மயக்கம் 
7.நெஞ்சு வலி 

காரணிகள் :-

1.உயர் இரத்த அழுத்தம் 
2.மாரடைப்பு 
3.கரோனரி தமனியில் கோளாறு 
4.இதய வால்வுகளில் கோளாறு 
5.பிறவியிலேயே இதயம் பழுதாகி இருத்தல் 
5.தைராய்டு மிகைபாடு 
6.வளர்சிதை மாற்றங்களில் கோளாறு (Metabolic Imbalances)
7.அதிக காபி,ஆல்கஹால்,மற்றும்  புகைப்பழக்கம் 
5.தாது உப்புகள் ஏற்ற தாழ்வுகள் 
(உம்)பொட்டாசியம்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் குறைபாடு 
சோடியம் மிகைபாடு -மொத்தத்தில் இறுதிக்கட்ட சிறுநீரக கோளாறு)
இந்த காரணிகள் பெரும்பாலும் கீழே நாம் விவரித்திருக்கும் இதய மேலறை படபடப்பிற்கும்(Atrial Flutter) பொருந்தும்.எனினும் மேலறை குறுந்துடிப்பு ,மேலறை படபடப்பைவிட கடுமையானதாக இருக்கும் . 



                                 படம்-3
2.மேலறை படபடப்பு :-(ATRIAL FLUTTER )
மேலே படம் 3 இல் காட்டப்பட்டிருக்கும் மாதிரி இசிஜி சிறிது வித்தியாசமானது .இதிலும் P -அலைகள் இல்லை .F-அலைகள் இருக்கின்றன.அதே சமயம் R-R-இடைவெளி மிக நீண்டு 8LS வரை இருப்பதால் இதில் நாடிதுடிப்பின்(HR) அளவு 
     300/8 =ஏறக்குறைய 40 bpm ஆக இருப்பதால் இந்த நிலை Bradycardia ஆகும்.இந்த இசிஜியின் நோய் நிலை ஒருவித நெஞ்சு படபடப்பை(Palpitations)  குறிக்கும்.இதற்கு மருத்துவ மொழியில் மேலறை படபடப்பு  (Atrial Flutter )என்பர். இதில் முக்கியமாக ரிதம் ஒழுங்காக அடிபிறழாமல் இருக்கும்.
மேலறை படபடப்பில்  மின்னோட்டமானது SA முடிச்சிலிருந்து கீழிறங்கி வழமைபோல் AV முடிச்சிற்கு போகாமல் மீண்டும் மேலேயே வட்டமடிக்க துவங்கும்.இதனால் மேலறைகள் வேகமாக துடிக்கும் கீழறைகள் அதற்கு ஈடாக துடிக்காமல் சம்பந்தமில்லாமல் துடிக்கும்.இதில் மேலறைகள் வேகமாகவும் (Tachycardia )
கீழறைகள் மெதுவாகவும் (Bradycardia) துடிக்கும் 

அறிகுறிகள்:-

1.இதயம் படபடத்தல்,பந்தய குதிரைபோல் படுவேகமாக படபடத்தல் 

2.வேகமான நாடித்துடிப்பு 
3.மூச்சு திணறல் 
4.உடற்பயிற்சி மற்றும் ஓட்டம் போன்ற செயல்களில் இயலாமை 
5.நெஞ்சு வலி,இறுக்கம்,கனம் 
6.தலை சுற்றல்,தலை வலி ,மயக்கம் 
காரணிகள் :-

1.இரத்த அழுத்தம் 
2.இதயம் செயலிழப்பு 
3.பிறவி இதய கோளாறுகள் 
4.கரோனரி தமனிகளில் அடைப்பு 
5.ஈரிதழ் வால்வு கோளாறுகள் 
6.இதய தசைகள் பலவீனமடைதல் 
7.இரத்த குழாய்கள் தடித்தல் .-தொடரும் 

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...