வியாழன், 12 ஜனவரி, 2017

முந்திரிப்பருப்பின் பயன்கள்

முந்திரியின் நற்பலன்கள் 

முந்திரியின் நற்பலன்கள் மிக அற்புதமானவை.நம்மில் சிலர் முந்திரியை கொலஸ்ட்ரால் என்றும் ஜீரணக்கோளாறுகளை உண்டாக்கும் என்றும் தவறாக எண்ணி ஒதுக்குகின்றனர்.ஆனால் மருத்துவ ஆய்வில் முந்திரிப்பருப்பு மற்றும் அதன் எண்ணெய் அதன் பழம் ஆகியவை மிகவும் ஆரோக்கியமான பலன்களை அளிப்பதாக கண்டிருக்கிறார்கள்.

இதயம் மற்றும் இரத்த ஓட்டம் 

முதலாவது முந்திரி பருப்பில் அபரிமிதமான ஒமேகா-3 அபூரித கொழுப்பு அமிலங்கள் உள்ளன இவை இரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை (LDL) சுத்தீகரித்து நல்ல கொழுப்பாக (HDL )மற்ற வல்லவை.மேலும் முந்திரியில்  மலிந்திருக்கும் ARGININE என்ற பொருள் தமனி இரத்த குழாயின் உள் சுவரை பலப்படுத்துகிறது 
மேலும் முந்திரியை பொதிந்திருக்கும் பொட்டாஷியம்,வைட்டமின் -இ ,வைட்டமின் -பி மற்றும் போலிக் அமிலம் ஆகியவை இதயத்திற்கும் இரத்த ஓட்டத்திற்கும் புத்துயிர் அளிக்கின்றன 

இரத்தம் 

முந்திரியில்  தாமிர சத்து உள்ளது இது நம் உணவில் உள்ள இரும்பு சத்தை இரத்தத்தில் சரியான முறைகள் தன்மையை மாகவைக்கும் எனவே இரும்பு சத்து குறைவினால் ஏற்படும் சோகை நோய் நம்மை தாக்காது.மேலும் முந்திரியில் இரும்பு சத்தும் உள்ளது 

உயர் ரத்த அழுத்தம் 

முந்திரியை இருக்கும் மக்னீஷியம் சத்து நம் இரத்த ஓட்டத்தை சீர் படுத்தி high B.P எனப்படும் உயர் இரத்த அழுத்தம் உண்டாகாமல் பார்த்து கொள்ளும்

 

கண் 

தினமும் நாலைந்து முந்திரிப்பருப்புகளை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும் .காரணம் முந்திரியை உள்ள leutin மற்றும் zeaxanthin என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் பிக்மென்ட்டுகள் இவை கண்களின் விழித்திரையை பாதுகாக்கின்றன.இதனால் விழித்திரையில் நடுப்பகுதியில் உள்ள macular என்ற அமைப்பு புற  ஊதா கதிர்களினால்  சீர்குலையாமல் பாதுகாக்கப்படும்

எடை குறைப்பு 

ஒருநாளைக்கு இரண்டு வேளை ஒரு சிட்டிகை வீதம் ஒழுங்காக முந்திரி சாப்பிடுபவர்களுக்கு இதிலிருக்கும் ஒமேகா -3 அபூரித்த கொழுப்பு அமிலங்கள் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுவதாக  ஒரு ஹாவார்ட் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.எனவே ஆரோக்கியமான எடை குறைப்பு கிடைக்கும் 

புற்று நோய் எதிர்ப்பு 

முந்திரியை தினமும் நாலைந்து சாப்பிடுவதால் இதிலுள்ள proanthrocyanindins என்ற ஒருவகை flavanoid களும் மற்றும் இதிலுள்ள தாமிர சத்தும் புற்று நோயை உண்டாக்கும் செல்களை அழித்து விடுகின்றன.முக்கியமாக குடல் புற்று வராமல் தடுக்கும் .மேலும் முந்திரியை இன்னும் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்டுகள் இருக்கின்றன 

தலை முடி கருமை 

 முந்திரியை தினசரி ஒழுங்காக சாப்பிடுபவர்களுக்கு அதிலுள்ள தாமிர சத்து தலை முடி கரு கரு வென செம்மையாக வளர உதவும் 

எலும்பு உறுதி 

முந்திரியை உள்ள கால்ஷியமும் மக்னீஷியமும் எலும்புகளுக்கு நல்ல உறுதி தருபவை 
மேலும் மக்னிஷியம் அதிகப்படியான கால்ஷியம் எலும்பிலிருந்து உருகுவதை தடுப்பதால் எலும்பு உறுதியடையும் நரம்பு மண்டலமும் இரத்த மண்டலமும் அதிகப்படியான கால்ஷியத்தினால் பாதிக்கப்படாமல் காக்கப்படும் இதனால் migrain போன்ற ஒற்றை தலைவலி தொல்லை தராது
இன்னும் முந்திரி யை வயது முதிர்ந்த பெண்கள் எடுத்துக்கொண்டால் தங்களது மாத விடாய் நிற்கும் காலத்தில் உண்டாகும் தூக்கமின்மை நிவர்த்தியாகும்
மேலும் முந்திரி பித்தப்பை கட்டிகள் (GALLSTONES )உண்டாகாமல் தடுக்கும் 
மேல் கூறிய காரணங்களால் முந்திரியை தினசரியோ அல்லது வாரம் ஒருமுறையோ எடுத்துக்கொண்டால் மிகுந்த நம்மை கிடைக்கும்


 

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...