ஆட்டோக்காயிடு ஹார்மோன்கள்
அறிமுகம்
Autacoids என்பவை உயிரியல் காரணிகள் (மூலக்கூறுகள்) ஆவன. அவை உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் ஹார்மோன்கள் போல செயல்படுகின்றன. அவை குறுகிய கால ஆயுளைக் கொண்டுள்ளன, மேலும் அவற்றின் தொகுப்புக்கு மற்றும் சுரப்புக்கு அருகிலேயே செயல்படுகின்றன.[1] Autacoid என்ற வார்த்தை கிரேக்க வார்த்தைகளான "autos" (self) மற்றும் "acos" (relief; அதாவது, மருத்துவம்) என்பதிலிருந்து வந்தது.
விளைவுகள்
ஆட்டாகாய்டுகளின் விளைவுகள் முதன்மையாக அவை சுரக்கப்படும் பகுதியை சுற்றியே இருக்கும், இருப்பினும் சில நேரங்களில் தேவைகளை பொறுத்து பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு மற்ற இடங்களின் புழக்கத்திற்கும் இரத்த ஓட்டம் மூலம் நகர்த்தப்படலாம். ஆனால் பெரும்பாலும் ஹிஸ்டமின், ப்ரோஸ்டாக்ளான்டின், செரோடோனின் போன்ற ஆட்டோக்காயிடுகள் இரத்த ஓட்டத்தில் சுரக்கப்படுவதில்லை. அவை லோக்கல் ஆகவே சுரக்கப்படுகின்றன. ஆட்டாகாய்டுகள் இரத்த ஓட்டத்தின் மூலம் கடத்தப்படும் போது உடலின் பல பகுதிகளிலும் முறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
சில ஆட்டோகாய்டுகள் மென்மையான தசைகள் போன்ற குறிப்பிட்ட திசுக்களில் அவை ஏற்படுத்தும் தாக்கத்தால் முக்கியமாக வகைப்படுத்தப்படுகின்றன. இரத்த
நாள மென் தசை ஆட்டோக்காயிடுகளை பொறுத்தவரை, வாசோகன்ஸ்டிரிக்டர் (இரத்த நாள சுருக்கிகள்-Vasoconstrictors) மற்றும் வாசோடைலேட்டர் (இரத்த நாள விரிப்பிகள்-Vasodilators) என்று இரண்டாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. உடற்பயிற்சியின் போது வாசோடைலேட்டர் ஆட்டோகாய்டுகள் வெளியிடப்படுகின்றன. அவற்றின் முக்கிய விளைவு தோலில் காணப்படுகிறது, அங்கு அவை வெப்ப இழப்பை எளிதாக்குகின்றன.
இவை குறிப்பிட்ட பகுதிகளின் (local) ஹார்மோன்கள் ஆக செயல்படும் பொழுது அவை பாராக்ரைன் (செல்லிடைத் தொடர்பு) விளைவை ஏற்படுத்தும் . அதாவது செல்கள் தங்களுக்கிடையே இந்த ஹார்மோன்களின் மூலம் தொடர்புகளை உண்டாக்கிக்கொள்ளும் .
வகைகள் :-
1.ஈகோசனாய்டுகள், (ப்ரோஸ்டாக்ளான்டின்கள்) 2.ஆஞ்சியோடென்சின், 3.நியூரோடென்சின்,
4.NO (நைட்ரிக் ஆக்சைடு),
5.கினின்கள்,
6.ஹிஸ்டமைன்,
7.செரோடோனின்,
8.எண்டோதெலின்கள் மற்றும் 9.பால்மிடோய்லெத்தனோலாமைடு
(palmitoylethanolamide)
ஆகியவை குறிப்பிடத்தக்க சில ஆட்டோகாய்டுகள் ஆகும்.
ஆட்டக்காயிடுகளை முடக்குவதால் ஏற்படும் பின்விளைவுகள்
![]() |
அட்டவணை-1 |
![]() |
அட்டவணை-2 |
நமது உடல் பெரும்பாலும் சிறு சிறு பிரச்சினைகளை ஆட்டக்காயிடுகள் மூலம் தீர்த்துக்கொள்ளும், ஆனாலும் சில சமயம் பிரச்சினைகள் தீரவில்லை என்றால் நம் உடல் ஆட்டக்காயிடுகள் மூலமாக பேசும் அழும் வேதனைகளை கக்கும். இந்த நிலையில் ஆட்டக்காயிடுகள் சுரப்பை முடக்கிவிட்டால் வேதனை தற்காலிகமாக முடங்கிவிடும். ஆனால் பிரச்சினை தீராது. அது உடலுக்குள்ளேயே தங்கிவிடும்.
உதாரணமாக மேலே அட்டவணையில் கண்டவாறு ஹிஸ்டமினை எடுத்துக்கொள்வோம். ஹிஸ்டமின் முடக்கிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் அட்டவணையில் விவரிக்கப்பட்டு உள்ளன. இதுபோல் மற்ற ஆட்டோக்காயிடுகளை முடக்குவதால் ஏற்படும் விளைவுகளையும் அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளன.
முடிவுரை
2015 ஆம் ஆண்டில், ஆட்டோகாய்டுகளின் புதிய வரையறை முன்மொழியப்பட்டது, இது ஆட்டோகாய்டு மருத்துவத்தை இன்னும் குறிப்பாக விவரிக்க உதவுகிறது: '"ஆட்டாகாய்டுகள் குறிப்பிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் மாடுலேட்டிங் அதாவது ஒழுங்குபடுத்தும் காரணிகள் ஆவன. அவை குறிப்பிட்ட பகுதிகளில் செல்கள் மற்றும்/அல்லது திசுக்களின் செயல்பாட்டை பாதிக்கின்றன, அவை தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்டு பின்னர் . அதே செல்கள் மற்றும்/அல்லது திசுக்களில்".வளர்சிதை மாற்றம் அடைந்து அழிகின்றன .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக