கண்
சுத்தீகரிப்பான்கள் -சில தகவல்கள்
சமீபத்தில் அமெரிக்காவின் FDA என்ற சுகாதார அமைப்பு இந்தியாவில் அதுவும் குறிப்பாக சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்துக்கு தடை விதித்து இருக்கிறது.
அதாவது இந்த மருந்தை யு.எஸ்ஸில் எங்குமே பயன்படுத்தக்கூடாது. காரணம் இதை பயன்படுத்தியவர்களுக்கு பார்வை பறிபோனது மட்டுமில்லாமல் சிலருடைய உயிரும் பறிபோயிருக்கிறது.
இந்த மருந்தை தயாரித்த சென்னை கம்பெனியை இங்குள்ள மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் இயங்க விடாமல் முடக்கி விட்டனர்.-செய்தி
நாம் இது பற்றி விபரமாக பார்ப்போம்.
கண் சொட்டு மருந்துகள் பலவகையாக இருந்தாலும் இப்பொது தடை செய்யப்பட்டு இருப்பது EYE FRESHENER எனப்படும் கண் சுத்தீகரிப்பானாகும்.
பொதுவாக கண் மருந்துகள் அது களிம்பாக இருந்தாலும் சொட்டு மருந்துகளாக இருந்தாலும் அது கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். இந்த நிபந்தனைகள் காது மற்றும் மூக்கு மருந்துகளுக்கும் பொருந்தும்.
1.நுண்ணியிரிகளிலிருந்து சுத்தமாக்கப்பட்டதாக இருக்கவேண்டும் (Must Be Sterile)
2.அமில ,காரத்தன்மைகள் மற்றும் சவ்வூடு பரவும் தன்மை ஆகியவை கண் திரவத்துடன்(LACRIMAL FLUID) சமன்படுத்தப்பட்டதாக இருக்கவேண்டும் (Must Be Isotonic and Iso pH)
3.ஒவ்வாமை இல்லாததாக இருக்கவேண்டும் (Allergic Free)
4.தூசு தும்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டதாக இருக்கவேண்டும் (Must Be Clean & Clear)
மேற்கண்ட நிர்பந்தங்களுக்கு உட்பட்டு மருந்துகள் பேக்கிங் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
மேலும் கண் அழுத்த நோய்க்கு பயனாகும் ஹைபர்ட்டானிக் (Hyper tonic)
மற்றும் ஹைப்போடானிக் (Hypo tonic) சொட்டு மருந்துகள் கண்டிப்பாக டாக்டரின் மேற்ப்பார்வையிலேயே உபயோகிக்கபட வேண்டும்.
பொதுவாக சுய மருத்துவம் என்பது ஆபத்தானது.
இப்பொது கண் சுத்தீகரிப்பான்கள் பற்றிபார்க்கலாம். இவற்றை செயற்கை கண்ணீர் (Artificial Tears) என்றும் சொல்லலாம்.
கீழ்கண்ட ரசாயனிகள் கண் சுத்தீகரிப்பான்களாக பயன்படுத்தப்படுகின்றன :-
1.கார்பாக்ஸி மீதையில் செல்லுலோஸ்
2.கிளிசரின்
3.பாலிசார்பேட் -80
மேலே கூறியவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ தனியாகவோ அல்லது கூட்டாகவோ பார்முலாவில் கலந்து இருக்கலாம். இவற்றில் அதிகமாக பயன்படுத்தப்படுவது கார்பாக்சி மீதையில் செல்லுலோஸ் என்ற மருந்துதான். அவற்றோடு பிற்சேர்க்கை (Additives) என்ற பெயரில் சில கூடுதல் இராசயனிகளும் சேர்க்கப்பட்டு இருக்கலாம். இவை தவறாக சேர்க்கப்பட்டு இருந்தாலோ அல்லது இவற்றில் ஏதோ ஒன்று நமக்கு அலர்ஜி உண்டாக்கக்கூடியதாக இருந்தாலோ விபரீத விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்ஆகவே எந்த ஒரு கண் சொட்டு மருந்துகளையும் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தாதீர்கள்.
கண்களை காப்போம்
https://pharmaceuticale.blogspot.com/2017/01/blog-post_26.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக