சனி, 3 ஆகஸ்ட், 2019

உங்கள் ஆரோக்கியம் -வீட்டில் மருத்துவ பரிசோதனை ரத்தக்கொதிப்பு அளவீடு-1

மின்னணு ரத்த அழுத்த மானிகள் 



வீட்டிலேயே உங்கள் ஆரோக்கியத்தை பரிசோதிக்க முதலில் இரத்த அழுத்தம்  ஒரு பிரதான பரிசோதனை ஆகும்.ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்தில் நொடிக்கொருமுறை நம் இரத்த அழுத்தம் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும்.

சூழ்நிலை தாக்கம்,உணர்ச்சிகள்,மற்றும் நோய்கள் போன்றவையே இதற்கு முக்கிய காரணிகளாகும்.
இரத்த அழுத்தத்தை நாமே நம் வீட்டில் உட்கார்ந்து பரிசோதிப்பதற்கு வசதியாக பல உபகரணங்கள் இப்போது சந்தைக்கு வந்துள்ளன.அவற்றில் மின்னணு உபகாரணகள் சாதா உபகரணங்கள் என்று வகை வகையாக மார்க்கட்டில் குவிந்துள்ளன 
அவற்றில் மின்னணு இரத்த அழுத்த மானிகள்,விவரங்கள்,உபயோகிக்கும் முறைகள் பற்றி மட்டும்  இங்கு பாப்போம்.
முதலில் இரத்த அழுத்தம் என்றால் என்ன வென்று சுருக்கமாக நாம் பார்க்கலாம் 
நம் உடல் ஆரோக்கியமாக இயங்க இரத்த ஓட்டம் மிகவும் இன்றியமையாதது ஆகும்.
நம் இதயம் நம் இரத்தத்தை உள்வாங்கி பிறகு வெளியேற்றி நம் உடல் முழுவதும் இரத்தத்தை ஓடவிடும் ஒரு பம்பிங்க் நிலயமாகவே ஓய்வில்லாமல் இயங்குகிறது.

இதயம் பற்றி சுருக்கமாக பார்க்கலாம் 

மேலே உள்ள படத்தின் சில விளக்கங்கள் :-
1.R-Atrium =வலது மேல் அறை 
2.L -Atrium =இடது மேல் அறை 
3.R-Ventricle =வலது கீழ்  அறை 
4.L-Ventricle =இடது கீழ் அறை 
5.The Aorta  =மகா தமனி 
6.The Pulmonary Artery =நுரையீரல் தமனி 
7.Pulmonary Vein =நுரையீரல் சிரை 
8.The Bicuspid or Mitral Valve =ஈரிதழ் வால்வ் (இடது மேல் மற்றும் கீழ் அறைகள் )
9.தி Tricuspid Valve =மூவிதழ் வால்வ்  (வலது மேல் கீழ் அறைகளுக்கு இடையில் )

மேலே இரண்டு கீழே இரண்டு என்று மொத்தம் நான்கு அறைகளை கொண்டது நம் இதயம்.
மேல் அறைகளுக்கு ஏட்ரியம் என்று கீழ் அறைகளுக்கு வென்ட்ரிக்கிள்கள் என்றும் மருத்துவம் கூறும்.இதில் இதயம் (மேல் அறைகள் சுருங்கி கீழ் அறைகள்)விரியும் போது  lub என்ற ஒலியுடன் விரியும் இந்த நிலையில் இதயத்தின் கீழ் அறைகளான வென்ட்ரிகில்கள் விரிந்த நிலையில் மேல் அறைகள் சுருங்கும்.இந்த நிலையில் இடது வென்ட்ரிகிளில்  சுத்தீகரிக்கப்பட்ட இரத்தம் நுரையீரல் சிறையின் மூலமாக இடது ஏட்ரியம் வந்து அங்கிருந்து வந்து நிறைக்கும்.அதே நேரம் வலது வென்ட்ரிகிளில் வலது ஏட்ரியமிலிருந்து அசுத்த இரத்தம் வந்து நிறைக்கும்.இதற்கு PRELOAD என்பர்.இதுதான் கீழ் நிலை இரத்த அழுத்தம் (DIASTOLE )எனப்படும் 
இதன் பிறகு கீழ் அறைகள் இரண்டும் dup என்ற சப்தத்துடன் சுருங்கும் இந்தநிலையில் இடது வென்ட்ரிகிளில் இருந்து சுத்த இரத்தம் மஹாதமனியில் (THE AORTIC TRUNK) எதிர் அழுத்தத்துடன் வேகமாக பாயும்.வலது வென்ட்ரிகிளிலிருந்து அசுத்த இரத்தம் நுரையீரல் தமணிக்குள் வேகமாக பாயும் .இது AFTERLOAD என்ற நிலை.இந்த நிலையில் இரத்த குழாய்களில் ஏற்படும் அழுத்தம் மேல்நிலை இரத்த அழுத்தம் (SYSTOLE)ஆகும்.இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையே ஏற்படும் துடிப்புகள் தமனி குழாய்களில் மிக தெளிவாக தெரியும்.இதுவே நாடி துடிப்பு (PULSE) ஆகும். 
இவற்றை நாம் வீட்டிலிருந்தே அளவீடு செய்யும் கருவிகள்தான் இரத்த அழுத்த மானிகள் (SPYGMOMANOMETERS)இவற்றில் மின் அணு மானிகளை பற்றி மட்டும் இங்கே பார்க்கலாம் 
இவை oscillometric முறையில் நம் இரத்தத்தை அளவீடு செய்பவை 
OSCILLOMETRY என்பது நம் உடலில்  
மணிக்கட்டு,விரல்கள் அல்லது முழங்கை இவற்றில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சுற்று பட்டையை (CUFF) சுற்றி இறுக்கி இரத்த ஓட்டத்தை அந்த இடத்தில் தடுத்து பிறகு மீண்டும் ஓடவிட்டு அந்த இடத்தில் தமனியில் சுவர்களில் ஏற்படும் துடிப்பை (OSCILLATION)கொண்டு ஒரு டிஜிட்டல் திரையில் அளவீடு செய்வது ஆகும்.
இதில் நாடிதுடிப்பையும் அறியலாம்.

ரத்த அழுத்த அளவீடு செய்முறை:-

1.முதலில் காற்றோட்டமான ஒரு அறையை தேர்ந்தெடுக்கவும்.
2.காலையில் தூங்கி விழித்தவுடன் எடுக்கப்படும் காலை ரத்த அழுத்தம் (MORNING PRESSURE)மிகவும் முக்கியமானது 
3.முதலில் ஒரு நாற்காலியில் தளர்ந்து (RELAXED)வசதியாக சாய்ந்து உட்காரவும் 
4.எதிரே உள்ள மேஜையின் உயரம் உங்கள் நெஞ்சுக்கு சிறிது கீழே உங்கள் கைகளை மேஜையின் மீது ஊன்றும் பொது அதன் முழங்கை நரம்பு உங்கள் இதயத்திற்கு நேராக இருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள் 
5.அழுத்த மானியை மேஜையில் வைத்து கொள்ளுங்கள்.
6.இடது கை பழக்கமுள்ளவர் வலது கையிலும் மற்றவர் இடது கையிலும் பரிசோதனை நடத்த வேண்டும்.
7.அழுத்த மானியை அதன் பேக்கிங்கிலிருந்து வெளியே எடுக்கவும்.பிரஷர் அளவிடும் சுற்று பட்டையின் முனையை அதன் plug இல் செருகவும்
8.ஸ்டெதஸ்க்கோப்பின் குப்பியை முழங்கையின் பக்கவாட்டில் அதாவது உங்கள் இதயம் இருக்கும் பக்கத்தில் அதன் ஒரே நேர் கோட்டில்  வைத்து பட்டையை முழங்கையில் ஓரளவு இறுக்கமாக இருக்கும் படி சுற்றி ஒட்டவும்.
நம் ஒரு ஆட்காட்டி விரலை உள்ள செருகும்படி இறுக்கம் இருந்தால் போதுமானது.
9.வசதியாக தளர்வாக ஒரு ஐந்து நிமிடம் ஓய்வாக இருக்கவும் 
10.உங்களது கருவி  தானியங்கி கருவியாகவோ அல்லது பகுதி தானியங்கி கருவியாகவோ இருக்கலாம்.
11.இந்த பரிசோதனை செய்வதற்குமுன் ஒருமுறை ஆஸ்பத்திரியில் ஒரு டாக்டரின் மூலம் மெர்குரி அழுத்த மானியின் மூலம் ஒரு முறை உங்கள் மேலழுத்தம் (SYSTOLE) மற்றும் கீழழுத்தம் (DIASTOLE) ஆகியவற்றை BASIC ஆக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.அதுதான் உங்களது அடிப்படை அளவுகள்.அவற்றை வைத்துக்கொண்டுதான் நீங்கள் ஒவ்வொரு நாளும் சுயமாக பரிசோதனைகள் செய்யவேண்டும்.
12.பிறகு உங்கள் கைகளை மேஜையில் ஊன்றி ஸ்டெதஸ்கோப்பின் குப்பி உங்கள் இதயத்தின் அருகில் அதன் சம உயரத்தில் இருக்கும் நிலையில் INFLATE பட்டனை அழுத்துங்கள்.உங்கள் Basic Systole அளவுக்கு கொஞ்சம் மேலே வரும்படி செட்டிங் செய்யவும்.அந்த அளவு வந்தவுடன் ஆட்டோமாட்டிக் காக DEFLATE ஆகும் அசையாமல் உட்கார்ந்து இருக்கவும் பிறகு மானியில் கீழ்கண்டவாறு அளவுகள் வரும் 
SYSTOLE -மேல் நிலை அழுத்தம் 
DIASTOLE -கீழ் நிலை அழுத்தம் 
PULSE       -நாடித்துடிப்பு 
திருப்பி திருப்பி குறைந்த பட்சம் 10 நிமிடம் இடைவெளிகளில் 3 to 5 தடவை பரிசோதிக்கவும் 
முடிவுகளை மூன்று விதமாக தெரிந்து கொள்ளுங்கள் 

உதாரணம் 

120/80;130/85;130/85;140/90;130/85
மேல்கண்ட ஐந்து பரிசோதனை முடிவுகளை கீழ்கண்டவாறு தெளிவாக்கலாம் 
Mode :-அதிக எண்ணிக்கையில் கிடைத்த முடிவு -130/85
Median :-மத்தியில் கிடைத்த முடிவுகளின் சராசரி -130/85
Mean :- மொத்த சராசரி -130/85
சாதாரணமாக ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய அளவுகள் :-
1.மேல் நிலை அழுத்தம் (SYSTOLIC):-120 mm of Hg.
2.கீழ்நிலை அழுத்தம்      (DIASTOLIC):-80 mm of Hg.
3.நாடித்துடிப்பு       67 டு 74

பரிசோதனை செய்ய ஆகுமான நேரங்கள் :-

1.காலையில் கண்விழித்து ஒரு மணி நேரம் கழித்து  வெறும் வயிற்றில் .
2.இரவில் படுக்கைக்கு போக ஒரு மணி நேரத்திற்கு முன்.
3.ஸ்போர்ட்ஸ் அல்லது நடை பயிற்சி எடுப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு.
4.பயிற்சி எடுத்த பின் ஒரு மணி நேரம் கழித்து.

பரிசோதனை செய்ய கூடாத நேரங்கள் 

1.குளித்த உடன் 
3.சாப்பிட்டவுடன் 



\

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...