சனி, 26 ஜூன், 2021

மனச்சோர்வு மருந்துகள்-2-அமிட்ரிப்டயலின்

 அமிட்ரிப்டயலின் 

படம் -1
படம் 2


இந்த மருந்து எலவில் (ELIWEL) என்ற பெயரிலும் டிரிப்டோமர் (TRYPTOMER) என்ற பெயரிலும் இன்னும் பல பிராண்டுகளிலும் பார்மசிகளில் கிடைக்கிறது. இதை கீழ்கண்டவாறு பட்டியலிடலாம்.
Amichlor             Amitrol DS        Amilin
Amichlor-H         Amitrol              Eliwel
Amidon               Amixide             Emotrip
Amitone              Amixide-H         Libotryp
Librodep             Sarotena              Tadamit
                            Tryptomer
                            Tryptomer-SR

இந்த மருந்து பொதுவாக மனச்சோர்வுக்கு தரப்பட்ட்டாலும் வலி நிவாரணியாகவும் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் 
படம்-3


அமிட்ரிப்டயலின் செரோடோனின் மூலமாக வேலை செய்தாலும், எஸ்.எஸ்.ஆர்.ஐ மருந்துகளைப் போலல்லாமல் இது நாரட்ரெனலின் மூலமாகவும் செயல்படுகிறது (படம்-3). எனவே இது SSRI மருந்துகளை விட சக்தி வாய்ந்தது என்றாலும் அதிக பின்விளைவுகளை கொண்டது.
இது நரம்பு முண்டுகளின் இடைவெளியில் செரோடோனினை மட்டுமல்லாது மற்ற ஹார்மோன்களையும்  திரும்ப உறிஞ்சப்படாமல் தடுக்கிறது. எனவே இதனை SSRI  என்று சொல்ல முடியாது.
அமிட்ரிப்டயலினை பொறுத்தவரை இது மனச்சோர்வு மற்றும் மனஉளைச்சலுக்கு பயன்படுத்தப்பட்டாலும் மிக குறைந்த அளவீட்டில் இது வலிநிவாரணியாகவும் டாக்டர்களால்  பரிந்துரைக்கப்படுகிறது.
SSRI போன்ற நவீன மனசோர்வு மருத்துகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு அமிட்ரிப்ட்டயலினை டாக்டர்கள் குறைவாகவே பரிந்துரைக்கின்றனர்.

பயன்கள் 

1.மனச்சோர்வு (மருந்து கட்டுப்பாட்டு அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட பயன்பாடு)
2.ஒற்றைத்தலைவலி.
3.உடல் மற்றும் குறுக்குவலி 
4.நீரிழிவு நரம்புச்சிதைவு.
5.நரம்பு வலிகள்.
மேலே குறிப்பிடப்பட்ட பயன்பாடுகள் (2 to 5) அனைத்தும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளினால் அங்கீகரிக்கப்படாதவை.

பக்கவிளைவுகள் 

1.கோலினெர்ஜிக் எதிர்விளைவுகள்.
2.பின்வரும் α-அட்ரீனெர்ஜிக் எதிர்விளைவுகள் , அதாவது 
  நிற்றல் மற்றும் அமர்தல் போன்ற நிலைகளை மாற்றும் பொழுது குறைந்த இரத்த அழுத்தம் உண்டாகுதல் (Orthostatic Hypotension)
3.எடை கூடுதல் 
4.தூக்கமின்மை.-தூக்கமாத்திரையாகவும் சில டாக்டர்கள் இதை பரிந்துரைக்கின்றனர். ஆனால் அதிக அமிட்ரிப்டைலின் தூக்கமின்மையை உண்டாக்கும். எனவே கவனம்.
5.பசியின்மை 
6.களைப்பு.-மனதை உற்சாகப்படுத்தத்தான் இந்த மருந்தை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அதிக பயன்பாடு உடலில் சோர்வையும் களைப்பையும் உண்டாக்கும் ஜாக்கிரதை.
7.குமட்டல் & வாந்தி 

எச்சரிக்கைகள் 

டாக்டர்களின் கண்காணிப்பின் கீழ் அல்லாமல் கீழ்கண்ட நிலைகளில் இந்த மருந்தை தான்தோன்றித்தனமாக பயன்படுத்தக்கூடாது.
1.பிரசவ காலம் (குறிப்பாக முதல் மூன்று மாதங்கள்.
2.தாய்ப்பால் கொடுக்கும் காலம்.
3.கிட்னி மற்றும் கல்லீரல் கோளாறு உள்ளவர்கள்.
4.இதய மற்றும் இரத்த அழுத்த நோயாளிகள்.

இந்த மருந்துடன் தீவிர பின்விளைவுகளை ஏற்படுத்தும் பிற மருந்துகள் (Drug interactions):-

1.cisapride போன்ற அல்சர் மருந்துடன் இதை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் இதயம் பாதிக்கப்படலாம்.
2.Quinidine மருந்துகள் (இதய நோய் )
3.SSRI மருந்துகள் 
(உ-ம்)  Fluoxetine (Flunil,Fludac)
             Paroxetine (Paxidep, Pexep)
             Fluvoxamine (Fluvoxin CR, Fluvator)
4.Quinapril (Q-press)-B.P.மருந்து 
5.Chlorpheniramine, Phenylephrine (அலர்ஜி மற்றும் ஜலதோஷ மருந்துகள்)
6.Cimetidine-அல்சர் மருந்து.
7.Zolpidem (Nightrest) -தூக்கமருந்து.
மேல் கண்ட எந்த மருந்துகளுடனும் அமிட்ரிப்ட்டயலினை நாமாக சேர்த்து சாப்பிடக்கூடாது.

முரண்பாடுகள்-(Contraindications)

கீழ் கண்ட எந்த நோய் நிலையிலும் அமிட்ரிப்ட்டயலினை சாப்பிடக்கூடாது.
1.இதய நோய் 
2.இதய செயலிழப்பு 
3.பித்தப்பை கோளாறு.
4.கல்லீரல் நோய் 
5.ஒழுங்கற்ற இதயத்துடிப்பு 
6.மாரடைப்பு 
7.சிறுநீரகப்புற்று 

அமிட்ரிப்ட்டயலின்  பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 

1.இந்த மருந்து பழக்கத்தை (Addiction) உண்டாக்குமா?
ஆம்.
2.சாப்பிட்டவர்கள் கனரக இயந்திரங்களை இயக்குவது, வாகனம் ஓட்டுவது கூடுமா ?
கண்டிப்பாக கூடாது.
 






    அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

    ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...