தைராய்டு குறைபாடு நிலையில் இசிஜி
தைராய்டு சுரப்பி சில அசாதாரண நிலைக்களில் தன் செயல்பாட்டை குறைத்து கொள்ளும் அல்லது முற்றிலும் இழந்துவிடும்.இந்த நிலையில் இரத்தத்தில் அயோடின் சத்து வளர்சிதை மாற்றங்கள் அடையாமல் உடலில் தேங்கிவிடும்.தைராய்டு குறைபாட்டு நிலையில் தைராய்டு இயக்கு நீர்கள் இரத்தத்தில் குறைந்துவிடும்.இதை சரிக்கட்டுவதற்கு மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி தைராய்டு தூண்டுதல் இயக்கு நீரை (TSH) அதிகம் சுரந்து தைராய்டு சுரப்பியை தூண்ட ஆரம்பிக்கும்.நோய்ப்பட்ட தைராய்டு சுரப்பி பிட்யூட்டரி யின் தூண்டுதலை தாங்க முடியாமல் அதே நேரம் ஒழுங்காகவும் இயங்க முடியாமல் வீங்க துவங்கும்.இதுவே காய்ட்டர் (Goiter)ஆகும்.இதே காய்ட்டர் நிலை தைராய்டு மிகைப்பாட்டிலும் ஏற்படலாம்
பொதுவாகவே காய்ட்டர் சாதாரண நிலையில் வீங்கி இருந்தால் ஏதும் பிரச்சினை இல்லை
ஆனால் அதுவே அளவு மீறி வீங்கி இருந்தாலோ குமிழ் குமிழாக (Nodules) கிளை விட்டு இருந்தாலோ அது பெரும் பிரச்சினை ஆக மாறிவிடும்.மேலும் இது பற்றி விவரிப்பது நம்முடைய நோக்கத்திற்கு அப்பாற்பட்டது .எனவே இது பற்றி மேலும் விபரம் அறிய இங்கு க்ளிக் செய்யவும்
தைராய்டு குறைபாட்டின் காரணிகள் மற்றும் அறிகுறிகள் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்
இசிஜியில் தைராய்டு குறைபாடு
மேலே உள்ள படத்தில் தைராய்டு குறைபாடுள்ள ஒரு நோயாளியின் மாதிரி இசிஜி காட்டப்பட்டுள்ளது
ஒரு நார்மல் சைன்ஸ் ரிதம் தைராய்டு குறைபாட்டினால் எவ்வாறு தாக்கம் அடைகிறது என்பதை இந்த மாதிரி இசிஜி தெளிவாக காட்டுகிறது
1.தாக்கம் -1: R -R இடைவெளி மிகவும் நீண்டு இருக்கிறது.இது இதயத்துடிப்பு குறைந்து இருப்பதை (Bradycardia) காட்டுகிறது.
2.தாக்கம் -2:-மின்முனை II இன் பதிவில் ST -பகுதி தாழ்ந்துள்ளது இது கீழறைகள் சரியாக விரியவில்லை என்பதை காட்டுகிறது
3.P -அலை மறைந்துள்ளது.இது இதயத்தின் மேலறைகள் சரிவர இயங்கவில்லை என்பதை குறிக்கிறது.
இறுதியாக தைராய்டு குறைபாட்டை தக்க சிகிச்சையளித்து சரி செய்யவில்லை என்றால் பெரும் பின்விளைவுகளை குறிப்பாக இருதயம் சம்பந்தமான பிரச்சினைகளை உண்டாகும்.