எங்கே ஜனநாயகம்
அதிமுகவின் அரிய முத்தாய்ப்பு சாதனையாக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு 780 கோடி ரூபாய் பொங்கல் பரிசாக ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுவிட்டது.ஆனால் கஜானாவில் பணம் இல்லை அதை இலவசங்கள் எம்ஜியார் நூற்றாண்டுவிழா மஹாபலிபுரம் ரிசார்ட்டில் அடைபட்டு போட கூத்துக்ள்,MLA களின் சம்பள உயர்வு மற்றும் இதர செலவுகள் என்று மாநிலத்தின் அத்தியவசிய நலன்களுக்காக செலவு பண்ணி தீர்ந்த்துபோய்விட்டதுஎனவே இருக்கவே இருக்கிறது அட்சைய பாத்திரம் அதாவது மக்களின் பை அது எவ்வளவு அள்ளினாலும் தாங்கும் சும்மா ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூத்தடிப்பார்கள் எதிர்க்கட்சிகளும் தூண்டி விடுவார்கள் கொஞ்ச நாள் அப்படிதான் இருக்கும் பிறகு வேறு வழியின்றி அமைதியாகி விடுவார்கள் எனவே உயர்த்து கட்டணத்தை அதுவும் அதிரடியாக இரவோடு இரவாக வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியாகி சனிக்கிழமை கட்டண உயர்வு அமல் படுத்தப்படுகிறது
இதையெல்லாம் பார்த்து இந்த மக்களின் மீது அனுதாபப்படுவதா அல்லது ஆளும் வர்க்கத்தின் மீது கோபப்படுவதா அல்லது இரண்டுதரப்பினரையும் பார்த்து சிரிப்பதா அல்லது காறித்துப்புவதா என்றால் நான்காவதைத்தான் செய்யத்தோன்றுகிறது
ஆம் நம் மீது நாமே காறித்துப்பிக்கொள்ள வேண்டியதுதான்
இப்படிப்பட்ட ஆட்சியாளர்களை அவர்கள்தரும் இலவசங்களுக்கும் ரூபாய் நோட்டுகளுக்கும் ஆசைப்பட்டு அருமந்த ஓட்டு உரிமையை குறுகிய கண்ணோட்டத்துடன் விற்று தேர்ந்தெடுத்ததுதான் காரணம்
இந்த போக்குவரத்து மந்திரி திரு விஜயபாஸ்கரின் திமிருக்கு நாம்தான் நம்பிக்கை கொடுக்கிறோம்
எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் செய்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்.ஏனென்றால் கஜானா காலி .பாத்திரத்தில் பண்டம் இல்லை போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தே ஆக வேணும் எனவே இப்போதைக்கு இந்த உயர்வு தவிர இந்த அரசிற்கு வேறு வழி பற்றி சிந்திக்க தெரியவில்லை அல்லது மனம் இல்லை
ஒரு நல்ல அரசிற்கு எப்போதும் மக்கள் நலனே பிரதானமாக இருக்கும்
ஆனால் இப்போதைய ஆட்சியாளர்களும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லை சமய சந்தர்ப்பங்களினால் பதவிக்கு வந்தவர்கள்
எவ்வளவுதான் தண்ணீர் ஊற்றினாலும் ஓட்டை பானை நிறையாது
அது மாதிரிதான் போக்குவரத்து துறையும்
அது சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்பதற்கு பெரிய ஆய்வு எல்லாம் தேவை இல்லை அதன் ஓட்டை உடைசல் பஸ்களே சாட்சி
மழை நேரங்களில் அந்த பஸ்களில் பயணம் செய்தாலே போதும் உட்காருவதற்கு ஒழுகலில் நனைந்த இருக்கைகள் நிற்பதற்கும் முடியாமல் எங்கும் ஓட்டைகளும் ஒழுகலும் .இத்தனைக்கும் சேரும் இடமும் வழியும் ஒன்றாக இருந்தாலும் தனியார் பஸ்ஸை விட கட்டணம் அதிகம்
பெயருக்கு SFS என்றும் சொகுசு பஸ் என்றும் ஓட்டை உடைசல் டப்பாகளை பஸ்கள் என்ற பெயரில் ஓட்டி பகல் கொள்ளை அடிப்பு இதுமாதிரி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது
கர்நாடகா ஆந்திரா கேரளா என்று எல்லா இடங்களிலும் நல்ல தரமான நிலையிலேயே பஸ்கள் ஓட்டப்படுகின்றன அதற்கு ஏற்றாற்போல் கட்டணங்களும் இருக்கின்றன
ஆனால் இங்கு பஸ்களின் தரத்தை உயர்த்தாமல் கட்டணங்களை மட்டும் சகட்டு மேனிக்கு உயர்த்துகிறார்கள்
போன முறை ஜெயலலிதா இரண்டு ரூபாய் கட்டணத்தை ஐந்து ரூபாய் மற்றும் ஏழு ரூபாயாக கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் உயர்த்தினார் இப்போது அவரை தொடர்ந்து வந்தவர்கள் ஏழு ரூபாயை பத்து மற்றும் பதினைந்து ரூபாயாக உயர்த்துகிறார்கள்
இதற்க்கு மக்களின் மெத்தனமும் காரணம்
அன்றே இந்த ஆர்ப்பாட்டங்களை செய்திருக்க வேண்டும்
தமிழ்நாடு தம் உரிமைகளை பேணுவதில் அல்லது தமிழர்கள் தன் நியாயமான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அல்லது தன் உரிமைகளை கேட்பதில் மற்ற மாநிலங்களை விட பின்தங்கியே இருக்கிறார்கள்
உதாரணமாக எழுபதுகளில் கல்கத்தாவில் ஓடும் டிராம் வண்டிகளில் முதல் வகுப்புவகுப்பு கட்டணம் 25 பைசா இரண்டாம் வகுப்பு கட்டணம் 20 பைசா.டிராம் போக்குவரத்துதான் இன்னமும் அங்கு பிரதான போக்குவரத்து இருப்பினும் அது நஷ்டத்திலேயே இயங்கி வந்தது எனவே அரசு அதன் கட்டணங்களை 5 பைசா உயர்த்துவது என அறிவித்தது உடனே ஆர்ப்பாட்டம் வெடித்தது டிராம்கள் மறிக்கப்பட்டன எனவே புத்திசாலியான அரசு உடனே உயர்வை வாபஸ் பெற்றது வாகனங்கள் சேதப்படாமல் தப்பின.இந்த உதாரணம் இப்போதைய நிலையில் சற்று வித்தியாசமானதாக இருந்தாலும் மக்களின் விழிப்புணர்வு எவ்வளவு தூரம் உடனடியாக இருந்தது என்பதற்காகவே கூறினேன் வெறும் 5 பைசாவுக்கு அவர்கள் உடனடியாக காட்டிய விழிப்புணர்வு அவர்களை இதுமாதிரி துயரங்களில் இருந்து இப்போதும் காக்கிறது
ஒருமுறை சென்னை வந்த அப்போதைய பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் இனிமேல் மத்திய அரசின் நிர்வாக பழுவை குறைக்க யூனியன் பிரதேசங்களை அந்தந்த மாநிலங்களுடன் இணைக்கலாம் என்று நிருபர்களுக்கு வெறும் பேட்டிதான் கொடுத்தார் புதுச்சேரியில் உடனே கலவரம் வெடித்தது திரு மொரார்ஜி அவர்கள் அந்த திட்டத்தை கைவிட்டார்
இப்படி பல மாநிலங்களை சொல்லலாம் ஆனால் இங்கே தேவை இல்லாத விஷயங்களுக்கெல்லாம் கூப்பாடு போடுவதும் ஆர்ப்பாட்டம் பண்ணுவதுமாக நம் சக்திகளை நாம் வீணடித்துவிட்டோம் இப்போது தேவைக்கு போராட சக்தியில்லை
ஜல்லிக்கட்டுக்கும் இந்தி எதிர்ப்புக்கும் காட்டிய வீரியத்தை இப்போது பார்க்க முடியவில்லையே ஏன்?
இப்போது போராடுவதும் போலீஸ் தடியடியால் கலைந்து போவதுமாகத்தானே இருக்கிறது
அன்று இந்தி எதிர்ப்பின் தீவிரத்திலும் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற வீரியத்தில் தேவையில்லாமல் காயப்பட்டோமே பல உயிர்களையும் ஏதோ சுதந்திர போராட்ட தியாகிகளை போல் பலிகொடுத்தோமே என்ன பிரயோஜனம்?
ஜல்லிக்கட்டு வந்தது ஆறுகளில் நீர் வந்ததா ?பசுமை வந்ததா?ராக்கட் தளம் வந்ததா?காவிரி முல்லை பெரியார் பாலாறு என்று பிரச்சினைகள் தீர்ந்தனவா?
மாறாக இந்தி தடை இன்றி வந்தது .பண மதிப்பிழப்பு என்ற துயரம் வந்தது.GST என்ற நெருக்கடி வந்தது இப்போது நியாயமில்லா பஸ் கட்டண உயர்வும் வந்து சேர்ந்திருக்கிறது
இதற்கெல்லாம் காரணம் ?
மக்களுக்கு தன் தேவைகள் தன் உரிமைகள் எவை என்று இன்னும் தெரியவில்லை
எதற்கு போராட வேண்டுமோ அதில் போராடுவதில்லை
எதற்கு தேவை இல்லையோ அதற்கு போராடி தனது மரியாதை கெளரவம்,சக்தி அத்தனையையும் விரயமாக்குகிறார்கள் குறிப்பாக தமிழகத்தில்
அதனால்தான் இப்போது காலம் கடந்து போராடும்போது அதற்கு எந்த மதிப்பும் இல்லை
அன்று ஜெயலலிதா Rs 2/-லிருந்து சகட்டு மேனிக்கு Rs7/-க்கு உயர்த்தினாரே அப்போது கொதித்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது
ஓட்டுக்கு பணம் தருகின்றோம் என்னும்போது அவர்களை புறக்கணித்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது
சினிமாக்காரர்களையும் வீரவசனகர்த்தாக்களையும் தமிழ், திராவிடம் என்று பேசி இந்தி எதிர்ப்புக்கு தூண்டி விட்டார்களே அவர்களையும் அன்றே அலட்சியப்படுத்தி இருந்தால் இன்று தமிழ்நாடு ஜொலித்துக்கொண்டிருக்கும்
ஜனநாயகம் வெறும் கேலிக்கூத்து
இதில் ஜனங்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லை
அதிகார வர்க்கம் மக்களை ஆட்டுவிக்கிறது
இந்த பஸ் கட்டணம் அநியாயமானது
ஏழை எளிய மக்களை வதைக்கக்கூடியது
யாரிடம் நீதி கேட்பது கோர்டிடம் தானே
ஆனால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜட்ஜ் திருமதி இந்திரா பானர்ஜி இது சம்பந்தமாக போடப்பட்ட ஒரு வழக்கிற்கு அளித்த தீர்ப்பின் விசித்திரத்தை பாருங்கள் "பஸ் கட்டண உயர்வு நியாயமற்றதுதான்.இருப்பினும் இது அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது எனவே கோர்ட் இதில் தலையிடமுடியாது"என்று கை விரித்துவிட்டார்"
இதை விட கொடுமை என்ன இருக்கிறது
வன்முறையும் தீவிர வாதமும் தலைதூக்க இதுபோன்ற தீர்ப்புகளே காரணம்
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்களின் சிரமங்களை கோர்ட் கூட தீர்க்க முன்வருவதில்லை என்றால் எங்கே ஜனநாயகம்?