மிக முக்கிய சில ஆரோக்கிய குறிப்புகள்
1.அந்த 7 இடர் காரணிகள் :-
இதய நோய்க்கான அந்த ஏழு இடர் காரணிகளையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இதய நோய் மட்டுமல்லாமல் சர்க்கரை நோயையும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்
அவை
1.உடற்பயிற்சி
2.எடை
3.உணவு
4.இரத்த சர்க்கரை அளவு
5.இரத்த கொலஸ்ட்ரால் அளவு
6.புகைப்பழக்கம்
7.இரத்த அழுத்தம்
2.அல்ஜெய்மர் கோளாறு
மனக்கோளாறுகளில் மிக கொடுமையானது அல்ஜெய்மர் நோய் ஆகும்
இது மூளை செல்களை பீட்டா அமைலாய்டு என்ற புரதம் கட்டுக்கோப்பு இல்லாமல் குவிந்து அழிப்பதனால் ஏற்படுவது
பொதுவாக பீட்டா அமைலாய்டு எல்லா ஆரோக்கியமான மூளை செல்களில் இருக்கும் .சில நேரங்களில் அதிக மனஉளைச்சல் ஏற்படும்போது இது ஒழுங்கற்ற முறையில் மூளையின் சில இடங்களில் குவிந்து அந்த செல்களை அரித்து விடும் இதுவே அல்ஜெய்மர் நோய் காரணியாகும்
இதை தடுப்பதற்கு விஞ்ஞானிகள் வேறு ஒரு புரதத்தை பயன்படுத்த ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்
அதன் பெயர் 3K3A-APC என்பதாகும்.இது ஒரு மாற்றியமைக்கப்பட்ட C-புரதம் ஆகும்
இது அவ்வளவு எளிதாக உறையாது எனவே இது இப்பொது அல்ஜெய்மர் நோயை வராமல் தடுக்க கூடிய ஒரு செல் பாதுகாப்பு காரணியாக பயன்படுத்தப்படலாம்
நீண்ட நாட்கள் ஆழ்ந்த நித்திரை இல்லை என்றால் அது அல்ஜெய்மர் நோயின் அறிகுறியாக இருக்கலாம்
கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் Sabreena Islamoska என்பவரின் ஆய்வின்படி நாட்பட்ட மனஉளைச்சல் அல்ஜெய்மர் நோய்க்கான ஒரு காரணியாகும் என்று கண்டறியப்பட்டு உள்ளது
3.எலும்பு சூப்
ஒரு சமீபத்திய ஆய்வின்படி எலும்பு சூப் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது
குறிப்பாக எலும்பு சூப் இதயத்திற்கு வலு ஊட்டுகிறதாம்
எலும்பை நீரில் நிதானமான நெருப்பில் காய்ச்சும்போது அதில் சிறிது வினீகரை சேர்க்கவேண்டும் அப்போதுதான் எலும்பின் சத்து முழுவதும் சூப்பில் ஏறும்
4.போரக்ஸ் (Borax )
இது இயற்கையில் கிடைக்கும் ஒரு தாது உப்பு ஆகும் இதன் இரசாயனப் பெயர் சோடியம் டெட்ரா போரேட்
இது பொதுவாக வீடுகளீல் ஒரு கிளீனிங் பவுடர் ஆக பயன் ஆகிறது
மேலும் இது டிடர்ஜண்ட் சோப்புகளிலும் டால்கம் பவுடர்களிலும் காஸ்மெடிக்ஸ் ஆக பயன்படுத்தப்படுகிறது
சில வீடுகளில் இதன் ஆபத்தை அறியாமல் குழந்தைகள் பொம்மை செய்து விளையாடும் களிகளாக (CLAY,SMILE) குழந்தைகளின் கைகளில் கொடுக்கிறார்கள்
இது முறையல்ல ஏனென்றால் குழந்தைகள் இதை தெரியாமல் தின்று விட்டால் கீழ்கண்ட பக்க விளைவுகள் ஏற்படும்
1.வயிற்று போக்கு
2.ஷாக்
3.வாந்தி
4.மரணம்
5.குடலில் இருக்கும் நல்ல கிருமிகள்
நம் குடலின் மொத்த மேற்பரப்பு (surface area ) சுமார் 300 இலிருந்து 400 சதுர மீட்டர் ஆகும்
அதாவது நம் உடலுக்கும் நம் உடலின் உட்சுற்று சூழலுக்கும் இடையே இது ஒரு மிகப்பெரும் இடை முகம் (INTERFACE ) ஆகும்
ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலத்தில் சுமார் 50 மெட்ரிக் டன் உணவு இதன் வழியே பயணிக்கிறது .இந்த உணவுடன் ஒரு மிகப்பெரும் அளவில் கிருமிகளும் குடலினூடே பயணிக்கின்றன
இந்த கிருமிகளில் உயிருக்கே உலைவைக்கும் கிருமிகளும் உண்டு அதே சமயம் நல்லவையும் உண்டு
சில ஆரோக்கியமான குழந்தைகளின் குடலில் இருக்கும் நல்ல கிருமி கொத்து (GOOD BACTERIAL FLORA) அந்த குழந்தைக்கு உணவில் ஒவ்வாமை வராமல் காக்கிறது
டாக்டர்.நாகர் மற்றும் குழுவினரின் ஒரு ஆய்வின் படி closteridium வகையை சேர்ந்த caccae என்ற கிருமிகள் சிலவகை nuts களின் மூலம் ஒவ்வாமை ஏற்படுவதை தடுக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது
இதிலிருந்து சில கிருமிகளின் metabolic கழிவுகளில் இருந்து மருந்து ஒவ்வாமைக்கான மருந்துகளை தயாரிக்க முடியும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கின்றனர்
6.ஹைட்ரஜன் சல்பய்டும் வயது முதிர்வும்
முதுமையை பற்றி ஒரு சுவாரஸ்யமான ஆய்வு பிரிட்டனில் உள்ள எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது
இந்த ஆய்வு முதுமை எப்படி ஏற்படுகிறது என்பது பற்றிய உண்மையை நோக்கி மேலும் ஒரு அங்குல நெருக்கத்தை உண்டாக்கி இருக்கிறது
இந்த ஆய்வில் ஹைட்ரஜன் சல்பய்டு வாயு செல்கள்கள் முதிர்வடைவதை தடுப்பதாக ஒரு அதிசய முடிவுக்கு வந்திருக்கிறார்கள்
பொதுவாக நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் (MITOCHONDRIA )என்று சில அமைப்புகள் உண்டு இவை நீள் வட்டத்தில் rods போல் இருக்கும் இவை ORGANELLES என்ற நூல் பின்னல்கள் போல் இருக்கும் ஒரு செல்லுக்குள் சுமார் 2000 இலிருந்து 4000வரை MITOCHONDRIA இருக்கும்
ஈரல் செல்களில்தான் அதிகபட்சம் இருக்கும்
இவை அடினோசின் திரி பாஸ்பேட் என்ற இராசயனியை உடைத்து அதிலிருந்து சக்தியை வெளியாக்கி செல்களுக்கு தருகிறது
வயது முதிர முதிர இந்த MITOCHONDRIA பலஹீனப்படுவதால் செல்களும் முதிர்வடைகின்றன இப்படி முதிர்வடைவதற்கு மருத்துவ மொழியில் SENESCENCE என்பர் இப்படி முதிர்வடைத செல்களுக்கு SENESCENT செல்கள் என்பர்
ஆய்வில் இரண்டு புரதங்கள் SRSF2,மற்றும் HNRNPD என்ற பெயரில் MITOCHONDRIA வில் கண்டுபிடித்து உள்ளனர் இவைதான் வயது முதிர்வின் போது செல்களில் மாற்றங்கள் உண்டாக்குவதாகவும் கண்டுபிடித்து உள்ளனர்
இவைதான் MITOCHONDRIA வின் உந்து சக்திகள் ஆகும்
வயது முதிர்வின் போது இந்த உந்து சக்திகள் பின்னடைவு ஆகின்றன
எனவே விஞ்ஞானிகள் இரண்டு இரசாயனிகளை (AP 39,AP 123) உண்டாக்கி இருக்கிறார்கள்
இவற்றை எலிகளில் கொடுத்து ஆய்வு செய்யும்போது இவை செல்களில் இருக்கும் MITOCHONDRIA விற்கு மிக சொற்ப (MINUTE) அளவில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் வாயுவை செலுத்தி அதிலுள்ள சக்தி ஊக்கிகளை உசுப்பி விட்டு செல்கள்கள் முதிர்வடையாமல் செய்கின்றன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்
இதற்காக ஹைட்ரஜன் பெராக்ஸைடு வாயுவை உட்கொள்ளலாமா என்று நினைக்காதீர்கள்
அது ஒரு விஷ வாயு ஆகும்
7.மார்பக புற்று
ஸ்விஸ் நாட்டிலுள்ள பேசல் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில் மார்பக புற்றின் போது புற்று நோய் செல்கள் மேலும் பரவாமல் இருக்க அவற்றை கொழுப்பு செல்களாக மாற்றி தடுத்து சாதனை புரிந்திருக்கிறார்கள் இதற்கு அவர்கள் பயன்படுத்திய மருந்து கூட்டு நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தும் ROSIGLITAZONE உம் புற்றுநோய் மருந்தான ARCITGENIN என்ற மருந்தும் ஆகும்
8.உடற்பயிற்சி
ஐரோப்பியன் ஹார்ட் ஜர்னலில் பிரசுரமான ஒரு ஆய்வு அறிக்கையில் ஒழுங்கான தினசரி உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மைபயப்பதாகவும் ,குறிப்பாக இதயம் கணையம் கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகள் பாதுகாக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது
மிக முக்கியமாக தினசரி நடைப்பயிற்சி திசுக்களில் இன்சுலின் நன்றாக பயன்படுத்தப்பட உதவுகிறதாம் இதனால் திசுக்களில் இன்சுலின் எதிர்ப்பு நிலை தவிர்க்கப்படுகிறதாம்
9.பல் நாடா (DENTAL FLOSS)
தினசரி பல் நாடாவைக் கொண்டு பல் இடுக்குகளை சுத்தம் செய்வதால் நம் உடம்பில் தேவையில்லாத விஷ வேதிப்பொருள்கள் சேரும் அபாயம் உண்டு என்று ஒரு ஆய்வு கூறுகிறது காரணம் 90% பல் நாடாக்கள் பாலி புளோரோ அல்கயில் என்ற விஷப்பொருள்களாலேயே நெய்யப்படுகின்றன என்று ENVIRONMENTAL PROTECTION AGENCY என்ற ஒரு அமைப்பின் செய்தி குறிப்பு கூறுகிறது
எனவே இந்த பல் நாடாக்களை அதிகம் பயன்படுத்தாதீர்கள்
10.விரதம்
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வில் அடிக்கடி விரதம் இருப்பதால் நம் உடல் நன்றாக இயங்குகிறது என்றும் அதன் சிர்க்காடின் துடிப்பு (Circadian Rhythm)மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கண்டிருக்கிறார்கள்