தைராய்டு மிகைப்பாடு
![]() |
படம் 1 |
தைராய்டு சுரப்பி நமது தொண்டைக்குழியில் மேலும் கீழும் ஏறி இறங்கும் ஆடாம்ஸ் ஆப்பிள் உறுப்பின் கீழே அமைந்துள்ளது
மேலே படம்-1இல் உள்ளபடி இது ஒரு வண்ணத்து பூச்சி போல் தோற்றமளிக்கும்.இதன் அளவு மிகவும் சிறியது என்றாலும் இதன் சக்தி மிகவும் அபாரமானது.
இது நம் உடல் அயோடின் சத்தை பயன்படுத்துவதற்கு (metabolize) உதவுகிறது.
இது ரத்தத்தில் உள்ள அயோடினை உட்கொண்டு தைராக்ஸின் என்ற ஹார்மோனை உற்பத்திசெய்யும்.இதற்கு தூண்டுகோலாக இருப்பது மூளை பகுதியினுள் இருக்கும் பிட்டியூட்டரி(Anterior Pituitary) சுரப்பியாகும்.இச்சுரப்பியானது இரத்தத்தில் அயோடின் அதிகரிக்கும் போது தைராய்டு தூண்டுதல் இயக்குநீர் (Thyroid Stimulating Hormone,TSH) என்ற ஹார்மோன் மூலம் தைராய்டு சுரப்பியை தூண்டி விட்டு தைராக்ஸினை சுரக்கவைக்கும்.இவ்வாறு சுரக்கப்படும் தைராக்ஸின்,டெட்ரா அயோடோ தைரோனின் அல்லது T4 ஆகும்.இதில் ஒரு 90% இரத்த ஓட்டத்தில் ஒரு அயோடினை இழந்தது திரி அயோடோ தைரோனின் அல்லது T3 ஆக மாறும்.தைராய்டின் சக்தியில் 90% இந்த T3 மூலமாகத்தான் உடல் பெறுகிறது.இரத்தத்தில் தைராக்ஸின் சுரந்தவுடன் 90% அது இரத்தத்தின் பிளாஸ்மா ப்ரோடீன்களால் உறிஞ்சப்பட்டுவிடும்.நாம் இங்கே இதுபற்றி விரிவாக காணப்போவது இல்லை
காரணிகள் :-
1.அதிக தைராக்ஸின் மாத்திரைகளை உட்கொள்ளுவது.
2.பிட்டியூட்டரி கோளாறுகளினால் அதிகமாக தைராய்டு தூண்டப்படுத்தல்
3.தைராய்டு சுரப்பி வீக்கம் (Goiter,Active Adenoma or Tumor )
5.அதிக அளவு அயோடின் மருந்துகளை உட்கொள்ளுதல் (அமியோடரோன்,Amiodarone)
6.தைராய்டு எரிவு அல்லது Thyroiditis )
சாதாரணமாக தைராய்டு நம் உடலின் வளர் சிதைவை (Metabolism )ஊக்குவிக்கிறது இதன் மூலம் உடலின் உஷ்ணநிலையையும் தூண்டுகிறது
ஆனால் இது மிகைப்படும் போது நம் உடலின் வளர்சிதை தடுமாற்றம் அடையும்.உடல் வெப்பநிலை கட்டுமீறி உயரும்
இதயத்துடிப்பு,ரத்த கொதிப்பு கட்டு மீறி போகும்போது மனிதனின் நிலை தடுமாறிப்போகும்
தைராய்டு மிகைப்பாட்டின் அறிகுறிகள்:
1.கை ,கால் உதறல்,நிலைகொள்ளாமை,நரம்பு தளர்ச்சி ,தூக்கமின்மை.
2.மன உளைச்சல்
3.தளர்ச்சி,சோர்வு
4.மன தடுமாற்றம் (Mood Swings)
5.உடல் வெப்பம் அளவுமீறி உயர்தல் (Hyperthermia)
6.எதிர்பாராத எடை இழப்பு
7.தொண்டை வீக்கம் (Goiter)
8.இதய துடிப்பு அதிகரிப்பு
9.வயிற்றுப்போக்கு
10.தோல் மற்றும் முடி உதிருதல்
11.மாதவிடாய் கோளாறு

இசிஜியில் தைராய்டு மிகைப்பாடு:-
![]() |
படம் 2 |
மேலே உள்ள படம் 2 இல் தைராய்டு மிகைப்பாட்டின் போது இசிஜியில் அதன் தாக்கத்தை மின்முனை II இன் பதிவில் கட்டப்பட்டுள்ளது
அதில் ஆரோக்கிய நிலையில் ஒருவரின் இசிஜி சைன்ஸ் ரிதம் எவ்விதம் மாறுபட்டுள்ளது என்பது தெளிவாகிறது.ஆரோக்கிய நிலை சைனஸ் ரிதம் காண இங்கு க்ளிக் செய்யவும்.
![]() |
படம் 3 |
மேலே படம் 3 இல் ஒரு முழு மாதிரி இசிஜி காட்டப்பட்டுள்ளது அதில் மின்முனை -I,II,III,aVF,V4,V5,மற்றும் V6 இன் பதிவை கவனியுங்கள்.
அதில் R-R இடைவெளி குறுகியிருக்கிறது இதயம் வேகமாக தாறுமாறாக துடிப்பதை இது காட்டுகிறது மேலும் மற்ற பதிவுகளிலும் S-அலை மிக தாழ்ந்து உள்ளது S-T பகுதி உயர்ந்து இருக்கிறது இதுவும் இதயத்தின் கீழறைகளில் ஏற்படும் கோளாறுகளையே உணர்த்துகிறது
மொத்தத்தில் தைராய்டு மிகைபாடு கவனிக்கப்படவில்லை என்றால் ஆபத்தான விபரீதங்களை உண்டாக்கி விடும்
தொடர்ந்து அடுத்து தைராய்டு குறைபாடு நிலையில் இசிஜி .....