நீலத்திமிங்கலமும் வெள்ளை சுறாவும்
நீலத்திமிங்கல விளையாட்டு பல சிறுவர்களை வாலிபர்களை தற்கொலை செய்ய தூண்டி சாகடித்த ஒரு விபரீத விளையாட்டு.பெரும்பாலும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளையே இது குறி வைக்கிறது.இதை விளையாட்டு என்பதை விட இதை ஒரு கொலை பொறி என்றே சொல்லலாம்
இன்றைக்கு சமூக ஊடகங்களில் இது பற்றிய செய்திகள் வராத நாளே கிடையாது
இந்திய அரசு இதை தடை பண்ணி இருக்கிறது அதாவது ஏட்டளவில் ஏனென்றால் ஆன் லைன் விளையாட்டான இதை அவ்வளவு எளிதாக வலைதளத்தில் தடை பண்ண முடியவில்லை.
மற்ற வீடியோ கேம்களை போல் இது பதிவிறக்கம் செய்யப்படக்கூடிய செயலியாக இல்லை மாறாக இது ஆன் லைனில் வரக்கூடியதாக வித்தியாச வித்தியாசமான லிங்குகளையும் கொண்டிருப்பதால் இதை வலைத்தளத்திலிருந்து நீக்க முடியவில்லை
ஆனால் இந்த பொறியில் அகப்படாமல் இருக்க வேண்டுமானால் வலைத்தளம் உபயோகிப்பவர்கள் அடிக்கடி வாட்ஸ் ஆப் ,முகநூல் ட்வீட்டர் மெஸ்ஸெஞ்சர் ஈ மெயில் என்று மூழ்கிக்கிடப்பவர்கள் இந்த சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு அனுப்பப்படும் எந்த ஒரு அனாமதேய லிங்கையும் க்ளிக் செய்யவேண்டாம் உடனே போலீசுக்கு தெரியப்படுத்துங்கள் பிறகு அதை டெலிட் செய்து விடுங்கள்
இந்த கோர மரண தூண்டில் 50 நாள் சவால்களை கொண்டது
ஒருநாளைக்கு ஒரு சவால்.விளையாட்டை துவங்குமுன் உங்கள் போட்டோ உட்பட உங்கள் முழு பயோடேட்டாவையும் கேட்டு பதிந்து கொள்வார்கள்
முதல் நான்கு நாட்கள் உங்களை பொறியில் சிக்க வைக்க மிக சுவாரஸ்யமான அட்வென்ச்சர் டாஸ்குகளை கொடுப்பார்கள் ஒவ்வொருநாளும் விளையாட்டின் நேரம் இரவு ஒரு மணிக்கு மேல்தான்
நள்ளிரவுக்கு மேல் ஆன்லைனில் பேய் படங்கள் பார்க்க சொல்வார்கள்
உயரமான இடத்தில் இருந்து த்ரில்லாக செல்பி எடுத்து அனுப்பச்சொல்வார்கள்
இப்படி ஆரம்பித்து ஐந்தாவது நாள் விபரீதத்தின் துவக்கத்திற்கு வருவார்கள்
உங்கள் உடம்பில் ஏதோ ஒரு பகுதியை கத்தியால் கீறி அதை போட்டோ எடுத்து அனுப்பச்சொல்வார்கள்
மேலும் உங்கள் கைகளில் கத்தியால் கீறி திமிங்கலத்தின் படத்தை வரைந்து படமெடுத்து அனுப்பச்சொல்வார்கள்
இந்த விபரீத நிலைக்கு பிறகும் நீங்கள் இந்த விளையாட்டை தொடர்வீர்களானால் நீங்கள் ஒரு முட்டாள் தானே
எனவே அவர்கள் ஐதீகப்படி நீங்கள் இந்த உலகத்திற்கு தேவையற்றவர்
சாகடிக்கப்பட வேண்டியவர்
எனவே படியாக உங்களை மூளை சலவை செய்து சாவதற்கு பண்படுத்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க்குகளாக கொடுத்து ஐம்பதாவது நாள் நீங்களே மீளமுடியாத அளவு தற்கொலை வெறி உச்சமடைய உங்களை சாகும்படி ஒரு கடைசி டாஸ்க் அனுப்ப நீங்களும் செத்துவிடுவீர்கள்
இதுதான் விளையாட்டு
இப்போது கதைக்கு வருவோம்
அதிசயமாக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த விபரீதத்திற்கு எதிராக தாமாகவே முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்து இந்த விபரீதத்தை விளையாடுவது குற்றம் என்றும் இதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் இதை தடை செய்ய வேண்டும் என்றும் காவல்துறையை பொறுப்பு சாட்டி தீர்ப்பளித்திருக்கிறார்கள் வரவேற்போம்.
அவர்கள் கூறியுள்ள காரணம் ஒருவரது மரணத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணங்களை ஏற்படுத்துவது கொலைக்கு சமம்.அது குற்றமாகும் என்பதுதான்.முற்றிலும் சரி
அப்படியானால் 2016 நவம்பர்மாதம் 8 ஆம் நாள் ஒரே இரவில் திடீரென்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வெறும் ஆறுமணி நேர அவகாசத்திற்குள் பெரும் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு நோட்டுகளை ரிசர்வ் பாங்க் மூலமாகக்கூட இல்லாமல் நிதியமைச்சர் வாய் மொழியாகவும் இல்லாமல் நான் பிரதமர் என்ற இறுமாப்பில் தான்தோன்றித்தனமாக செல்லாது என்று அறிவித்து விட்டு மறுநாள் சுகமாக ஜப்பான் பறந்து போனாரே அந்த விளையாட்டில் எத்தனையோ பேர் மாண்டார்களே அப்படியும் தான் செய்தது சரிதான் என்றும் மக்கள் மாண்டது சொற்ப இழப்புதான் அதைவிட பெரிய நன்மை நமக்கு கிடைத்திருக்கிறது என்று சால்ஜாப்பு காட்டுகிறார்களே இது நீலத்திமிங்கலத்தைவிட கொடுமை இல்லையா ?
நீதிபதிகளே இவரை என்ன செய்யப்போகிறீர்கள் ?
நீலத்திமிங்கலத்தை தடை செய்யலாம் ஆனால் கூட இருந்தே குழிபறிக்கும் இந்த சுறாமீன் விளையாட்டை தடை செய்வீர்களா ?
இந்த சுறாமீன் இப்போது நீட் தேர்வு என்ற பெயரில் மாணவி அனிதாவை போல் இன்னும் எத்தனை இளம் உயிர்களை காவு கொள்ள வேண்டும்?
காவிரியில் இனி தண்ணீர் வராது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் விவசாயிகள் எப்படி போராடினாலும் தமிழ்நாட்டு விவசாயிகளை நான் பார்க்க வரமாட்டேன் என்று மத்தியில் பிரதமரும் மாநில முதல்வரும் பாராமுகமாக இருந்து அவர்களை தற்கொலைக்கு தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும் இந்த வெள்ளை சுறாமீன் விளையாட்டை நீதிமன்றமே உனக்கு சுரணை இருந்தால் தாமாகவே முன்வந்து தட்டி கேட்க வரமாட்டீர்களா?
நெடுவாசலில் மீத்தேன் திட்டம் விவசாய பூமியில் எண்ணெய் கிணறுகள் தோண்டும் திட்டம் என்று தமிழ்நாட்டையே ஆளும் வர்க்கம் நரகமாக்க விளையாடும் திட்டம் நீலத்திமிங்கலத்தைவிட கொடியது.
ஏ நீதிமன்றங்களே வாருங்கள் தாமாக முன்வந்து கேஸ் ஆடி எங்களை இந்த வெள்ளை சுறாக்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்
ஆனால் வர மாட்டீர்கள் கரணம் பொருள் ஆசை பதவி ஆசை
உங்களுக்கு நட்டமில்லாத காரியங்களில் தாமாகவே முன்வந்து கேஸ் ஆடி பெருமை பேசுவீர்கள்
மேலிடத்து சம்பந்தமான காரியங்கள் என்றால் முகம் பார்த்து தீர்ப்பு சொல்வீர்கள்
இல்லை கேஸை கிடப்பில் போட்டு இழுத்தடிப்பீர்கள்
ஆமாம் நீலத்திமிங்கலம் உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது
ஆனால் வெள்ளை சுறா மேலிடத்து சம்பந்தம் கொண்டது
புரிந்து கொள்ளுங்கள் மக்களே