ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

விவசாயிகள் போராட்டம் -ஒரு பார்வை 

தமிழகம் கடும் வறட்சியில் இருப்பது இது முதல் முறை அல்ல.தொடர் கதைதான்.ஒவ்வொரு முறையும் பருவ மழை ஏமாற்றுவதும்,சரியான நீர் மேலாண்மையும் இல்லாமல் நாம் தண்ணீருக்காக திண்டாடுவது பழம் கதைதான் என்றாலும் இப்போது அது புது உத்வேகம் அடைந்து இருக்கிறது.தாமதம்தான் என்றாலும் வேறு வழியில்லை பரவாயில்லை என்பதற்கு.
இபோது டெல்லி வரை சென்று மத்திய அரசின் கவனத்தை  ஈர்க்க தமிழக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ,நிவாரண தொகைகள் வழங்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகள்இவர்களுக்கு உணவு தங்கும் வசதிகளை டெல்லி தமிழர்கள் ஏற்படுத்தி கொடுக்கின்றனர் என்னும்போது இறைவா அந்த தமிழர்களை நீ மேன்மேலும் வளப்படுத்துவாயாக என்று பிரார்த்திக்க வேண்டும் போல் இருக்கிறது.
அதோடு வட நாட்டு  விவசாயிகளும் நம் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கெடுத்தனர் என்ற செய்தி செந்தமிழ் நாடெனும்  வெற்று குறுகிய ஓசையை விட அதிக தேனமுதத்தை நம் காதில் வாரி இறைத்தது.
ஆம் என்ன செந்தமிழ் நாடு.என்ன திராவிட நாடு இப்படியெல்லாம் வார்த்தை ஜாலங்கள் பேசி கவிதை பாடி தமிழனை மதி மயங்க வைத்தது போதும்.ஒரு திராவிடம் தன்  சகோதர திராவிடனுக்கு தண்ணீர் தர மறுக்கும் போது எங்கோ உள்ள ஒரு டெல்லி விவசாயி தமிழ் பேசும் விவசாயியை மொழி பேதம் பாராமல் இன துவேஷம் பாராட்டாமல் விவசாயி என்ற ரீதியில் தன இனமாகவும் தன சகோதரனாகவும் கருதி கூட அமர்ந்து தானும் போராட்டாத்தில் குதித்தான் இது தான் உண்மையான இனப்பற்று மனித இன பற்று.ஆண்டவனின் படைப்பில் அனைவரும் சமம் என்ற உணர்வு
அதை விட்டு விட்டு அந்த கால சில அறிவு ஜீவிகள் அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழத்தில் டாக்டர் பட்டம் பெற்ற மமதையில்,இங்கே வந்து திராவிடம் பேசி வடக்கு தெற்கு என்று பேதம் காட்டி தமிழகத்தை தேசிய  நீரோட்டத்தில் இருந்து பிரித்து  தானும் கெட்டு தமிழனையும் கெடுத்து தமிழ்நாட்டையும் களிமண் கூழாக ஆக்கி விட்டு அர்த்தமற்ற புகழை பெற்றுக்கொண்டு போய்  சேர்ந்தார்கள்.
இனி அது பற்றி நினைக்க நேரமில்லை.இனி புது உத்வேகம் எடுப்போம் மாநிலத்தை காப்பாற்றுவோம் விவசாயம்தான் மாநிலத்தின் முதுகெலும்பு.விவசாயம் அழிந்தால் தமிழகம் அழியும்
விவசாயிகள் டெல்லியில் நடத்தும் போராட்டத்தின் உறுதிதான் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க போகிறது இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால் இனி எப்போதும் தலை எடுக்க முடியாது உங்கள் போராட்டத்தை நீர்த்துப்போக்க தமிழக துரோகிகளும் மத்திய அரசும் முயற்சிக்கும்
முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்
அர்த்த மற்ற போராட்டங்களால் தமிழகம் மதிப்பிழந்து  விட்டது.போராடுவதும் பிறகு பொய் வாக்குறுதிகளை நம்பி போராட்டத்தை கை விடுவதும் அர்த்தமற்றது எந்த நோக்கத்திற்காக போராடுகிறோமோ அது கை கூடும் வரை ஏது வந்தாலும் உறுதியுடன் நில்லுங்கள்
விவசாயிகளே நீங்கள் ஒரே குடும்பம் உங்களுக்குள் அரசியல் வரக்கூடாது கட்சி பேதம் கூடாது
இதுவரைக்கும் கட்சி பேதத்துடன் நீங்கள் இருந்ததால்தான் உங்கள் எண்ணம் ஈடேறவில்லை
இப்போது நீங்கள் எடுத்திருக்கும் இந்த உறுதியை அப்போதே 1972 இல் கர்நாடகா அநியாயமாக சட்ட விரோதமாக மூன்று அணைகளை கட்டிய போதே நீங்கள் காட்டியிருந்தால் இன்று  தமிழகத்தின் தலை எழுத்தே மாறியிருக்கும்.
உங்கள் போராட்டம் ஒரு டாட்டா மோட்டார் கம்பெனியை எதிர்த்து அன்று மேற்கு  வங்க விவசாயிகள் காட்டிய உறுதி போன்று இருக்க வேண்டும்
பின் வாங்காதீர்கள்
பொன் ராதாகிருஷ்ணன் போன்ற ஆஷாடபூதிகளை  புறம் தள்ளுங்கள்
கடவுள் துணை புரிவார்
டில்லி தமிழ் நெஞ்சங்களே இந்த அப்பாவிகளுக்கு அவர்கள் போராட்ட நோக்கம் நிறைவேறும் வரை ஊண் உடை உறையுள் தந்து உதவுங்கள்
அவர்கள் தங்களுக்காக மட்டும் அல்ல நம் மாநிலத்தின்  மானத்தையும் வாழ்வாதாரத்தையும் காக்கவே போராடுகிறார்கள்.
எந்த அரசியல் காட்சிகளையும் நுழைய விடாதீர்கள்.சமீபத்திய ஆச்சர்யம் இந்த [போராட்டத்திற்கு ராகுல் காந்தி நேரில் வந்து கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்ததுதான்.ஆனால் அவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுவோம் என்று கூறவில்லை மாறாக மோடிக்கு வெறும் எதிர்ப்பு தெரிவித்தார் அவ்வளவுதான்.
அவரால் மனப்பூர்வமாக  விவசாயிகளின் கோரிக்கைக்கு அங்கீகாரம் தர முடியாது.காரணம் ,
நதிகள் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் ராகுல்.
கர்நாடக சட்டவிரோதமாக அணைகளை கட்டவிட்டவர் இந்திராகாந்தி
மாநிலப்பிரிவினையின் போது தமிழகத்த்தின் நீர் ஆதார பகுதிகளை மற்ற  மாநிலங்களுக்கு விட்டு கொடுக்கும்படி காமராஜரை நிர்பந்தித்தவர் நேரு.
தன்னிடமிருந்து ஆட்சி பறிபோன நேரத்தில் காமராஜ் பக்தவச்சலம் உட்பட தமிழக காங்கிரஸ் கட்சி மாநிலத்திலத்தில் தன்னை ஸ்திரப்படுத்தி மீண்டும் ஆட்சியில் அமர முயற்சிப்பதை விட்டுவிட்டு டில்லியுடன் கைகோர்த்துக்கொண்டார்கள்
எனவே விவசாயிகளே அரசியலை உங்கள் போராட்டத்திற்குள் நுழையவிடாதீர்கள் உங்களுக்குள்ளும் அரசியல் பேதம் வேண்டாம்
போராடுங்கள்
வெற்றி நிச்சயம்
வாழ்க தமிழகம்

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...