வியாழன், 3 ஜூன், 2021

ஆக்சிஜனும் கொரோனாவும் ---இரத்தத்தில் ஆக்சிஜன் குறைதல் அல்லது ஹைப்பாக்சியா

(பொறுப்பு துறப்பு : - இந்த தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, இது மருத்துவ சிகிச்சைக்காக அல்ல.)

ஆக்சிஜனும் ஆரோக்கியமும்-

 ஹேப்பி ஹைப்பாக்சியா 

படம்-1
இரண்டு வகையாக தலைப்புகளை கொடுத்திருந்தாலும் ஆக்சிஜனின் ஒரு பொதுவான புரிதல் உணர்வையும்  மக்களுக்கு புரிய வைக்கவேண்டும் என்பதும் இந்த கட்டுரையின் ஒரு நோக்கம் ஆகும். 
ஆக்சிஜனை தமிழில் பிராண வாயு என்பார்கள். அது இல்லை என்றால் பிராணன் போய்விடும்.
ஒரே ஒரு தடவை ஒட்டகம் போல் தண்ணீர் குடித்த பின் மேலும் நீர் அருந்தாமல் ஒரு சில நாட்கள் வாழ்ந்துவிடலாம். 
ஒரே ஒரு தடவை வயிறு முட்ட தின்றுவிட்டு மேற்கொண்டு 
உணவில்லாமல் ஒரு சில மாதங்கள் கூட பட்டினியோடு வாழ்ந்து விடலாம்.
ஆனால் என்னதான் மூக்கு முட்ட நுரையீரல் நிறைய காற்றுடன் ஆக்சிஜனை இழுத்து விட்டாலும் மறுமுறை இழுத்து விடுவதற்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் ஒரு சில மணித்துளிகள் கூட யாராலும் உயிர்வாழ முடியாது. 
மனிதனுக்கு மட்டுமல்ல பாக்டீரியா பூஞ்சை என்று இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஆக்சிஜன் இன்றியமையாதது. ஆனால் வைரஸிற்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஏனென்றால் அது ஒரு உயிருள்ள அமைப்பு அல்ல. 
காற்றில் ஆக்சிஜனின் அளவு ஐந்தில் ஒரு பங்குதான் இருக்கிறது. மீதியில் மூன்று பங்கு நைட்ரஜனும், மேலும் மிச்சமுள்ள ஒரு பங்கில் கார்பன்டைஆக்ஸைடு,ஹைட்ரஜன்,ஹீலியம், ஆர்கான்,கிரிப்டான்,நியான்,ஸெனான் போன்ற வாயுத்தொகுப்புகளும் அடங்கி இருக்கின்றன. 
இந்த சூத்திரம் எல்லாம் அறிந்த உயிர்-ரஸாயனவியல் (Biochemistry) வல்லுனனான இறைவன் நம் பாதுகாப்பை முன்னிறுத்தி அமைத்த காற்று சூத்திரம் (AIR FORMULA) ஆகும் .(படம்-1) 
திருக்குர்ஆன் ((55:7,8,9) வசனங்களில் இந்த சமன்பாட்டை  சீர்குலைக்காதீர்கள் என்று மனிதனுக்கு இறைவன் எச்சரிக்கை செய்கிறான். 
ஆக்சிஜன் ஒரு வேதிப்பொருள்:
ஆக்சிஜனை ஒரு பெளதீக மற்றும் வேதிப்பொருளாக மிகச்சுருக்கமாக பார்க்கலாம்.
ஆக்சிஜன் ஒரு கனமான வாயு. இதன் மூலக்கூறு எடை (MW)-32gm/mole 
ஆக்சிஜனின் மூலக்கூறு சூத்திரம்(MF)-                    
படம்-2
MF-மூலக்கூறு சூத்திரம் 
MW -மூலக்கூறு எடை 



காற்றிலுள்ள ஆக்சிஜன், இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் ஒரு மின்னணு இணைப்பு மூலமாக இணைக்கப்பட்ட ஒரே மூலக்கூறுவாகவே இருக்கிறது (படம்-2). இந்த இணைப்பு சில சாதகமான சூழ்நிலைகளில் உடையலாம். அப்போது ஆக்சிஜன் வீறுகொண்டு கிரியை புரியும். உதாரணமாக. ஹைட்ரஜனை ஆக்சிஜனில் எரிய விட்டால் ஆக்சிஜன் அதனுடன் கிரியை புரிந்து தண்ணீரை உண்டாக்கும்.(படம்-3A )
படம்-3A 

ஆக்சிஜன் எரியும் பொருளை தூண்டிவிடும் ஆனால் தான் எரியாது. அதனால் தான் காற்று மண்டலத்தில் இறைவன் ஆக்சிஜனை ஒரு பங்காகவும் நைட்ரஜனை மூன்று பங்காகவும் வைத்திருக்கிறான். இல்லை என்றால் 98.4 பாரன்ஹீட் வெப்ப நிலை கொண்ட நாம் அனைவருமே ஆக்சிஜனில் எரிந்து சாம்பலாகிவிடுவோம்.
நைட்ரஜன் ஒரு மந்த வாயுவாக இருப்பதால்தான் வீரியமுள்ள ஆக்சிஜனை அது மட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. 
நைட்ரஜனுடன் ஆக்சிஜன் கிரியை புரிதல்:
படம் 3-B 
நைட்ரஜனும் ஆக்சிஜனும் பொதுவாக சாதாரண நிலையில் கிரியை புரிவதில்லை. ஆனால் தொழிற்சாலை குறிப்பாக நிலக்கரி சுரங்களிலிருந்து வெளிப்படும் அசுத்த வாயுக்களால் அதிகரிக்கும் கடும் வெப்ப நிலையில் நைட்ரஜன் ஆக்சிஜனுடன் கிரியை புரிந்து கொடிய நைட்ரஜன் ட்ரை  ஆக்ஸைடு அதிகம் வெளிப்பட்டு இரசாயன புகை  மூட்டத்தை (Photochemical Smog) உண்டாக்கும். இதே நிலையில் மின்னல் மழை உண்டாகுமானால் அதிக அமில குணமுள்ள மழை (Acid Rain) பெய்யும்.
ஆனால் தொழிற்சாலைகள் இல்லாத சுகாதாரமான சீதோஷ்ண நிலையில் மின்னலினால் சிறிதளவே நைட்ரிக் அமிலம் உண்டாவதால் தீங்கற்ற மழை பெய்யும்.(படம் 3-B). அது நிலத்தையும் வளப்படுத்தும்.
ஆக்சிஜனை உடல் எப்படி பயன்படுத்தி கொள்கிறது 
இதை அறிவதற்கு முன் நம் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினை பற்றியும் அது பொதிந்துள்ள சிவப்பு அணுக்களைப்பற்றியும் சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இரத்தத்தின் உண்மையான வடிவம் பிளாஸ்மா என்ற மஞ்சள் நிற திரவமாகும். இதில் கரையும் பொருளும் உண்டு கரையாமல் மிதக்கும் பொருட்களும் உண்டு. அவ்வாறு மிதக்கும் பொருட்களில் ஒன்றுதான் சிவப்பு அணுக்கள் ஆகும். லக்ஷக்கணக்கில் பிளாஸ்மாவில் மிதக்கும் இந்த சிவப்பு அணுக்கள்தான் இரத்தத்திற்கு நிறம் தருகிறது. இவற்றின் மூலமாகத்தான் உடல் ஆக்சிஜனை பலவாறு பயன் படுத்திக்கொள்கிறது. இவற்றில் பொதிந்துள்ள ஹீமோகுளோபின் என்ற புரதத்தின் மூலமாகத்தான் இரத்தம் ஆக்சிஜனை சுமந்து சென்று நம் உடலின் ஒவ்வொரு செல்களுக்கும் பரிமாறி உயிரூட்டுகிறது. (படம்-4)
படம்-4
ஹீமோகுளோபின் ஆக்சிஜனேற்றம் அடைந்த பிறகு சிவப்பாக மாறுகிறது. அது ஆக்சிஜனை விட்டு விட்டு கார்பன்டைஆக்ஸைடை எடுத்த பிறகு நீலமாக மாறுகிறது. எனவே அசுத்த இரத்தத்தின் நிறம் நீலமாக இருக்கிறது.
காற்றில் 21% ஆக்சிஜன் இருக்கிறது. மீதியில் 75% க்கு மேல் நைட்ரஜனும் மிச்சம் இருப்பதில் மற்ற வாயுக்களும் இருக்கின்றன.
சுத்தமான 100% ஆக்சிஜனை நம்மால் சுவாசிக்க முடியாது. அப்படி சுவாசித்தால் அது நம்முடைய நுரையீரல் காற்று பைகளை எரித்து விடும். மேலும் ஆக்சிஜன் சுவாசத்தை மட்டுப்படுத்தும் வாயுவாகும்.
எனவேதான் மெடிக்கல் ஆக்சிஜன்களை பலமாதிரி சதவீத தொகுப்பில் தயாரிக்கிறார்கள். அவை பின்வருமாறு:
1.ஆக்சிஜன் 99.5% +கார்பன்டைஆக்ஸைடு 300 ppm (0.03%)  
2.ஆக்சிஜன் 95% + கார்பன்டைஆக்ஸைடு 5%  
3.ஆக்சிஜன் 60%+நைட்ரஜன் 40%) +>0.03%கார்பன்டைஆக்ஸைடு 
மேலே கூறிய மெடிக்கல் ஆக்சிஜன் எதிலுமே 100% ஆக்சிஜன் இல்லை. ஆனால் எல்லாவற்றிலும் கார்பன்டைஆக்ஸைடு இருக்கிறது. காரணம் கார்பன்டைஆக்ஸைடு ஒரு சுவாசஊக்கி ஆகும்.
கார்பன்டை ஆக்ஸைடு மூச்சு காற்றிலிருந்து நுரையீரலுக்கும், இரத்தத்திலிருந்து திசுக்களுக்கும் ஆக்சிஜன் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது.
99.5%, மற்றும் 95% ஆக்சிஜனைக்கூட மிகவும் கவனமாகவே பயன்படுத்துவார்கள். காரணம் இவற்றில் நைட்ரஜன் இல்லை.
உள்ளிழுக்கப்பட்ட ஆக்ஸிஜன் மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு உள்மூச்சு  காற்றோடு கொண்டு செல்லப்படுகிறது. காற்று பைகளில் ஈர்க்கப்பட்ட காற்று/இரத்தம் இவற்றில் இருக்கும் பகுதி வாயு அழுத்த வேறுபாட்டின் (Partial Pressure) காரணமாக ஆக்ஸிஜன் உறிஞ்சப்படுகிறது. காற்றுப்பைகளில் உறிஞ்சப்பட்ட ஆக்சிஜன் காற்றுப்பை தந்துகி இரத்தக்குழாய்களில் கார்பன்டைஆக்ஸைடுடன் அதே பகுதி வாயு அழுத்த வேறுபாட்டினால் வாயு பரிமாற்றம் அடைகிறது. இப்படி ஆக்சிஜன் ஏற்றப்பட்ட (OXYGENATED)  சுத்த இரத்தம் நுரையீரல் சிரை  வழியாக இதயத்தின் இடது வெண்டிரிக்கிளை அடைந்து அங்கிருந்து பெருந்தமனி மூலம் உடல் திசுக்களுக்கு அனுப்பப்படுகிறது.(படம்-4)
உவகை ஹைப்பாக்சியா (HAPPY HYPOXIA)  அல்லது உவகை ஹைப்பாக்சீமியா (HAPPY HYPOXEMIA)  :-
கோவிட் -19 நோயாளிகளின் இறுதிக்கட்ட அறிகுறிகளில் இதுவும் ஒன்று. வினோதமான நிலை. ஆபத்தான நிலை.
சாதாரணமாக இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 95% -99% வரை இருக்கலாம். இந்த அளவு சில நோய் நிலைகளில் 40% க்கு கீழே இறங்கினால் நோயாளிக்கு மயக்கம் ஏற்படும். இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோயாளி மரணம் அடையலாம். மூச்சு திணறலும் ஏற்படும்.
ஆனால் கோவிட்-19 நோயாளிக்கு இந்த அளவு ஆக்சிஜன் இரத்தத்தில் குறைந்தாலும்,மயக்கம் மூச்சு திணறல் போன்ற வெளி அறிகுறிகள் எதுவும் பெரும்பாலான நோயாளிகளுக்கு உடனே  ஏற்படுவதில்லை. அவர் மகிழ்ச்சியாகவே இருப்பார். அதனால்தான் இதற்கு இந்தப்பெயர்.
மகிழ்ச்சியான ஹைபோக்ஸியா அத்தகைய வெளிப்படையான வெளிப்புற அறிகுறிகளைத் தூண்டாது. இதன் விளைவாக, ஆரம்ப கட்டங்களில்
COVID-19 நோயாளி, வெளியில், சரியாகவும் “மகிழ்ச்சியாகவும்” இருப்பதாகத் தெரியும்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் ஆக்ஸிஜன் அளவு ஏன் குறைகிறது?
நுரையீரலில் உள்ள சிறிய இரத்த நாளங்களின் சிக்கலான வலையமைப்பில் நிகழும் உறைதலினால் ஏற்படும் சிறு சிறு கட்டிகள், மேலும் பரவலான உறைதல்கள் ஆகியவைதான் , பெரும்பான்மையான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களால், மகிழ்ச்சியான ஹைபோக்ஸியாவின் முதன்மைக் காரணிகளாகக் கருதப்படுகிறது.
இதன் பின்னணியில் உள்ள காரணி, உடலில் ஏற்படும் அழற்சி எதிர்விளைவாகும் (Inflammatory Reaction), இது பெரும்பாலும் SARS-CoV-2 நோய்த்தொற்றால் தூண்டப்பட்டு, அதன் பின்னர் ஏற்படும் COVID-19 இன் தொடக்கமாகும். இது செல்லுலார் புரதத்தைத் தூண்டுகிறது. ஆரம்பகட்டத்தில் இந்த அறிகுறி மறைந்து இருந்தாலும் இறுதிக்கட்டத்தில் இதுவே நோயாளியின் மரணத்திற்கும் காரணி ஆகிறது.
COVID-19 அறிகுறிகளை  நீண்ட பட்டியலிடலாம். அதில் மிகவும்  சமீபத்தியது ‘மகிழ்ச்சியான ஹைபோக்ஸியா’, அதாவது இரத்தத்தில் மிகக் குறைந்த அளவு ஆக்ஸிஜன் இருந்தாலும் நோயாளி எந்த அறிகுறிகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார். இது  உலகெங்கிலும் உள்ள மருத்துவ வல்லுநர்களை குழப்பமடைய வைத்திருக்கிறது.
அதாவது கோவிட் தொற்று இருந்தும் அறிகுறியே இல்லாதவர் கூட தங்கள் ஆக்சிஜன் அளவை ஆக்சிமீட்டர் மூலமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. காரணம் அறிகுறிகளை வெளியே காட்டாத மகிழ்ச்சி ஹைப்பாக்சியா இருக்கலாம்.

அறிகுறியற்ற அல்லது COVID-19 இன் லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான ஹைபோக்ஸியாவை எவ்வாறு அடையாளம் காண்பது?:-

1.ஆக்சிமீட்டர் மூலம் 
2.உதடுகள் நீலம்பாரித்தல் 
3.அசல் நிறத்தில் இருந்து சிவப்பு / ஊதா தோற்றத்திற்கு தோல் நிறமாற்றம் ஏற்படுகிறது. 
4.கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யாவிட்டாலும் அல்லது சூடான சுற்றுப்புறத்திலும் கூட தொடர்ந்து வியர்த்தல் 
முடிவாக மகிழ்ச்சியான ஹைபோக்ஸியாவின் இந்த எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனிப்பது ஒரு மருத்துவமனை அமைப்பில் உடனடி சிகிச்சையை உறுதிசெய்கிறது, இதன் மூலம் நுரையீரல் திறன் மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் சாதாரண சுவாசத்தை மீட்டெடுப்பது மற்றும் COVID-19 இலிருந்து மீட்க உதவுகிறது.



அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...