பிஸ்தா
பிஸ்தா பருப்பு மரங்களிலிருந்து பெறப்படும் போஷாக்கு நிறைந்த மேவா பருப்பு ஆகும்.வேறு எந்த பருப்பு வகையையும் விட அதிகம் புரத சத்து உடையது.ஒரு அவுன்ஸ் பிஸ்தாவில் சுமார் 6 கிராம் புரதம் இருப்பதால் சைவ உணவு பிரியர்களுக்கு இது ஒரு அமிர்தம் ஆகும்
மேலும் பிஸ்தாவில் ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் மற்றும் நார் சத்தும் இன்னும் விட்டமின்களும் அபரிமிதமாக உள்ளன
1 அவுன்ஸ் (28.35 கிராம்) பிஸ்தாவில் American Agricultural Department விகிதப்படி கீழ்கண்டவாறு அதன் சத்துக்கள் அமைந்துள்ளன:-
1.கலோரி --- 159
2.புரதம் --- 5.72 gm
3.கொழுப்பு --- 12.85 gm
4.கார்போஹைடிரேட் --- 7.75 gm
5.நார் சத்து --- 3 gm
6.சர்க்கரை --- 2.72 gm
தாது உப்புகள் & வைட்டமின்கள்
7.மக்னேசியம் --- 34 mgm
8.பொட்டாசியம் --- 291 mgm
9.பாஸ்பரஸ் --- 139 mgm
10.வைட்டமின் பி -6 (பைரிடாக்சின்) --- 0.480 gm
11.வைட்டமின் பி-1 (தயாமின்)
சக்தி :-
மற்ற பருப்புகளை விடவும் பிஸ்தாவில் மிகக்குறைந்த அளவே கலோரி (159) இருக்கிறது எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை தைரியமாக சாப்பிடலாம் ஒப்புமையாக மகடாமியா பருப்பில் 202 கலோரியும்,குவையானா (பேக்கன்)பருப்பில் 192 கலோரியும் இருக்க பிஸ்தாவில் மிக குறைந்த கலோரியே இருக்கிறது
ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் (Antioxidant)
ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் உடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பாக இதயம் பலப்படுவதற்கும் தேவையற்ற ஆக்ஸீகரண கழிவுகள் தேங்கி உடலில் புற்று நோய் உண்டாகாமல் தடுப்பதற்கும் அத்தியாவசியமானவை.வாதுமை மற்றும் முந்திரி பருப்புகளை விடவும் பிஸ்தாவில் இவை அபரிமிதமாக இருக்கின்றன.
உதாரணமாக பிஸ்தாவில் அடங்கி இருக்கும் ஆக்சிசீகரண எதிர்ப்பான்கள் :-
1.ஆல்பா டோக்கோபெரால் (வைட்டமின் -இ )
2.பைட்டோ ஸ்டெரால்கள்
3.சாந்தோப்பில் கரோட்டினாய்டுகள் (கண்கள் ஆரோக்கியத்திற்கு )
28 பேர்கள் மாதிரிகளாக அடங்கிய ஒரு சிறு ஆய்வில் அவர்களுக்கு 1 அல்லது 2 சர்வீஸ் (1 அல்லது 2 கை பிடி) பிஸ்தா பருப்பு ஒரு மாதம் சாப்பிட கொடுத்ததில் அவர்களுக்கு மற்ற எவரையும் விட தேவையான அளவு ஆக்ஸீகரான எதிர்ப்பான்கள் (லுடீன்,ஸீ சாந்தின்,ஆல்பா-கரோட்டின்,மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை உடலில் கூடி இருப்பது தெரிய வந்தது
American Ophthalmic Assocition சிபார்சுபடி லூடின் மற்றும் சீசாந்தின் போன்ற ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் முதுமையில் உண்டாகும் பார்வை கோளாறுகளுக்கு மிகவும் சிறந்தவை ஆகும்
ஜீரண மண்டலம் :-
பிஸ்தாவில் இருக்கும் அதிக நார்சத்து குடலினுள் உணவை மிக எளிதாக இறங்க செய்வதால் மலச்சிக்கலுக்கு பிஸ்தா மிகவும் உகந்த தாக்கும்
மேலும் பிஸ்தாவில் இருக்கும் பிரி பையாட்டிக்குகள் குடலில் நல்ல நுண்கிருமிகள் உண்டாக்கி செரிமான சக்தியை அதிகரிக்கும்