வியாழன், 22 அக்டோபர், 2020

உயிரணுக்களில் புரதம் தயாரித்தல்-கார்ட்டூன் உவமேயம்-2

 மனித (யூகேரியோட் ) செல்களில் புரதம் தயாரித்தல் 


மேலே உள்ள படத்தில் கண்டவாறு உவமையாக மனித செல்கள் உட்பட யூகேரியோட் செல்கள் அனைத்திலும் புரதம் தயாரிக்கப்படுகிறது 
முதலில் Transcription என்ற நகலெடுப்பு  ஒரு முழு சமையல் புத்தகத்திலிருந்து ஏதோ ஒரு பகுதியை காபி எடுத்து சமையல் செய்ய பயன்படுத்துவது மாதிரி கருவுக்குள் தொடங்குகிறது. அந்த முழு சமையல் புத்தகமும் குரோமோசோமில் புதைந்து கிடக்கும் முழு DNA சங்கிலியாகும். அதில் தேவையான ஏதோ ஒரு பகுதி என்பது புரதம் தயாரிக்கும் தகவலை கொண்ட அந்த குறிப்பிட்ட ஜீன் ஆகும்.
இந்த ஜீனை mRNA  வாக காப்பி எடுக்கும் மெஷின்தான் DNA சார்பு RNA பாலிமரேஸ் (RNAP) ஆகும். 
காபி எடுக்கப்பட்ட ஒழுங்கற்ற mRNA வை சரிபார்த்து ஒழுங்காக்கி கருவை விட்டு வெளியே அனுப்புவது snRNA வாகும். இத்துடன் நகலெடுப்பு முடிந்தது 
இனி Translation என்ற மொழிபெயர்ப்பு. இது கருவுக்கு வெளியே சைட்டோபிளாசத்தில் நடைபெறும்.
mRNA யில் உள்ள ரெசிபியின் அடிப்படையில் tRNA க்கள் ஒவ்வொன்றாக ஒவ்வொரு அமினோ அமிலங்களையும் கொண்டு அந்த ரிபோசோம் என்ற அடுப்பில் வைத்து சமைத்து புரதமாக வெளியாக்குகிறது 

உயிரணுக்களில் புரதம் தயாரித்தல்-கார்ட்டூன் உவமேயம்-1

1.பாக்டீரியா (புரோகேரியோட்டுகள் )


 


பாக்டீரியா செல்களில் புரதம் எவ்வாறு தயாராகிறது   என்பதை மேலே உள்ள  கார்ட்டூன்  படத்தை  உவமையாக கொண்டு கீழ்கண்டவாறு விளக்கலாம் 
Transcription என்ற காப்பி எடுத்தலை ஒரு சமையல் புத்தகத்தின் அசல் பிரதியின் தேவையான ஏதோ ஒரு பகுதியை மட்டும் ஒரு காப்பி எடுக்கும் இயந்திரத்தில் வைத்து காப்பி எடுத்தலுக்கு உவமையாகக் கொள்ளலாம் 
படத்தில் கட்டப்பட்டதுபோல் அசல் சமையல் புத்தகம் மொத்த DNA ஆகும். அதில்  குறிப்பிட்ட பகுதி என்பது புரதம் தயாரிக்க தேவையான தகவல்கள் அடங்கிய DNA சங்கிலியின் அந்த குறிப்பிட்ட ஜீன் பகுதியாகும்.
அதை காப்பி எடுக்கும் கருவிதான் DNA சார்புள்ள RNA பாலிமரேஸ் (RNAP ) என்ற நொதியாகும். எடுக்கப்படும் காப்பி mRNA ஆகும்.
இனி எடுக்கப்பட்ட mRNA  காப்பியை மொழிபெயர்த்து அதிலுள்ள ரெஸிபிக்கு ஏற்ற மாதிரி வித விதமாக அமினோ அமிலங்களை ரிபோசோம் என்ற அடுப்புக்கு கொண்டு வர பயன்படும் விதவிதமான கரண்டிகள் தான் tRNA க்களாகும்.
முடிவாக புரதம் ரிபோசோமில் தயாரிக்கப்படுகிறது 



அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...