செவ்வாய், 20 அக்டோபர், 2020

உடலுக்குத் தேவையான மிக முக்கிய அமினோ அமிலங்கள் -மூலக்கூறு உயிரியல் -3-4

 உடலால் தயாரிக்க முடியாத மிக அவசியமான  அமினோ அமிலங்கள் 

எல்லா உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்கும்,உயிரோட்டத்திற்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் மிக இன்றியமையாதது புரதம் ஆகும். மனிதனாகவோ  (யூகேரியோட்), பாக்டீரியாவாகவோ  (புரோகேரியோட்)  அல்லது வைரஸாகவோ எதுவாக   இருந்தாலும்  அனைத்து உயிரினங்களின் செல் வளர்ச்சிக்கும் மிக அத்தியாவசியமானது புரதச்சத்து ஆகும்.
இந்த புரதங்களை உயிரினங்களின் செல்கள்தான் தயாரிக்கின்றன. இந்த புரதங்களை தயாரிப்பதற்கான அடிப்படை மூலக்கூறுகள் அமினோ அமிலங்கள் ஆகும். பெரும்பாலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களின் செல்களும் புரதங்கள் தயாரிக்க 20 மிக முக்கிய அமினோ அமிலங்களை பயன்படுத்துகின்றன. அவற்றில் 11 அமினோ அமிலங்களை நம் உடல் செல்களே தயாரித்துக்கொள்கின்றன. ஆனால் மீதி 9 அமினோ அமிலங்களை உடலால் தயாரிக்க முடியாது. அது வெளியிலிருந்து உணவாகவோ அல்லது மருந்தாகவோதான் உடலுக்கு தரப்படவேண்டும். அந்த அமினோ அமிலங்களும் அவை கிடைக்கப்பெறும் உணவு வகைகளையும் கீழே காணலாம் 
பொதுவாகவே புரதச்சத்து அதிகமுள்ள அசைவ உணவுகளான ஆடு,மாடு மீன்,முட்டை பால் பருப்பு வகைகள் அனைத்திலும் அமினோ அமிலங்கள் அபரிமிதமாக கிடைக்கின்றன 
1.லைஸின் :- இது உடலுக்கு சக்தியும் வலிமையும் தரக்கூடிய L-கார்னிட்டின் மற்றும் இன்சுலின் ஆகிய புரதங்களை  தயாரிக்க பயன்படுகிறது. மேலும் லைஸின் இன்சுலினை உடல் பயன்படுத்தும் திறனை அதிகரிக்கிறது. 
லைஸின் அதிகமுள்ள உணவு பண்டங்கள்:-
1.ஆடு,மாடு,& கோழி 
2.பார்மேசன் சீஸ் கட்டி 
3.காட் & சால்மன் மீன்கள் 
4. முட்டைகள் 
5.சோயா மொச்சை &சோயா தயிர் (Tofu)
6.ஸ்பிருலினா என்ற பச்சை பாசி 
7.வெந்தயம்.
2.லியூஸின் :-லியூசின் மெலிந்த உடல் 
 வாகு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.உடல் புரத உற்பத்தியை தூண்டி உடல் சதை போடுவதை ஊக்குவிக்கும். சதை கரைவதை தடுக்கும் 
லியூஸின் அதிகமுள்ள பொருட்கள் 
1.மோர்,தயிர் 
2.சோயா மொச்சை 
3.வேர் கடலை 
4.சணல் விதைகள் 
5.மாட்டிறைச்சி 
6.சால்மன் மீன்கள் 
7.முளை கோதுமை 
8.வாதுமை பருப்பு 
9.சுட்ட அல்லது பொரித்த கோழியின் தொடை 
3.ஐஸோலியூஸின் :- 
ஐஸோலியூஸின் புரத தயாரிப்புக்கு துணை போவது மட்டுமல்லாமல் புரத மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.
1.மாட்டிறைச்சி 
2.கன்றுக்குட்டி இறைச்சி 
3.ஆட்டிறைச்சி 
4.கோழி இறைச்சி 
5.முளை கோதுமை 
6.பருப்பு 
7.விதைகள் 
8.பேக்கரி ஈஸ்ட் 
4.மெதியோனின் 
மெத்தியோனின் புரத தாயாரிப்புக்கு உதவுவதுடன் பாராசிட்டமால் மிகுதியினால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
1.நறுக்கி பொடிக்கப்பட்ட வான்கோழி இறைச்சி 
2.மாட்டிறைச்சி 
3.டூனா மீன் (மாசி மீன் ,சூறை மீன் )
4.சோயா தயிர் (Tofu)
5.பால் 
6.பிரேசில் நட்ஸ் 
7.பெரிய வெள்ளை பீன்ஸ் 
5.பீனைல் அலனின் :-
இது புரத உற்பத்திக்கு மட்டுமில்லாம மூளையின் செல்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும் மூலக்கூறுகள் உற்பத்தியிலும் பங்கெடுக்கிறது. மேலும் வலி ,தோல் நோய்கள் மனஉளைச்சல் இவற்றிலும் பரிகாரமளிக்கிறது 
1.பால் 
2.முட்டை 
3.சீஸ் 
4.நட்ஸ் 
5.கோழி 
6.பீன்ஸ் 
7.மீன் 
6.த்ரெயோனின் :-
இந்த அமினோ அமிலம் புரதம் தயாரிப்பதற்கு பயன்படுவதுடன் தண்டுவட பாதிப்புடன் கூடிய வலிப்பு (spinal spasticity), தண்டுவட மரப்பு(Multiple sclerosis), தண்டுவட சுருக்கத்தால் பாதங்களில் உண்டாகும் வாதம் (spinal  paraparesis), பக்கவாதம் (amyotropic lateral sclerosis) போன்ற நரம்பியல் கோளாறுகளுக்கும் பயன்படுகிறது 
1.பாலாடைக்  கட்டி  
2.கோழி இறைச்சி 
3.மீன் 
4.பயறுகள் 
5.சோயா மொச்சை 
6.நட்ஸ் 
7.ட்ரிப்டோ ஃபேன் :-
புரத தயாரிப்பில் பங்கெடுப்பதுடன் மூளை செல்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்குகந்த மூலக் கூறுகளையும் தயாரிக்க பயன்படுகிறது.
1.சாக்கலேட் 
2.ஓட்ஸ் 
3.உலர்ந்த பேரீத்தம்பழம் 
4.பால்,யோகர்ட் ,பாலாடைக் கட்டி 
5.மாட்டிறைச்சி,ஆட்டிறைச்சி,
6.முட்டை மற்றும்  கோழி 
7.மீன் 
8.எள் & பட்டாணி 
9.வாதுமை & நிலக்கடலை 
10சூரியகாந்தி விதை, பூசணி விதை, மரக்கோதுமை 
8.ஹிஸ்ட்டிடின்:-
இது புரத தயாரிப்பில் பயன்படுத்துடன், வாதம், ஒவ்வாமை, அல்சர் , சோகை, சிறுநீரகக்கோளாறு ஆகியவற்றிலும் பயன் ஆகிறது 
1.கோழி & பறவை இறைச்சி 
2.முழு கோதுமை 
9.வேலின்:-
இந்த அமினோஅமிலமும் புரத தயாரிப்பில் பயன்படுவதுடன் சதை வளர்ச்சி,தசை புதுப்பித்தல், உடல் வலிமை ஆகிய நன்மைகளுக்கும் பயன் ஆகிறது 
1.சோயாமொச்சை 
2.சீஸ் கட்டி 
3.நிலக்கடலை 
4.காளான் 
5.இறைச்சி வகை 



அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...