கர்ப்ப கோளாறுகளை உண்டாக்கும் ஆல்ப்ரஜோலாம் போன்ற தூக்க மருந்துகள் 
படம்-1

ஆல்ப்ரஜோலாம் (Alprazolam) -இன்றைக்கு டாக்டர்கள் அதிகமாக தூக்கத்திற்கு எழுதிக்கொடுக்கும் மருந்துகளில் ஒன்று. இது ஒரு பென்ஜோடையஜாப்பின் (Benzodiazepine) என்ற வகையை சேர்ந்த தூக்க மருந்தாகும். இந்த வகையை சேர்ந்த கீழே பட்டியலிடப்பட்ட மற்ற மருந்துகள்:-
1. டையஜிப்பம் (Diazepam)-1 டு 3நாட்கள்
2.குளோர்டையசப்பாக்ஸைடு -(Chlordiazepoxide)-1 டு 3 நாட்கள்
3.டெமஸிப்பம் -Temazepam -10 டு 20 மணி நேரம்
4.லொராஜிப்பம் -Lorazepam - -do -
5.ஆக்ஸஜிப்பம் -Oxazepam - 2 டு 8 மணித்துளிகள்
6.குளோனஜிப்பம் -Clonazepam - -do -
7.மிடஜோலம் - Midazolam -2 டு -8 மணித்துளிகள்
8.டிரையஜோலாம் -Triazolam -2 டு 8 மணித்துளிகள்
மேல் குறிப்பிடப்பட்டவைகளில் ஆல்ப்ரஜோலமும் 10 டு 20 மணிநேரம் தூக்கத்தை தரக்கூடியதாகும்.
இந்த தூக்க மாத்திரை ஆண் பெண் என்ற பேதமில்லாமல் வயது வரம்புமில்லாமல் எவ்வித முன்னெச்சரிக்கை வழிகாட்டுதலுமில்லாமல் டாக்டர்களால் அதிகம் எழுதிதரப்படுகிறது. நம் ஊரில் 75 சதவீதத்திற்குமேல்பட்டவர்கள் ஆண் பெண் என்ற பாலின வேற்றுமை இல்லாமல் வயது வித்தியாசமுமில்லாமல் டாக்டர்களின் இந்த பொறுப்பற்ற தன்மையினால் இந்த தூக்க மாத்திரைக்கு அடிமைப்பட்டு உருக்குலைந்து கிடக்கின்றனர்.
பென்ஜோடையஜாப்பின் (Benzodiazepine) வகை தூக்க மாத்திரைகள் குறிப்பாக ஆல்ப்ரஜோலாம் பெண்களின் கர்ப்ப உறுப்புகளில் கோளாறுகளை உண்டாக்குவதாக கண்டிருக்கிறார்கள்
கர்ப்பக்குழாய் பிரசவம் -ECTOPIC PREGNANCY:-
படம்-2
கர்ப்பக்குழாய் பிரசவம்
மேலே படம்-2 இல் காட்டப்பட்டுள்ளது பிரசவத்தின் ஒரு அசாதாரண நிலை ஆகும். ஆபத்தான நிலையும் கூட. அதாவது விந்தணுவுடன் கூடி கருத்தரித்த நிலையில் கருமுட்டையானது கர்ப்பப்பைக்குள் நுழைய முடியாமல் கருக்குழாயிலேயே குழந்தையாக வளரத்துவங்குவது. இந்த நிலை கருத்தரித்த நிலையில் நீண்ட காலம் ஆல்ப்ரஜோலம் தூக்க மாத்திரையை உபயோகிக்கும் கர்ப்பிணிக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்பக்குழாய் பிரசவம்
கர்ப்ப கோளாறுகள்-DEFECTIVE CONCEPTIONS :-
டாக்டர்கள் பென்ஜோடையஜாப்பின் (Benzodiazepine) பற்றி சொல்லும் போது கர்ப்ப காலங்களில் ஆல்ப்ரஜோலத்தை விட டையாசிப்பம் பாதுகாப்பானது. ஆனால் அது பாலூட்டும் நிலையில் நல்லதல்ல என்பர். மேலும் கர்ப்ப நிலையிலும் பாலூட்டும் நிலையிலும் குளோர்டையசப்பாக்ஸைடு (லிப்ரியம்) மிக பாதுகாப்பானது என்பர்.
ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். அதாவது அலோபதி மருத்துவத்தில் பாதுகாப்பானது என்ற வார்த்தை அதன் அசல் அகராதி அர்த்தத்தில் சொல்லப்படுவதில்லை. பாதுகாப்பானது என்றால் குறைந்தபட்ச பின்விளைவுகளை கொண்டது என்று அர்த்தம்.
குறைந்த பட்சம் என்ற அளவீடும் சரியான அர்த்தத்திலும் வராது. நிலையான அர்த்தமும் தராது. இதுதான் அலோபதி.
பென்ஜோடையஜாப்பின் (Benzodiazepine) தூக்க மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்ளத்தால் ஏற்படும் கர்ப்பக்கோளாறுகள் ஏராளம்.
அவற்றில் சில,
1.ஒழுங்கற்ற பிளவுபட்ட உதடுகளுடன் பிறக்கும் குழந்தை.
2.குழந்தைக்கு தூக்க மருந்து பழக்கம் ஏற்படுவது.
தூக்கமருந்தும் பெண் மலட்டுத்தன்மையும் :-
எல்லா தூக்க மருந்துகளுக்கும் கோலினெர்ஜிக் எதிர்ப்பு சக்தி உண்டு.
இதனால் நாட்பட்ட தூக்க மருந்து உபயோகிக்கும் திருமணமாகி குழந்தை பேற்றை எதிர்பார்க்கும் பெண்களுக்கு மலட்டு தன்மை உண்டாகலாம்.
காரணம் இவர்களின் இனப்பெருக்க உறுப்புகளின் இயக்கங்களில் மந்த நிலை உண்டாகும். இதனால் யோனியின் வழியாக உள்ளே நுழையும் விந்தணு கருக்குழாயில் காத்திருக்கும் பெண் கரு முட்டையை எட்ட முடியாமல் போகலாம்.
எனவே தூக்க மாத்திரைகளை கையாள்பவர்கள் கவனமாக இருக்கவும்.
முதலில் தூக்க மருந்துகள் நோய் நிவாரணிகள் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவும்.
அவை உங்களுக்கு தூங்குவது போன்று ஒரு வித மயக்கத்தை தந்து உங்கள் நரம்புகளை சிதைத்து உங்களை நிரந்தர நோயாளிகளாக்கும் நச்சுக்கள் என்பதை புரிந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக