மனச்சோர்வு மருந்துகள் -அமிட்ரிப்ட்டையிலின் 
படம் -1

மனச்சோர்வு என்பது தீவிரமான சோகம், வாழ்க்கையின் அன்றாட அம்சங்களில் பொதுவான நலன்களை இழத்தல், தூக்கமின்மை, பசியின்மை, தன்னை பற்றிய குறைவான சுயமதிப்பீடு,ஆகிய அறிகுறிகளைக்கொண்ட ஒரு மன நோய் ஆகும்.
நரம்பியல் ரீதியில் இதை விளக்குவதென்றால் நரம்புகளுக்கு இடையேயான சந்திப்பு இடைவெளியில் (nerve synapse) செய்தி பரிமாற்றங்களுக்கு தேவையான நாரெட்ரீனலின், டோப்பமின் செரோட்டோனின் போன்ற ஹார்மோன்கள் குறைவு பட்டோ அல்லது சுத்தமாக இல்லாமலோ இருப்பது.
இந்த நோய் வந்தவர்கள் செய்யும் முதல் தவறு பொறுமையின்மை. அதாவது மனதளவில் ஏற்பட்ட சோர்வை உடல் ரீதியான பாதிப்பாக எண்ணிக்கொண்டு உடனே ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டிடமோ அல்லது எதோ ஒரு அல்லோபதி டாக்டரிடமோ போகிறார்கள்.
அவருக்கு அடித்தது லாட்டரி. அதுவும் ஒரு சைக்கியாட்ரிக் ஸ்பெஷலிஸ்டிடம் போனால் கேட்கவே வேண்டாம். உங்களை நிரந்தர நோயாளியாக்கி தானும் வருமானம் பார்த்து மருந்தகங்களும் வருமானம் பார்ப்பதற்கு அவர் பண்ணும் முஸ்தீபுகள் ஒன்று தூக்க மாத்திரையை எழுதித்தருவார் இல்லை என்றால் மனச்சோர்வு மருந்துகளை எழுதித்தருவார். நீங்கள் இந்த மாத்திரைகளுக்கு அடிமையாகி உங்கள் பணமும் பாழாகி மருத்துவத்துறைக்கும் மருந்தியல்துறைக்கும் ஒரு நல்ல வருமானத்தை கொடுத்துவிடுவீர்கள். காரணம் இந்த மருந்துகள் எதுவுமே நோய் நிவாரணிகள் அல்ல.
அந்த மனச்சோர்வு மருந்துகளில் ஒரு சில மட்டும் கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
![]() |
Fig-Table |
மேலே உள்ள பட்டியலில் முக்கியமானவை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இவை போக இன்னும் இந்த லிஸ்டில் ஏராளம் இருக்கின்றன.
இவை அனைத்துமே வித்தியாசமான முறையில் மனச்சோர்வை தணித்தாலும் கீழ்கண்ட விதங்களில் இவை ஒன்றாகவே இருக்கின்றன.
அதாவது நரம்பு முண்டுகளில் இருக்கும் இடைவெளிகளில் (Synapses) நாரெட்ரீனலின், டோப்பமின் அல்லது செரோட்டோனின் என்ற குறிப்பிட்ட மூன்று ஹார்மோன்களில் ஏதோ ஒன்றையோ அல்லது மூன்றையும் சேர்த்தோ அதிகரிக்கச் செய்து மனச்சோர்வை போக்குகின்றன.
![]() |
படம்-2 |
உதாரணமாக அமிட்ரிப்ட்டையிலின் நரம்பு முண்டு ஒத்திசைவுகளில் (இடைவெளிகளில்) நாரெட்ரீனலின் மற்றும் செரோட்டோனின் ஹார்மோன் சுரப்புகளை திரும்பவும் உறிஞ்சப்படாமல் செய்து அதிகரித்து நரம்புகளின் செய்திப்பரிமாற்றங்களை உற்சாகப்படுத்துகிறது.
இதே போல் SSRI வகையை சேர்ந்த புளூவாக்சைடின் (Fluoxetin), சிட்டாலொப்ரேம் (Citalopram), மற்றும் எசிட்டாலொப்ரேம் (Ecitalopram) போன்ற மருந்துகள் செரோட்டோனின் ஹார்மோனை மட்டும் நரம்பு சந்திப்பு இடைவெளிகளில் அதிகரிக்கச்செய்து மனச்சோர்வை போக்குகிறது.
இதே போல் SSRI வகையை சேர்ந்த புளூவாக்சைடின் (Fluoxetin), சிட்டாலொப்ரேம் (Citalopram), மற்றும் எசிட்டாலொப்ரேம் (Ecitalopram) போன்ற மருந்துகள் செரோட்டோனின் ஹார்மோனை மட்டும் நரம்பு சந்திப்பு இடைவெளிகளில் அதிகரிக்கச்செய்து மனச்சோர்வை போக்குகிறது.
ஆயினும் இவை எல்லாமே தொடர்ந்து சாப்பிடப்படும் பொழுது மத்திய நரம்புமண்டலத்தையும் மூளையையும் சிதைக்கின்றன . அதுமட்டுமில்லாமல் தானியங்கி நரம்பு மண்டலத்தையும் கீழ்கண்டவாறு பெரும் பாதிப்புகளுக்கு ஆளாக்குகின்றன.
2.ஆல்பா அட்ரீனெர்ஜிக் அழுத்த உயர்வு (புராஸ்டேட் பிரச்சினை உள்ளவர்கள் கவனம்)
3.இதயத்துடிப்பு அதிகரித்தல். ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
4.இரத்த அழுத்த சீர்குலைவு
5.தூக்கமின்மை
6.நீண்ட கால அமிட்ரிப்டையலின் உபயோகம் சிறுவர்,குழந்தைகள் உட்பட இளம்பிராயத்தினரின் இயல்புநிலையில் தடுமாற்றத்தை உண்டாக்கும். பொறுமையின்மை, விரக்தி மற்றும் தற்கொலை எண்ணம் ஆகியவை அதிகரிக்கும். எனவே அமிட்ரிப்ட்டையிலினை நீண்ட காலம் உபயோகிப்பவர்களின் தினசரி நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளவேண்டும்.
முடிவாக எந்த ஒரு மனநோய் மருந்துகளானாலும் அவை நிரந்தர பரிகாரம் தராது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
உங்கள் உடலுக்கு தேவை இல்லாத சுமைகளையும் பாதிப்புகளையும் உண்டாக்கும் என்பதுதான் உண்மை.
உடல் நோய்க்கு டாக்டரிடம் போங்கள்.
ஆனால் மன நோய்க்கு நீங்கள் தான் டாக்டர்.
முதலில் உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்
சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்துப்போக பழகிக்கொள்ளுங்கள்
பொறுமை சகிப்புத்தன்மை இவற்றை கடைபிடியுங்கள்.
போதும். பிறகு,
"மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்.
வ்ழிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக