கொரோனா ஆபத்தானதா?
Miss COVID-19

கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் ஒரு வைரஸ் அல்லது வைரஸ் குடும்பம் இருக்கத்தான் செய்கிறது என்பது மிகவும் வெளிப்படையான உண்மை .நிச்சயமாக இது ஒரு தொற்று நோயை உண்டாக்கும் ஒரு வைரஸ் குடும்பத்தை சேர்ந்ததுதான். சிலருக்கு இது மரணத்தையும் உண்டாக்கலாம். அது அவருடைய வயது, உடல் சக்தி மற்றும் அவருக்கு இருக்கும் பிற உடல் உபாதைகளைப் பொறுத்தது.
ஆனால் இந்த வைரஸ் ஊரை ஒடுக்கிவைக்குமளவுக்கு அவ்வளவு பயங்கரமானதா? இதை விட வேறு கொடிய நோய்களும் இல்லையா? இதற்கு முன்னர் இந்தியாவிலோ அல்லது உலகத்திலோ வைரஸ் தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லையா?
டெங்கு காய்ச்சல் பல உயிர்களைக் கொன்றது.
பன்றிக் காய்ச்சல் பல உயிர்களைக் கொன்றது.
கொடிய ஸ்பானிஷ் காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் இன்றும் உள்ளது மற்றும் தொடர்ந்து மக்களைக் கொன்று வருகிறது.
ஆனால் இந்த கொரோனா வைரஸிற்கு மட்டும் ஏன் இப்படி பல கட்டுப்பாடுகள்?
இன்று உலக சுகாதார அமைப்பு (WHO) இதை ஒரு ஹீரோவாக தூக்கிப்பிடிக்கிறது. அதுவும் குறிப்பாக இந்தியாவில் இது ஒரு வி.ஐ.பியாக மதிக்கப்படுகிறது . ஏனென்றால்
இந்திய பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி மக்களை சரியாக இரவு 9.09 மணிக்குபால்கனிகளில் நின்று விளக்குகளை ஏற்றி, மணிகள் ஒலிக்கவும், கைதட்டவும் சொன்னபோது ஒவ்வொரு விவேகமான மக்களின் ஆறாவது அறிவும் விக்கித்து நின்றது.மார்ச் 2020 இல் அரங்கேற்றப்பட்ட கொரோனா நாடகத்தின் முதல் கட்டங்களில் நடிக்கப்பட்ட முதல் காட்சி இது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த நேரத்தில் விவேகமுள்ளவர்கள் உடனடியாக அந்த நாடகத்தின் துர்நாற்றத்தை உணர்ந்தார்கள். நிச்சயமாக இது இல்லுமினாட்டி மருந்து மாபியாக்களின் நன்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நாடகம் என்பதை ஒரு சிலர் உணராமல் இல்லை. ஆனால் உலகம் ஏமாந்தது. நான் ஒரு வைரஸ்தானே,நான் என்ன பேயா பூதமா என்று கொரோனா திகைத்தது.
இந்த நாடகத்திற்குள் தானும் ஒரு பாத்திரமாக உலக சுகாதார அமைப்பும் ஒளிந்து கொண்டிருக்கிறதா என்ற சந்தேகமும் வலுக்கிறது. இந்த நோய்க்கு WHO சூட்டிய பெயரைப் பாருங்கள்.
2019-இல் ஏதோ உலக வைரஸ் அழகிப்போட்டியில் முதல் பரிசு பெற்ற அழகிக்கு சூட்டப்பட்ட பட்டம் மாதிரி கோவிட் -19. உலகில் எந்தவொரு நோய்க்கும் இதுபோன்ற அதிசயமான பெயர் தரப்பட்டு இருந்ததா?
பின்னே என்னதான் நடக்கிறது? இதில் பெரிய மர்மம் ஒன்றும் இருக்கிறது.
இந்த மருந்து மாஃபியாக்கள் மக்களின் ஆரோக்கியத்தில் சூதாட்டம் செய்கின்றன. COVID-19 என்பது அவர்களின் கடும் பண தாகத்தை பூர்த்தி செய்வதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த விளையாட்டின் பெயர். இது ஒரு சூதாட்ட நாடக விளையாட்டு.
இனி இந்த விளையாட்டின் தொடராக கொரோனா முதல் அலை இரண்டாவது அலை மூன்றாவது அலை என்று சமுத்திரத்தில் தோன்றும் எண்ணிக்கையில் அடங்காத அலைகளாக கொரோனா உருவெடுத்து படிப்படியாக முன்னேறி உச்சத்தை தொடும் போது நாமும் செத்து அதுவும் செத்து உலகம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஆனால் நாடகம் தொடரும். மாஃபியாக்களின் தாகமும் தீராது. இந்த கபட நாடகத்தின் மூலம் அவர்கள் ஓர் உண்மையை மறைக்கப்பார்க்கிறார்கள்.
அந்த உண்மை சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணி போல் இப்போது வெளியாகிவிட்டது.
உண்மை என்னவென்றால், அலோபதி மருந்தியலில் சரியான மருந்தும் சரியான சிகிச்சையும் இந்த நோய்க்கு இல்லை என்பதே.
அனைத்தும் சோதனை மற்றும் பிழை (Trial & Error) சிகிச்சைகள். சிகிச்சையின் முடிவில் நோயாளி உயிர்வாழ்வார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, அதற்காக எதுவும் உறுதியாகவும் இல்லை. ஆனால் சிகிச்சையின் விலை மட்டும் பல லட்சம் மதிப்புடையது.
தான்சானியா போன்ற சில நாடுகள் தங்களது இயற்கை வைத்தியம் மூலம் COVID-19 வைரஸை முற்றிலுமாக ஒழித்ததாகக் கூறுகின்றன .
இந்தியாவுடன் ஒப்பிடும்போது தான்சானியா மருத்துவம் அல்லது பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேறிய நாடு அல்ல. ஆனால் இந்த நோயை நாங்கள் ஒழித்துவிட்டோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அங்கு முகமூடி இல்லை. வாய்ப்பூட்டு இல்லை. மருத்துவமனைகளில் எந்தவிதமான மோதல்களும் இல்லை, சடலங்களும் அங்கே குவிந்து கிடக்கவில்லை.
ஏனென்றால் அந்த நாடு மருந்து உற்பத்தி மாபியாக்களின் வலையில் விழவில்லை. அங்குள்ள ஆட்சியாளர்கள் நேர்மையானவர்கள், தங்கள் மக்களை நேசிக்கிறார்கள். அவர்கள் நம்ம ஆட்சியாளர்களைப் போன்ற மருந்து நிறுவனங்களின் வணிக கூட்டாளிகள் அல்ல. தான்சானியா COVID-19 துயரங்களை இயற்கை வைத்தியம் மூலம் தீர்த்தது. (இந்த கட்டுரை எழுதப்படும் போது உயிருடன் ஆரோக்கியமாக இருந்த தான்சானியா அதிபர் திடீரென்று மர்மமான முறையில் இறந்தார் )
ஆனால் இங்கே என்ன நடக்கிறது.?
உலக சுகாதார அமைப்பு சொல்கிறார்கள் அமெரிக்க அதிபர் பாராட்டுகிறார் டாக்டர்களும் நல்ல மருந்துகள் என்று சிபாரிசு செய்கிறார்கள் என்று நம்ம நாட்டு மக்கள் என்ற செம்மறி கூட்டம் பார்மசிகளுக்கு போய் டாக்டரின் சீட்டோ பரிந்துரையோ கூட இல்லாமல் பார்மசி கெளண்டரிலேயே குளோரோகுயின் அஜித்ரோமைசின் ஹைடிராக்சிகுளோரோகுயின் என்று மளிகை பொருள் வாங்குவது மாதிரி கட்டுக்கட்டாக வாங்கிக்கொண்டு போய் தின்றார்கள். இதுதான் அலோபதியின் ஆரம்பகட்ட கொரோனா முயற்சி/பிழை (Trial/Error) மருத்துவம். இங்கு மட்டுமல்ல உலக முழுக்க.
நுண்ணுயிர் எதிர்ப்பான்களை (Antibiotics) வைரஸ் நோய்களுக்கு தரக்கூடாது என்ற மருத்துவ விதிகள் கூட காற்றில் பறக்கவிடப்பட்டன. ஏன் கொடுத்தால் என்னாகும். வேறு ஒன்றும் ஆகாது. அழிப்பதற்கு சரியான நுண்ணுயிர் (பாக்டீரியா) கிடைக்காமல் போய் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பான்கள் உங்கள் உடல் செல்களை சிதைக்கலாம். இரத்த அணுக்களை சிதைக்கலாம். குளோரோகுயின் கண்ணின் விழித்திரையை தாக்கலாம் உங்கள் இதயத்தையும் தாக்கலாம். இத்தனை பக்க விளைவுகளையும் உங்களுக்கு தந்து அந்த மருந்து தயாரிப்பு மாபியாக்கள் தங்கள் கிட்டங்கிகளில் தேங்கிக்கிடந்த அந்த ஸ்டாக்குகளை விற்று தீர்ந்துவிட்டன. பார்மசிகளும் தங்களுக்கு அடித்த யோகத்தில் ஒரு கை பார்த்துவிட்டன.
மற்றொரு மருத்துவர், டெக்ஸாமெதாசோனை மிகவும் மலிவான மருந்தாகப் பயன்படுத்தலாம், இது மூச்சுக்குழாயில் உள்ள சளி அடைப்பை நீக்குகிறது என்று டெக்ஸாமெத்தசோனுக்கு ஒரு பெரும் விளம்பரம் கொடுத்தார். மக்கள் என்ற செம்மறியாட்டுக்கூட்டம் அதில் போய் விழுந்தது. உடனே பார்மசிகள் டெக்ஸ்சாமெத்தசோனை பெரிய அளவில் கொள்முதல் செய்து விற்று லாபம் பார்த்தன. கார்டிகோஸ்டெராய்டுகளை தொற்று நோய்களுக்கு கவனமாக தரவேண்டும் என்ற பொது விதியும் இங்கு காற்றில் பறக்கடப்பட்டன.
ஆனால் மருத்துவர்கள் எந்த அடிப்படையும் இல்லாமல் இந்த மருந்துகளை பரிந்துரைத்தனர். ஏன்? இந்த மருத்துவர்களின் பேராசை காரணமாகவே மருந்து நிறுவனங்களின் லஞ்சம் அதிகரித்துள்ளது.
இந்த அலப்பரைகளால் என்ன நடந்தது.
மலேரியாவுக்கு தரவேண்டிய குளோரோகுயினை கொரோனாவுக்கு விற்று தீர்த்தத்தால் மலேரியாநோயாளிக்கு மருந்து கிடைக்கவில்லை.
ஆஸ்துமாவுக்கு தரவேண்டிய டெக்ஸ்சாமேதாஸோனை கொரோனாவுக்கு விற்று தீர்த்தத்தால் ஆஸ்துமா நோயாளிக்கு மருந்து கிடைக்கவில்லை. யார் எக்கேடு கெட்டால் என்ன என்னுடைய ஸ்டாக் விற்று தீர வேண்டும் என்பதே மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை மாபியாக்களின் நிலை.
இன்னும் இந்த குளறுபடி மருத்துவத்தால் வைரஸும் மறு உரு வெடுத்து 2-ஆவது அலையாக வந்திருக்கிறது என்பாதை விட கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதே சரி.
வெறும் இஞ்சிகஷாயத்தில் குணப்படும் இந்த வைரஸை அப்படியெல்லாம் செய்து சுகப்பட விடாமல் இப்படி குளறுபடி மருத்துவத்தின் மூலம் உருமாற்றிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது தானோ இந்த இல்லுமினாட்டிகளின் விருப்பம்?
ரெம்டெசிவிர் 
நரகவாசலை நாடும் செம்மறி ஆடுகள்

இப்பொது அவர்களுக்கு கிடைத்திருக்கும் அட்சய பாத்திரம் ரெம்டெசிவிர். இது ஒரு உயிர் காக்கும் மருந்து என்கிறார்கள் ஆனால் தெளிவான விளக்கம் இல்லை. இந்த மருந்து GILEAD SCIENCE என்ற பிரபல அமெரிக்க கம்பெனியால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இது ஒரு வைரஸ் எதிர்ப்பான் (Antiviral) ஆகும். இருக்கட்டும். ஆனால் இது கோவிட்-19 நோயை முற்றிலுமாக குணப்படுத்துகிறதா? கொரோனா வைரஸை முற்றிலும் அழித்து விடுகிறதா? இந்த கேள்விகளுக்கு இல்லவே இல்லை என்பதுதான் கசப்பான பதில். அதுதான் கசப்பான உண்மையும் கூட.
![]() |
தூண்டில் மீன்கள் |
இந்த மருந்து முதலில் எபோலா, H.I.V. போன்ற வைரஸ்களை வெல்வதற்காக தயாரிக்கப்பட்டது. ஆனால் அவற்றில் அது படு தோல்வி அடைந்தது.
என்ன செய்வது கிட்டங்கிகளில் ஸ்டாக் தேங்கிவிட்டதே. எப்படியும் விற்று தீர்க்கவேண்டும். அமெரிக்க FDA இடம் மண்டியிட்டது GILEAD. என்ன மாயமோ 2020-இல் FDA இந்த மருந்திற்கு அவசர கால உபயோக அனுமதியை (EUA) கொடுத்தது.
ஏற்கனவே குளோரோகுயினுக்கும் இதுமாதிரி ஓர் அனுமதியை கொடுத்து தலையில் குட்டு வாங்கியது FDA. அது வேறு கதை.
தீவிர சிகிச்சையில் கடுமையான சுவாசப்பாதை தடுப்பால் Respiratory Distress) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்று EUA கூறியது.
ஏனென்றால் இது மருத்துவமனையில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையை இரண்டு முதல் மூன்று நாட்கள் குறைக்கிறது. சளியின் தீவிரத்தை சிறிது குறைக்கிறது. ஒட்டுமொத்தமாக 31% நன்மை அளிக்கிறது என்று அமெரிக்காவின் வைரஸ் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் FAUCI கூறுகிறார்.
இந்த மருந்தை சிபாரிசு செய்யும் சிகாகோ பல்கலைக்கழக மருத்துவப்பள்ளி தற்போது இந்த மருந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இது ஒரு முழுமையான சிகிச்சையாக கருதப்படக்கூடாது என்றும் கூறுகிறது.
ஏப்ரல் இறுதிக்குள் கடுமையான COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட 21 பேர் பரிசோதிக்கப்படுவார்கள் என்று கிலியட் தெரிவித்துள்ளது. இந்த மருந்தின் முழு ஆய்வறிக்கை மே 2020 இறுதிக்குள் வெளியிடப்படும் என்று இந்த மருந்தை தயாரித்த கிலியட் நிறுவனம் கூறுகிறது.
உண்மை என்னவென்றால், அலோபதி மருந்தியலில் COVID-19 க்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருந்து எதுவும் தற்போது இல்லை.
ஆகவே எதையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் செம்மறி ஆடுகளைப் போல அலைய வேண்டாம்.
உங்களுக்கு உங்கள் பணம் மற்றும் பொருள் வீணாகிறது.
ஆனால் உண்மையான நன்மை ரெம்டேசிவிர் மற்றும் அதன் தயாரிப்பாளருக்கு ஆதரவாக சென்றுள்ளது.
கறுப்புச் சந்தையில் இந்த மருந்தின் விலை தங்கத்தின் விலையை நெருங்குகிறது. அதன் உற்பத்தி நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு 25% உயர்ந்துள்ளது.
இது காகம் மற்றும் நரியின் கதை போன்றது. எப்படியோ நரி (மருந்து கம்பெனி) தந்திரத்தால் காகத்திடமிருந்து வடையை ஏமாற்றி பறிக்க நினைக்கிறது..
காகம் (மக்கள்)வீணாக ஏமாறக்கூடாது.
என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது?
.நீங்கள் ஒரு COVID-19 அறிகுறியை உணர்ந்தால் பீதி அடைய வேண்டாம்.
உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருங்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு முறையாவது நீராவி உள்ளிழுக்க வேண்டும். இன்ஹேலர் இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம். ஒரு வீட்டு கிண்ணத்தைப் பயன்படுத்தி தண்ணீரைக் கொதிக்க வைத்து நீராவியை உள்ளிழுக்கவும்.
.இஞ்சியை நசுக்கி, தலைவலிக்கு தலையில் தேய்க்கவும்.
உங்களுக்கு காய்ச்சல் இருந்தால், இஞ்சி சாற்றில் தேன் மற்றும் மிளகு தூள் கலக்கலாம்.
.நீரிழிவு நோய், பிபி மற்றும் இதய நோய்கள் போன்ற கொமொர்பிடிட்டிகள் இருந்தால் மட்டுமே, ஒரு நல்ல மருத்துவரிடம் செல்லுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக