ரெம்டெசிவிர் என்ற மருந்திற்கு அமெரிக்க கூட்டமைப்பு மருந்து கட்டுப்பாடு நிர்வாகம் (F.D.A.)தற்காலிக அனுமதி :- (01-05-2020)
கிளியாட் என்பது ஓர் அமெரிக்க மருந்து கம்பெனி.இவர்களது தயாரிப்பான ரெம்டெசிவிர் என்ற மருந்திற்கு கடந்த 01-05-2020 வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக கூட்டமைப்பு (F.D.A.) கோவிட் -19 நோய் நிவாரணியாக அமெரிக்க டாக்டர்கள் பயன்படுத்தலாம் என்றஅவசர கால தற்காலிக அனுமதியை (Emergency Use Authorization அல்லது E.U.A.)வழங்கி இருக்கிறது.இந்த அனுமதி எந்த நிலையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வரையறையும் அந்த அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது மிக ஆபத்தான உயிருக்கு போராடிக்கொண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் என்பது நிபந்தனை.
இந்த மருந்து ஒரு வைரஸ் எதிர்ப்பானாகும்.முதன் முதலில் எபோலா வைரஸ் தொற்றிற்கு நிவாரணியாக இது ஆய்வு செய்யப்பட்டது
சில வைரஸ்கள் நம் உடல் செல்களுக்குள் புகுந்தவுடன் அங்குள்ள RNA பாலிமரேஸ் என்ற என்சய்மை இயக்கி பல்கி பெருகத்துவங்கும்.கிளியாட் மருந்து கம்பெனி எபோலா வைரஸ் இந்த என்சைமை பயன்படுத்த முடியாமல் தடுப்பதற்காக ரெம்டெசிவிர்-ஐ கொண்டு பல ஆய்வுகள் மேற்கொண்டனர்.ஆய்வு கூடத்தில் வெற்றி கிடைத்தாலும் நோயாளிகளுக்கு கொடுத்ததில் முழு பயன் கிடைக்கவில்லை
இப்பொழுது அதே மருந்தைத்தான் அமெரிக்காவிலுள்ள தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் பயிலகம் (National Institute of Allergies and Infectious Diseases-N.I.A.I.D) மூலம் கோவிட-19 க்காக ஆய்வு மேற்கொள்ளும்போது ஓரளவு அதாவது 31% பயன் தருவதாக அதாவது மருத்துவமனை தங்குதலில் 4 நாட்கள் இந்த மருந்தினால் குறைந்திருப்பதாக அந்த பயிலகம் சான்று தந்திருக்கிறது.இந்த பயிலகத்தின் சான்றிதழ் கிடைத்து இரண்டு நாட்களில் F.D.A தனது தற்காலிக பயன்பாட்டு அனுமதியை வழங்கி இருக்கிறது
அந்த பயிலகத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோணி பாஸி இது பற்றி கூறும் பொழுது 31% என்பது முழு வெற்றி இல்லை எனினும் எதற்குமே கட்டுப்படாது என்ற நிலையிலிருந்து மாறி முடியும் என்ற ஒரு புதிய நம்பிக்கையை ரெம்டெசிவிர் தந்திருப்பதாக அவர் கூறுகிறார்.
F.D.A. யின் தலைமை டாக்டர் மிஸஸ்.டெனிஸ் ஹிண்டன் கூறும்போது இந்த அனுமதி இந்த நோயின் உயிர் கொல்லி தன்மையை வேறு வழியின்றி மிகவும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மட்டும் அவசர நிலை சிகிச்சையாக தர அனுமதிக்கப்படுகிறது மற்றபடி இந்த நோய்க்கு இன்றுவரை 100% நிவாரணம் தரக்கூடிய எந்த மருந்தும் இல்லை அந்த அனுமதி கடிதத்தில் கூறி இருக்கிறார்
குறிப்பு:ஏற்கனவே இதேF.D.A. குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சி குளோரோகுய்ன் ஆகியவற்றிற்கு கொரோனா சிகிச்சைக்காக அவசரகால அனுமதியை கொடுத்து பிறகு திரும்ப பெற்றது ஒரு தனி கதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக